பாதாம்ஹல்வா
திசெம்பர் 27, 2013 at 6:25 முப 14 பின்னூட்டங்கள்
ஆங்கிலப் புத்தாண்டை ஆசையுடன் வரவேற்று அதற்காக பாதாம் ஹல்வாவை செய்து பாருங்கள். கொஞ்சம் கேஸரிக் கலரோ,குங்குமப்பூவோ அதிகம் சேர்த்துக் கிளருங்கள். முந்திரியை நெய்யில் வருத்துப் போடுங்கள். அருமையான
ஹல்வா. ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
பாதாம் பருப்பு—–1 கப் நிறைய. கோபுரம்போல
பால்—–~ஒரு கப்
சர்க்கரை—-ஒன்றறை கப்
நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
குங்குமப்பூ—-சில இதழ்கள். 1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.
ஏலப்பொடி—சிறிது
வேண்டுமானால் அலங்கரிக்க முந்திரிப்பருப்பு
செய்முறை.
இரண்டு 3கப் கொதிக்கும் தண்ணீரை விட்டு, ஒரு 10நிமிஷம்
பாதாம் பருப்பை ஊற வைக்கவும். ஊறிய
பருப்பைப் பிதுக்கினால் தோல் சுலபமாக உறிக்க வரும்.
தோலை உறிக்கவும்.
உறித்த பருப்பை நன்றாக அலம்பி மிக்ஸியில் போட்டு
வேண்டிய அளவு பால் விட்டு நன்றாகவும், நறநறப்பாகவும்
அறைத்துக் கொள்ளவும்.
கெட்டியான துவையல் பதம்ஸரியாக இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும், அறைத்த
விழுதையும் சேர்த்துக் கலந்து நிதான தீயில் வைத்துக்
கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததினால் கலவை இளகி பின் கொதிக்க
ஆரம்பிக்கும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவைச்
சேர்க்கவும்.
கை விடாது கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கொதித்துப்
பின் இறுக ஆரம்பிக்கும்.
இறுக ஆரம்பித்த பிறகு சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக்
கிளறவும்.
பொருமையாகக் கிளறவும். கலவை கெட்டியான பதத்தில்
வரும் போது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
திரட்டிப்பால் மாதிரி திரண்டு வரும் பதம் ஸரியாக
இருக்கும்
முந்திரியினால் அலங்கரிக்கவும்.
குங்குமப்பூ சேர்ப்பதால் இளம் மஞ்சளில் கலரும் அழகாக
வரும்.
சுவைக்கத் திகட்டாத நல்ல இனிப்பு.
ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சிறிது இடைவெளி விட்டு
நெய்யைச் சேர்க்கவும்.
பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக சுருட்டி வைத்தாலும்
View original post 8 more words
Entry filed under: Uncategorized.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
adhi venkat | 6:52 முப இல் திசெம்பர் 27, 2013
ருசியான இனிப்பு..
நானும் இரண்டு முறையாக தீபாவளிக்கு பாதாம் அல்வா தான் செய்கிறேன்..:) தங்களின் அளவுகளை குறித்துக் கொண்டேன்..
புத்தாண்டு வாழ்த்துகள்.
2.
chollukireen | 6:57 முப இல் திசெம்பர் 28, 2013
மறுமொழி இனிப்பாக இருக்கிரது. வாழ்த்துகளுக்கு நன்றி. உன்னுடைய முறை என்ன. அன்புடன்
3.
ranjani135 | 6:53 முப இல் திசெம்பர் 27, 2013
புதிய வருடம் பிறப்பதற்கு முன்பே ஒரு இனிப்புடன் புத்தாண்டின் வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
4.
chollukireen | 7:01 முப இல் திசெம்பர் 28, 2013
நான்கைந்து தினம் முன்னால் சொன்னால் செய்வதற்கு சுலபமாக இருக்கும் அல்லவா வாழ்துகள் திரும்பவும் சொல்லுகிறேன் செய்து பாருங்கள். உங்களின் வாவ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 8:43 முப இல் திசெம்பர் 27, 2013
செய்து பார்க்கிறோம்… நன்றி…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
6.
chollukireen | 7:03 முப இல் திசெம்பர் 28, 2013
வாழ்த்துகளுக்கு நன்றி. வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
வை. கோபாலகிருஷ்ணன் | 5:47 பிப இல் திசெம்பர் 27, 2013
புத்தாண்டுக்காக முன்கூட்டிய சொல்லியுள்ள பாதாம்ஹல்வா செய்முறையும், படங்களும் வெகு அருமை. வரும் புத்தாண்டு எல்லோருக்கும் எல்லாவித நலங்களையும் வளங்களையும் தந்து பாதாம்ஹல்வா போல இனிப்பூட்டட்டும். நமஸ்காரங்கள்.
8.
chollukireen | 8:19 முப இல் திசெம்பர் 28, 2013
உங்களின் இனிப்பான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி
வாழ்த்துகளுக்கும் நன்றி. செய்வதற்கு நேரம் வேண்டுமே பாதாம் ஹல்வா. ஆதலால் முன் கூட்
டிய பதிவு இது. உங்கள் யாவருக்கும் அநேக ஆசீரவாதங்கள். அன்புடன்
9.
Angelin | 10:24 பிப இல் திசெம்பர் 27, 2013
நலமா காமாட்சி அம்மா .நீண்ட நாட்களுக்கு பின் இங்கு வரேன் அருமையான சுலபமான பாதாம் அல்வா குறிப்புக்கு நன்றி
10.
chollukireen | 8:22 முப இல் திசெம்பர் 28, 2013
அஞ்சு நாங்கள் நலமே. செய்து பார்த்து உன் பதிவிலும் போடு. உன் வரவு அபூர்வமாகிவிட்டது. பரவாயில்லை.
பிஸியாக இருக்கிராய். உன் வரவை வாழ்த்துகிறேன். அன்ுடன்
11.
Radha rani | 12:41 முப இல் திசெம்பர் 28, 2013
பாதாம் அல்வா குறிப்பு படித்தேன். செய்து பார்க்கிரேன்ம்மா… இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…!
12.
chollukireen | 8:33 முப இல் திசெம்பர் 28, 2013
வாழ்த்துகளுக்கு நன்றி. செய்து பார்த்து எழுது. அடிக்கடி வாம்மா. ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன்
13.
chitrasundar5 | 1:28 முப இல் திசெம்பர் 28, 2013
காமாக்ஷிமா,
சென்ற முறை பதிவானதிலிருந்தே செய்து பார்த்துவிட ஆசைதான். நியூஇயர் அன்றாவது செய்யலாமா என யோசிக்கிறேன். அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 8:36 முப இல் திசெம்பர் 28, 2013
சித்ரா உன் பெண்ணும் வந்திருப்பாள். சமையல் குறிப்புகள் எழுதும் உனக்கு இது பிரமாதமொன்றுமில்லை எல்லாரும் நலமா அன்புடன்