நவராத்திரி
செப்ரெம்பர் 29, 2013 at 10:45 முப 18 பின்னூட்டங்கள்
படமுதவி—-கூகலுக்கு நன்றி.
புரட்டாசிமாதம் வரும் அமாவாஸை கழித்த மறுநாள் தொடங்கி பத்து
நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை இது.
இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களைக் காட்டிலும் மைசூரில் சிறப்பாகக்
கொண்டாடப் படுகிறது. கர்நாடகத்தில் சாமுண்சீசுவரி.
வட இந்தியாவிலும்,உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர்.
ராமாயண நாடகங்கள் நடிக்கப் படுகிறது. விஜய தசமியன்று
இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் மெகா ஸைஸில் செய்து பொது இடங்களில் வைத்து
பட்டாசுகளை வெடித்து உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வங்காளத்தில் துர்கா பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிரது இது.
அழகான,விதவிதமான பொம்மைகளால் கொலு வைக்கப்படுகிறது.
இதில் இல்லாத விஶயங்களே கிடையாது. பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்
கலைத்திறனையும் கொலுவில் அழகுரக்காட்டி மகிழ்வர்.
உறவினர்கள்,நண்பர்கள்,யாவர்களையும் அழைத்துக் கூடி மகிழ்வாகக்
கொண்டாடும் விசேஶ தினங்களிது.
அதே நேரத்தில் விசேஶ பக்தி ச்ரத்தையுடன் தேவியை வணங்கித் துதிக்கும்
பண்டிகையாகவும் இது விளங்குகிறது. அன்னையை
மூன்று சக்திகளாகப் பாவித்து, பார்வதி,லக்ஷ்மி,ஸரஸ்வதி என ஒவ்வொருவருக்கும்
மூன்று நாட்களை ஒதுக்கி இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞான சக்தி என ஒன்பது நாட்கள்
பூஜை செய்யப் படுகிறது.
வீடே,ஊரே திருவிழாக் கோலம்தான்.
நவராத்ரி நாட்களில் ஸுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு அன்னமளித்து,விசேஶ
மங்களச் சாமான்களை அளிப்பது என்பது மிகவும் விசேஶமான செயலாகக்
கருதப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஶமாக மத்தியான வேளைகளில்
சர்க்கரைப் பொங்கல்,பாயஸம்,தயிர்சாதம், வெண்பொங்கல்,எலுமிச்சைசாதம்,
புளியஞ்சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,பாலில் செய்த அக்கார வடிசல்
என வித விதமான ஒன்றைச் செய்து நிவேதிக்கிறார்கள்.
சாயங்கால வேளைகளில், பலவித சுண்டல்கள்,சிம்லியுருண்டை, அரிசி அவல்களில்
செய்த இனிப்புப் புட்டு, முருக்கு வகைகள், பக்ஷணங்கள்,பழங்கள் என
நிவேதித்து, வந்தவர்களுக்கு பிரஸாதத்தை குங்கும தாம்பூலங்களுடன் தினமொரு
வகையாக நிவேதித்து அளிக்கின்றனர்.
பழங்கள் வகையே ,தேங்காயும் முக்கியப் பொருளாக விளங்குகிறது.
நவராத்திரி சக்தி பூஜையாகக் கொண்டாடப் படுகிரது.
பகல்,சாயங்காலம்,இரவு எல்லா வேளைகளிலும் துதிக்கப்படுகிரது.
நவமியன்று ஸரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.
வாத்தியங்களையும், ஆயுதங்களையும் கூடவே வைத்து ஆயுத பூஜையாகவும்
கொண்டாடி மகிழ்கிறோம்.
தசமியை விஜய தசமி என்கிறோம். புதியதாகக் கல்விபயில, வியாபாரம்,தொழில்
முதலானது தொடங்க, குருவிற்கு விசேஶமாக நன்றிதெரிவித்து வணங்க என
எல்லாவற்றிற்கும் உகந்த நாளிது.
இம்மாதிரியான வரப்போகும் நன்னாளில், அழகுர தோத்திரங்களைச் சொல்லியும்,
கோயில்களில் சென்று வணங்கியும், இனிமையாகப் பாடியும், பெரியோர்களை
வணங்கியும், இனிமையாகப் பேசியும், பூஜைகள் தெரிந்தவரை செய்தும்,
சக்தியின் அருளை வேண்டி எல்லோரும் வணங்கித் துதிக்க வேண்டுமென்பது
என் சிறிய ஆசை. எல்லோருக்கும் நவராத்திரி மஞ்சள் குங்குமத்தை
இப்பதிவு மூலம் அளிக்கின்றேன்.
எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுகிறேன்..
பின் குறிப்பு—-வடமொழி எழுத்து ஸ—ஸவேதான.
புச்பம்—வடமொழி ச என்பது என்னிடம்—ஶ. புதிய கணினியில்
இப்படிதான் வருகிறது. புரிந்து கொள்ளுங்கள். நன்றி
- சித்ரான்னம்
Entry filed under: பூஜைகள், Uncategorized.
18 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 10:50 முப இல் செப்ரெம்பர் 29, 2013
அழகான மிக அருமையான பதிவு. விளக்கங்கள் அருமையோ அருமை. அநேக நமஸ்காரங்கள்.
//நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஶமாக மத்தியான வேளைகளில்
சர்க்கரைப் பொங்கல்,பாயஸம்,தயிர்சாதம், வெண்பொங்கல்,எலுமிச்சைசாதம்,
புளியஞ்சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,பாலில் செய்த அக்கார வடிசல்
என வித விதமான ஒன்றைச் செய்து நிவேதிக்கிறார்கள்.
சாயங்கால வேளைகளில், பலவித சுண்டல்கள்,சிம்லியுருண்டை, அரிசி அவல்களில்
செய்த இனிப்புப் புட்டு, முருக்கு வகைகள், பக்ஷணங்கள்,பழங்கள் என
நிவேதித்து, வந்தவர்களுக்கு பிரஸாதத்தை குங்கும தாம்பூலங்களுடன் தினமொரு
வகையாக நிவேதித்து அளிக்கின்றனர்.//
பொம்மணாட்டியா பிறக்கவில்லையே என என்னை ஏங்க வைத்துவிட்டீர்கள், மாமி, பாராட்டுக்கள். நன்றிகள்.
2.
chollukireen | 11:43 முப இல் செப்ரெம்பர் 29, 2013
உடனுக்குடனான பின்னூட்டம் பார்த்து எப்படி இவ்வளவு சீக்கிரம் படிக்க முடிஞ்சு பின்னூட்டமும். யோசிக்க வைத்தது. நமக்குதான் வயஸாச்சு. அவர்களெல்லாம் புயல் வேகத்திலுள்ளவர்கள் என்று மனது பதில் சொல்லியது. ஸ்பெஶல் நன்றி. உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கும் சேர்த்து.
பெண்கள் பிரஸாதம் செய்யும் போது, கணவருக்கும் பிடித்ததாகத்தானே செய்கிரார்கள்.
முன்பொரு பதிவில் உங்கள் நாட்டுப் பெண்களும், அவர்தன் மாமியார் அவர்களும், அருமையாக சமையல்
செய்வது பற்றி எழுதியிருந்தீர்கள். !!!!!!!!!!!!
பொம்ணாட்டியாகப் பிறக்க அவசியமில்லை. அதிகாரத்துடன் இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கிரதே!!!!!!!!!!!!!
ருசியறிந்த பாராட்டுகள். நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 12:08 பிப இல் செப்ரெம்பர் 29, 2013
சிறப்பான விளக்கமான தகவலுக்கு நன்றி அம்மா… வாழ்த்துக்கள்…
4.
chollukireen | 3:01 பிப இல் செப்ரெம்பர் 30, 2013
நீங்கள் வந்து பின்னூட்டமிட்டால்தான் எனக்குத் திருப்தி. மிக்க ஸந்தோஶம். அன்புடன்
5.
ranjani135 | 11:26 முப இல் செப்ரெம்பர் 30, 2013
நவராத்திரி தொடங்குவதற்கு முன்பே இந்தப் பண்டிகை இந்தியாவில் எங்கெங்கு எப்படி எப்படி கொண்டாடப் படுகிறது என்று விவரமாக எழுதி எங்களையெல்லாம், நவராத்திரிக்குத் தயார் செய்துவிட்டீர்கள்.
பெண்கள் பிரசாதம் செய்யும்போது, கணவருக்குப் பிடித்ததாகத் தானே செய்கிறார்கள் – ரொம்பவும் சரி. அகத்துகாரருக்குப் பிடித்ததைதானே பெருமாளும் அமுது செய்கிறார்!
6.
chollukireen | 2:59 பிப இல் செப்ரெம்பர் 30, 2013
என்ன தெரியுமா? பெயர் அசடு இல்லையா? தேதி பார்க்காமலே நவராத்ரியை 4,5 தினங்கள் முன்பாகவே
மனதில் தீர்மானம் பண்ணி விட்டேன். அப்புறம்தான் தேதி பார்த்தேன். அவ்வளவு பிஸி. நிஜமாகவே.
மனதில் வந்ததும் எழுதிவிட்டேன். மருமகள் ஊரிலில்லை.
இதேமாதிரி உன் கட்டுரைக்கும் பதில் பின்னதற்கு முன்னதில் எழுதிவிட்டேன் என்று தோன்றுகிறது.
நம்ம ரஞ்ஜனிதான் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்தேன்.
நல்லவேளை. இங்கே கொலு வைப்பதாக எதையும் எடுத்து வைக்கவில்லை.
நன்றாக எனக்குப் பதில் கொடுத்திருக்கிராய். ஸந்தோஶம்.
உங்கள் வீட்டுப் பெருமாளுக்கும் மிக்க நன்றி.
என்னுடைய கட்சி அவரும். அன்புடன்
7.
chitrasundar5 | 8:34 பிப இல் செப்ரெம்பர் 30, 2013
எல்லா மாநில நவராத்திரி கொண்டாட்டத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க. நவராத்திரி மஞ்சள் குங்குமத்துடன் உங்கள் அன்பும் எங்களைத் தேடி வந்துவிட்டது, நன்றிம்மா.
நாங்க சரஸ்வதி பூஜையும்,விஜயதசமியும்தான் கொண்டாடுவோம்.ஆனால் கொலுவுக்குப் போயிருக்கிறேன்.அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 5:46 முப இல் ஒக்ரோபர் 2, 2013
தமிழ் நாட்டில் கொலு பார்க்காதவர்கள் கிடையாது. வெளிநாட்டில் கூட கொலு வைக்கப்படுகிறது. பொதுவாக வெளிநாட்டில் கோவிலிலும் கொலுவைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. போதுமே! ஸரஸ்வதி பூஜையிலும், விஜயதசமியிலும் எல்லாமே
அடங்கியிருக்கிரது.. அன்பு ஒன்றுதான் இப்போது கொடுக்கும்படியான வஸ்துவாக இருக்கிறது. மிக்க ஸந்தோஶம்.. அன்புடன்
9.
adhi venkat | 8:19 முப இல் ஒக்ரோபர் 1, 2013
கொலு பற்றி சிறப்பான தகவல்கள்.
10.
chollukireen | 5:48 முப இல் ஒக்ரோபர் 2, 2013
வாம்மா ஆதி.மகிழ்ச்சி உன்வரவு. அன்புடன்
11.
வேங்கடநாராயண் | 3:26 முப இல் ஒக்ரோபர் 3, 2013
நீங்கள் MAC உபயோகித்தால் தமிழ் Font-ல் ‘ஷ’ உள்ளது. try பண்ணைங்களேன்.
12.
chollukireen | 1:27 பிப இல் ஒக்ரோபர் 3, 2013
நான் இத்தனை நாள் உபயோகித்த தோஶிபா லேப்டாப்பில் ஸ,ஶ ஸரியாக வந்தது. இது ஹெச்பி.
இந்த எழுத்துத் தவிர மற்றதெல்லாம் ஸரியாக வருகிறது. அக்கரையாக பதில் எழுதியதற்கு மிகவும் நன்றி. புதுசானது. ஏதோ எனக்கு வேண்டிய அளவுதான்
லேப்டாப் உபயோகிக்கிறேன். முயற்சிக்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
13.
இளமதி | 7:31 முப இல் ஒக்ரோபர் 3, 2013
வணக்கம் அம்மா….
நலமாக இருக்கின்றீர்களா?
என்னைத்தேடி வந்துவிட்டீர்களே அம்மா.. என்னவெனச் சொல்ல என் மகிழ்வையும் மன நெகிழ்வினையும்..
கண்களில் நீர் நிறைகின்றதம்மா…
இங்குவர முயன்ற நேரமெல்லாம் எனக்கே உள்ள வேறோர் விடயம் குறுக்கிடும்.. அதில்போய் வீட்டு வேலையில் மூழ்கி அப்படியே உறைந்திடுகிறேன் நான்..
யாரையும் உதாசீனமாகவோ அவர்களிடம் போகாவிட்டால் என்ன என நினைக்கும் சுபாவமோ எனக்கில்லை.. என் வாழ்வில் வீட்டில் விலகமுடியாதபடி விதியால் என் சேவையை மட்டும் எதிர்கொண்டிருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்ட என் கணவர்.. அவருக்குண்டான பணிகளை முடிக்கவே பொழுது ஆகிவிடுகிறது.
என் மனநிலைக்கு ஒரு மாற்றாகவே வலையுலகில் என் பதிவுகளும் உலவுதல்களும்…
அதுவும் சிலசமயங்களில் நினைப்பதுபோல முடிவதில்லை அம்மா..
இங்கும் உங்கள் இந்தப் பதிவில் மிக அழகாக நவராத்திரி பற்றி அதன் பலன்களையும் அனுஷ்டிக்கும் முறையையும் மிக அழகாக கூறியிருகின்றீர்கள்.. நானும் இங்கு இப்படி என்றில்லாவிட்டாலும் ஏதோ இதில் பத்தில் ஒரு பங்கேனும் கடைப்பிடிக்கின்றேன்.
உங்கள் கைகளால் அந்தக் குங்குமம் கிடக்கணும் என்பதற்காகவே என் வலையில் இன்று உங்கள் தரிசனம் எனக்குக் கிடைத்திருக்கின்றது.
காமாட்சி அம்பாளே என் அகம் வந்து எனக்கு மஞ்சள்குங்குமமிட்டதாய் உணருகின்றேன். உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் ஆசியே என்னையும் இன்னும் சுமங்கலியாய் வைத்திருக்கின்றது…
மிக்க நன்றிமா! மீண்டும் வருவேன் தொடர்ந்து…
14.
chollukireen | 1:42 பிப இல் ஒக்ரோபர் 3, 2013
உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். மஹியையும் பாராட்ட முடிந்தது.
நான்கூட ஏதோ சமையலை எழுதிக்கொண்டு வலம் வருவது உங்களைப் போன்ற அன்புள்ளம் கொண்ட பெண்களை ஸந்திக்கத்தான்.
முருகானந்தம் கிளினுக்கான உன் பின்னூட்டத்தில் சில ஸமாசாரங்கள் என்னை யோசிக்க வைத்தது. உன்னைப் பற்றிதான்.
இங்கு நாங்கள் வயதான தம்பதிகள். ஞாபக மறதி நோய்
பீடித்தவரை அக்கரையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
உதவிக்கு ஆட்களிருந்தாலும் 2 வருஶமாக நான் மும்பையில் இருக்கிறேன். மகன் குடும்பத்துடன்..
எனக்கும் ப்ளாக்தான் உறுதுணை. எ.ல்லோரையும் வாயளவில் ,அன்புடன் அழைத்திருக்கிறேன்.
மிகுதி அப்புறம் எழுதுகிறேன். ஆசிகள். அன்புடன்
15.
chollukireen | 2:08 பிப இல் ஒக்ரோபர் 3, 2013
உணர்ச்சி வசப்பட்ட உன் எழுத்துக்களைப், படிக்கும்போது
உன்னை விசாரித்து எ.ழுத நினைப்பேன். அப்படி ஒரு எண்ணம் தோன்றும். நல்ல தமிழரிவு, கவிதைகள், உணர்ச்சிக் குவியலான எழுத்துக்கள், ஸ்ரீ லங்காவைவிட ஏதோ பின்புலம். தோன்றும்.
உன் பரிவான எண்ணங்கள் எப்போதும் நன்மையையே அளிக்கும். ஆசிகளுடனும்,அன்புடனும் சொல்லுகிறேன்.
16.
chollukireen | 2:10 பிப இல் ஒக்ரோபர் 3, 2013
நன்றி . இளமதி. அன்புடன்
17.
இளமதி | 10:16 பிப இல் ஒக்ரோபர் 3, 2013
அம்மா… உங்கள் அன்பில் நான் என் தாயைக் காண்கின்றேன்…
கனிவான வார்த்தை கவலையை மறக்கவைக்கின்றது.
எல்லோருக்கும் அவரவரைப் பொறுத்தமட்டில் சோகங்களும் வேதனைகளும் நிறைய இருக்கும். உங்கள் வேதனையும் கஷ்டமும் அதுவுங்கூட எத்தனையோ சிரமங்களை எதிர்கொள்வதாய்த்தான் இருக்கும்.
எல்லோருக்கும் அந்த பரப்ப்ரம்மம் நல்லருளை நல்கட்டும்…
மிக்க நன்றி அம்மா!
18.
chollukireen | 1:42 பிப இல் ஒக்ரோபர் 14, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பதிவுகள் இடமுடியாமற் ஒரு உடல்நலக்குறைவு நவராத்திரி மறு பதிவாகிலும் செய்ய வேண்டுமென்ற அவா
ஓரிரு படங்களும் நிவேதனம் வேண்டாமா?நேற்று ஆரபித்துவிட்ட நவராத்ரி விழாவைச் செம்யாகப்,பக்திப் பரவசத்துடன் கொண்டாடி,முப்பெருந்தேவிகளுடைய அருளுக்குப் பாத்திரராகி எல்லா நலன்களையும் பறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய மாநஸீக மங்கலப்பொருள்களுடன் மஞ்சள் குங்கும தாம்பூலமும்,அன்பான ஆசிகளும். அன்புடன் சொல்கிறேன். படம் ரிப்ளாகில் தரவேற்றுவது எப்படி?/???