அன்னையர் தினம் பதிவு 10
திசெம்பர் 18, 2013 at 11:14 முப 27 பின்னூட்டங்கள்
ஊரே திரண்டு உபசாரம் சொல்ல வந்தார்கள். அந்த ஸமயம்
அவரவர்களுக்குத் தோன்றியபழைய ஞாபகங்கள் வந்து ஒவ்வொருவர்
ஒவ்வொன்றாகஞாபகப்படுத்திக் கொண்டுஅதை அப்போது புரிந்து கொள்ளவில்லையே,
இது இப்படி ஆயிற்றே, அம்மாதிரி செய்திருக்கலாமோ, நமக்கேன் அப்படி
தோன்றவில்லை, இந்த சகுனம் ஸரியில்லை,அது,இது என்று சொல்லி
புதுச்சேரி தான்போகாதிருந்தால் அவன் இருந்திருப்பான். எதுவும்
தோன்றவில்லையே என்ற புலம்பலும், அரற்றலும் தான் பாக்கியாக இருந்தது.
திருவண்ணாமலையினின்றும்,அவன்படித்த,அப்பாவுடன் வேலை செய்த
எல்லோரின்,அனுதாபக் கடிதங்களும்,நேரில் வந்தவர்களுமாக, புதிய
செய்தியாக இவன் காலத்தில், இவனைப்போல தெரிந்தவர்கள் இரண்டுபேரின்
அகால முடிவுகளும், அந்த விவரமும் இன்னும் மோசமாக இருந்தது.
அக்காவின் வீட்டிற்கு போய்வருகிறேன் என்று சொல்லிப் போனவன், ஒருவன்
ஆரணி போளூர் பக்கத்தில் கிராமம். அங்கெல்லாம் நடவாபி என்று சொல்லப்படும்
கிணறு. கிணற்றுக்குள் இரங்க படிகளிருக்குமாம்.
ஒருவருமில்லாத ஸமயத்தில் இறங்கிப்பார்க்க ஆசைப்பட்டு இறங்கி இருக்கிறான்.
அவ்வளவுதான். அவன் கதை முடிவுக்கு வந்து விட்டதாம். அவ்விடம் உடல்நிலை
ஸரியில்லாது போயிருக்கும்.ஸைன்ஸ் எல் டி சாமிநாதய்யர் பிள்ளை அவன்.
இன்னொரு கேஸ் தீவிபத்து.
என்ன அக்கரையாகப் பார்த்தாலும், அங்கங்கே நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது.
இம்மாதிரி இல்லாமல் வைத்தியம் செய்தோம்,பலனில்லை என்ற அளவிற்கு
மனதை தேற்றிக் கொள்ளுங்கள், இப்படியெல்லாம் ஆறுதல் மொழிகளுடன்
செய்திகள் குவிந்து கொண்டிருந்தது
சின்ன வயதானாலும், வேறுவிதமான முடிவு வராமல், நல்ல முறையில் அவனின்
வியாதியிலிருந்து விடுபட்டு போய்விட்டான்
அவன் வரையில் அவனுக்கு நல்ல கதி வந்து விட்டது. இப்படி யாவரும் ஹிதாஹிதம்
ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று சொல்லி சொல்லியே தேற்ற ஆரம்பித்தனர்.
. அம்மாவிற்குவெளியில் எங்கும் போகப்பிடிக்காததுதான்.
இருந்தாலும் முக்கியமான சில இடங்களுக்குப் போகக் கூட ஊரில் வம்பு
பேசுவார்கள் என்று போகத் தயக்கம். வேண்டாம் . இந்தக் கதையே வேண்டாம்.
காலங்கள் கடந்து கொண்டிருந்தன.
பிறர் வீட்டு நல்ல காரியங்களுக்குக் கூடப் போகாமல், தனக்குத்தானே தடை
விதித்துக் கொள்ளும் படியான சூழ்நிலை.
அக்காவின் நாத்தனார் பிள்ளைக்கு எங்களூரில் கல்யாணம். பெண்ணைக் கொடுத்த
வழியில் ஏக உறவு. பூரா உறவுகாரர்கள்.என்ன செய்வது?
முஹூர்த்தத்துக்கு போக வேண்டாம். ராத்திரி போய் கலியாணம் விசாரித்து விட்டு வந்து
விடு. அத்தை சொல்லவே, என்ன காதமோ, தூரமோ இல்லை பத்தடி வைத்துத் திரும்பினால்
கலியாண வீடு. போகாதிருந்தால் நன்றாக இராது.
போன இடத்தில் ஒரு வாய் சாப்பிடாது போகக் கூடாது. எவ்வளவு நாள் இப்படி
இருப்பாய். நம் வீடுதானே.
ரொம்பவும் சொன்னால் தட்ட முடியுமா? சாப்பிட்டதாகப் பேர்செய்து விட்டு,கலியாண
வீட்டில் தாம்பூலம் கொடுக்காது அனுப்புவார்களா?
அதையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினால் அம்மாவின் அக்கா பிலுபிலு என்று
பிடித்துக் கொள்கிறாள்.
என்ன நாலு வருஷமாச்சா,அஞ்சு வருஷமாச்சா? ~ஒரு வருஷம் தானே ஆகிரது.
என்ன சம்மந்தி உரவு. போகாட்டா என்ன புரிஞ்சுக்க மாட்டாளா ஊரில் வம்புதான் பேசுவா
கண்டனப்பேச்சு.
என்னாலே அவா கூப்பிடும்போது தட்ட முடியவில்லை.
நாளைக்கே நம் வீட்டில் ஏதாவது நல்ல கரியங்களுக்கு அவா வரவேண்டாமா.
பொண்ணைக் கொடுத்த வீடு. வார்த்தை வரக்கூடாது.
இதை இத்தோடு விட்டுவிடு. நாலுபேரோடு பழகி,நாலு இடங்களுக்குப் போய்
வந்தால்தான் மனது ஸரியாரது.
இப்படிகூட ஸம்பவங்கள் நடந்தது. மனது ஸரியில்லாவிட்டால்கூட நாலு பேரைப்
பார்த்து அவர்களுடன் கலந்து ,உதவிக்கொண்டு வருடங்கள் கடந்தது.
பெண்கள் வளர ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அயலூரில் கொண்டு
சேர்த்து படிக்க வைக்கும் பழக்கமெல்லாம் இல்லை.
பணவசதியும் வேண்டுமே.
எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட பிள்ளை போன பின்பு பெண்களுக்கு எதையும்
சொல்லிக்கொடுத்து, அவர்களை ஆளாக்க மனம் வரவில்லை. யாருக்கா?
அப்பாவிற்குதான்.
பெண்கள் உயிருடனிருந்து, வாழ்ந்தால் போதும் என்ற விரக்தி மனப்பான்மையே
மேலோங்கி இருந்தது.
பெண்கள் கலியாணமாய்ப் போவதற்கு பெற்றோரின் நிதி வசதிக் கேற்றபடிதான்
மாப்பிள்ளை பார்க்க முடியும்.
ஸாதாரண குமாஸ்தா அதான் கிளர்க் வேலைிலிருக்கும் ஒரு பிள்ளையைப்
பார்க்க வேண்டுமென்றாலும், கையில்பணம், அதைத்தவிர பூரா கல்யாண ஏற்பாடுகள்
சீர்,நகைநட்டு,வெள்ளி பித்தளைப் பாத்திரம், புடவை,என ஓரளவாவது செய்ய வேண்டும்.
ஓரளவாவது என்ன கேட்டதைக் கொடுக்க வேண்டும்.
பின்னிட்டு செய்ய மனிதர்கள் இருக்கிரார்களா என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
வரன் பார்க்கவேண்டாமாப்பா. அத்தை அப்பாவிடம் கேட்கிறாள்.
பார்க்கணும். ஆனால் என்ன செய்விங்கோ, என்ன உத்தேசம்? இவ்வளவு செஞ்சா அந்த
பிள்ளையைப் பார்க்கலாம். அவா ஜாஸ்தி கேட்கரா, என்ன சொல்றது என்ற கேள்வி
எல்லாம் வரும், முன்னே நீ செய்தமாதிறி மார்க்கெட் நிலவரம் இல்லே.
என்னால் முடியாது என்று பிறரிடம் கூற தன் மானம் இடம் கொடாது. ஸ்ரீராமன்
இருக்கிறான்.
யாரையும் போய் எதுவும் கேட்க என்னால் இப்போது முடியாது.
அப்படி ல்லாம் சொன்னா முடியுமா?
இல்லே வேளை வந்தால் நடக்கும்.
தோட்டத்தில் நெறைய வேளைச்செடி மொளைச்சிருக்கு.
கலியாணபேச்சு பேசினா கைகூடி வரும். அதான் சொல்றேன்.
அம்மா மனஸிலே யார் யாரைக் கேட்கலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்து விட்டாள்
ஸ்ரீராமர் வருவார். அவரையும் போய்க் கூப்பிடணுமப்பா.
அத்தை.பேச ஆரம்பித்து விட்டாள் ஞாபகப்படுத்தி.
வேளைக்கீரையும்,.ராமரும், எப்போ வருவார் என்று நீங்களும் கேட்பீர்கள்.
நல்ல வேளைக்கீரையை நறுக்கி அத்தை வாய்வுக்கு நல்லதென்று ஒரு
பருப்புக்குழம்பு பண்ணுவா. அவ்வளவு நன்றாக இருக்கும்.
நான் அதைச் சொல்ல வரவில்லை. கீரையெல்லாம் சமைச்சுடாதே.
வேளை வரவேண்டும். அம்மா சொல்லுவாள்
பார்க்கலாம்,திரும்பவும்,ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், வருகிறேன். அன்புடன்
Entry filed under: அன்னையர் தினம்.
27 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
GOPALAKRISHNAN. VAI | 1:15 பிப இல் திசெம்பர் 18, 2013
மிகவும் அழகாக பல்வேறு மன உணர்வுகளையும், அந்தக்கால மனிதர்களின் போக்குக்களையும், கலாச்சார விதிகளையும், கட்டுப்பாடுகளையும், புட்டுப்புட்டு அருமையாக எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். எல்லாமே புரிந்துகொள்ள முடிகிறது. அன்புடன் கோபு.
2.
chollukireen | 9:42 முப இல் திசெம்பர் 20, 2013
போதுவிடிந்து,பொழுது போனா இதெல்லாம் பார்த்த அனுபவம். எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டது.
நினைக்கும் போது நிழற்படம்போல் சிலஸமயம் தோன்றும். அவ்வளவுதான். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 1:15 பிப இல் திசெம்பர் 18, 2013
மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்… தொடர்கிறேன் அம்மா…
4.
chollukireen | 9:45 முப இல் திசெம்பர் 20, 2013
தொடருங்கள் வரவேற்கிறேன். ஏதோ கதை மாதிரி எழுதுகிறேன். அந்த நாட்கள் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் தெரியலாம். அவ்வளவுதான். உங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
adhi venkat | 2:53 பிப இல் திசெம்பர் 18, 2013
அந்த கால மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.. தொடர்கிறேன்..
6.
chollukireen | 9:47 முப இல் திசெம்பர் 20, 2013
மிகவும் ஸரியான வார்த்தை. தொடர்கிறாய். அதுவே போதும். நன்றி அன்புடன்.
7.
ranjani135 | 4:35 பிப இல் திசெம்பர் 18, 2013
உங்கள் அம்மாவை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. எல்லோரையும் திருப்தி படுத்த முயன்றாலும் தோல்விதான். பிள்ளை போன சோகம்!
அடுத்து பெண்களுக்குக் கல்யாண ஏற்பாடு.. என்ன செய்ய போகிறார் அப்பா? படிக்கக் காத்திருக்கிறேன்.
கனத்த மனத்துடன்…..
8.
chollukireen | 9:52 முப இல் திசெம்பர் 20, 2013
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அஜாத சத்ரு என் அம்மா. கவலை எல்லாம் படாதிங்கோ.
சும்மா கதை என்று படியுங்கோ. அந்தமாதிரி மனுஷாளை பார்க்க முடியுமா என்ற வார்த்தை இன்னமும் அவரைத் தெரிந்தவர்கள் சொல்கிரார்கள்.
அது போதுமே!!!!!! அன்புடன்
9.
chitrasundar5 | 2:47 முப இல் திசெம்பர் 22, 2013
குழந்தையை இழந்ததுமில்லாமல், விசேஷங்களில் கலந்துகொள்வதிலும் பெண்களுக்குத்தான் பிரச்சினை போலும். வெளியில் போகவர இருந்தால்தானே இருக்கற துக்கம் கொஞ்சமாவது குறையும். அந்தக்கால பெண்கள் பாமம்தான். அப்பாவின் பயமும் நியாயமானதுதான்.
சீக்கிரமே வாங்கம்மா, காத்திட்டிருக்கோம். அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 11:14 முப இல் திசெம்பர் 22, 2013
வலைச்சரம் மும்முரமாகத் தொடுத்ததில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிராய் என்று நினைத்தேன். சீக்கிரமே வரும்படி கூப்பிட்டிருக்கிறாய்.
வரவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். குளிர்காலம். பகல் குறைவு. வேலை தாமதம். வரேன் வரேன். அன்புடன்
11.
chollukireen | 11:55 முப இல் மார்ச் 22, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் அம்மாவைப் பற்றிய தொடர்ச்சிகள்தான். இதனின்றும் அது என்கிறமாதிரி. பெரிய பதிவு இல்லை. படியுங்கள் அன்புடன்
12.
Geetha Sambasivam | 12:12 பிப இல் மார்ச் 22, 2021
வேளைக்கீரை மாமனார் பறித்துக் கொண்டு வருவார். அம்பத்தூரில் இருக்கும்போது சாப்பிட்டிருக்கோம். இப்போப் பெயர் சொன்னால் தெரியுமானு சந்தேகம் தான்.
பெண்கள் கல்யாணத்துக்கு நல்ல வேளை வரட்டும். நல்லபடியாக எல்லாம் நடக்கட்டும்.
13.
நெல்லைத்தமிழன் | 2:22 பிப இல் மார்ச் 22, 2021
அது வேலிக்கீரை என்பதாக இருக்குமோ?
14.
chollukireen | 11:23 முப இல் மார்ச் 23, 2021
இல்லை இல்லை. வேளைக்கீரையே. முகநூலில் படத்துடன் இருக்கிறது. பாருங்கள். வேலிக்கீரை என்ற அர்த்தத்தில் நேபாலில் ஒரு கீரை இருக்கிறது. என்னவென்று பார்த்தால் புளிச்ச கீரை. dடோரிஸாக். உயரமாகவேலி. ஓரங்களில் வளர்க்கிரார்கள். சாப்பிட மாட்டார்கள். இதுவும் ஒரு செய்தி. நன்றி. அன்புடன்
15.
Geetha Sambasivam | 12:43 முப இல் மார்ச் 24, 2021
நெல்லை, அது வேளைக்கீரை தான். நாங்க நிறையச் சாப்பிட்டிருக்கோம். மின்னல் இலைனு ஒண்ணு போட்டு மோர்க்குழம்பு பண்ணுவாங்க. வேளைக்கீரை, மின்னல் இலை, முடக்கத்தான் போன்றவை மாமனார் நிறையப் பறித்து வருவார். சாப்பிட்டிருக்கோம். கண்டங்கத்திரிக்காயில் பொரிச்ச குழம்பு பண்ணுவார்கள்.
16.
chollukireen | 11:21 முப இல் மார்ச் 24, 2021
நான் வேளைக்கீரை படம் நெல்லைக்கும், ஸ்ரீராமிற்கும் அனுப்பி இருக்கிறேன். உங்களுக்குத்தான் தெரியுமே. மிக்க நன்றி. அன்புடன்
17.
chollukireen | 11:08 முப இல் மார்ச் 23, 2021
தானாக முளைத்து வளரும்செடிதானிது. மருத்துவ குணமுடையது. கிராமத்துக்காரர்களாக இருந்தால் தெரியும்.ஒருவித அக்கால நம்பிக்கைகள். நன்றி. அன்புடன்
18.
ஸ்ரீராம் | 2:20 பிப இல் மார்ச் 22, 2021
மகனை இழந்த சோகம், ஸம்ப்ரதாயங்களால் வரும் மனக்காயம்… பாவம். பத்தடி தொலைவில் இருக்கும் கல்யாண வீட்டுக்குப் போகாமலும் இருக்க முடியாது..
வேளைக்கீரை நான் கேள்விப்பட்டதில்லை.
19.
chollukireen | 11:12 முப இல் மார்ச் 23, 2021
எல்லாம் கலந்த கலவை வாழ்க்கை. முகநூலில் தேடினால் விவரம் படத்துடன் இருக்கிறது வேளைக்கீரையைப் பற்றி.நன்றி. அன்புடன்
20.
நெல்லைத்தமிழன் | 2:24 பிப இல் மார்ச் 22, 2021
இந்தக் காலத்திலாவது, நமக்கு காசே இல்லை, ஒரு குழந்தையே போதும் என்று இருந்துவிடுவார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் எத்தனை எத்தனையோ கஷ்டங்களைப் பட்டிருப்பார்கள் என்ற நினைவே மனதை வருத்துகிறது.
21.
chollukireen | 11:15 முப இல் மார்ச் 23, 2021
நடந்த கதைதானே. நடக்கும் கதையில்லை.அன்புடன்
22.
நெல்லைத்தமிழன் | 7:51 பிப இல் மார்ச் 22, 2021
//ஆனால் என்ன செய்விங்கோ, என்ன உத்தேசம்? இவ்வளவு செஞ்சா அந்த பிள்ளையைப் பார்க்கலாம்// – அதற்குச் சில ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் பெண் வீட்டிற்குப் பணம் கொடுத்து பெண்ணைத் தானமாகப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு பிள்ளை (பிடிப்பதற்காக) திருமணம் என்ற பெயரில் நிறைய செலவு. இப்போது காலம் கொஞ்சம் மாறுகிறது. பெண் கிடைப்பதே கஷ்டமாக இருக்கு.
தொடர்கிறேன்.
வேளைக்கீரை என்றால் என்னன்னு புரியலை.
23.
chollukireen | 11:48 முப இல் மார்ச் 23, 2021
இப்போது பெண்களின் எதிர்பார்ப்பு படிப்பினால் அதிகமாகிவிட்டது. காலம் தாழ்த்துகிரார்கள். சில இடங்களில் அதுவே காலம் கடந்துவிடுகிறது.நினைப்பது நடப்பதில்லை. பெண்ணை வர்ணித்ததுபோக பிள்ளையை வர்ணிக்கிரார்கள்.காலம் இருபாலாருக்கும் சோதனைக்காலமாக இருக்கிரது. நான் அப்படி நினைக்கிறேன். வேளைக்கீரை படம் இருக்கிறது. பிறகு போடுகிறேன். நன்றி அன்புடன்
24.
chollukireen | 11:37 முப இல் மார்ச் 23, 2021
இல்லை இல்லை. வேளைக்கீரையே. முகநூலில் படத்துடன் இருக்கிறது. பாருங்கள். வேலிக்கீரை என்ற அர்த்தத்தில் நேபாலில் ஒரு கீரை இருக்கிறது. என்னவென்று பார்த்தால் புளிச்ச கீரை. dடோரிஸாக். உயரமாகவேலி. ஓரங்களில் வளர்க்கிரார்கள். சாப்பிட மாட்டார்கள். இதுவும் ஒரு செய்தி. நன்றி. அன்புடன்
25.
chollukireen | 11:53 முப இல் மார்ச் 23, 2021
இது இரண்டாவது முறையாக பதிவாகிவிட்டது.
26.
Revathi Narasimhan | 1:49 பிப இல் மார்ச் 23, 2021
அம்மாவை நினைத்துக் கவலை வந்தாலும் அவரது மனத்திடத்தை மிகவும் பாராட்டுகிறேன்.
ஊராருக்கு என்ன என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.
நானும் இது போல என் பாட்டியைப்
பார்த்திருக்கிறேன். தன் மகனை இழந்தும்
மற்றவர்களிடம் கசப்பைக்
காண்பித்ததே இல்லை.
மிக அருமையான திரும்பிப் பார்க்கும்
சம்பவங்கள். அருமை அன்பு காமாட்சி மா.
27.
chollukireen | 11:15 முப இல் மார்ச் 24, 2021
வல்லிம்மா நானும் புத்திர சோகத்தை அநுபவித்துவிட்டேன். என்னுடைய விதி அது. ஊரு,வாழ்வு, உறவினர்கள்,ஸம்பிரதாயம் எல்லாம் சுற்றி இருந்த காலம் அம்மாவினுடயது. நீங்கள் வந்து பதில் எழுதுவது மிகவும் ஒரு நல்லது. அந்த கடிதங்கள்பதிவு,மற்றும் யாவையும் நாச்சியாரில் படிக்கிறேன். எவ்வளவு விஷயங்கள் என்று நினைத்து பதிலும் எழுதுவேன். ஸென்ட் ஆகிறது. போவதில்லை. ரேவதி நரஸிம்மன் என்று எழுதிப் பார்க்கிறேன். நாச்சியார் என்று பதிவு அந்த விலாஸம் ஸரியில்லைபோல உள்ளது. நன்றிம்மா. அன்புடன்