மிக்சர் விசேஷமானது.
நவம்பர் 6, 2013 at 2:22 பிப 19 பின்னூட்டங்கள்
தீபாவளிக்கு வாழ்த்து எழுதும்போது உங்களுக்காக இந்த மிக்சரை ச்
செய்தது. ஆனால் வாழ்த்துடன் இதைப் பகிர முடியவில்லை.
ஏதோ கம்யுட்டர் எரர் காரணம்.
அப்போதில்லாவிட்டால் இப்போது எழுதுவதால் என்ன வித்தியாஸம்?
பாருங்கள். சாப்பிடுங்கள்.
அதிகம் கடலைமாவு சேராத வகை தேன்குழல், ரிப்பன், பயத்தம் பருப்பு சேர்த்த முருக்கு
சோள அவல்,அவல்,வேர்க்கடலை,முந்திரி,பாதாம்,உலர் திராக்ஷை, கறிவேப்பிலை
மஸாலாவாக வறுத்த ஜீரக,பெருஞ்ஜீரகப் பொடிகள்,பெருங்காயம், மிளகாய்ப்பொடி,துளி
மாங்காய்ப்பொடி,உப்பு, மஸாலா கலக்க துளிநெய்.
மேலோடு துளி சாஸ்திரத்துக்கு வாங்கின காரா பூந்தி, இவைகள்தான்.
தீபாவளிப் பக்ஷணங்களுடன்,சோள அவலையும்,அவலையும், பொரித்துப் போட்டு,
பாதாம்,முந்திரி,திராக்ஷையும் வருத்துச் சேர்த்து, கறிவேப்பிலையைப் பொரித்துப்
போட்டு, வேண்டிய அளவு உப்பு காரம்,பொடிகள் துளி நெய்யில் கலந்துக் கலக்கி
ட்ரேயில் வைத்து விட்டால், விசேஷமான மிக்சர் தயார்.
பக்ஷணம் எல்லாம் இருக்குமே!!!!!!!
அவசியமானால் சொல்லுங்கள் எழுதுகிறேன். எப்படி இருக்கு?
Entry filed under: Uncategorized.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 2:27 பிப இல் நவம்பர் 6, 2013
தாங்கள் காட்டியுள்ள மிக்ஸர் படமும், கலவை செய்முறையும் சூப்பரோ சூப்பர்.
பார்க்கவே திவ்யமா இருக்கு !
பார்த்தால் பசி தீரும். அருமை மாமி. பகிர்வுக்கு மிக்க நன்றிகள். சந்தோஷம்.
அன்பு நமஸ்காரங்களுடன் பிரியமுள்ள கோபு.
2.
chollukireen | 9:54 முப இல் நவம்பர் 7, 2013
ஆசிகள். நிஜமாகவே மிகவும் நன்றாகவே வந்தது. உங்கள் பாராட்டெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நன்றி அன்புடன் மாமி
3.
yarlpavanan | 5:31 முப இல் நவம்பர் 7, 2013
சிறந்த பகிர்வு – வாழ்த்துகள்
4.
chollukireen | 6:52 முப இல் நவம்பர் 7, 2013
மிக்க நன்றி.அன்புடன்
5.
இளமதி | 7:29 முப இல் நவம்பர் 7, 2013
வணக்கம் அம்மா…
என் வலைக்குவந்து வாழ்த்தியதுகண்டேன்..
மிக்க மகிழ்ச்சி அம்மா…
இங்கு இதே மிக்ஷர்தான் தீபாவளிக்கு செய்தேன். சோளப்பொரி சேர்க்காமல் அவலை மட்டும் 2 ஸ்பூன் எண்ணையில் நன்கு பொரிய வறுத்து.. நல்லாயிருந்துதுன்னு சாப்பிட்டாங்க..
இதுவும் செய்து பார்க்கிறேன்..
அம்மா 1 வாரமா உடம்புக்கு முடியலை.. அதுதான் உங்க தளம் ஒண்ணுக்கும் வரேலை..இன்னும் அதெ நிலைதான்..
விரைவில் சரியாகிடும் வருவேன்..
மிக்க நன்றிமா..
6.
chollukireen | 10:03 முப இல் நவம்பர் 7, 2013
உடல் நலம் கவனித்துக்கொள் பெண்ணே? சோளப்பொரியில்லை. அரிசி அவல் மாதிரியில், சோள அவல்.பொரித்தது. உடனே பதில் எழுதியிருக்கிராய்.
மகிழ்ச்சி.
உன் மிக்சரையும் மனதால் ரஸித்துச் சாப்பிட்டேன்.
கவனம் உடல் நிலையில் தேவை. நலம் விரும்பும்,அன்புடன்
7.
angelin | 8:36 பிப இல் நவம்பர் 7, 2013
காமாட்சியம்மா நலமாக இருக்கீங்களா :)தாமதமான தீபாவளி நல் வாழ்த்துக்கள்
இது மிக அருமையான மிக்சர் நான் வார இறுதியில் செய்ய போறேன்
ரெசிப்பி பகிர்வுக்கு நன்றிம்மா
angelin
8.
chollukireen | 1:50 பிப இல் நவம்பர் 8, 2013
அஞ்சூ மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு. உன் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆசிகள்.
சோள அவலை பொரித்தால்,மஞ்சள் நிறத்துடன் அழகாகப் பொரிகிறது.
வாணலியில் திட்டமான எண்ணெயைக் காயவைத்து
அதனுள் அகலமான டீ வடிக்கட்டியை வைத்து,சிறிது சிறிதாக அதில் அவலைப் போட்டுப் பொரிக்கவும்.
அவல் பொரிந்ததும் வடிக்கட்டியை மேலே தூக்கினால்
எண்ணெய் வடிந்து விடும்.
இதே மாதிரி முந்திரி,பாதாம், வேர்க்கடலையையும்
வறுத்துச் சேர்க்கலாம். அன்புடன்
9.
chollukireen | 1:54 பிப இல் நவம்பர் 8, 2013
கறிவேப்பிலையையும் இப்படிதான் பொரித்துப் போட்டேன். எவ்வளவு அழகாக வந்திருக்கிறது அல்லவா? அன்புடன்
10.
Gayathri Devi | 3:13 முப இல் நவம்பர் 9, 2013
பாக்கவே சூப்பரா இருக்கு, அப்போ சாப்பிட்டா?
11.
chollukireen | 11:33 முப இல் நவம்பர் 9, 2013
இன்னும் சாப்பிடத் தூண்டும். செய்யவும் தோன்றும். அன்புடன்
12.
GOPALAKRISHNAN. VAI | 4:22 முப இல் நவம்பர் 9, 2013
அன்புள்ள காமாக்ஷி மாமி,
நமஸ்காரங்கள்.
இன்று தங்கள் பெயர் வலைச்சரத்தில் இடம்பெற்று பாராட்டிப்பேசப்பட்டுள்ளது.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_9.html
தங்களுக்கு என் நமஸ்காரங்கள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பிரியமுள்ள
கோபு [VGK] வை. கோபாலகிருஷ்ணன்
13.
chollukireen | 11:37 முப இல் நவம்பர் 9, 2013
மிக்க நன்றி. பார்த்தேன். பதிலும் எழுதினேன். எவ்வளவு அக்கரை என்று வியந்தேன். ஆசிகள். அன்புடன் மாமி.
14.
மகிஅருண் | 6:00 முப இல் நவம்பர் 9, 2013
காமாட்சிம்மா, மிக்ஸர் சூப்பரா இருக்கு! ரெகுலர் மிக்ஸரில் இருந்து வித்யாசமான சுவையுடன்…நிச்சயம் நன்றாக இருக்கும் என படத்தைப் பார்க்கையிலேயே ஊர்ஜிதமாகிறது! அப்படியே அந்த பவுலை தந்தீங்கன்னா ஒரு நாலுநாள் வைச்சு சாப்பிடுவேன்! 😉 😛
15.
chollukireen | 11:42 முப இல் நவம்பர் 9, 2013
எவ்வளவு எடுத்தாலும் குறையாத அக்ஷய பாத்திரம்தானே ப்ளாக். அப்படியே எடுத்துக் கொள். நீ வந்து கமென்ட் கொடுத்தால் எனக்கு அலாதியான திருப்தி. இன்னும் வேண்டுமானாலும் அனுப்புகிறேன். அன்புடன்
16.
sury “subburathinam” Siva | 7:02 முப இல் நவம்பர் 9, 2013
சோள அவல் என்று எதைச் சொல்கிறீர்கள் ?
சொளப்போரியாக இருக்குமோ ? பாப் காரன் மாதிரியா ?
சோளக்கதிர் குமுட்டி அடுப்பில் வைத்தால் நன்றாக வெந்து இருக்கும்.
அதுவோ/
அதுவும் இல்லை இதுவும் இல்லை என்றால் எது ?
subbu thatha
http://www.subbuthatha.blogspot.com
17.
chollukireen | 12:05 பிப இல் நவம்பர் 9, 2013
ஒரு முறை பதில் எழுதி போஸ்ட் ஆகவில்லை. எழுதினதும் போய்விட்டது. கார்ன்ப்ளேக்ஸின் பதப்படுத்தாததுதான் இந்த அவல். மக்கா சோளத்தைப் பதப்படுத்தி அவலாக செய்திருப்பார்கள் என்பது என் யூகம்.
பொரித்தால் பாப்கார்னாக ஆவது, அவலாகச் செய்ய ஏதாவது முறைகள் இருக்கலாம். அவலாக ஆக்குவதற்கு.
makai pawa மக்கை போவா என்று இவ்விடம் சொல்கிரார்கள்.
பெயர் எழுதி வாங்கிக் கொண்டேன்.
கேட்கும்போது அவல்மாதிரி மக்கா சோளத்தில் செய்தது என்று கேட்டுவாங்கி யது.
ரெடிமேட் மிக்சரில் எப்போதோ பார்த்தது.
மிக்க நன்ராகவும்,அழகாகவும்,சுலபமாகவும்,பொரிக்க முடிகிறது.
இது நான் சொன்னது என் வியாக்கியான முறையில்
சரியாக இருக்குமா?
மக்கா சோளத்தின் அவதாரம்தானிது.
உங்கள் வரவு நல்வரவாக இருக்கிறது.
இந்த அவலின் வேறு விஷயங்கள் ஏதாவது ,யாருக்கேனும் தெரிந்தால் எழுதுங்கள்.
மிக்க நன்றி.
பாக்கெட்டுகளில் கிடைக்கிரது. தெரிந்தவரை தகவல்கள்
கொடுத்துள்ளேன்.இது,எது,சோள அவல். அன்புடன்
18.
Asiya Omar | 10:54 முப இல் திசெம்பர் 15, 2013
மிக்சர் ரொம்ப விஷேசமாக இருக்குமா. சூப்பர்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.
19.
chollukireen | 11:43 முப இல் திசெம்பர் 15, 2013
வாம்மா அடிக்கடி ஸந்திப்போம். உங்களுடைய பின்னூட்டத்திற்குநன்றி. அன்புடன்
சொல்லுகிறேன்