அன்னையர்தினத்தொடர்வு 6
ஜூலை 10, 2013 at 12:17 பிப 20 பின்னூட்டங்கள்
எல்லோரும் நல்லபடியாக உடல் நலம் தேறினார்கள். வீட்டில்
சுபகாரியங்கள் செய்ய வேண்டும். யாவருமாகத் திருப்பதி போய்
பூணூல் நடத்தி வருவதென்று முடிவாகி, நல்ல நாள் பார்த்து
திருப்பதியில் , உற்றார் உறவினர்கள் சூழ நல்ல காரியங்களும் நன்றாக
நடந்தது.
நித்ய அனுஷ்டானங்கள் யாவும் கடை பிடிக்கும் நேரத்தில் ஒரு நாள்
பார்த்தால் பிள்ளை தலைக் குடுமியைக் கத்தரித்துக்கொண்டு வந்து
நிற்கிரான்.
கிராப்பு வைத்துக்கொள்ள. வீட்டில் பூகம்பம்தான் நடக்கப்போகிறது.
கூடப் படிக்கும் சிநேகிதர்கள் யாருக்கும் குடுமி கிடையாது.எல்லாரும்
கிராப்புக்கு மாறியவர்களல்ல. குடுமி வழக்கமே இல்லாதவர்கள்.
அவ்வளவு பிள்ளைகள் மத்தியில் உடன் படிக்கும் பிள்ளைகள் அளித்த
தைரியம். இவன்கையால் எனக்கு எதுவுமே
வேண்டாம்.
சொல்லாமல் எனக்குப் பிடிக்காத காரியம் செய்தவன் என் பிள்ளையே
இல்லை. எதிரில் வரக்கூடாது போகட்டும் வீட்டை விhttps://chollukireen.wordpress.com/wp-admin/ட்டு.
எனக்கு க் கொள்ளிகூட இவன் போடக்கூடாது.
இப்படி அப்பா பிள்ளை போர்க்கொடி.
ஒருவர் அறியாமல் ஒருவருக்கு எல்லாம் செய்து யுத்தகளத்தில்
வெகுநாள்.
ஏதோ தகாத காரியம் செய்து விட்டு வந்த மாதிரி அப்பாவின் கோபம்.
எல்லோரும் உடந்தை என்ற ஸந்தேகம். எல்லோரும் எதற்கும் மௌனம்.
ஏதாவது பேசினாலும் கடைசியில் வந்து நிற்கும் , இந்த க்ராப் தலையன்
எனக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்ற பேச்சே முடிவாக வரும் வார்த்தை.
காலங்கள் இரண்டொரு வருஷங்கள் ஓடியது.
பெண் குழந்தைக்கு அடிக்கடி, ஜுரம்,கபம்,இருமல் என்று தொடர்ந்து வந்து
கொண்டே இருந்தது.
ஆஸ்த்மாவா இருக்குமோ சங்கை.
புதுசான காஃப்ஸிரப் கிரிஸிவால். அப்புரம் ஸிரோலின் ரோச்.
விட்டு விட்டு உடல் நலக்குறைவு.
டாக்டர்,தஸ்தர் மருந்துச் சிலவுகள்
எப்பவோ ஒரு ஸமயம் பையன் விளையாடிக்கொண்டிருக்கும் போது
அப்படியே மயங்கி உட்கார்ந்து விட்டான் என்கிற ஸங்கதி.
ஏதோ பேச்சுகள் வரும் போது சொன்னது. ஏற்றார்போல் சில ஸமயம்
ஸந்தேகங்கள்.
1939 என்று நினைக்கிறேன். உலக மகா யுத்தம்.
மிஷனரிஸ்கூல்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் உதவித்
தொகைகள் கிடைக்கவில்லை.
டென் மார்க்கிலிருந்து வரும் கிராண்ட் கிடைக்கவில்லை.
மூன்றிலொருபாகம் சம்பளம் கட்.
ஆயிற்று ரிடயர் ஆகும் நாட்களும் அருகில் வந்து கொண்டிருந்தது.
பிள்ளைக்கு டாக்டர் வைத்தியம், போகாத டாக்டரில்லை,
வேண்டாத தெய்வமில்லை,ஸாமிக்குற்றம்,மந்திர தந்திரம்,
மலை வாழ் ஸன்னியாசி தரும், பச்சிலைச்+ சாறுஎவ்வளவு இருக்கும் தெரியுமா?
வேளைக்கு கால்படி, உப்பில்லா பத்தியம் ,
எல்லாம் செய்துகொண்டு ஜங்காலகன் மாதிரி பிள்ளையின் வளர்ச்சி.
பார்த்து ஸந்தோஷப்பட இயலாமல் வந்திருக்கும் நோயைக் குறித்த கவலை.
மருந்திட,மருந்திட வியாதி கொழுந்திட ஆரம்பித்து விட்டது.
எங்கும் போகவர தடை. எங்காவது ஏதாவது இப்படி.
மயக்கநோய் வலிப்பு நோயாக மாறத் துவங்கியது.
அதே ஸமயத்தில் இந்த நோய் வேறு பலருக்கும் வந்திருப்பதும்
தெரிந்தது.
ஸ்கூலில் ஸைன்ஸ் எல் டி சாமிநாதய்யர் பிள்ளைக்கும்
இன்னும் யார்யாருக்கோ இருப்பது தெரியவந்தது.
அவர்கள் என்ன வைத்தியம் செய்தனர், இவர்கள் என்ன வைத்தியம்
செய்தனர். நோயாளிகளின் லிஸ்டும்,வைத்தியமும், எல்லோரும்,
எல்லாவற்றையும் பின் பற்றத் தொடங்கினர்.
எனக்கென்ன, நான் நன்றாக இருக்கிறேன், எனக்கேன் இவ்வளவு
கட்டுப்பாடு, கூடவே பாடிகார்டு, இந்தக் குழந்தையைத் தூக்காதே
, அதைச் செய்யாதே, எனக்கென்ன ஆயிற்று கேள்விகளுக்கு பதில்
சொல்லியும், தவிப்பு.
தினமும்,ஸமிதாதானம்,சூரிய நமஸ்காரம், இந்த்ராக்ஷி, சிவ கவசம்,
அதித்ய ஹ்ருதயம் எல்லாம் சொன்னவற்றையெல்லாம் செய்து கொண்டு
ஒரு சிவப்பழமாக, க்ராப் தலை ஒன்றைத் தவிர,நல்ல பண்பட்ட
உத்தம் புத்திரனாக கட்டுண்ட பசுவாக பிள்ளையைப் பார்த்தால்எப்படி
இருந்திருப்பார்கள்?
தனக்கு என்ன உடம்பென்று தெறியாமல், தடையை உடைத்து
வெளியே போகும் ஆர்வம்.
கட்டுப்பாடு,கட்டுப்பாடு, எல்லாமே கட்டுப்பாடு.
ரிடயராகி கிராமத்துக்கு போகணும். நல்ல ஊர், மக்க மனுஷாள் எல்லாம்
இருக்கும் ஊர்.
உடல் நலமில்லாத பிள்ளை, என் வாழ்க்கை இப்படிதான் கவலை
நிறைந்தது என்ற தகவலுடன் ஊருக்குப் போகணுமா?
திரும்பவும் ஐயோ பாவம், என்ற சொற்களைக் கேட்கப் போகப்போகிறோமா?
நன்றாக இருக்கிராள் என்ற பேச்சைக் கேட்காமல் பாவம்பாவம், என்ற பேச்சே
எனக்குத்தானா?அம்மா இப்படித்தான் நினைத்தாள்.
பையன் ஸம்பாதிப்பான், வேலைக்குப் போவான், எதுவுமில்லாமல்
என்ன பெண் நான்.அம்மா குமுறுவாள்.
நாங்கள் எல்லாம் படித்து வேலைக்குப் போய் ஸம்பாதித்துக் கொடுக்கிறோம்.
நீயும் சொல்லுடி என்று நான் சொல்லுவேன் என் அக்காவைப் பார்த்து.
அவள் எதுவும் சொல்ல மாட்டாள்.
அவளுக்கமைந்த புக்ககமும் பின் நாளில் ஒத்தாசை மனப்பான்மை
இல்லாதவர்களாக அமையும் என்று அவளுக்குத் தோன்றியதோ என்னவோ?
ரிடயர் உத்தரவும் வந்தாகி விட்டது.
அப்பாவுடன் கூட வேலை செய்பவர், ஸம்ஸ்க்ருத பண்டிதர், ராஜு
ஸாஸ்திரிகள் நாள் பார்த்துக் கொடுத்து விட்டார்.
திருவண்ணாமலைக்கோயிலின் பிள்ளாயார் ஸன்னிதி, எலுமிச்சம் இலை
வீழ்ந்து வாஸனையுடன் கிடைக்கும் கிணற்று நீரை குடிக்காமல்ப் போவதா?
அண்ணாமலையை விட்டுப் போவதா? பலகேள்விகள். அம்மாவுக்கு.
இப்பவும் அந்தக் கிணறு இருக்கிறது.
நான் போனாலும் இப்பவும் கிணற்றை இரண்டு மூன்று முறை எட்டிப்
பார்க்காமல் வருவது கிடையாது.
எலுமிச்சை மரமில்லை. கிரில்லால் மூடி கிணறு நான் இருக்கிறேன் என்று
சொல்வதுபோல எனக்குத் தோன்றும்.
என்ன நாள் வச்சிருக்கார்? பயிஷ்டைக்கு நாளில் ரயிலில் போனால்க்கூட
பெண்ணையாற்றைக் கடக்க வேண்டுமே
எப்படியெல்லாம் யோசனைகள்? அம்மாவுக்கு.
இதற்கெல்லாம் அபிப்ராயம் சொல்ல உரிமையே இல்லை.
ஊரில் நிலமிருந்தது. வீடு நாலில் ஒரு பாகம்.
எவ்வளவு புத்தகங்கள்,மேஜை,நாற்காலி,அலமாரிகள், என வளவனூர்
ஸ்டேஷனில் கூட்ஸில் ஸாமான்கள் வந்திறங்கியது.
அதற்கு முன்னரே நாங்களும் வந்திரங்கினோம்.
அத்தை ஸஷ்டி அப்த பூர்த்தி செய்து, பேரனுக்காகவும், சாந்தி பூசைகள்
செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்தார்.
பர்த் ஸர்டிபிகேட் கொடுத்தா பிறந்த தேதி கொடுத்தார்கள்?
இல்லையே. இன்னும் டைம் இருக்கு பார்ப்போம், அப்பா சொல்ல
எல்லாரும் ஷஷ்டியப்த பூர்த்திக்கு வந்து விடுங்கள். பார்ப்போம்.
பேசுவோம்..
ஸாதாரண உடம்பு பின்னாடி எந்த வகை நோயாக மாறியது இதுதான்
அந்தக் காலம்.
Entry filed under: அன்னையர் தினம்.
20 பின்னூட்டங்கள் Add your own
ஸ்ரீராம் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 1:04 பிப இல் ஜூலை 10, 2013
கிராப் தலைக்கு அத்தனை எதிர்ப்பா?
பாவம், பிள்ளைக்கு என்ன நோயோ என்று கவலையாக இருக்கிறது. சுதந்திரமாக ஓடியாடி விளையாட முடியாமல் கட்டுப்பாட்டுடன் – ஏன் கட்டுப்பாடு என்றும் அறியாமல்….
அம்மா தன் அபிப்பிராயத்தை சொல்ல முடியாமல் என்ன தவிப்பு !
பலவித உணர்ச்சிகளை இந்த தொடரில் உணர முடிகிறது.
இந்தக் காலம் பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.
2.
chollukireen | 1:05 பிப இல் ஜூலை 11, 2013
க்ராப் தலையை அவ்வளவு ஸுலபமாக ஏற்றுக்கொள்ளும் காலமில்லை. ஆசார அனுஷ்டானங்கள் இருந்த அதில் நம்பிக்கையுடன் திளைத்து வாழ்ந்த நடுத்தர வர்கத்தின் சூழ்நிலை அது.
க்ராப் தலை அதனால் நாகரீகம் தலைக்கேரிவிடுமோ என்றபயமோ என்னவோ?
டீன் ஏஜின் ஆசைகள், அம்மாவின் இயலாமை, குடும்பம்,கௌரவம் ஏதேதோ எண்ணங்கள் இல்லையா
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 3:45 பிப இல் ஜூலை 10, 2013
//திருவண்ணாமலைக்கோயிலின் பிள்ளாயார் ஸன்னிதி, எலுமிச்சம் இலை வீழ்ந்து வாஸனையுடன் கிடைக்கும் கிணற்று நீரை குடிக்காமல்ப் போவதா? அண்ணாமலையை விட்டுப் போவதா? பலகேள்விகள். அம்மாவுக்கு.
இப்பவும் அந்தக் கிணறு இருக்கிறது. நான் போனாலும் இப்பவும் கிணற்றை இரண்டு மூன்று முறை எட்டிப்
பார்க்காமல் வருவது கிடையாது. எலுமிச்சை மரமில்லை. கிரில்லால் மூடி கிணறு நான் இருக்கிறேன் என்று
சொல்வதுபோல எனக்குத் தோன்றும்.//
சம்பவங்களையும் அனுபவங்களையும் அந்தக்கால வாழ்க்கை முறைகளையும் வெகு அழகாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள். ஒருமுறைக்கு இருமுறையாகப்படித்து ரஸித்தேன். பாராட்டுக்கள். நமஸ்காரங்கள்.
என் கணினியில் இன்று நீண்ட நேரம் நெட் கிடைக்காததால் தாமதமாக வர நேர்ந்து விட்டது. மன்னிக்கவும்.
4.
chollukireen | 1:13 பிப இல் ஜூலை 11, 2013
படித்து ரஸித்தேன். ஒருமுறைக்கு இருமுறையாக..
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. பழைய நிகழ்ச்சிகள்.
குட்டி,குட்டி சொம்போ,மற்றெதுவோ எடுத்துக் கொண்டு
நாங்களும் ஜலம் கொண்டு வருவோம். மறக்க முடியாத நிகழ்ச்சிகள். தாமதம் எதுவுமில்லை வருகைதான் முக்கியம். வரவுக்கு நன்றிகள். ஆசிகளுடனும்,அன்புடனும்.
5.
chitrasundar5 | 12:18 முப இல் ஜூலை 11, 2013
காமாக்ஷிமா,
அந்த நாளிலேயே அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தகறாருதான் போல.
பிள்ளைகளுக்கு ஒருபக்கம் என்றாலும் இவ்வளவையும் பொறுப்பேற்று செய்தும் அபிப்ராயம் கேட்கக்கூட ஆள் இல்லாமல்…கொடுமைதான் அந்தக் கால அம்மாக்களின் நிலைமை.
“நாங்கள் எல்லாம் படித்து வேலைக்குப் போய் ஸம்பாதித்துக் கொடுக்கிறோம் நீயும் சொல்லுடி”___அந்த நாளிலேயே,அந்த வயதிலேயே உங்கள் தன்னம்பிக்கை ஆச்சரியமாக உள்ளது.போகிற போக்கில் உங்க அக்காவின் நிலையையும் அழகா சொல்லிட்டீங்கமா.
பாவம் உங்க அண்ணன்,தனக்கு வரவிருப்பது என்னவென்று தெரியாமல் க்ராப் தலையுடன் ஸ்டைலாக இருக்க நினைத்திருப்பார்…..விதி யாரை விட்டது!!
6.
chollukireen | 1:27 பிப இல் ஜூலை 11, 2013
டீன் ஏஜில் ஆம்பிள்ளை பசங்களுடன் ஏதாவது திருத்தம் சொன்னால்ஏற்கமாட்டார்கள்.
இந்தக் காலத்தில் எல்லாரும் ஒன்றுதான். அம்மா வைப் பற்றி பாவம் என்ற உணர்ச்சி அப்போதே வந்து விட்டதென்று நினைக்கிறேன்.
அண்ணாவிற்கு,அவ்வளவு புத்திசாலியான பையனிற்கு
இந்த ஒரு சின்ன ஆசை க்ராப் தான்.
உணர்ச்சி வசமான நினைவுகள்தான் இவைகள். உன் வரவிற்கும், கருத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
7.
gardenerat60 | 5:08 பிப இல் ஓகஸ்ட் 5, 2013
என்ன உடம்போ என்று கவலையாகத்தான் இருக்கிறது. மேலே என்ன எழுதப்போகிறீர்கள் என்று ஊகிக்க முடியவில்லையே.
நாம் பழகிய இடங்கள் சில, மறுபடி பார்க்கும் போது , அந்த நாட்களுக்கு அழைத்து சென்று விடும். அந்த சுகங்களே தனி. கிணறும் அதன் சுவையும், படிக்க சுகமாய் இருக்குதம்மா.
நமஸ்காரம்.
8.
chollukireen | 1:18 பிப இல் ஓகஸ்ட் 6, 2013
கண் வைத்தியத்திற்காக ப்ளாகில் ஒன்றும் எழுதவில்லை. நல்லபடியாகி முடிந்திருக்கிறது. கூடிய சீக்கிரம் விட்டதைத் தொடரவேண்டும். அன்பிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து அன்பைப் பொழியவும். அன்புடன்
9.
gardenerat60 | 2:10 பிப இல் ஓகஸ்ட் 6, 2013
அம்மா, நன்றாக குணமடைய என் பிரார்த்தனைகள். டேக் கேர்!.
10.
chollukireen | 10:25 முப இல் ஓகஸ்ட் 15, 2013
வாம்மா. திரும்பவும் எழுதலாமென்று இருக்கிறேன். அன்புடன்
11.
Shanthi | 10:07 முப இல் ஓகஸ்ட் 22, 2013
amma i found this link and started reading. it is very interesting. hope i will be able to get future updates
12.
chollukireen | 2:35 பிப இல் ஓகஸ்ட் 23, 2013
வாம்மா சாந்தி. அன்புடன் வரவேற்கிறேன். இன்ட்ரெஸ்டாக இருக்கா. மிக்க மகிழ்ச்சி. தவராது படித்து பின்னூட்டம் கொடம்மா. அன்புடன்
13.
chollukireen | 11:09 முப இல் பிப்ரவரி 22, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஓரளவு வயதிற்குப் பின்னர் பிள்ளைகளுக்கு அவரவர்களின் நிலையும் மாறி விடுகிறது. சொந்த விருப்பங்கள். எதிற்கும் குணம் வந்து விடுகிறது. எல்லா காலத்திலும் அது ஒரே மாதிரிதான் போலும்! ஆராவது பகுதி இது.பாருங்கள். படியுங்கள். அன்புடன்
14.
ஸ்ரீராம் | 12:05 பிப இல் பிப்ரவரி 22, 2021
என்ன நோய் அப்படி என்று தெரிந்து கொள்ள ஆவல். அந்தக் காலத்தில் குடுமி எடுத்து கிராப் வைத்துக் கொண்டதற்கே இவ்வளவு கோபம், எதிர்ப்பு… இப்போது? நித்ய அனுஷ்டானங்களே யாரும் செய்வதில்லை.
15.
நெல்லைத்தமிழன் | 2:49 பிப இல் பிப்ரவரி 22, 2021
ஒவ்வொரு காலத்திலும் அடுத்த ஜெனெரேஷன் செய்யுதுகொள்ளும் சாதாரண கால மாற்றங்கள், தந்தைக்கு பெரிய கவலையைக் கொண்டுவருவது இயல்புதான். இப்போ நமக்கு ‘குடுமிக்குப் பதிலா க்ராப்புக்கா’ அவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று தோன்றும். ஆனால் கொஞ்சம் இடம் கொடுத்தால் இன்னும் என்ன என்ன மாற்றங்கள் வருமோ என்ற பயம்தான். இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று காத்திருக்கிறேன்.
16.
chollukireen | 8:35 முப இல் பிப்ரவரி 23, 2021
இந்த நாளில் பெண் குழந்தைகளும் தலையை பல விதங்களில் முடியை வெட்டிக் கொள்கிறார்கள் எதையும் யாரும் கண்டு கொள்வதில்லை யாருக்கும் சொல்லவும் முடியாது காலம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நன்றி அன்புடன்
17.
நெல்லைத்தமிழன் | 2:51 பிப இல் பிப்ரவரி 22, 2021
அப்பாவை எதிர்க்கும் குணம் – இதுவும் இயல்பானதுதான். காலமாற்றங்களால் உண்டாவது. அப்பாவுக்கு, பசங்க காலமாற்றத்தால் வழி தவறிடக்கூடாதே என்று கவலை. பசங்களுக்கோ காலத்தையொட்டி நடக்கும் ஆர்வம்.
இதெல்லாம் எப்போதும் நடப்பதுதான். நாம் எப்படி நடந்துகொண்டோம், அதற்கு நம் அப்பாவின் ரியாக்ஷன் என்ன என்று யோசித்தாலே நமக்குப் புரிந்துவிடும்.
18.
chollukireen | 11:20 முப இல் பிப்ரவரி 23, 2021
இதெல்லாம் ஸமயத்தில் யார் யோசிக்கிரார்கள்.கோபம் வரும்போதுசில வார்த்தை பறிமாற்றங்கள் நிகழ்ந்து விடுகிறது பக்குவம் என்பது தாமதமாகத்தான் வருகிறது. அன்புடன் .
19.
chollukireen | 11:05 முப இல் பிப்ரவரி 23, 2021
அந்த நாட்களுக்கென்றே சில ட்ரேட்மார்க் வைத்தியங்கள் உள்ளது இல்லையா. ராமேச்வர யாத்திரை வேறு. வாருங்கள் போகலாம். அன்பு டன்