அன்னையர்தினத்தொடர்வு 4
ஜூன் 17, 2013 at 5:22 முப 26 பின்னூட்டங்கள்
கல்யாணம்நன்றாகநடந்தாயிற்று.இனிபுகுந்தவீட்டில்எவ்வெப்போது
பெண்ணை அழைத்துவா வென்று சொல்கிரார்களோ
அப்போதெல்லாம் அழைத்துப்போய்,திரும்ப அழைத்து
வந்து தகுந்த மரியாதைகள் கொடுத்து வர வேண்டும். ,
அடுத்து பண்டிகைபருவங்கள், தீபாவளி,கார்த்தி, பெண்
வயதுக்கு வருதல் போன்றவிசேஷங்களும் அணி வகுக்கும்.
ஒருவர் மனம் கோணாது இவைகள் ஸமாளிக்க வேண்டும்
அவ்வப்போது ஆவணிஅவிட்டம்போன்றபண்டிகைகளிலும்
கூட விடாது எல்லாம் செய்வார்களாம்.
ஆச்சு வருடங்கள் இரண்டு. பெண் பெரியவளாகி, புக்ககத்திற்கு அனுப்பும் போது இரண்டாவதாக ஒரு பெண்
குழந்தையும் வீட்டில்.
சின்னக் குழந்தைத் தங்கையைக் கொஞ்சாது போகிரோமே
என்று புக்ககம் போகும் பெரிய குழந்தைக்குக் குறை.
அப்படி இப்படி பெண்ணைக் கொண்டு விடும் போது
பெண்ணை எப்படியெல்லாம் உடல் நலம் பாதுகாத்து
வளர்த்தோமென பட்டியலிடும் போது, மாதாமாதம்
வீட்டில் நடைமுறையிலிருந்த விளக்கெண்ணெய் குடித்தலையும் அப்பா ன்ற முறையில் விவரித்து இருக்கிரார்.
அந்தக்கால கஷாயம். சுக்கு,சோம்பு,நிலாவரை, கடுக்காய்,திராக்ஷை, எல்லாம் போட்டுக் கஷாயம் வைத்து
திட்டமான சூட்டில், விளக்கெண்ணெய் விட்டு ஒரு
ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும், குடிக்க வைத்து,
அதற்கென்றே ஒரு வெள்ளிக்கிண்ணம்.
உத்ஸவம், மண்டகப்படி, எல்லாம் ஸரியா ஆச்சுன்னு அதை
முக்கிய செய்தியாகக் கூறுவார்கள்.
மிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு
சாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும்.
சாப்பிட ருசியாயிருக்கும்னு வேரெ சொல்லுவார்கள்
அதுவும், உண்மைதான்.
மாப்பிள்ளையாத்தில்,மாதாமாதம் விளக்கெண்ணெய்
பொண்ணுக்கு கொடுக்கணும்னு அவப்பா சொன்னார் என்று
வம்பாகப் பேச்சு வந்ததுன்னும், இதைப்போய்
சொல்லுவாளா என்று அம்மா அங்கலாய்த்ததும் ஞாபகம்
வருகிறது.
அம்மாக்கு பதினெட்டுநாள் குழந்தை கையில். போக முடியவில்லை
வரவா,போரவா கையில் ஏதாவது செய்து கொடுத்து அனுப்பிக் கொண்டே இருப்பார்களாம்.
இது எல்லா நாளிலும் நடக்கிரது.
எல்லாம் செய்து அனுப்புவது அந்த நாள் நடைமுறை
இப்போது எல்லாம், எங்கிலுமே கிடைக்கிரது.
பெண்கள் கடிதம் போடுவதும், அதிகம் வழக்கமில்லை.
பெரியவர்களுக்கு கடிதம் எழுதி விசாரித்தால், அவர்கள்
பதில் போடுவார்களாம். எப்படியெல்லாம் நியதி.?
கடிதம் யாராவது எழுதினால் வரிந்து வரிந்து எழுத என்ன
ஸமாசாரம் என்று எல்லோருமே சொல்லுவார்களாம்.
இதுவும் சட்ட திட்டங்களில் எழுதப்படாத ஒன்றாம்.
எதையோ எழுத வந்து இதெல்லாம் வருவது ஸரியோயில்லையோ?
ஆனால் காலம் ஓடிக்கொண்டுதானிருந்தது. பருவமழைகள்
பெய்து கொண்டிருந்தது.
காவிரி நன்றாக போதும்,போதும் என்ற அளவிற்கு தண்ணீரைப் பெருக்கிக் கொண்டுதானிருந்தது.
குடும்பங்களும், பழசு,வழக்கம் என்ற போர்வையில் அழகாக நடந்து கொண்டுதானிருந்தது.
பெண்ணு குளிச்சு நாளாச்சு. எவ்வளவு இனிப்பான செய்தி.
மசக்கை, வளைகாப்பு,சீமந்தம், சீர்,செனத்தி, ஆட்டம்,பாட்டம், நல்லபடியாக வேண்டும். பெண்ணை அழைத்து வந்தாச்சு
பிரஸவம் நல்லபடியா நடக்கணும், ஒத்தாசைக்குன்னு
பெரியவா, இதைச்செய்யணும்,இதைச் செய்யக்கூடாதுன்னு
தீர்மானங்கள்.
அந்த இனிய நாளும் வந்தது. ரொம்ப கஷ்டங்களுடன்
ப்ரஸவம்.
தாயும் சேயும் ஸௌக்யம். ஸந்தோஷம்தான்.
குழந்தையிடம் அபிமானமில்லை. மற்றவைகளும் பிடிக்கவில்லை. ஏனோ?ஏதோ மநஸ் ஸரியில்லையோ?
இப்படி யோசிக்க வைத்த பெண்ணின் நிலை.
எல்லாம் ஒருநிமிஷத்தில் சிந்தனை. டாக்டர் வந்தார்.
ஸரியா தூங்கினா ஸரியாகிவிடும். மருந்து, உபசாரம்
எதிலும், எதுவும் ஸரியாகவில்லை.
குழந்தை பூராபூரவும் அம்மா கவனிப்பு.
தெய்வ குற்றம், அது இது, எங்கோ பயந்திருக்கா, எத்தைத் தின்றால் பிததம் தீரும் என்ற நிலை.
கருப்பு புடவை வாங்கக் கூடாது. அதாந் இப்படி இது ஒரு
குற்றம். மசக்கையோ,வளைகாப்போ, ஒரு புடவை
கறுப்பு எல்லாரும் வாங்குவா. ஆசைப்பட்டாளே என்று
அடுக்கு நெளிஸரிகைபோட்டு ஒன்பது கெஜம் பட்டுப் புடவை, அப்போதுயாரும்,எதுவும் சொல்லலே
இப்போது இப்படி
ஸரி மந்திரிக்கணும். ரக்ஷை கட்டணும், என்னல்லாம்
செய்யணுமோ எல்லாம் செய்யலாம்.
மாயவரத்திலிருந்து ஒரு பெரிய வைஷ்ணவ பெரியார்
தோஷங்களை நிவர்த்திப்பதில், பூஜை,புனஸ்காரம் செய்து
ரக்ஷை கட்டுவதில் சிறந்தவர் கிடைத்து அவரைத் தருவிக்க
ஏற்பாடுகள்.
அவருடன் உதவிக்கு அவரே ஒருவரை அழைத்து வருவார். தருவிக்க ஏற்பாடுகள்.
எங்கு குடியிருந்தோமோ அவர்கள் வீட்டில் குழந்தைகளில்லை.
அவர்களுக்கும், ஏதாவது பரிஹாரங்கள் செய்யலாம்.
பலபேருக்கு நன்மைகள் செய்ய பெரியவர் அழைக்கப் பட்டார்.
நம்பிக்கைகள் மிகுந்த காலம். பொய்யான வேஷதாரி
பூஜைகளில்லை.
நம்பினோர் கெடுவதுமில்லை.
புண்யாசனமெல்லா் முடிந்தபின் பெரியவர் வந்தார்.
எல்லா வசதியும், தனியிடமும்,பார்த்து பார்த்து செய்தனர்.
முதலில் வீட்டுக்கே பரிகாரம் செய்து, தோட்ட, வாயிற்பக்க வாயிற்படிகளில் செப்புப் பட்டயம் பூஜை செய்து அடிக்கப் பட்டது.
விபூதி,தீர்த்தம், ஜபிக்கப்பட்டு, கொடுப்பது, பரிகாரங்கள்
செய்வது, இப்படி பலவகைகளில், வைத்தியத்துடன்
அனுஷ்டிக்கப் பட்டது.
வீட்டுக்காரர்களுக்காக நாகப்பிரதிஷ்டை,ஹோமங்கள்
இப்படி யக்ஞ சாலையாகவே மாறிவிட்டது வீடு.
ப்ரஸவித்த பெண்ணிற்கு எங்கோ பயந்து , அதன்காரணம்தான் நலக்குறைவு.
அந்த நாளில் காற்று சங்கை என்று சொல்வார்களாம்.
விபூதியும், தாயத்தும்தான், குணமாக்கும் வழிகள்
இரவில் தூங்கும்போதும், விபூதியை இட்டுக்கொண்டு தூங்கினால் ஸரியாகிவிடும்.
அக்கம்,பக்கம்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள்எல்லோருக்கும்
நம்பிக்கையும்,ப்ரஸாதமுமாக எல்லோருக்கும்
நன்மைகளே நடந்தது.
சற்று குணம் தெரிந்த பின்னரேஸ்வாமிகள்,எல்லோரிடமும்
விடை பெற்றார். வியாதி குணமாயிற்று.
வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு காலா
காலத்தில் தாயும்,குழந்தையும் அவர்கள் வீட்டிற்கு
கொண்டு விடப் பட்டனர்.
நம்பிக்கைகள், பூஜைகள், எல்லாம் மெய்ப்பிக்கும் காலமாகவும் இருந்தது.
நாகப்பிரதிஷ்டை ஸந்தான ப்ராப்தி வேண்டியவர்களுக்குக் கிடைத்தது. நாகராஜனாக அழகான குழந்தை காலப்போக்கில்.
காலத்தின் சுவட்டில் இந்தக்கால அளவு, விஞ்ஞானம் முன்னேராதலால் வேறு சில ஸம்பவங்களையும் அடுத்துக்
கூற எண்ணம். தொடர்ந்து பார்க்கலாமா?
Entry filed under: அன்னையர் தினம்.
26 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 5:42 முப இல் ஜூன் 17, 2013
அந்தக்கால பழக்க வழக்கங்களை ஒன்று விடாமல் அழகாகச் சொல்லி வருகிறீர்கள்.
//மிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு
சாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும் சாப்பிட ருசியாயிருக்கும்னு வேறே சொல்லுவார்கள். அதுவும், உண்மைதான்.//
கேட்கவே சந்தோஷமாக உள்ளது, மாமி.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
நமஸ்காரத்துடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 10:40 முப இல் ஜூன் 17, 2013
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. பகிர்வுக்கு ஞாபகம் வருவதை எழுதிவிடுகிறேன். என் வயதுக்காரர்கள் இருப்பார்கள். அவர்களுக்குப் புதியதாக இருக்காது இச்செய்திகள். மற்றவர்கள் படிக்கும்போது இப்படியெல்லாம் இருந்ததா என்று யோசிக்கலாம். அப்படியென்று ஒரு நினைப்பு ஆசிகளுடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 7:33 முப இல் ஜூன் 17, 2013
பலரும் மறந்து போன பழக்க வழக்கங்கள்… ஆனால் இன்னும் இங்கு அவைகளை தொடருபவர்களும் உண்டு…
நன்றி அம்மா… தொடர வாழ்த்துக்கள்…
4.
chollukireen | 10:42 முப இல் ஜூன் 17, 2013
ஆமாம். நீங்கள் சொல்வதும் உண்மை. வாழ்த்துக்களுக்கு
நன்றி. அன்புடன்
5.
chitrasundar5 | 11:30 பிப இல் ஜூன் 17, 2013
காமாஷிமா,
நம் முன்னோர்களின் திருமண நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பதுபோலவே சொல்லியிருக்கீங்க.அந்த நாளில் நம்பிக்கைதான் வைத்தியம்போல் தெரிகிறது.
“எதையோ எழுத வந்து இதெல்லாம் வருவது ஸரியோயில்லையோ?”___ எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் எழுதினால்தானே கிளைக்கதைகளுடன் கூடிய ஒரு முழு கதை எங்களுக்கு கிடைக்கும். நினைவில் வருவதை எழுதுங்கமா.
பால்ய விவாக தடைச்சட்டம் எவ்வளவு முக்கியமானது. விளையாடும் வயதில் குடும்பம்,குழந்தை…நினைக்கவே பயமா இருக்கு.மேலும் கூறுங்கள்,கேட்கிறோம்!அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 12:39 பிப இல் ஜூன் 19, 2013
எழுதும்போது என்ன நினைவுக்கு வருகிரதோ அதை அப்படியே எழுதிவிடுகிறேன். நல்லதெல்லாம் நடந்து கொண்டே இருந்தாலும் அவைகளைப் பின்தள்ளி விடுகிறது சில ஸமயம். அன்னையர் தினம் தொடர்ந்து கொண்டு அப்பாவையும் கூடக்கூட கூப்பிடுகிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. கேட்கத் தயார்.
சொல்ல வேண்டும் இல்லையா? அன்புடன்
7.
ranjani135 | 8:02 முப இல் ஜூன் 18, 2013
கல்யாணம் முடிந்தது என்று அயர்ந்து உட்கார முடியாது. பண்டிகை, பருவங்கள் என்று மாற்றி மாற்றி எதோ ஒன்று செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லையா?
பெண்ணுக்கும் விளக்கெண்ணெய் கொடுத்ததை அப்பா சம்பந்திகளிடத்தில் சொன்னது சூப்பர்! அப்பாக்கள் கொஞ்சம் அசடுகள்தான்……! அப்போதும், இப்போதும்…
அந்தகாலங்களில் பிரசவம் கஷ்டம் தான். தலையெழுத்து கெட்டியாக இருந்து பெண்கள் பிழைக்க வேண்டும்.
அம்மாவும் பெண்ணும் ஒன்றாகப் பிள்ளை பெறுவதும் அந்தக் காலத்திய விஷயம் தான்.
நிறைய கேள்விப்பட்டிருந்தாலும், உங்கள் எழுத்துக்களில் படிப்பது ஒரு சுகமான அனுபவம்!
தொடருங்கள்!
8.
chollukireen | 12:47 பிப இல் ஜூன் 19, 2013
அம்மா,பெண், நாட்டுப்பெண் என முத்தொட்டில் இட்டோம் என்று எங்கள் பாட்டி சொல்லுவார்கள்.
அந்தக்காலத்தில் அதுஸரி..
நாமிருவர், நமக்கொருவர் இதுவும் அழகென்றுதானே சொல்லுகிரார்கள். எல்லாம் ஸரி. விவரமான பின்னூட்டம். நன்றி. அன்புடன்
9.
திண்டுக்கல் தனபாலன் | 3:11 முப இல் ஜூன் 19, 2013
வணக்கம்…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்… நன்றி…
10.
chollukireen | 6:13 முப இல் ஜூன் 19, 2013
மிக்க நன்றி உங்களின் அக்கறைக்கும், வாழ்த்துக்களுக்கும். வலைச்சரம் சென்று
பார்த்தேன். ஆசியா உமர் அவர்களின் மெயிலும் இப்போது வந்தது. தகவல் இல்லை
என்றால் நான் பார்த்திருக்க மாட்டேன். ஸந்தோஷம் திரு தனபாலன். அன்புடன்
சொல்லுகிறேன் காமாட்சி
11.
ranjani135 | 4:17 பிப இல் ஜூன் 19, 2013
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்! நானும் பின்னூட்டம் போட்டுவிட்டு வந்தேன்.
12.
மகிஅருண் | 3:10 பிப இல் ஜூன் 21, 2013
அந்தக்காலத்திற்கே சென்று வந்த மாதிரி இருக்குதும்மா, உங்க எழுத்தைப் படிக்கையில்! தொடர்ந்து உங்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்க.
சிவசங்கரி-யின் “பாலங்கள்” என்ற ஒரு கதை…அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பெண்களின் வாழ்க்கை மாறுவதை அழகாகச் சொல்லியிருப்பார். அந்த நினைவுகள் எட்டிப் பார்க்கிறது! 🙂
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
இன்னொரு விஷயம், நாலு பெண்கள் தளத்திலிருந்து உங்க ரெசிப்பி ஒன்றை பார்த்து செய்து பார்த்தேன், அங்கேயும் பின்னூட்டம் குடுத்திருக்கேன். உங்களுக்கு சுலபமாக இருக்குமே என இங்கேயும் லிங்க் தருகிறேன்.
http://mahikitchen.blogspot.com/2013/06/blog-post_21.html
நேரமிருக்கும்போது வந்து பாருங்கம்மா! உங்க அளவுக்கு பர்ஃபெக்டா வரலைன்னாலும் ஏதோ செய்தேன், ருசி அருமையா இருந்தது. நன்றிம்மா! 😀
13.
gardenerat60 | 10:13 முப இல் ஜூலை 3, 2013
கை வைத்யம் நாட்டு வைத்யம் பண்ணியே , பச்சை உடம்பை தேத்தி விட்டார்கள். தாயும் சேயும் பல மாதங்கள் பிரியாமல் . இம்யூனிடி வந்தப்புறம் மண்ணில் கூட கவலை இல்லாமல் புரண்டு கிடக்குங்கள். இப்போது நினைத்து கூட பார்க்க முடியாது.
சாப்பாட்டு லிஸ்ட் பார்த்தப்புறம், பண்ணி சாப்பிட ஆசையாக உள்ளது.
14.
chollukireen | 1:39 பிப இல் ஜூலை 4, 2013
ரொம்ப ஸந்தோஷமாயிருக்கு உங்கள் பின்னூட்டம்.ஸரியாகச் சொன்னாய். இப்போது தொட்டதெல்லாம் குற்றம்தான். நன்றி. அன்புடன்
15.
chollukireen | 1:37 பிப இல் ஜூலை 4, 2013
வந்தேன் பார்த்தேன். அருமையாக யெல்லாம்யிருக்கு.
இங்கே லேட்டா எழுதறேன். அன்புடன்
16.
chollukireen | 1:42 பிப இல் ஜூலை 4, 2013
நன்றி மஹி. வலைச்சரத்தில் உன்னையும் பார்த்தேன்.
மகிழ்ச்சியாக இருந்தது. அன்புடன்
17.
chollukireen | 11:23 முப இல் பிப்ரவரி 8, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொடர்ந்து அந்தக் கால நம்பிக்கைகளும்,நடந்தேறியவிதங்களும், காலம் எவ்வளவு வித்தியாஸம் இந்தக் காலத்தில். படியுங்கள். அன்புடன்
18.
நெல்லைத்தமிழன் | 12:38 பிப இல் பிப்ரவரி 8, 2021
அந்தக் காலத்தில் நடந்தவைகள் சம்பவங்களாக வருகின்றன. பிறந்தவீட்டுச் சீர் என்று தொடர்ந்துகொண்டிருக்கும் போலிருக்கிறது. Communication இல்லாததால் எப்படித்தான் தொடர்பு கொண்டிருந்திருப்பார்களோ… கண்காணாத இடத்தில் பெண் நல்லபடியாக இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டிருந்திருப்பார்கள்.
தொடர்பில்லாதவைகளாக சில சம்பவங்கள் இருந்தாலும் அவை அந்தக்காலம் பற்றிய ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது.
19.
chollukireen | 11:18 முப இல் பிப்ரவரி 9, 2021
கூடுமான வரையில் உறவு,உள்ளூர்,அண்டைஊர் ஸம்பந்தங்கள்தானே. ஒருபண்டிகைக்குச் சீர் செய்யும்போது அடுத்தற்கானதும் அட்வான்ஸாகச் செய்து விடுவார்கள். அடிக்கடி பெண்ணப் பெற்றவர்கள் போய்ப் பார்க்கவும் வேண்டுமே! சில விஷயங்கள் அந்தக்காலத்தைக் குறிப்பிடும் போது கேட்ட விஷயங்களாகக் கூட இருக்கும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பெண் கண்காணாத இடத்தில் நல்லபடியாக இருக்கிராள் என்ற நினைப்பு அதிகம் இருந்திருக்கும்.
இந்த நாட்களில் கல்யாணத்தின போதே அதற்காக இது,இதற்காக அது என்று சில ஸாமான்கள் சொல்லியே ஸெட்டாகக் கொடுத்து விடும் வழக்கமும் அமுலில் உள்ளது. நன்றி. அன்புடன்
20.
ஸ்ரீராம் | 3:08 பிப இல் பிப்ரவரி 8, 2021
பரிகார பூஜைகள்மேல் நம்பிக்கை இருந்த காலம். நம்பிக்கை இருந்தாலே பாதி விஷயம் ஜெயம்தான்.
21.
chollukireen | 11:21 முப இல் பிப்ரவரி 9, 2021
இப்போதும் நம்பிக்கையுள்ளவர் செய்து பலனடைகிரார்கள்கள். நல்லதே நடக்கும். நன்றி. அன்புடன்
22.
Geetha Sambasivam | 1:07 முப இல் பிப்ரவரி 9, 2021
என் புக்ககத்தில் என் மாமியாருக்கும் பெரிய நாத்தனாருக்கும் அடுத்தடுத்த மாதங்களில் குழந்தைகள் பிறந்தன. என் பெரிய நாத்தனாரின் மூத்த பெண்ணை விடச் சின்னவர் என் கடைசி மைத்துனர். விளையாட்டுத் தோழர்கள். அதை நினைவூட்டியது இந்த உண்மைச் சம்பவமும். தொடர்ந்து அடுத்து எழுதப் போகும் நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கேன். இதை முன்னால் படிக்கவில்லை. ஆனால் இந்த வழிமுறைகள் இருந்தது பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
23.
chollukireen | 11:35 முப இல் பிப்ரவரி 9, 2021
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. நானும் முன்பு எழுதியவைகளைப் படித்து இப்போது நடப்பதையும் யோசிக்கிரேன். அம்மாவின் நினைவுகள் சுற்றிலும் நடக்கும் விஷயங்களாகத் தொடருகிரது. கணினியில் ஐ ந்து மணிக்கு மேல்ஆறுமணிவரையில் உட்காருகிறேன். அப்போதுதான் இந்தப் பின்னூட்டம் எல்லாம்.கைபேசியில் தாறுமாறாக வருகிறது. நான் ஒன்று சொன்னால் அது ஏதோ வருகிரது. முக நூல் மேயதான் உதவுகிரது. உங்கள் பின்னூட்டங்கள் மூலம் பல விஷயங்கள் அறியமுடிகிறது. அன்புடன்
24.
Banumathy Natarajan | 10:24 முப இல் பிப்ரவரி 11, 2021
மிகவும் அருமையான தொகுப்பு. நீங்கள் கூறிய பல செய்திகள் எந்தன் மலரும் நினைவுகள்.அந்த இளமை பருவ நினைவுகள், அதனை மீண்டும் நினைவு கூர்கயில் ஒரு மன கிலேசம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.🙏🙏
25.
chollukireen | 11:18 முப இல் பிப்ரவரி 12, 2021
உங்களுக்கும் இம்மாதிரி ஏதாவது அனுபவங்களை நினைப்பூட்டியதா? எல்லாம் நடன்தவைகள்தானே. பரவாயில்லை. இது ஸகஜம்.அன்புடன்
26.
chollukireen | 11:20 முப இல் பிப்ரவரி 12, 2021
நன்றி. அன்புடன்