சக்கரைப் பொங்கல்
ஜனவரி 9, 2014 at 12:59 பிப 14 பின்னூட்டங்கள்
இரண்டு வருஷத்திற்கு முன் எழுதியது. வெல்லம் சற்று கலர் குறைவாக இருந்தால் பொங்கலும் அதேமாதிரி வருகிறது.
நல்ல பாகு வெல்லமாக இருந்தால் கலரே அலாதியாக இருக்கும். நான்கு நாட்கள் முன்னர் கொடுத்தால் பலருக்குப் பதிவு உபயோகமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்செய்யும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள். அம்மா என்று அழைக்கும் பலபேர் எனக்கு வலைப்பூவில் உண்டு. அவர்களுக்கும்,மற்றும் எல்லோருக்கும் பசுமஞ்சள் குங்குமத்துடன் வெற்றிலைப்பாக்கும், பழமும்,ஒரு ரூபாய் அன்பளிப்புடன் எடுத்துக் கொள்ளுங்கள் பொங்கல் ஆசிகளும்,
அன்புடனும் சொல்லுகிறேன்
பொங்கல்ப் பண்டிகை அடுத்து வருவதால் பொங்கல் செய்யும்
முறையையும் பார்ப்போமா.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப். பாஸ்மதி
பயத்தம் பருப்பு—அரிசியின் அளவில் மூன்றிலொருபங்கு
பாகுவெல்லம்—பொடித்தது—2 கப்
நல்ல நெய்—2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்–5 பொடித்துக் கொள்ளவும்
முந்திரி, திராட்சை–விருப்பத்திற்கு
குங்குமப்பூ–சில இதழ்கள்
ஜாதிக்காய்ப் பொடி—ஒரு சிட்டிகை வாஸனைக்கு
தேன்—2 ஸ்பூன் ருசிக்கு
பால்—-அரைகப்
செய்முறை——.வாணலியைச் சூடாக்கி அரிசி, பருப்பை தனித்தனியே
வாஸனை வரும்படி சற்றுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பை, இரண்டு மூன்று முறை ஜலம் விட்டுக் களைந்து
இறுத்து , இரண்டரைகப் ஜலமும் அரைகப் பாலையும் சேர்த்து
குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குழிவான கரண்டியினால் வெந்தவற்றை
நன்றாக மசித்துக் கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லப்பொடி அமிழ ஜலம் சேர்த்துக்-
-கிளறி, கெட்டியான பாகாக் காய்ச்சி மசித்த அரிசி, பருப்பில்
சேர்த்து, நிதான தீயில் ஒன்று சேரக் கிளரவும்.
கலவை ஒன்று சேர்ந்து சற்று இறுகும் பதத்தில் இறக்கவும்.
பாகு காயும் போதே ஏலக்காய், குங்குமப்பூ,ஜாதிக்காய்ப்பொடி
இவைகளைச் சேர்த்து விடலாம்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு தேனையும்,
நெய்யையும் சேர்த்துக் கலக்கவும்.
நெய் வேண்டிய அளவு சேர்க்கலாம். ஜாதிக்காய், தேன் முதலானது
கண்டிப்பாக வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஒரு முறை.
அடுத்து வெங்கலப் பானையில் பாலும் ஜலமுமாகக் கொதிக்க
வைத்து வறுத்த அரிசி, பருப்பை சுத்தம் செய்து வேக வைத்து
மசித்து…
View original post 97 more words
Entry filed under: இனிப்பு வகைகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 1:52 பிப இல் ஜனவரி 9, 2014
வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று… அன்பளிப்பு உட்பட செய்முறைக்கு நன்றி அம்மா…
2.
chollukireen | 10:26 முப இல் ஜனவரி 10, 2014
ஒரு ரூபாய் என்பது பதினாயிரம் கட்டி வராகன்என்பார்கள். ஒரு வராகன் 3..50காசுகள். மாற்றும் போது ஜாக்கிரதை. நன்றி அன்புடன்
3.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:29 பிப இல் ஜனவரி 9, 2014
அன்புள்ள மாமி, அநேக நமஸ்காரங்கள். தாங்கள் திராக்ஷை + முந்திரியுடன் படத்தில் காட்டியுள்ள சர்க்கரைப் பொங்கல் எனக்கு நாக்கில் நீர் ஊற வைத்து விட்டது. உடனே புறப்பட்டு நேபாளுக்கு தங்கள் ஆத்துக்குப் போய் குதித்துவிட மாட்டோமா என்று உள்ளது. ;))))) ரொம்ப சந்தோஷம். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் கோபு
4.
chollukireen | 10:33 முப இல் ஜனவரி 10, 2014
அநேக ஆசிகள். இப்போ உடனே புறப்பட்டு மும்பை வந்தால் போதும். அந்தப் பதிவு மும்பையினுடையதுதான். நேபாலிலும் கிடைக்கும்.
தவராது எங்கு வந்தாலும் இதே அச்சு அசல் பொங்கல்தான். வரேன் என்று சொல்வதற்கே நன்றிகள்
அன்புடன்
5.
Radha rani | 4:32 பிப இல் ஜனவரி 9, 2014
இனிப்பான பகிர்விற்கும் தங்களின் அன்பான அன்பளிப்பு ஆசிகளுக்கும் என் நன்றிகள் அம்மா..
6.
chollukireen | 10:36 முப இல் ஜனவரி 10, 2014
ரொம்பரொம்ப ஸந்தோஷம். வார்த்தையில்தான் எல்லாம் கொடுத்திருப்பது. எல்லோரும்,நீயும் எடுத்துக் கொண்டதற்கு மிக்க ஸந்தோஷம். மனதைத் தொடுகிறது. அன்புடன்
7.
chitrasundars blog | 8:24 பிப இல் ஜனவரி 9, 2014
காமாக்ஷிமா,
சர்க்கரைப் பொங்கலைவிட உங்களின் ஆசிகளும், மஞ்சள் குங்குமம், பழத்தட்டு & ஒரு ரூபாய் அன்பளிப்பும்தான் மனதிற்கு இனிக்கிறது.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா. அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 10:40 முப இல் ஜனவரி 10, 2014
பார்த்தாயா சர்க்கரைப் பொங்கலைவிட இனிப்பானது அன்பு வார்த்தைகள்தான்..மஞ்சள் குங்குமம் எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி. பொங்கல் வாழ்த்துகளுடன்,நன்றியுடனும்,அன்புடனும்
9.
adhi venkat | 8:42 முப இல் ஜனவரி 10, 2014
பொங்கலும், தங்களுடைய அன்பளிப்பும், ஆசிகளும் கிடைக்கப் பெற்றோம்…ரொம்ப சந்தோஷம் அம்மா..
இனிய பொங்கல் வாழ்த்துகள்..
10.
chollukireen | 10:46 முப இல் ஜனவரி 10, 2014
என் இனிய எல்லா பெண்களையும்.நேரில் பார்த்த ஓர் உணர்வு அம்மா என்று அழைக்கும் மேலே குறிப்பிட்ட எல்லாப் பெண்களிடமும் எனக்கு அன்பு இருக்கிறது.
உணர்வுகளால் யாவரையும் புரிந்து கொள்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி. அன்புடன்
11.
யாழ்பாவாணன் | 10:30 முப இல் ஜனவரி 12, 2014
சக்கரைப் பொங்கல்
படிக்கப் படிக்க நாவூறுதே (இனிக்கிறதே)
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
12.
chollukireench | 8:22 முப இல் ஜனவரி 13, 2014
சாப்பிடவேண்டியதுதானே. வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். பொங்கலுடன் ஆசிகளையும்,வாழ்த்துகளும் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். அன்புடன்
13.
இளமதி | 5:27 பிப இல் ஜனவரி 14, 2014
அம்மா… ஆசி கேட்டு இத்தனை தாமதமாக வருகிறேன்..
என்நிலை அப்படியாகிவிட்டது. இனித்திடும் பொங்கல்..
உங்கள் கைகளால் எனக்குத்தர வரம் வேண்டுகிறேன் அம்மா..
உங்கள் வீட்டிலும் அனைவருக்கும் நலமாக எல்லாம் அமைய வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்!
நீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் நீங்கள் எங்களுக்கு இன்னும் இன்னும் கருணை அமுதூட்ட இறைவன் இன்னருளைத் தர வேண்டுகிறேன் அம்மா!..
14.
chollukireen | 12:41 பிப இல் ஜனவரி 19, 2014
ஆசிகள் இளமதி. இந்தப் பதிவில் இப்போதுதான் பார்க்க முடிந்தது. என்ன அழகான வாக்கியங்கள். பொதுவாக என் பதிவினில் எல்லோருக்கும் வாழ்த்துகள் எழுதியிருந்தேன். உன் பதிவிற்கும் வந்தேன். தாமதமானால் என்ன . எனக்குதான் சில ஸமயங்கள்
எங்குமே வரமுடிவதில்லை.
உன் குடும்பம் ஆரோக்யமாக, வாழ ஆண்டவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
உன் கவிதைகளும், அர்த்தங்களும் மனதை ஈர்க்கிறது..
மேன் மேலும் கவிதாயினியாக, எழுத்துலகத்தில், ப்ரகாசமாக விளங்க வேண்டும். . இன்னும் எவ்வளவோ
ஆசிகள் மனதாலேயே அளிக்கிறேன். வாழ்த்துகள்.
ஆசிகளும், அன்புடனும்