அன்னையர்தினத் தொடர்வு 3
ஜூன் 6, 2013 at 1:35 பிப 30 பின்னூட்டங்கள்
எல்லோரும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் மிகவும்
ஸந்தோஷமாக இருந்தது. ரயில்தான் கொஞ்சநேரம் தாமதம்.
அதற்குள் பாட்டி,நாங்கள் அத்தைஎன்றுதான் கூப்பிடுவோம்.
அக்காவிற்கான பாகம் போட்ட உரவு அது. பேசுவதற்குயோசனைகள்
செய்து தயாராகிவிட்டாள்.
இதோ பாரப்பா. நீ முதல்லே எதுவும் சொல்ல வேண்டாம். கடைசியில்
அக்கா சொன்னா எல்லாம் ஸரிதான்னு சொல்லி விடு.
அதெப்படி, நானும் சிலதெல்லாம் யோசனை செய்ய வேண்டாமா?
அதுக்கெல்லாம் இது வேளை இல்லையப்பா.
நல்ல பிள்ளை, நல்ல வேலை, தங்கமான மாமியார், மத்ததெல்லாம்
இப்படி அப்படி, இருக்கும்,
நான் அறிந்து இரண்டு ஸம்பந்தம் பண்ணியாச்சு.
ஒன்று மருமகள். மற்றொன்று மருமகளின் அக்கா பெண் என்
பெரியம்மாவின் மருமகள்.
ஆக ஒரு பெண் கொடுத்திருக்கிரது. ஒரு பெண் வாங்கி இருக்கிரது.
இதுவும் நல்லபடியா முடியணும்.
நாள் அதிகமில்லே. எங்கே போய் தேடரது?
என்ன செய்யணும், செய்வோம் எல்லாம் நான் பேசிக்கிறேன்
நம்ம குழந்தைக்கு என்ன குறைச்சல்?
பாட்டு சொல்லி வச்சிருக்கோம். ஆர்மோநியம் வாசிப்பா.
கபடற்ற பொண்ணு, பாக்க அழகா, தாழம்பு மாதிரி கலரும்,
இந்த பொண்ணு கிடைச்சா போராதா?
எல்லாம் ஸரி, நான் பாத்துக்கறேன், அதை ஞாபகம் வச்சுக்கோ!
மாமியாரா இல்லே, அத்தையா, அந்த தரப்பு அத்தையோட நான்
பேசறேன். இ.பி.கோ நூத்தி நாப்பத்து நாலை 144 அமுல் செய்தாகி
விட்டது.
கைகாட்டி சாஞ்சுடுத்து. தூரத்லே பொகையும் வரது தோ வண்டி
வரவேண்டியதுதான் பாக்கி.
அவ அம்மாதான் தெய்வமா அவா மநஸுலே பூரணும்.
வண்டி வந்துடுத்து நான் இங்கேயே நிக்கரேன் .
நீ பாரு அவாளும் பார்ப்பா!
கூட்டமே இல்லை. நல்லகாலம்.
இங்கேயே அந்த பொட்டி!
அதோ எ’ட்டிப் பாக்கராளே!! வாவா, என்ன ஸௌக்கியமா?
வாவா திரும்ப சம்பந்தியா வரப்போரே, நினைச்சா எவ்வளவு
ஸந்தோஷமா இருக்கு. மனதிலே நிம்மதியாவும் இருக்கு.
அப்போ பிடிச்சு தம்பியிடம் இதைத்தான் சொல்லிண்டிருந்தேன்
இந்தா காப்பியே குடி
அடுத்த காப்பி கொடத்தோட மேளதாளத்தோட, பக்ஷணம்
பலகாரத்தோட கொடுக்கணும்னு அண்ணாமலையாரோட விருப்பமா
அமையணும்.
பேச இடங் கொடுக்காம டம்ளரில் காப்பி.
முன்னே காப்பியை குடி. அப்புரம் பேசலாம்.
என்னென்ன செய்யணும், என்ன பண்ணணும்னு தோராயமா
சொன்னா போதும். எம் மருமாள் உன் மருமான் பொண்டாட்டிதான்.
இல்லையாப்பா,நான் சொல்றது ஸரிதானே.!
வெலைக்கே வித்துடுவாள் போல இருக்கே!
144 ஞாபகம் வரது
ஆமாம் உங்களுக்கு ஆக்ஷேபணை ஒன்றும் இல்லையே!
பெண்ணைப் பெற்றவர் சொல்லியாகணும்.
ஆக்ஷேபணைன்னு ஒண்ணுமில்லே. அதைச் செய்யறேன், இதைச்
செய்யறேன், இத்தனை பவுன் நகைபோடறேன்னு எல்லாரும்
வந்தாக்க பெத்தவளுக்கு ஆசை இருக்குமோல்லியோ.
இன்னிக்கு பேசாத இருந்துட்டு பின்னாலே பொருமுவாளோ என்னவோன்னு
யோசனை என்ன இருந்தாலும் நாம அத்தை தானே?
தம்பி ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது ?
நீ அதெல்லாம் யோசிக்கரயா?என்ன உண்டோ செஞ்சூடலாம்.
அதான் படிச்சுட்டு வேலைக்கு போரவன்,பாத்திரம்,பண்டம்,நகைநட்டு
சீர்,செனத்தி எல்லாம் பாக்கரவா அசந்து போகணும்.
இருக்கவே இருக்கு நாலுநாள் கல்யாணம். அவ்வளவுதான்.
ஜமாய்சூடலாம். நீ ஒரு வார்த்தை சொல்லு.
வீணா சிலவு நிச்சயதார்த்தமெல்லாம்.. ஸரி உறுதியா
சொல்றேன்.
எல்லார் செய்யறேன்னு சொன்னதைவிட நிறைய செஞ்சூடு.
இதையே வார்த்தையா வச்சுக்கோ. பக்கத்தில் வைத்திருந்த பையில்
இருந்து ஒரு சீப்பு பேயன் வாழைப் பழத்தை எடுத்து நீட்டுகிறாள்.
தயாராக வைத்திருந்த தேங்கா பர்பி ஸம்படத்தை அத்தை கொடுக்கிறாள்.
அப்பா மலைத்துப்போய் பார்க்கிரார். தம்பியிடமே பழத்தைக் கொடு.
அத்தை சொல்கிறாள்.
ரயில் புரப்பட முதல் மணி அடிக்கிறது. நல்ல சகுனம் ஆகிரது.
ஆத்தில் பழுத்த பழம். கல்கண்டா இனிக்கிறது.
வந்த அத்தை சொல்கிறாள்.
இங்கேயே இரண்டு பழத்தை சாப்பிட்டுவிட்டுப் போகிறோம்.
இந்த அத்தை சொல்கிறாள்
காரியம் பழம். இரண்டாவது மணி அடிக்கிறது.
ரொம்ப ஸந்தோஷம். ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க. எல்லாரையும்
விஜாரித்ததாகச் சொல்லுங்கோ. நிதானமாக ரயில் நகருகிறது.
வார்த்தைகளும் பின் தொடருகிரது.
எப்படி நாகரீகமாக எதையும் குறிப்பிடாமலேஒரு கல்யாணம்
திருவண்ணாமலை ஸ்டேஷனில் நிச்சயமாயிற்று.
கொண்டு கொடுத்த இடம். குலம்,கோத்திரம் விசாரித்துத் தெரிந்து
கொள்ள வேண்டாம்.
ஒரு நடை அவர்கள் இருக்கும் இடத்திற்கு போய்ட்டு வாப்பா.
சொல்லியாச்சு. வீட்டுக்கும் வந்தாச்சு.
இரட்டைவடம் சங்கிலி, பத்து பவுனுக்கு வளையல். ஆக 25
பவுன் குறைந்த பக்ஷம்.
எல்லா இடத்திலும் ஒரே தேதிகளில் ஆயிரக்கணக்கான கல்யாணம்.
பூ கிடைக்கிரது கஷ்டம்
இடம் கிடைக்கிரது கஷ்டம். பவுன் பன்னண்டு ரூபாயா இருந்தது
பதினாலு ரூபாயாக விலை உசந்தூடுத்து.
ஸன்னதித்தெரு. பக்கத்து வீடு நாட்டுக்கோட்டை செட்டியாருது.
கார்த்திகை உத்ஸவத்திற்கு வந்து தங்கி, உத்ஸவம் நடத்த
கடல்போல வீடு. செட்டியார் வீடு கொடுத்து விட்டார்.
பாட்டி அம்மாவிற்கு கொடுத்தது, அது இது என்று நகைகள் தயார்.
வீடுகளில் மடியா சாப்பிட என்று வெள்ளித் தட்டு கிண்ணங்கள்,,
மற்றும் பாத்திரங்கள் உண்டு எல்லாம் உரு மாற்றி யானது.
எல்லாம் ரெடி. சேமிப்பு நன்றாக உதவியது.
அம்மா 9மாத கர்பிணி, மாப்பிள்ளையின் அக்கா, மன்னி அவர்களும்
நிறைமாதம். யார் பிரஸவித்தாலும்,ஸரி, ஆஸ்ப்பத்திரி இருக்கு.
கடைசி முகூர்த்தம். இப்போ கல்யாணம் செய்யா விட்டால் பெண்ணுக்கு
கலியாணமே ஆகாதா யென்ன. வேறு ஊர்களுக்குப் போயாவது
சாரதா சட்டத்திற்கு முன்னமே கன்யாதானம் செய்து விட ஒருதுடிப்பு.
ஏவரிமாட பாடணும். உனக்கு நன்னாவரும், வினதாஸுத பாடு,
ஸங்கல்பமே பாடு, , கீதா தமுஸம் பாடு அம்மா பாட்டுகளை தினமும்
ஞாபகப்படுத்துகிராள். நீயும் பாடு என் கூட கலியாணப் பொண்ணு.
மாமியாராத்தில் எப்படி அடக்கஒடுக்கமாய் யிருக்கணும், பதில்
சொல்லக் கூடாது
எல்லா பல்கலைக் கழக பாடமும் போதிக்கப் பட்டது.
ஏராளமான உரவினர் கூட்டத்துடன் கல்யாணம் ஜாம்ஜாமென்று
நடத்தது. இது என்னுடைய 300 ஆவது பதிவு.
எல்லோரும் இருந்து சாப்பிட்டுவிட்டு, தாம்பூலப் பையும்,பக்ஷணமும்
வாங்கிக்கொண்டு போங்கள். கல்யாணப்பெண் ஒரு பாட்டுகூட
பாடவில்லை.வெட்கம்.
கர்பிணிகளும் ஸாரதா சட்டம் அமுலானபின் பெண் குழந்தைகளையே
பெற்றார்கள். தொடருவோம்.
.
Entry filed under: அன்னையர் தினம்.
30 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 2:04 பிப இல் ஜூன் 6, 2013
முதலில் 300வது பதிவுக்கு வாழ்த்துகள்!
சாரதா சட்டம் வரதுக்குள்ளே கல்யாணம் பண்ணி, சாரதா சட்டம் வந்தபின் பெண் குழந்தைகளை பெற்ற கதையை திரும்பத் திரும்ப படித்தேன்.
பாட்டிதான் எத்தனை சாமார்த்தியம்! ரயில் புறப்பட அடித்த மணியை நல்ல சகுனமாகக் கொண்டு, பேயன் பழத்தை மாற்றிக் கொண்டு, காபி குடுத்து….ஜம்மென்று கல்யாணம் நிச்சயம் பண்ணி, நடந்தும் விட்டது!
‘பவுன் 12 லேருந்து 14 ஆக ஒசந்துடுத்து…..’
என் அம்மா, பாட்டி இதெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்பார்ப்புடன்,
ரஞ்சனி
2.
chollukireen | 11:25 முப இல் ஜூன் 7, 2013
முதலில் வாழ்த்துக்களுக்கு மனமுவந்த நன்றி. எழுத உட்கார்ந்ததும் அவர்கள் சொன்னவைகள், என்னிடம் சொல்லியவைகள் தடங்கலில்லாது கோர்வையாக தானாகவே அமைந்து விட்டது.
இன்னும் என்னென்ன ஞாபகம் வரும் பார்க்கணும்.
ஆமாம் இன்றைய விலைக்கு அன்று இரண்டு ரூபாய் பிரும்மாண்டமாகத் தோன்றியதவர்களுக்கு. அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:06 பிப இல் ஜூன் 6, 2013
நமஸ்காரம் மாமி. 300வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் + இனிய வாழ்த்துகள்.
>>>>>
4.
chollukireen | 11:27 முப இல் ஜூன் 7, 2013
ஆசிகள். பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க அன்புடன் நன்றி சொல்லுகிறேன். அன்புடன்
5.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:08 பிப இல் ஜூன் 6, 2013
//இதையே வார்த்தையா வச்சுக்கோ. பக்கத்தில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு சீப்பு பேயன் வாழைப் பழத்தை எடுத்து நீட்டுகிறாள். தயாராக வைத்திருந்த தேங்கா பர்பி ஸம்படத்தை அத்தை கொடுக்கிறாள்.//
அழகான அற்புதமான இடம். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
>>>>>>
6.
chollukireen | 11:32 முப இல் ஜூன் 7, 2013
நிஜமாகவே பேயன் பழமும், தேங்காய் பர்பியும்தான் கைமாறியது. எளிதாக தயாராகும் இனிப்பு அல்லவா
விசேஷமான தேங்காய் இனிப்பு.பாராட்டும் இனிப்புதான். அன்புடன்
7.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:10 பிப இல் ஜூன் 6, 2013
//ரயில் புறப்பட முதல் மணி அடிக்கிறது. நல்ல சகுனம் ஆகிறது. ஆத்தில் பழுத்த பழம். கல்கண்டா இனிக்கிறது.
வந்த அத்தை சொல்கிறாள். இங்கேயே இரண்டு பழத்தை சாப்பிட்டுவிட்டுப் போகிறோம். இந்த அத்தை சொல்கிறாள்
காரியம் பழம். இரண்டாவது மணி அடிக்கிறது.//
அழகோ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். 😉 சந்தோஷம்.
>>>>>
8.
chollukireen | 11:35 முப இல் ஜூன் 7, 2013
இந்த இடம் நன்றாக இருக்கிரதல்லவா? lதிருவண்ணாமலை ஸ்டேஷன் அல்லவா? அன்புடன்
9.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:13 பிப இல் ஜூன் 6, 2013
//எப்படி நாகரீகமாக எதையும் குறிப்பிடாமலேயே ஒரு கல்யாணம் திருவண்ணாமலை ஸ்டேஷனில் நிச்சயமாயிற்று.
கொண்டு கொடுத்த இடம். குலம்,கோத்திரம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டாம்.//
வெள்ளை மனம் கொண்ட அற்புதமான மனிதர்கள்.
”அந்த நாளும் வந்திடாதோ” என ஏங்க வைக்கிறது.
பகிர்வுக்கு நன்றிகள்,. தொடர்ந்து எழுதுங்கோ. வரிக்குவரி பாராட்டணும் போலத் தோன்றுகிறது. ;))))))
10.
chollukireen | 11:40 முப இல் ஜூன் 7, 2013
முத்தாய்ப்பு வைத்தாற்போல அந்த நாளைய மனிதர்களுக்கு உங்களின் பாராட்டுகள். எனக்கும் சிறிது பங்கும் கண்டு மிக்க மகிழ்ச்சி. மொத்தத்தில் எழுத ஊக்கம் கொடுக்கும் உங்களின் பாராட்டுகள். நன்றியும்,
ஆசிகளும். அன்புடன்
11.
MahiArun | 7:54 பிப இல் ஜூன் 6, 2013
Congrats on 300th post ma! Nice to read these experiences..felt like going back to those ages! 🙂
12.
chollukireen | 11:43 முப இல் ஜூன் 7, 2013
மஹி வாவா. உன் பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்கும்
ஸந்தோஷம். ஆமாம், நான் பிறப்பதற்கு முந்தைய
ஸமாசாரங்கள். ரஸித்தாயா? அன்புடன்
13.
திண்டுக்கல் தனபாலன் | 4:29 முப இல் ஜூன் 7, 2013
இனிய நினைவுகள் அழகானது என்றும்…
300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்…
14.
chollukireen | 11:46 முப இல் ஜூன் 7, 2013
தொடர்ந்து ஆதரிக்கும் உங்களுக்கு என் அன்பான நன்றியறிதல்கள். இனிய, அழகு பின்னூட்டம்.அன்புடன்
15.
chollukireen | 11:29 முப இல் ஜூன் 8, 2013
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் உங்களுக்கு விசேஷ நன்றிகள். அன்புடன்
16.
chitrasundar5 | 5:03 முப இல் ஜூன் 7, 2013
காமாஷிமா,
பாட்டி தன் பழுத்த அனுபவத்தால் இவ்வளவு பெரிய வேலையை எவ்வளவு எளிதாக முடித்திருக்கிறார்.(படிக்க நமக்கு எளிதாக இருக்கிறது.ஆனால் இதெல்லாம் கைகூடி வர வேண்டுமே என்று அந்நேரம் அவருக்கு எப்படி இருந்திருக்குமோ).
அந்த நாள் திருமணப் பேச்சை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திட்டீங்க.அடுத்தடுத்த பதிவுகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
தாம்பூலப் பை & பஷணத்துடன் 300 வது பதிவின் மகிழ்ச்சியையும் எடுத்துக்கொண்டு சென்று வருகிறோம் அம்மா.அன்புடன் சித்ரா.
17.
chollukireen | 11:51 முப இல் ஜூன் 7, 2013
பாட்டி கடைசி காலம் முடிய எங்களுடன் இருந்தார்.
எத்தனை முறை இந்த ஸம்பவங்கள் சொல்லியிருந்தால்
இப்படி ஞாபகமிருக்கும்! ரஸித்து எழுதியிருக்கிறாய்.
மிகவும் நன்றியம்மா.போய்ட்டுவா. அடிக்கடி வந்திண்டிரு. அன்புடன்
18.
gardenerat60 | 9:25 முப இல் ஜூன் 13, 2013
அருமை மா! அப்படியே , கல்யாணப் பேச்சுக்களை , கூட இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
அடுத்த பதிவு எப்போது என்று எதிர்ப்பார்ப்பும் கூடவே.
முன்னூராவது பதிவா!.அடேங்கப்பா!. வாழ்த்துக்கள் அம்மா.
19.
chollukireen | 1:13 பிப இல் ஜூன் 13, 2013
அந்த நாளைய பேச்சுகளில் வரதக்ஷிணை பேசியதாகவோ,கொடுத்ததாகவோ தெரியவில்லை.
நகை,நட்டு,பொன்னு,புடவை, சாப்பாடு,பக்ஷணம்,சீர்
இவைகள் குறைவில்லாமல் செய்தால் போதும் போலுள்ளது. வாழ்த்துக்களுக்கு நன்றி. அன்புடன்
20.
chollukireen | 11:08 முப இல் பிப்ரவரி 1, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இது மூன்றாவதுபதிவு. முன்னே,பின்னே ஸம்பந்தம் செய்த இடம். இரண்டு அத்தைகளுமே சம்மந்தி முறைகள். இன்னொரு கல்யாணத்தையும் நிச்சயம் செய்ய ஆவல் மிகுந்தவர்கள் . எவ்வளவு ஸுலபமாக நிச்சயிக்கப் படுகிறது. படித்தால்த் தெரியும். அன்புடன்
21.
ஸ்ரீராம் | 2:56 பிப இல் பிப்ரவரி 1, 2021
எவ்வளவு எளிதாகவும், இனிதாகவும் ஒரு கல்யாணம் முடிவாகி இருக்கிறது… இந்நாளில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.
22.
chollukireen | 12:12 பிப இல் பிப்ரவரி 2, 2021
தெரிந்த இடததில் ஸம்பந்தம் செய்ய வேண்டும், உறவுகளாக இருந்தால் நன்றாக இருக்கும், என்ற எண்ணங்கள் இருந்த காலம். ஏதாவது சுற்றி வளைத்து உறவைக் கொண்டு வந்து விடுவார்கள். ஆச்சானுக்கு மச்சான் ்வன் மன்னிக்கு உடன் பிறந்தான் என்று வசனம் சொல்லுவார்கள். அதைப்போல . அன்புடன்
23.
சஹானா இணைய இதழ் | 11:33 முப இல் பிப்ரவரி 2, 2021
பவுன் 14 ரூபாயா? ஆஹா, கேக்கவே சந்தோசமா இருக்கே. தோராயமாக எந்த வருடம் அம்மா இது?
எத்தனை இயல்பாய் / சுளுவாய் கல்யாணங்கள் நிச்சயக்கப்பட்ட காலம் அது, இன்னைக்கு என்ன ஆடம்பரம், எத்தனை formalities.
24.
chollukireen | 12:22 பிப இல் பிப்ரவரி 2, 2021
இதெல்லாம் நடந்தது 1930. சொல்லிச்சொல்லி , கேட்டு மனதில் பதிந்து போனவைகள். கேட்காமலேயே கல்யாணம் நிச்சயம் செய்யும்போது பெண் வீட்டார் ,தாம்பூலத்துடன் ஒரு சிறிய அளவு பணம் வைத்தும் கொடுபபார்களாம். டிமாண்ட் இதெல்லம் இல்லை. உண்மைக் கதைகள் இவைகள். நன்றிம்மா. அன்புடன்
25.
Geetha Sambasivam | 12:31 பிப இல் பிப்ரவரி 2, 2021
தாம்பூலப்பை, பக்ஷணம் வாங்கிண்டாச்சு, கல்யாணச் சாப்பாடு அருமை. கல்யாணம் நிச்சயம் பண்ணின விதம் அதை விட அருமை. அந்தக் கால நிகழ்வுகளைக்கண்ணெதிரே கொண்டு வந்து விட்டீர்கள். 300 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.
26.
chollukireen | 12:46 பிப இல் பிப்ரவரி 2, 2021
13இல் இது 300 ஆவது பதிவு.இதெல்லாம் உதாரணத்திற்குச் சொல்லுவார்கள். வயது இருக்கிறது. அந்தககாலத்தைச் சொல்ல. நன்றி அன்புடன்
27.
நெல்லைத்தமிழன் | 5:13 முப இல் பிப்ரவரி 3, 2021
கர்ப்பிணிகளும் சாரதா சட்டம் அமுலானபிறகு பெண் குழந்தைகளையே பெற்றார்கள்..ஹாஹா.
அந்தக் கால பெண் பார்க்கும் வைபவத்தை, இரயில்வே ஸ்டேஷனிலேயே குறைந்த செலவுல நடத்திக் காண்பித்துவிட்டீர்கள்.
28.
chollukireen | 11:13 முப இல் பிப்ரவரி 3, 2021
தெரிந்த , உறவுக்காரப் பெண் ஆதலால் அது நடந்ததோ நடக்கலையோ. யாரும் இப்போது கேட்க சொல்ல ஒருவரும்இல்லை. நிஜமாகவே நடந்ததுதான். ெங்கே உங்களைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். நன்றி.அன்புடன்
29.
Revathi Narasimhan | 1:32 பிப இல் பிப்ரவரி 3, 2021
ரயிலடி கல்யாண நிச்சயம். என்ன ஒரு வாய்ஜாலம்.!!! பேசாத
தந்தைக்கு ,உதவிய பாட்டி. 1930 ஆ. என் மாமியாருக்குத் திருமணம் நடந்த வருடம்.
காமாட்சிமா, எத்தனை அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
ஆமாம் உறவில் கொடுத்தால் ,
நம்பிக் கொள்ளலாம். அந்த ஒற்றுமை நீடித்த காலம்.
நம்பிக்கையும் நேர்மையும் ஒன்றி இருந்த காலம்.
ஒரு கல்யாண மாதத்தில் இன்னோரு திருமணத்தைப்
பற்றிப் பேசுவது இனிமை. மிக மிக நன்றி மா.
30.
chollukireen | 11:20 முப இல் பிப்ரவரி 5, 2021
உடனே பதில் கொடுக்கலே. அப்பாவை அத்தை பேசவிடவில்லை.புருஷர்கள் ஏதாவது சொல்லப்போய் ஏதாவது வேறுமாதிரி அர்த்தமாகிவிட்டால் என்ற பயம். அதுவும் பெண்கள் ஸுபாவத்தைத் தெரிந்து் கொள்பவர்கள். உறவுகள் அவசியமாகவும் இருந்தது. ஆமாம்.தை பிறந்துள்ளதால் எங்கும் கல்யாணப் பேச்சுகள்தான். உங்கள் மாதிரிதெரிந்த பின்னூட்டங்கள் எனக்கு ஏதோ நேரில் பேசுவதுபோன்ற எண்ணங்களை ஏற்படுத்திவிடுகிறது. சுயமாக, நேரம் ஆகிவிடுகிறது. உங்கள் யாவருக்கும் மிகவும் நன்றி. அன்புடன்