கல்கண்டுப் பொங்கல்.
ஒக்ரோபர் 8, 2013 at 8:04 முப 16 பின்னூட்டங்கள்
நவராத்திரி விசேஶ நிவேதனப் பொருள் கல்கண்டுப் பொங்கலுடன் நான் வந்திருக்கிறேன்.
விசேஶமாக அதிகம் ஸாமான்களில்லாமல் இருப்பதைக் கொண்டு செய்ததிது.
வழக்கமான சில குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகி விட்டது.
அடிக்கடி செய்யும் பொங்லில்லை இது.
ஆதலால் செய்தபோது பதிவிடவேண்டும் என்று விருப்பம்.
வேண்டியவைகள்
சீரகச்சம்பா அரிசி—கால்கப்.
டைமண்ட் கல்கண்டு—முக்கால்கப்
பால்—ஒருகப்
ஏலக்காய்—இரண்டு
பாதாம்,முந்திரி,திராக்ஷை, எது கைவசமோ அதில் சிறிது.
செய்முறை
அடிகனமான பாத்திரம், எடுத்துக் கொள்ளவும்.
பாலுடன் ஸரி அளவு தண்ணீரும் கலந்து கொள்ளவும்.
அரிசியைக் களைந்து பாதி அளவு பால்க் கலவையுடன் தீயைஸிம்மில் வைத்து
அரிசியை வேக வைக்கவு்ம்.
அரிசி வேக வேக மீதிக் கலவையை சேர்த்துக் கொண்டே வரவும்.
நன்றாக வெந்தவுடன் கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
நான் இரண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்தேன்.
ஏலக்காய் பொடித்து சேர்த்து நன்றாகக் கிளறவும். சற்று நீர்க்க ஆகிப் பிறகு
இறுகிவரும். எல்லாமே நிதான தீயில்தான்.
இறக்கிவைத்து நெய்யில் முந்திரி,பாதாம்,திராக்ஷை எது இருக்கிறதோ அதை வறுத்துப்
போடவும். குங்குமப்பூ போட்டால் அதிக வாஸனையுடன் கலரும் அழகாக வரும்.
நவராத்திரி. அம்மனுக்கு நிவேதனம் செய்யவும்.ஒருஸ்பூன் சாப்பிட்டாலும், ருசியாக
இருக்கும். நிவேதனப் பொங்கல் அல்லவா?
நல்ல நெய் முந்திரி வறுக்கப் போதுமானதிருந்தால்ப் போதும்.
சுலபமாகத்தானிருக்கு. என்ன கல்கண்டுதான் வாங்க வேண்டும்.
சின்ன அளவில்ச் செய்தது. ருசித்து மகிழுங்கள்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
16 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 8:20 முப இல் ஒக்ரோபர் 8, 2013
சுவையான கல்கண்டு பொங்கல் செய்முறைக்கு நன்றி அம்மா…
2.
chollukireen | 12:24 பிப இல் ஒக்ரோபர் 8, 2013
உங்கள் பின்னூட்டத்தை அன்புடன் வரவேற்கிறேன்.நன்றி அன்புடன்
3.
GOPALAKRISHNAN. VAI | 10:33 முப இல் ஒக்ரோபர் 8, 2013
அநேக நமஸ்காரங்கள். கல்கண்டு பொங்கல் மிகவும் அருமையாக ருசியோ ருசியாக இருக்குது. பகிர்வுக்கு நன்றிகள்.
இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு.
4.
chollukireen | 12:31 பிப இல் ஒக்ரோபர் 8, 2013
அநேக ஆசிகள். நிஜமாவே நேவேத்யம் செய்தது. அதனாலே கூட ருசியாக இருக்கலாம்.
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
adhi venkat | 1:57 பிப இல் ஒக்ரோபர் 8, 2013
சுவையான பொங்கல். நானும் பலதடவை செய்து கோவில் பிரசாதங்களுக்கு தந்திருக்கிறேன். சுலபமானது.
என் அம்மா ”கனு” அன்று மற்ற கலவை சாதங்களுடன் இதைச் செய்வார்.
படங்களுடன் பதிவு ஜோர்.
6.
chollukireen | 5:46 முப இல் ஒக்ரோபர் 9, 2013
பெரிய அளவில் செய்து பிரசாதங்களுக்குக் கொடுத்திருக்கிராய். ருசித்து மகிழ்ந்திருப்பார்கள். இது கேட்க மிகவும் ஸந்தோஶமாக இருக்கிறது.
கனுவுக்கு கூட இதுவும். நல்ல காம்பினேஶன்.
மற்றவர்களும் செய்வார்கள். உன் பின்னூட்டம் பார்த்து.
பாராட்டுகளெல்லாம் வரவேற்கிறேன். அன்புடன்
7.
ranjani135 | 4:25 பிப இல் ஒக்ரோபர் 8, 2013
கல்கண்டு பொங்கல் வரும் வெள்ளிக்கிழமை செய்து பார்த்துவிடுகிறேன். படங்கள் கல்கண்டாக கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.
8.
chollukireen | 5:50 முப இல் ஒக்ரோபர் 9, 2013
நிறைய செய்தால் பச்சைக் கற்பூரம்,குங்குமப்பூவும் , சிறிது சேர்க்கவும். இன்னும் ருசியாகவும்,வாஸனையாகவும் இருக்கும். வரவுக்கும்,பாராட்டிற்கும் நன்றி. அன்புடன்
9.
இளமதி | 2:38 பிப இல் ஒக்ரோபர் 9, 2013
அம்மா வணங்குகிறேன்!.. அருமையான கற்கண்டு சாதம்! உண்மையில் மிக சுலபமானதுதான்..
அம்மா!… தெரியாமல் கேட்கிறேன்.. சிரிக்காதீங்க..
சீரகச் சம்பான்னு போட்டிருக்கீங்க.. நான் பார்த்ததில்ல இங்கின..
தெரியாதும்மா.. எங்கிட்ட பொன்னி அரிசி இருக்கு பாஸ்மதி அரிசி இருக்கு… அதுல செய்யலாமா. நல்லா வருமா?
சொன்னீங்கன்னா சனிக்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாட்டிற்கு கொஞ்சமா செய்து பார்க்க நினைக்கிறேன்…
உங்க அன்பிற்கு மிக்க நன்றிமா…
அனைவருக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள்!
10.
chollukireen | 6:40 முப இல் ஒக்ரோபர் 10, 2013
வாழ்த்துகிறேன். சிரிக்கலே.ஸந்தேகம் கேட்டால் சொல்லவேண்டாமா? பாஸ்மதியில் செய்தால் இன்னும் குழைவாக அருமையாகவே வரும். பொன்னிமாதிரி இன்னும் சின்ன ஸைஸில் இருக்கும்
சாப்பாட்டு அரிசிதான் சீரகச்சம்பா.. வீட்டில் இருந்தது. செய்தேன். திகட்டும்படியான பொங்கல். ஸரஸ்வதி பூஜைக்கு செய்வதாக எழுதியிருந்தாய். செய்து வழிபடு.
வாழ்த்துக்களுக்கு மிக்க ஸந்தோஶம்.
உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி அன்புடன்
11.
chitrasundar5 | 12:34 முப இல் ஒக்ரோபர் 10, 2013
காமாக்ஷிமா,
சும்மா சாப்பிடுவதற்காக கல்கண்டு வாங்குவேன். பெரிய பாக்கெட்டாக இருக்கும். எப்போது சர்க்கரைப் பொங்கல் செய்தாலும் அதில் கொஞ்சம் கல்கண்டுகளைப் போடுவேன். ஆனால் தனியாக கல்கண்டு சாதம்னு செய்ததில்லை.சின்ன அளவிலேயே செய்து பார்க்கிறேன்மா. அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 6:24 முப இல் ஒக்ரோபர் 10, 2013
நானும் சின்ன அளவில்தான் செய்திருக்கிறேன். சர்க்கரை,கல்கண்டு, வெல்லாம்
எல்லாம் கரும்பின் ஸத்துதானே. யாவும் அருமையாக ஜோடி சேரும். நன்றி அன்புடன்
13.
chollukireen | 12:44 பிப இல் நவம்பர் 23, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
வழக்கமாகத் திங்களன்று ஏதாவது மீள்பதிவு செய்வேன். திங்ள் வந்து போனதே தெரியவில்லை. அவ்வளவு குளிர். இன்று கிடைத்த இந்தப் பதிவை ரஸியுங்கள். இனிப்பானது. அன்புடன்
14.
Geetha Sambasivam | 11:09 முப இல் நவம்பர் 25, 2022
நமஸ்காரங்கள் அம்மா. நான் அடிக்கடி பண்ணுகிறேன் அம்மா. ஆனால் கட்டிக் கல்கண்டில். இதுவும் சுவைதான். குங்குமப்பூ கிடைக்காது என்பதால் ஜாதிபத்திரியைப் பாலில் ஊறவைச்சுச் சேர்ப்பேன்.. ஜாதிக்காய்+ஏலக்காய் பொடித்துச் சேர்ப்பேன். முப. தி.ப, கட்டாயம் உண்டு.
15.
chollukireen | 12:08 பிப இல் திசெம்பர் 15, 2022
.
16.
chollukireen | 12:22 பிப இல் திசெம்பர் 15, 2022
நான் மிகவும் நோய்வாய்ப்பட்டுஆஸ்ப்பத்திரியில் இருந்து வந்திருக்கிறேன். ஹார்ட்,லங்ஸில்ஜலம். எதுவுமே முடிவதில்லை.ஆசீர்வாதங்கள். அன்புடன்