அன்னையர் தினத் தொடர்வு 5
ஜூன் 28, 2013 at 6:46 பிப 22 பின்னூட்டங்கள்
வீட்டில் முதல்ப்பெண்ணின் கல்யாணத்திற்குப்
பிறகுஇரண்டு பெண் குழந்தைகள், பேத்தி ஆக பெண் மகவுகள்.
ஆண் குழந்தை அருமைக்கு ஒன்று. நல்ல படிப்பு,சுறுசுறுப்பு.
வயது பதிமூன்று. வம்சத்துக்கே ஒரு ஆண் மகவு.
அப்பாவின் உடன் பிறந்தவர்கள், யாருக்கும், எந்த வாரிசும்
இல்லை. போற்றி போற்றி வளரும் ஆண் குழந்தை.
அந்த நாட்களில் எது ஒன்றானாலும், உடனே டாக்டர் என்று
ஓடாதகாலம்.வீட்டுவைத்தியத்திலேயே,கஞ்சி,கஷாயம்,என்று
வியாதிகள் குணமாகிவிடும்.
இப்படித்தான்8வயதுஇரண்டாவதுபெண்ணிற்குஜலதோஷம்,
மூக்கடைப்பு இருமல்,தும்மல், சளி.
சுக்கு,சித்தரத்தை, இருமலுக்கு அதிமதுரம், எல்லாம்
போட்டுகஷாயம், நாலுநாளில் ஸரியாரது,திரும்பவும் வரது.
மூச்சு விட கஷ்டம்.
டாக்டர் வீட்டுக்கே வந்து பார்க்கிறேன் என்று சொன்னார்.
அவர் ஒரு படிக்கும் பையனின் தகப்பனார்.
ஏற்கெனவே வீட்டுக்காரர் வீட்டிற்கும் வந்திருந்து
பரிச்சய,மானவர்.
டாக்டர் வந்து பார்த்து விட்டு மார்புலே சளி ரொம்ப
கட்டிண்டிருக்கு. மருந்துகள் கொடுப்பதோடு,மார்பு
சளியைக் குறைக்க ஒரு மருந்து கொடுப்பதாகச்சொல்லி
எழுதிக் கொடுத்திருக்கிரார்.
பேரே யாருக்கும் சொல்ல வரவில்லை. ஏதோ, மருந்தைப்
போட்டு ,கட்டு கட்டணுமாம்.
கடைசியிலே சொல்ல வந்த பேரு ஆண்டிப்ளாஸ்த்திரி.
இப்போதெல்லாம், ரைஸ் குக்கர்வருகிரதே அம்மாதிரி
நல்ல அலுமுனியத்தில் ஒரு அழகான டப்பா.
அதில் கெட்டியானவெண்ணெய்போன்றசற்றுஇளமஞ்சளில்
அடைத்திருக்கும் மருந்துக்கலவை. அதனுடைய
வாஸனை.
எப்படி உபயோகிப்பது எல்லாம் செய்து காட்ட ஒரு ஆள்.
எல்லாம் ஸரிதான்.
அகலமான பாத்திரத்தில் ஜலத்தைக் கொதிக்க
வைக்கணும். கொதிக்கும் ஜலத்தில் டப்பியைத் திறந்து
வைத்து சூடாக்கணும்.
அப்போவெல்லாம் பேப்பர் ஒழுங்கா கட் பண்ணி நோட்புக்
தைக்க மெல்லிசா கட்டையிலே ஒண்ணு இருக்கும்.
இந்த மிக்ஸியை கிளறிகொடுக்க இருக்கே.
அதைப்போலவேன்னே சொல்லலாம்.
அதாலே அந்த வெண்ணெய எடுத்து லிண்டுலே தடவி
,மார்புலே வைச்சு சுத்தி ஒரு கட்டு போடணும்.
கான்வாஸ் மாதிரி கட்ற துணி, மெல்லிசா ஒரு வில்வெட்மாதிரி லிண்ட், எல்லாம் தயார்.
இது என்ன பிரமாதம், நான் போடறேன். பயப்படாதிங்கோ.
வயஸுலே சின்னவளானாலும் கெட்டிக்கார வீட்டுக்கார
நாட்டுப் பெண் லலிதா
எல்லாம் சொன்னபடியே செஞ்சு மருந்து தடவி மார்புலேயும்
போட்டாச்சு.
ஒரே அலரல். கத்தோ கத்தல் என்னாச்சு என்னாச்சு.
ஐயோ எறியரதே.
சூடா போட்டுட்டியா? இல்லையே!
;சூடா இல்லே. கொதிக்க,கொதிக்க தடவினதை, தொட்டுப்பார்க்காமல் அப்படியே,அப்படியே
இல்லாவிட்டால் எதை இவ்வளவுஅவசரஅவஸரமா
எடுத்தாலும், எடுக்க விடறதா?
கொதிக்கிற வெண்ணெய் பூசிண்டுடுத்து. வழிக்க முடியுமா?
படுத்த படுக்கை தண்ணி கொட்ட முடியுமா?
பகவான் சோதனை. ஈரத்துணிய மடிச்சு மடிச்சு போடரது.
கத்தல் ஓயலை.டாக்டர் வந்தார்.
மருந்து தடவினது சூடு பார்க்க வேண்டாமா?
மருந்து போட்டால் போதுமா?
இப்படி இருப்பாங்களா அம்மா.
இரண்டு இலங்கைத் தீவளவிற்கு கொப்புளங்கள்.அடுத்தவர்களைச் சொல்ல முடியுமா_?
மக்கு யாரு. யாருமில்லே. வேளை. யாருக்கு? அதுவும்
அந்தக் குழந்தைக்கு.
மிகுந்த நாட்கள்,மாதம் ஆகி நல்ல தழும்புடன் நிமோனியா
அதுவும் டபிள் நிமோனியா என்ற பெயருடன் வியாதி
விடை பெற்றது தனி விஷயம்.
காலையில் இருக்கும் நிலையைச் சொல்லி, டாக்டர்
கொடுக்கும் மருந்தை வாங்கிக் கொடுத்துவிட்டுப்
பிறகுதான் பையன் ஸ்கூலிற்கு போக வேண்டும்.
அப்பா வேலையிலிருக்கும் ஹைஸ்கூல் தானே.
ஆனால் படிப்பு அக்கறை. ஸரியான நேரத்துக்குப் போய்விட வேண்டும் பையனின் துடிப்பு.
அவஸரம் வேண்டாம். அன்றும் அப்படிதான். மருந்து
வாங்கிக் கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமும், நடையுமாக
ஸ்கூல் இருக்கும் தெருவிலும் வந்தாகிவிட்டது.
ஸ்கூல் நெருக்கம்.
தண்டவாளத்தைக் கட்டி தொங்கவிட்டு,அதில்சம்மட்டியால்
ஓங்கி அடித்தால் எட்டூருக்கு காது கேட்கும் டேனிஷ்
மிஷன்ஹைஸ்கூலின் அழைப்பு மணி.
டங்டங்கோ, கணகணவோ ஓயாத மணிச்சத்தம்.
இன்னும் ஓட்டம்.
என்ன ஆச்சு ஏதோ சில்லுனு மூஞ்சியிலே.
முகத்திலே ஜலம் தெளிக்கிரார்கள். கண்ணைத் திறந்து
பாருப்பா. குடிக்க தண்ணி கொடுக்கறாங்கோ, குடிப்பா.
யாரோ ஏதோ சொல்ராப்லெ இருக்கே
நம்ம ஸாருடைய பிள்ளையாண்டான். உள்ளாற கூப்பிடு.
மயக்கம் போட்டுடுச்சு போல்ருக்கு
மெள்ள புரியரது. அப்பாவைக் கூப்பிட்டுவிட்டால் என்ன பண்றது.
அவர் வேரெ திட்டுவார். எனக்கு ஒண்ணும் இல்லே.
புக்கெல்லாம் என்னாச்சோ?
நான் எழுந்துடறேன். அப்பாக்கு சொல்ல வேண்டாம்.
சொல்ல முடியலே.
மெள்ள முயற்சி.
அதுக்குள்ளே ஸாருக்கு
தகவல்போய்கூடநாலுவாத்தியார்களுடன் படபடப்பா
ஓடிவர ஸார் திட்டாதிங்கோ, பையன் பாவம் ஸார்,
ஒரு வழியா எழுந்த பையனை வீட்டுக்கு அழைத்துவந்து
ஆன்டிப்ப்லாஸ்த்ரி படுக்கை பக்கத்திலே மருந்து
வாங்கப்போன அண்ணாக்கு வொரு படுக்கை.
ஆன்டிப்ளாஸ்டின், உச்சரிப்பு ஸரியோ,தவறோ போடும்
விதம் தெரிந்தது.
மருந்து உபயோகப்படுத்தாமலேயே சளியைக் கறைக்க
வேண்டியதாயிற்று.
விழுந்த பிள்ளைக்கு அடி ஏதுமில்லை. களைப்புதான்.
நல்லா ஆகாரமும், ரெஸ்டும் கொடுங்கள், டாக்டர் சொல்லி
விட்டார்.
என்ன அவஸரம். ஓட்டம் என்ன? சொன்னதைக்
கேட்டால்தானே?
கிராப் வெச்சுக்கணும், ஓட்டல்லே மூசுண்டல்
வாங்கிடசாப்பிடணும், மஸால்வடைன்னு கண்டதைச்
சாப்பிடணும், இதெல்லாம் யாராவது சொல்லிக்கொடுத்தா
அதை மனஸிலே ஏத்துக்கணும்.
நிதானமா வந்தா போரும்னு சொன்னதை கேக்கலே, இப்படி
ஒண்ணுக்கொண்ணு முடிச்சுபோட்டு அப்பா ஏக இரைச்சல்.
பசங்கதானே, ஒண்ணும் சொல்லாதெங்கோ.
சொன்னவர்களும் நிறைய வாங்கிக் கட்டிக் கொள்ளணும்.
எல்லோரும் சேந்து என் பிள்ளையைக் கெடுத்தாரது.
யாரும் வாயைத் திறக்க முடியாது.
துளி விபூதியை யெடுத்து நெத்தியிலிட்டு, காப்படி
அரிசியிலே காலணாக்காசைப்போட்டு, ஒரு கரித்துண்டையும் போட்டு பச ங்கள் எல்லோரையும்
வைத்து தலையைச் சுற்றி வேலைக்காரியிடம் கொடுத்து
பொங்கல் வைச்சு கும்பிட்டு ட்டுவா என்று சொன்னால்
அவள் செய்து விட்டு துண்ணூறு இந்தாம்மா ன்னு கொண்டு
கொடுப்பாள். அது செய்ய முடியும்.
சாமி,பகவானே,மாரியம்மாதாயே, பசங்களையெல்லாம்
காப்பாத்தம்மா. மனமுருக வேண்டலாம். இன்னும் தொடரலாம்.
Entry filed under: அன்னையர் தினம்.
22 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 2:17 முப இல் ஜூன் 29, 2013
/ இரண்டு இலங்கைத் தீவளவிற்கு கொப்புளங்கள்…/ பாவம் குழந்தை…
2.
chollukireen | 9:57 முப இல் ஜூலை 1, 2013
அந்த சூட்டின் அடையாளம் பெரிய தழும்பு. பாவம் என்ற வார்த்தைதான் யாவருமே சொன்னது. அன்புடன்
3.
chitrasundar5 | 4:05 முப இல் ஜூன் 30, 2013
காமாஷிமா,
அந்தக்கால வைத்திய முறைகளை இப்போது படிக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. செய்வதை செய்வோம்,பிறகு ஆண்டவன் விட்ட வழி என்றுதான் நினைத்திருப்பார்கள்.அக்கா குணமாகியாச்சு, அண்ணாவின் நிலையும் அவ்வாறே இருக்க வேண்டுமென மனது வேண்டிக்கொள்கிறது.கெட்டிக்கார லலிதா கேரக்டர் மனதில் பதிந்துவிட்டது. மேலும் தொடருங்கள் அம்மா. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 10:00 முப இல் ஜூலை 1, 2013
ஆழ்ந்து படித்திருக்கிராய் என்று புரிகிரது. கதையில்லை,நிஜமல்லவா? தொடர்ந்து வா. நன்றி
அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 5:09 முப இல் ஜூன் 30, 2013
அந்தக்கால வைத்திய முறைகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
இப்போது எவ்வளவு மாறுதல்கள்!!!!
சிறந்த பதிவு + பகிர்வு. பாராட்டுக்கள்.
6.
chollukireen | 10:02 முப இல் ஜூலை 1, 2013
உங்களுடைய பிஸியான நேரத்திலும், பின்னூட்டமிட்டதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
ranjani135 | 3:55 பிப இல் ஜூன் 30, 2013
அந்தக் கால வைத்திய முறைகளை படித்தாலே பயமாக இருக்கிறது. என் அம்மா சொல்லுவாள்: எங்களுக்கு ஆயுசு கெட்டி’ என்று. அதுதான் நினைவுக்கு வருகிறது.
அந்தக்காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் எத்தனை வித்தியாசம்!
ஆனால் மருத்துவர் ரொம்ப புத்திசாலி போல இருக்கே. என்ன உடம்பு என்று சரியாகக் கண்டுபிடித்து மருந்து கொடுத்து குணப்படுத்தியிருக்கிறாரே!
ஓடி ஓடிப் போன அண்ணாவும் படுத்துக் கொண்டு விட்டாரே!
அண்ணா தங்கை இருவரும் சீக்கிரம் குணமாகட்டும்.
8.
chollukireen | 10:10 முப இல் ஜூலை 1, 2013
நாட்டு வைத்தியம், பச்சிலை வைத்தியம்,இங்லீஷ் வைத்தியம் எல்லாம் இருந்தது. நல்ல காலம் இருந்தவர்களுக்கு இராகு காலம் நல்லதே செய்யும்.
பலன்களும் இருந்தது.
புதுப்புது வியாதிகளெல்லாம் ஆரம்பித்த காலம்.
வியாதிகளுக்குப் பெயர் வைத்த காலம்.
மருந்துகள் கண்டு பிடித்த காலம் என்று, மாறிக்கொண்டே வருகிரதை பார்த்தவள் என்கிற
சின்ன அனுபவங்கள்தான் யாவும். பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
gardenerat60 | 10:18 முப இல் ஜூலை 3, 2013
அப்பா! எத்தனை கஷ்டங்கள் அம்மா!எப்படித்தான் பெரியவாளா ஆனாளோ!, பாவம் என்று தோன்றுகிறது.
10.
chollukireen | 1:32 பிப இல் ஜூலை 4, 2013
அதெல்லாம் அவ்வப்போது ஸகஜம் ஆகிவிடும்போலுள்ளது. எல்லோருக்குமே வருவதை அனுபவித்துத்தான் ஆகவேண்டுமல்லவா? நடந்த விஷயங்கள். ஆனாலும் பாவம்தான். அன்புடன்
11.
chollukireen | 11:02 முப இல் பிப்ரவரி 15, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
குழந்தைகளைப் பெரியவர்கள் ஆக்குவதற்கு முன் அவர்களுடன், எந்தவிதமாக எல்லாம் பாடுபடவேண்டி இருக்கிரதுஅவர்களுக்கு உடம்பு அஸௌகரியம் ஏற்பட்டால் எந்த முறையில் வைத்திய வசதி இருந்தது? இதுவும் உங்களுக்குத் தெரியவே எழுதுகிறேன். படியுங்கள். அன்புடன்
12.
நெல்லைத்தமிழன் | 11:58 முப இல் பிப்ரவரி 15, 2021
சம்பவங்களைப் படிக்கையில் திடுக்கிட்டுவிட்டேன்.
பையன், அவசர அவசரமாக ரெயில்வே லைனை க்ராஸ் பண்றேன், ரோட்டைக் க்ராஸ் பண்ணறேன்னு அடிபட்டு விழுந்துட்டானோ என்று.
பெண் குழந்தைக்கும் மருந்தை செக் பண்ணாமல் போடுவார்களோ…
13.
chollukireen | 12:31 பிப இல் பிப்ரவரி 15, 2021
நான் எழுதிஇருப்பது எல்லாம் நடந்தவைகள். ஒள்றும் தெரியாமலிருந்தவர்கள். சுடச்சுட போட்டிருககிறார்கள் அஞ்ஞானம். வேறு என்ன சொல்ல? அன்புடன்
14.
நெல்லைத்தமிழன் | 12:00 பிப இல் பிப்ரவரி 15, 2021
மருந்துகள்லாம் சரிவர இல்லாத காலத்திலே, என்ன பிரச்சனை என்றே தெரியாமல் எத்தனை பேர் கஷ்டப்பட்டார்களோ, போய்ச்சேர்ந்தார்களோ… அதை நினைக்கும்போது இப்போதைய நிலைமை பரவாயில்லை. போனாலும், போவதற்கு முன் முடிந்த அளவு முயற்சிகளாவது எடுக்க முடிகிறது. ஈஸ்வரோ ரக்ஷது என்று சும்மா இருப்பதில்லை.
15.
chollukireen | 12:43 பிப இல் பிப்ரவரி 15, 2021
எல்லாம் நடந்து இருக்கிறது வைத்தியம் இருந்தாலும், அலட்சியமாக இருப்பவர்களையும் பார்க்கிறோமே! முடிந்த அளவு உஷாராக இருப்பதுதான் வழி. படித்தவர்கள் ஸமுதாயம் இது. பிறருக்குச் சொல்லும் அளவு தற்காப்பும் இருக்கிறது. சுடச்சுட பின்னூட்டம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.உங்களின் மின்னூல் மின்நிலா விமரிசனம் மனதைக் கவரும் வகையில் அருமையாக இருந்தது. அன்புடன்
16.
Revathi Narasimhan | 1:28 பிப இல் பிப்ரவரி 15, 2021
அன்பு காமாக்ஷிமா,
நினைத்தாலே நடுங்குகிறது.
பகவான் நல் ஆயுசைக் கொடுக்க வேண்டும். நல்ல புத்தியையும் கொடுக்க வேண்டும்.
மிகப் பிரமாதமாக எழுதுகிறீர்கள்.
இந்த விஷயம் எல்லாம் சரித்திரம் ஆயிற்றே.!!!
வைத்தியரின் முன் யோசனை,
அடிபட்டுக் கொண்ட பிள்ளை,
காயம் சார்த்திக் கொண்ட பெண் குழந்தை
கண்முன் வந்து நிற்கிறது. பெற்றவள் என்ன பாடு பட்டாளோ.
மனம் நிறைய நன்றிம்மா.
17.
chollukireen | 11:51 முப இல் பிப்ரவரி 16, 2021
ஆமாம் எவ்வளவோ வருஷங்களுக்குப் பின்னர் படிக்கும்போதே பயங்கரமாக இருக்கிறதே. அப்போது எப்படி இருந்திருக்கும்.. காலம் கடந்த ஸம்பவங்கள்.நன்றிம்மா. அன்புடன்
18.
ஸ்ரீராம் | 1:37 பிப இல் பிப்ரவரி 15, 2021
அம்மாடி… சூடு ஆறவிட்டு காட்டியிருக்கலாம். யாராவது இன்னொருவர் மேற்பார்வை பார்த்திருக்கலாம். அந்தக் கால வைத்தியமுறை கொஞ்சம் பயங்கரம்தான். காதுல எண்ணெயைக் காய்ச்சி ஊற்றணும் என்பார்கள்!
19.
chollukireen | 11:35 முப இல் பிப்ரவரி 16, 2021
நானும் இந்தமாதிரி கேட்டதற்கு ஒண்ணும் தெரியாமல் பேந்த விழித்துவிட்டேன் போல இருக்கு.என்று பதில் வந்தது. அறியாமையுடன் ஸமயத்தில்புத்தி வேலை செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நடந்து முடிந்த கதைகள். காதுவலி என்றால் ஒரு சொட்டு எண்ணெய் சுடவைத்து விடுவார்கள். காய்ச்சி ஊத்தணும் என்பதெல்லாம் கோபக்காரவார்ததைகளாக இருக்கும். படிக்கத்தான் கிடைக்கும் இப்போது. நன்றி. அன்புடன்
20.
ஸ்ரீராம் | 1:37 பிப இல் பிப்ரவரி 15, 2021
* கட்டியிருக்கலாம்
21.
Geetha Sambasivam | 10:50 முப இல் பிப்ரவரி 16, 2021
சூடு ஆறினதும் போட்டிருக்கணும். தெரியலை. முன்னேப் பின்னே பழக்கம் இருந்தால் தானே! என்ன பிரச்னைனே தெரியாமல் இப்படிப் பல குழந்தைகள் உயிரை விட்டிருக்கின்றன. அந்தப் பையர்/ஒண்ணே ஒண்ணு, கண்ணே, கண்ணுனு இருந்தது பாவம், நல்லபடியாப் பிழைச்சு வந்ததே போதும். நல்லபடியா இருக்கட்டும் குழந்தைகள்.
22.
chollukireen | 11:43 முப இல் பிப்ரவரி 16, 2021
நான் குறிப்பிட்ட இவர்கள் என்னைவிடப் பெரியவர்கள்.
அந்தக்கால கட்டத்தில் இப்படியும்பல ஸம்பவங்கள். இ்பபடி உங்களுக்கும் உதாரணஙகள் தெரிந்திருககிரது. நன்றி .அன்புடன்