அன்னையர் தினம் 8
நவம்பர் 21, 2013 at 11:00 முப 27 பின்னூட்டங்கள்
ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்பது வசனம் . அவ்வளவு அருமையான
காவிரிக்கரையோர பெரிய ஊர்.அப்படியே அவ்விடம்அப்பாவின் நண்பர், வெங்கட்ரமண ஐயா,
அப்பா வேலை செய்த நேஷனல் ஹைஸ்கூல், பல குடும்பங்கள், பல முக்கிய விஷயங்கள்
இப்படிப் பல விஷயங்களை நேரில் காட்டினார். அருமையான ஸந்திப்புக்களாக இருந்தது.
பட்டமங்கலம்தெருவில் குடி இருந்தது என அவரின் மலரும் நினைவுகளையும்
எங்களுக்கு நேரில்,காட்டியும்,உணர்த்தியதிலும் அவருக்கு மகிழ்ச்சி.
அந்தநாளைய ஞாபகங்களை நாங்களும் எங்களுக்குத் தெரிந்த முறையில் ரஸித்தோம்.
பெரியம்மா, பொங்கல் சீர் வரிசையின் காய்கறிகளைக் கொண்டு
எறிச்சகறி செய்வதை,அதன் ருசியைக் கேட்டு மகிழ்ந்தோம்.
அம்மாதிரி பிறகு யார் செய்தாலும் அந்த ருசி வரவில்லை என்று
சொல்லியதை மறக்கவே முடியாது.
காவேரிஸ்னானம்,கோவில் ,குளம் என மாயவரத்தை முடித்து க் கொண்டுதேரழுந்தூர்
சென்றோம். அந்த நாளில் உறவுகள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.
அப்பாவின் இரண்டாம் கலியாண வழி உறவுகளனைத்தும் பார்க்க கூப்பிட
என அணி வகுக்காத குறைதான். அதான் எறிச்ச கறி ஃபேமஸ் பெரியம்மவின்,
உறவுகள் இத்துடன் விட்டுப்போகக் கூடாது.
உங்கள் மருமகளாக எங்கள் வீட்டுப் பெண்ணை ஏற்கவேண்டும்.
நிச்சயம் செய்து வைத்து விடலாம். போகட்டுமே இரண்டொரு வருஷம்.
இப்படி அம்மாவிடமும்,அப்பாவிடமும் வேண்டுகோள்கள்.
எதைச்சொல்லுவது,எதைவிடுவது? மனக்கிலேசம் அதிகமாகிறதே தவிர
குறைவதாகக் காணவில்லை.
பார்ப்போம். எல்லோரும் நல்லபடியாக இருக்கட்டும்,என்ற பொது வார்த்தையையே
திருப்பித்,திருப்பிச் சொல்ல முடிந்தது அம்மாவிற்கு.
எங்காத்துப் பெண்ணுக்கு வீட்டிலே ரெண்டு பசுமாடு இருந்தால் போதும். அதை
வைத்தே அழகாக குடும்பம் செய்து விடுவாள் அவ்வளவு சமத்து
எவ்வளவு நம்பிக்கை. அந்த நாளைய எம்.பி.ஏ போலிருக்கு. உண்மையாகவே
நான் பார்த்திருக்கிறேன். பால்,தயிரு, மோரு என விலைக்குக் கொடுத்தும்,ஏன்
சாணத்திலான வறட்டிகளை விலைக்குக் கொடுத்தும், பொன்,பொருள் என அனைத்தையுமே
சிறுகச் சிறுக வாங்கி சேர்ப்பார்கள்.
பவுன் அவ்வளவு மலிவு.
பிள்ளைக்கு உடல் நலம் ஸரியில்லை என்று சொல்வதா,அல்லது தெரிந்தும்
இப்படி கேட்கிரார்களா?இப்படி மனக்குழப்பம்.
திருச்சி,மதுரைமற்றும் பல இடங்களுக்குப் போய்வந்தோம். நல்லபடியாக ஊர்
திரும்பினோம்.
ஏதோ ஸத்தியத்திற்குக் கட்டுப்பட்டதுபோல உடல் நிலை ஸரியாகவே
இருந்து கொண்டிருந்த பிள்ளைக்கு த் திரும்பவும் மயக்கம் தலைகாட்ட
ஆரம்பித்து விட்டது.
எங்ளூரில்ஊரில் மிகப்பெரிய நிலச்சுவான்தார் ஒருவர். பிறருக்கு மிக்க
உபகாரங்களும் செய்யக் கூடியவர்.
அவர் உறவு சித்தப்பா ஒருவர். அவரும் ராணுவத்தில் மிகப்பெரிய போஸ்டில்
இருந்தார்.அவர் பெங்களூரில் இருந்தார்.
அக்குடும்பமே ஊரில் எல்லோருக்கும் எந்த வகையில் ஒத்தாசை செய்ய முடியுமோ
அந்த வகைகளில் செய்துகொண்டிருந்தார்கள். ஆண் பிள்ளைகள்
உதாரணத்திற்கு ஒரு S.S.L.C முடித்து,டைப்பிங் பாஸ் செய்தால் போதும்.
அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். விசாரமே கிடையாது.
படிப்பு வராதவர்களா, அவர்களது நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ள ஒரு வேலையும்
கொடுத்து அதில் திறம்படச் செய்து விடுவார்கள்.
அதே மாதிரி,டாக்டர் தஸ்தர் என்று அவர்களுக்காக பெரிய டாக்டர்கள் வரும்போது
ஊரில் யாருக்கு அவசியமோ அவர்களுக்கும் சேர்த்து அழைப்பு கொடுத்து விடுவார்கள்.
எல்லோரும் பயனடைந்த ஒரு குடும்பம்.
அந்த வகையில் பாண்டிச்சேரி,கலோனியல் ஆஸ்ப்பத்திரி தலைமை டாக்டர்
Z.ஆந்திரே என்பவர் எங்களூருக்கு அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்தார்.
பாண்டிச்சேரி, புதுச்சேரி என்றும் சொல்வதுண்டு. ப்ரெஞ்ச்காரரின் ஆதீனத்தில் இருந்தது.
எல்லாமே அன்னிய நாட்டு ஸாமான்களின் வருகைக்குப்,ப்ரதான இடத்தை
வகித்தது.
எதுவும் கொண்டுவர முடியாது. ஆனால் எல்லாமே கிடைக்கும்.
புதுச்சேரி ஸில்க் பெயர் போனது. 10 கெஜமாக வாங்கி ,கொசுவம் வைத்துப்
புடவையாகக் கட்டிக் கொண்டு வந்து, பிறகு,பாவாடை,தாவணி,,ஷர்ட், புடவைகள்
என உருமாறும்.
எவ்வளவு ஸாமான்கள்? எங்கள் ஊர் ஒரு இருபது மைல் தூரத்தில் இருக்கும்.
எல்லாமே அரிசி முதல் மலிவாக கிடைக்கும்.
வாங்கப் பணமிராது.
அப்படி வெளிநாட்டு ஸாமான்களை அறிமுகம் செய்ததே புதுச்சேரிதான்.
டாக்டரைப் பற்றி பேசவந்து அயல் நாட்டு ஸாமான்களுக்குப் போயாகிவிட்டது.
அப்பா,அம்மாவிடம் அந்த டாக்டர் வருகிரார்,அவரிடம் பிள்ளையைக் காட்டி
யோசனை செய்யுங்கள் எனச்சொல்லி, டாக்டரிடமும் விவரம் சொல்லிவிட்டனர்.
அந்த நாளைய மனிதர்களின் அக்கரையைப் பாருங்கள்.
குறிப்பிட்டபடி டாக்டர் அவர்கள் வீட்டிற்கு வந்தார்.
இங்லீஷ் தெரிந்த டாக்டர். நோயாளிக்கும் ஸரி,அப்பாவிற்கும்ஸரி, பாஷை
பிரச்சினை இல்லை.
அதனால் எல்லா விவரங்களும் ஆதியோடந்தமாகச் சொல்ல முடிந்தது.
கவலையே படாதீர்கள். இவ்வளவு அறிவாற்றல் உள்ள பிள்ளை.
மருத்துவம் எவ்வளவோ முன்னேறி உள்ளது.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்லபடி குணமாக்கலாம்.
நீங்கள் வந்திருந்துத் தங்கி வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
நல்லபடிபேசி கைகுலுக்கி, மனதில் நம்பிக்கை ஊற்றெடுக்கும் வழியாகச் சொல்லி
அவர்கள் பங்களாத் தோட்டத்திலேயே இருக்கும் விடுதியில் தங்கலாமென்றும்
ஒரு முடிவெடுத்து தெரிவிக்கும்படியாகச் சொல்லி விட்டுப் போனார்.
இவ்வளவு தூரம் சொன்ன பிறகு மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்வதுதானே
பாக்கி இருக்கும்?
அப்பா,அம்மா,இருவரும் என் அண்ணாவுடன் புதுச்சேரி போகத் தயார் செய்து விட்டனர்.
ரயில் மூலம் போவதானாலும், ஒரு நாளுக்கு காலையில் ஒருமுறையும்,
சாயங்காலம் ஒரு முறையும் விழுப்புரத்திலிருந்து ரயில் பாண்டிச்சேரி போய்
உடனே திரும்பும்.
பஸ் ஒன்றும் திருவண்ணாமலையிலிருந்து, புதுவை போய்த் திரும்பும்.
இவ்வளவு அருகிலுள்ள ஊர் என்று நினைத்தபடி போக வர முடியாது.
சமைத்துச் சாப்பிட பாத்திரங்கள்,படிக்க புத்தகங்கள், அவசியமான ஸாமான்கள்
என பார்த்துப் பார்த்து ஸாமான்களெடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தனர்.
அத்தையுடன் நாங்கள்.
டாக்டர்கள் எல்லோரும் அருமையாகப் பேசுகிரார்கள். வீட்டிற்கு வந்தே
மருந்துகள் கொடுக்கிரார்கள்.
வீடு ஆசிரமம் மாதிரி இருக்கிறது. எங்களையும் வந்து அழைத்துப் போவதாகக்
கடிதம் வந்தது என் அண்ணாவிடமிருந்து.
தினமும் ஒரு கார்ட். எங்களைச் சமத்தாக இருக்கும்படி.
அந்த நாளில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தபால் பட்டுவாடா உண்டு.
காலையில் சீக்கிரமே தபால்கள் கிடைக்கும்.
ரிஜிஸ்டர்,மணியார்டர்கள் இருக்காது. அவ்வளவுதான்.
அவர்கள் அவ்விடம் போய் பதினைந்து நாட்களாயிருந்தது.
மயக்கம் என்று நான் குறிப்பிட்டது தொடர்ந்து வரும் வலிப்புடனானது.
அதை எழுதிக் குறிப்பிடக்கூட மனதில்லை எனக்கு. எபிலிப்ஸி.
வலிப்பு மனநோயோ,ஊனமோ கிடையாது. அது தொற்று நோயுமில்லை.
ஆனால் நம்பிக்கையில்களங்கமாக எண்ணப் பட்டது.
அறிவுக் குறைவாகவும்,மற்றவர்கள் குடும்பத்தினரையே,ஏதோ
செய்யத்தகாத பாபங்கள் செய்தவர்களாகவும், எண்ணுகிரார்கள் என்ற
மன நிலையைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
ப்ரகாசம்,சத்தம்,கூட்டம், இவைகள் எதிர் முகமாகச் செயல்
பட்டுக் கொண்டிருந்தது.
இவைகளைத் தவிர்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நாட்களில் ஓரளவு முன்னேற்றமுள்ளது.
ஃப்ரெஞ்சு டாக்டர்கள், நல்ல முறையில் சிகிச்சை, நல்லபடிதான்
எல்லாம் நடந்து கொண்டு இருந்தது.
நாங்களும் புதுச்சேரி போக தயாராக இருந்தோம்.
பார்க்கலாமா?
Entry filed under: அன்னையர் தினம்.
27 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Kumar | 9:05 முப இல் நவம்பர் 22, 2013
Akka,
Padikka romba kashtamaga irukkirathu
2.
chollukireen | 10:20 முப இல் நவம்பர் 22, 2013
எழுதுவது தள்ளிக் கொண்டே வந்ததற்கு அதுதான் காரணம்.
பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி . அன்புடன்
3.
adhi venkat | 2:10 பிப இல் நவம்பர் 22, 2013
அந்த கால மனிதர்களைப் பற்றியும், வழக்கங்களும் என கதை போல கேட்டுக் கொண்டே வந்தோம்….
தொடர்ந்து வருகிறேன்…
4.
chollukireen | 11:23 முப இல் நவம்பர் 23, 2013
நானும் திருப்பிப் படித்து அடுத்து எழுதும்போது இதே உணர்வு எனக்கும் வந்தது. அப்போ அது ஸரிதான். தொடர்ந்து வருகிறேன். சொல்லியதற்கு நன்றி. அன்புடன்
5.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 4:15 பிப இல் நவம்பர் 22, 2013
வணக்கம்
அம்மா
பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
6.
chollukireen | 11:25 முப இல் நவம்பர் 23, 2013
அப்படியா!!உங்கள் வருகை,கமென்ட் , வாழ்த்து யாவற்றிற்கும் மகிழ்ச்சி. அன்புடன்
7.
chitrasundar | 10:18 பிப இல் நவம்பர் 22, 2013
காமாக்ஷிமா,
அன்னையர் தினம்…. தொடர்ச்சியை மீண்டும் எப்போது ஆரம்பிப்பீர்கள் என்று பலமுறை யோசிப்பதுண்டு. இப்போது மீண்டும் தொடர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளதுமா. ஆனாலும் எழுதுவது தள்ளிக்கொண்டே போனதன் காரணம் அறிந்து மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
அந்த நாளின் திருமண பேச்சுகள் எப்படி ஆரம்பிக்கப்படும், போக்குவரத்தில் உள்ள பிரச்சினைகள், உறவுகளின் முக்கியத்துவம் என எல்லாமுமாக சேர்ந்து புது அனுபவமாக இருக்கிறது. தொடருங்கள்…அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 11:31 முப இல் நவம்பர் 23, 2013
இம்முறை பதிவு டேஷ் போர்டில் வரவில்லை. நீ பார்க்கிராயோ இல்லையோ என்று நினைத்தேன். புது அனுபவ பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி. செல்வி நலமா? மனதுக்குத் தோன்றுவதுதான் இப்பதிவுகள். அன்புடன்
9.
chitrasundar | 1:11 முப இல் நவம்பர் 25, 2013
“இம்முறை பதிவு டேஷ் போர்டில் வரவில்லை”_______ சில சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. மெயில் பண்ணியிருக்கேன், பாருங்கமா. அன்புடன் சித்ரா.
10.
ஸ்ரீராம் | 2:57 பிப இல் நவம்பர் 28, 2013
எபிலெப்சி என்பது இந்தக் காலத்தில் ஒரு பெரிய நோய் அல்ல என்றாலும் அந்தக் காலத்தில் பெரிதாக எண்ணப்பட்டிருக்கும் அல்லவா?
11.
chollukireen | 10:44 முப இல் நவம்பர் 30, 2013
அந்த நாளில் பெயர் சொல்லவே பயப்படுவார்கள். உங்கள் வரவுக்கு நன்றி. அன்புடன்
12.
Pattu | 2:02 பிப இல் திசெம்பர் 3, 2013
பல நாட்கள் கழித்து பதிவை பார்க்க கிட்டியது. அருமை அம்மா!
13.
chollukireen | 2:33 பிப இல் திசெம்பர் 3, 2013
எனக்கும் உன் பதிலைப் பார்க்கக் கிட்டியதில் மிகவும் ஸந்தோஷம். நேராகப் பார்த்தது போன்ற ஒரு எண்ணம்.
அன்புடன்
14.
ranjani135 | 5:46 முப இல் திசெம்பர் 6, 2013
புதிய பதிவைப் பார்த்ததும் இந்தப் பதிவைப் படித்தேனோ இல்லையோ என்ற சந்தேகம். அதான் திரும்பவும் படிக்க வந்தேன்.
அந்த நாளில் என்ன ஒரு பரந்த மனம், இல்லையா? அவர்கள் வீட்டில் இருக்கும் விடுதியில் தங்கிக் கொள்ளச் சொல்லி, வைத்தியம் பார்க்கலாம் என்பது மனதை தொடுகிறது.
புதிய சிகிச்சையில் உடம்பு குணமாயிருக்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த பகுதி படிக்கப் போகிறேன்.
15.
chollukireen | 11:49 முப இல் மார்ச் 8, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அன்னையர்தினப்பதிவு நம்பர் எட்டு இன்று பதிவாகிறது. இன்றும் அன்னையர்கள் தினம்தான். வழிவசமாக அமைந்து இருக்கிறது.விஷயங்கள் அடிப்படையாக இப்பதிவு அமைகிறதா.பாருங்கள். அன்புடன்
16.
ஸ்ரீராம் | 1:40 பிப இல் மார்ச் 8, 2021
எவ்வளவு ஊர்கள் சுற்றி வர முடிந்திருக்கிறது! இன்றைய நிலையில் அது அசாத்தியமான விஷயமாய்ப் போய்விட்டது. கொரோனா காலம்.
எபிலெஸ்பிசி என்றாலே பயந்து கொண்டிருந்த காலம். இப்போது சாதாரணமாகிவிட்டது. ஆமாம், எரிச்ச கறி என்றால் என்ன?
17.
chollukireen | 11:16 முப இல் மார்ச் 9, 2021
இந்த ஆங்கிலப்பெயரே தெரியாது. அப்போது சொல்லும் பெயரே சற்று பயங்கரம். ஒருமுறை பிரயாணம் என்றால் கூடுமானவரையில் பல ஊர்களின் கோயில்கள் பார்த்துவிட நினைப்பார்கள். இம்மாதிரி குடும்பத்தோடு போவது கஷ்டம்தான். ஆனால் தங்க உறவுக்காரர்கள் இருப்பார்கள்.. எரிச்சகறி என்பது தெற்கத்திக்காரர்கள் செய்யும் திரும்பத்திரும்பக் கொதிக்கவைத்தக் கூட்டு போன்ற குழம்புவகை. பொங்கல் ஸமயம் மிகுந்த பெயர் பெற்றது. கீதா. ஸாம்பசிவம் வர்ணனை செய்வார்கள். அன்புடன்
18.
Revathi Narasimhan | 11:09 பிப இல் மார்ச் 8, 2021
நடுவில் விட்டு விட்டேன். மன்னிக்கணும்.காமாட்சிமா.
எத்தனை அனுபவங்களை அழகாகச் சொல்கிறீர்கள்.
அந்தக் காலத்துக்கே போய் விட்டேன்.
எத்தனை ஆழமான எழுத்தும்மா.
உங்களைப் போல எழுத இன்னோருவர் தான் வரவேண்டும் .மனம் நிறைகிறது.
எல்லா நிகழ்வுகளும் எங்களகத்தில் நடப்பது போல ஒரு ஆதர்சம் தெரிகிறது.
19.
chollukireen | 11:26 முப இல் மார்ச் 9, 2021
நடுவில் இதெல்லாம் சற்று எண்ணுவது குறைந்து இருந்தது. திரும்பப் பதிவிட ஆரம்பித்த பிறகு எண்ணங்கள் பின்னோக்கி விட்டது. ஏதோ உங்கள்நான்கைந்துபேரின் பின்னூட்டங்களே மனதிற்கு மருந்து. பாருங்கள் இப்போது எதுவுமே எழுத முடிவதில்லை. அதுவும் குறையாக இருக்கிரது. ஆதரவான உங்களின் பின்னூட்டம். மகிழ்ச்சி. அன்புடன்
20.
Geetha Sambasivam | 1:13 முப இல் மார்ச் 9, 2021
நல்லபடியாகக் குணம் ஆகி இருக்கும் என்று நம்புகிறேன். இப்போதும் இந்த நோய் வந்தால் கவலைதான்! அப்படி இருக்கையில் அந்தக் காலங்களில் கவலைப்படாமல் எப்படி இருந்திருப்பார்கள்? இத்தனை ஊர்கள் சுற்றி வந்திருப்பதும் ஆச்சரியமான விஷயம். தொடரக் காத்திருக்கேன் ஆவலுடன்.
21.
chollukireen | 11:32 முப இல் மார்ச் 9, 2021
இந்த நோய் வருவது குறைந்து இருக்கிறதோ என்னவோ? கேள்விப்பட்டால் அவ்வளவுதான்.பழைய ஞாபகங்கள் மனது க,ஷ்ட்டப்படும். போறது. எல்லாம் பழம் கதை. ஊரெல்லாம் மறக்க முடியாதவை அந்த வயதில். அன்புடன்
22.
Geetha Sambasivam | 1:16 முப இல் மார்ச் 9, 2021
சங்கராந்திக்குச் செய்யும் குழம்பு, காய்வகைகளைப் போட்டுக் கொஞ்ச நாட்கள் திரும்பத் திரும்பச் சுட வைத்துக் கொண்டு சாப்பிடுவார்களே, அதான் எரிச்ச கறி ஸ்ரீராம்.
23.
chollukireen | 11:38 முப இல் மார்ச் 9, 2021
திரும்பத், திரும்பக் கொதிக்க வைக்கும்போது அன்று மிகுந்த கறி,குழம்பும் சேர்த்துக் கொதிக்க வைப்பார்களாம். குளிர் சாதன ப்பெட்டி அன்று இல்லை அன்புடன்
24.
நெல்லைத்தமிழன் | 12:02 பிப இல் மார்ச் 10, 2021
குணமாகப்போகிறதா இல்லை கெட்ட செய்தியாக வரப் போகிறதா – இந்த இடத்தில் நிறுத்திவிட்டீர்களே.
எரித்தகறி – ஹாஹா எங்கள் அப்பா ஒரு முறை சொல்லியிருக்கிறார் (தன் அப்பா போன ஒரு வருடம், அனேகமாக தினமும் கீரைதானாம். குழம்பு செய்து மிஞ்சினால் எரித்தகறி என்றெல்லாம்).
25.
chollukireen | 12:04 பிப இல் மார்ச் 11, 2021
பாருங்கள் எரித்த கறி எங்கெல்லாம் பரவி இருக்கிறதென்று. வழக்கமில்லையே தவிர அதுவும் ஒரு ருசிதான்.வெளிநாட்டில் எரிக்காமலேயே குளிர்ப்பதனப்பெட்டியில் துயில் கொள்கிறதா? அன்புடன்
26.
நெல்லைத்தமிழன் | 12:03 பிப இல் மார்ச் 10, 2021
சென்றகாலங்களைப் பற்றி மீண்டும் எண்ணும்போதும் நல்லதும் கெட்டதும் மனதில் திரும்பத் திரும்ப அலைமோதுமே…. எப்படி உணர்கிறீர்கள் காமாட்சி அம்மா.
27.
chollukireen | 12:16 பிப இல் மார்ச் 11, 2021
எட்டு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவுகள். படித்துப் பார்த்துதான் மீள்பதிவு செய்கிறேன். நல்லது கெட்டது திரும்பவும் எண்ணங்களில் கஷ்டப் படுத்துகிறது. பட்டது,எழுதிவேறு பார்த்தோம். திரும்ப வேறு பார்க்கிறோம் ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய தலைகளில் நான்தான் இருக்கிறேன். எழுத முடியாததற்கு மாற்று மருந்து தேடினால் இப்படிதான் இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறேன். வயதானவர்களின் வாழ்க்கை இப்படிதான். நல்ல நினைவாற்றலும் பெருகுகிறது.சிவராத்திரி இன்று. ஓம் நமசிவாய.
நன்றி அன்புடன்