டால் ஒன்று புதிதாய்,பயறும்,கருப்பு மசூர் முழுப் பயறும்.
ஜூலை 15, 2013 at 10:21 முப 8 பின்னூட்டங்கள்
சாப்பாட்டு விஷயங்கள் பகிர்ந்து கொண்டு வெகு நாட்களாகிவிட்டது. இந்த
டால்நாம் ஸாதாரணமாக உபயோகப் படுத்தும், மசூர் டாலின் கறுப்பு நிற
தானியம்.நல்ல ஆரஞ்ச் கலரின் மசூர் டாலின் எதிர் நிறமாள வெளிர் நிற
கருப்புக் கலரை உடையது.
இத்துடன் பச்சை நிறமான பாசிப் பயறைக் கலந்து உபயோகப் படுத்தி
செய்ததிது.அவஸரமான வேளையில் சீக்கிரம் செய்து முடிகக உதவுகிறது.
சற்று ருசியில் மாறுதலையும் உணர முடிகிறது. ரொட்டியுடன் சாப்பிட
இது ஒரு நல்ல மாற்றமு்ம் கூட
வேண்டியவைகளைச் சற்று பார்ப்போம்.
அரைப்பதற்கான ஸாமான்கள்.—
-வெங்காயம்—2 திட்டமான ஸைஸ்
தக்காளி—–2 திட்டமான அளவு
இஞ்சி—-ஒரு துண்டு
பூண்டு—-4 இதழ்கள்
வேண்டிய பொடிகள்.
மிளகாய்ப்பொடி—ஒரு டீஸ்பூன்
தனியாப்பொடி—-ஒரு டீஸ்பூன்
சீரகப்பொடி—அரை டீஸ்பூன்
மிளகுப்பொடி—ஒரு துளி
கரம்மஸாலாப் பொடி—விருப்பத்திற்கு
தக்காளி சாஸ்—-1 டேபிள்ஸ்பூன்.
எண்ணெய்—-4 டேபிள்ஸ்பூன்.
கருப்பு மசூர் பயறு—-முக்கால்கப்
பச்சைப் பயறு—முக்கால்கப்
செய்முறை
பச்சைப்பயரும்,கருப்பு மசூர் பயரையும் நன்றாகக் களைந்து ஒரு
இரண்டுமணி நேரம் ஊரவைக்கவும்.
பயறுகள் அமிழத் தண்ணீர் விட்டு ப்ரஷர் குக்கரில் ஐந்து விஸில்கள்
வரும் வரை வைத்து நன்றாக வேக விடவும்.
அரைக்கக் கொடுத்திருப்பவைகளை மிக்ஸியில் தண்ணீர் விடாமல்
நன்றாக அரைத்தெடுக்கவும்
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த மஸாலாவைச்
சேர்த்துக் கிளரவும்.
நிதான தீயில் நன்றாக சுருண்டு எண்ணெய் பிரியுமளவிற்கு வதக்கவும்.
பொடிகளைச் சேர்க்கவும். நன்றாக வதக்கி டொமேடோ சாஸையும்
சேர்க்கவும்.
வெந்த பயறுவகைகளை சற்று மசித்தமாதிரி கரண்டியால் மசித்து
உப்பு சேர்த்துக் கிளறி நன்றாகக் கொதிக்க விட்டு இரக்கவும்.
வேண்டிய அளவு நெகிழ்வாக தண்ணீர் கொதிக்கும்போதே சேர்த்துக்
கொள்ளவும்.
சாதத்துடனும், ரொட்டி பூரி வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட இதுவும்
ஒரு வித்தியாஸமான டால்.
பயறுகளை ஊற வைக்காவிட்டால் பின்னும் சற்றுநேரம் ஸிம்மில்
வைத்து வேகவைத்தும் செய்யலாம்.
Entry filed under: டால் வகைகள்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 10:30 முப இல் ஜூலை 15, 2013
படங்களும், பதிவும், விளக்கங்களும், கைப்பக்குவமும் ரொம்ப நன்னா இருக்கு. சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 11:17 முப இல் ஜூலை 15, 2013
சுடச்சுட உங்கள் பதிலுக்கு மிக்க ஸந்தோஷம். செய்ததை எழுதினேன். நன்றி .அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:20 பிப இல் ஜூலை 15, 2013
கருப்பு மசூர் பயறு கிடைக்குமா என்று தெரியவில்லை… விளக்கமான செய்முறை குறிப்பிற்கு நன்றி…
4.
chollukireen | 5:19 முப இல் ஜூலை 16, 2013
ஹிந்தியில் காலா மசூர் என்று சொல்கிரார்கள். இங்கெல்லாம் கிடைக்கிரது. பார்க்கவேண்டும். உங்கள் ஊரில் கிடைக்குமா என்று. நன்றி அன்புடன்
5.
மகிஅருண் | 5:23 பிப இல் ஜூலை 15, 2013
ஒருமுறை கொள்ளு-என நினைத்து இந்த மசூர் பருப்பினைத்தான் வாங்கிவந்துவிட்டேன் காமாட்சிம்மா! நான் வழக்கமாகச் செய்யும் முறையில் தால் செய்தேன், ஆனால் ஏனோ ருசி பிடிக்காமல், பருப்பு அப்படியே தங்கிவிட்டது. உங்க முறையில் செய்து பார்க்கிறேன். பச்சைப் பயறு எங்க ஃபேவரிட், அதோடு கூட சேர்ந்து மசூர் பருப்பும் உள்ளே போய்விடும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். ஹிஹி!! 😉
அப்புறம், பருப்பும் பயறும் என்ன ப்ரபோர்ஷன் என நீங்க சொல்லலியே?!? நேரமிருக்கையில் சொல்லுங்கமா! நன்றி!
6.
chollukireen | 5:16 முப இல் ஜூலை 16, 2013
கரெக்டா சொன்னாய் மஹி. பயறும்,காலாமசூரும் முக்கால்,முக்கால்கப் சேர்த்து செய்தேன். + நீ சொன்ன பிறகுதான் இது எழுதாமல் விட்டது தெரிந்தது. உதவிக்கு நன்றி. வெங்காயம்,பூண்டு என்று போடும் போது அனேகமாக டால் மக்னி என்று கருப்பு உளுந்தின்
ருசிபோலத் தோன்றியது எனக்கு.. நீயும் செய்து பார்த்து ருசி.
சிலவைகள் நமக்குப் பிடிக்காது என்று தோன்றிவிட்டால் செய்யக்கூட மனம் வராது.
சாப்பிட ஆள் தேவை.அன்புடன்
7.
rammalar | 12:41 முப இல் நவம்பர் 6, 2013
இப்போதுதான் பார்த்தேன்…
–
மனைவியிடம் சொல்லி செய்து பார்க்க
சொல்லுகிறேன்…!
–
நன்றி!!
–
8.
chollukireen | 5:27 முப இல் நவம்பர் 6, 2013
அப்படியா? ரொட்டி,பூரியுடன் நன்றாக இருக்கிறது. சாதத்துடன் ஊறுகாய்தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக உள்ளது. வடக்கத்திய டால் சாவல். செய்துபார்த்து ரஸித்துச் சொள்லுங்கள்.நன்றி.அன்புடன்