அன்னையர் தினம்—12
ஜனவரி 22, 2014 at 3:24 பிப 7 பின்னூட்டங்கள்
அதென்ன வேளைக்கீரை ஸந்தேகம் எல்லோருக்கும். எங்களூரில்
கல்யாண வயதில் பெண்களிருந்தால், வீட்டுத் தோட்டத்தில்,தப்புச்
செடியாக, வேளை முளைத்தால், அது சுப சூசகமாகக் கருதப்படும்.
விவாகத் தேடல்களை சுருசுருப்பாகச் செய்தால், உடன் விவாகம் நடை
பெறும், என்ற ஒருநம்பிக்கை.
நம்பிக்கையில்லை, தேடலை ஊக்குவிக்கும் பூஸ்டர் என்றே சொல்லலாம்.
அந்த நாட்களில் குடும்பத்தில்,
பெண் ஒன்று பிறந்து விட்டாலே, அவர்களுக்கான, பாத்திரங்கள், ஏதாவது
நகை,நட்டுகள்,வெள்ளிப்பாத்திரங்கள்,என அம்மாமார்கள் சேமித்து விடுவார்கள்.
சின்ன குழந்தையாக இருக்கும்போதே சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா?
பின் மூவாயிரம்போல் பணமிருந்தாலும்,கல்யாணத்தை ஒப்பேற்றி
விடுவார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது ஜோடிஜோடியாகச்
சேர்த்த பாத்திரங்கள் இருக்கிரது.
தான் போட்டுக் கொண்டிருக்கிர நகை இருக்கிரது. இரண்டையும் இரண்டாகப்
பிரித்தாலே ஓரளவு ஒப்பேற்றி விடலாம்.
மற்றது வரன் கூடிவந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
மனதில் தீர்மானமான யோசனை.
தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும், ஏதாவது வரன் இருந்தா சொல்லு
இதே வாக்கியங்கள்தான்.
ஊரிலே வேம்பக்கா என்று எல்லோராலும் கூப்பிடப்படும் ஒரு
நடுத்தர வயது அம்மா உண்டு.
வாய் அவ்வளவு இனிமையாகப் பேசும். கையாலேயே ரவிக்கைகள்
அழகாகத் தைப்பாள்.
எல்லோருக்கும் தைத்தும் கொடுப்பாள். கூலி வாங்க மாட்டாள்.
அதற்கு மேலேயே மாங்காய்,தேங்காய், தோட்டத்து காய்கறிகள்
என சப்ளை செய்து விடுவார்கள்.
அவர்களுக்கு ஒரு பிள்ளை வாத்தியார் ட்ரெயினிங் முடித்து விட்டு
வாத்தியார் வேலை.
அவருக்குக் கிளி மாதிரி, பெண் என்பார்களே அப்படி ஒரு மனைவி.
மிக்க வெகுளியான கிராமத்துப் பெண்.
எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க முடியுமோ அவ்வளவு துன்பம்
தாயும் மகனும் கொடுத்து வந்தார்கள்.
காரணம் ரொம்ப ஸாமர்த்தியம் பெண்ணுக்கு போதாது என்று.
எவ்வளவு சீர் கொடுத்தாலும் போதாது. அந்த பெண்ணின் வழி
உறவினர்கள் யார் வந்தாலும் ஏதாகிலும் சண்டை போட்டே
அனுப்பி விடுவார்கள்.
பெண்ணை அனுப்பாது வைத்திருந்தால் போதும், தாயில்லாத
பெண்ணிற்கு நாம் செய்யும் உதவி அதுதான் என்று பெண் வீட்டினரும்
செய்வதரியாது திகைக்கும் காலமது.
சமையலறையை விட்டு பெண்கள் வெளியே வராத காலமது.
சமையல் ஸாமான்கள்,உப்பு,சர்க்கரை,காப்பிப்பொடி, எண்ணெய்
,நெய் முதலான ஸாமான்கள் ஒருவருக்கொருவர் அவசியமான போது
கடனாக கேட்டு வாங்கிக் கொண்டு, திருப்பிக் கொடுப்பார்கள்.
ஒரு கரண்டி கடனா கொடுங்கோ, திருப்பிக் கொடுத்தூடுவா என்று
மருமகள்களையோ,பசங்களையோ அனுப்புவார்கள். கிராமக்
கலாசாரம் அது
அம்மாதிரி வந்து கடன் கேட்க வந்து தற்செயலாய் ஸாமான்
கிடைக்கவில்லை என்றால் போச்சு அந்தப் பெண்ணின் நிலை.
வேம்பக்கா மாட்டுப்பெண் வந்தால், வேறு யாரிடமாவது, ஸாமான்களை
வாங்கியாவது, கொடுத்து அனுப்புவார்கள்.
இல்லாவிட்டால் கடன் வாங்கி வரக்கூட துப்பில்லை என்று சாடும்
மாமியார்.
குழந்தை வேறு பிறக்கவில்லை. கேட்கவேண்டுமா பிடுங்கல்களுக்கு!!!!!
சாந்த ஸக்குபாய் ஸினிமா வந்த புதிது.நான் கேட்டே விட்டேன்.
ஸக்குபாயை மாமியார் படுத்துவது மாதிரி நீயும் படுத்தரயே என்று.
அதையும் பெருமையாக இவ என்னை இப்படி கேக்கறா,ஸக்குபாய்
எங்கே, இவளெங்கே நான் அப்படியா இருக்கேன். சுத்த அசடு இது.
கேட்கிறவர்கள், அவ உங்களைக் கேட்கக் கூடாதுதான்.என்பார்கள்.
நன்றாகக் கேட்டாய். அதுவும் உறைக்கலே, அதையும்,பெருமையா
சொல்லிக்கிறா என்று பின்னால் சொல்லுவார்கள்.
அந்தப் பெண்ணிற்கும் ஒரு முடிவு வந்தது.
ஏதோ கிராமத்தில் வேலை அவனுக்கு. அந்தப் பெண்ணும்
அங்கிருந்தது.
ஏதோ ஜுரம். ஸரியாக டாக்டரில்லை என்று வேறு ஊரிலிருந்து
அவளை அழைத்து வந்தார்கள். ஜன்னி கண்டமாதிரி இருந்தாள்.
டாக்டர் வந்து பார்த்து வைத்தியம் செய்தார்கள்.
இரண்டொரு நாளில் நாட்டுப்பெண் போய்விட்டாள்.
ஊரில் இருப்பவர்கள் அந்த பெண் ஏதோ அடி வாங்கி, எக்கு தப்பாக
பட்டிருக்கும். அதான் இப்படி போய்விட்டது என்று பேசிக் கொண்டார்கள்.
ஏதாகிலும் கோபத்தில் அடித்து இம்மாதிரி ஆகி விட்டதென ஊரில்
ஸந்தேகம்.
எதற்கு இந்த கதை?
காரணமில்லாமலா?
ஆக பெரியம்மா அத்தையிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
இரண்டு இடம் இருக்கு. ஒன்று உன் பேரன். மற்றது இந்த ஊரே.
எதையாவது பார்த்து பேசி முடித்து விட்டு அக்கடா என்று இருக்காமல்
எங்கேயோ அலைஞ்சிண்டு இருக்காளே உன் பெண்.
சொல்லக்கூடாதா நீ.
உள்ளூர் ஸம்பந்தமே வேண்டாம். தினம் தினம் பார்த்து மருகணும்.
அவா பெண்ணுக்கு அவா என்ன செய்யராளோ செய்யட்டுமே.
நல்லதெல்லாம் தெரியாது உங்களுக்கு.
சென்னை வரனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யுங்களெனக் கடிதம்.
நாங்களே சென்னை வருகிறோம்.. பதிலெழுதியாகி விட்டது.
மாமாவாத்திற்குப் போய், அவ்விடமிருந்து அவர்களை அழைக்க
முடிவாகி விட்டது.
திருவல்லிக்கேணி மாமா வீடு. அவர்கள் மாம்பலம்.
நான்குபேர் வந்து போக அவர்களுக்கு பத்துரூபாய் அட்வான்ஸாகவே
பொதுவான ஆஸாமி வாங்கிக் கொடுத்து விட்டார்.
பிள்ளைக்கு அம்மா இல்லை. வயது கொஞ்சம் அதிகமோ,பார்க்கத்
தெரியவில்லை.
விசாரித்ததில் அவர்களின் உறவுக்காரர்களிடம், முன்பே எங்கள்
உறவுக்காரர்கள் ஸம்பந்தம் செய்திருக்கிரார்கள்.
இதெல்லாம் போதாதா தகுதிக்கு?
பிள்ளை படித்து உத்தியோகம் செய்கிரான்.
அவர்களுக்கு குடும்பத்தை ஸரிவர கவனிக்கும் குடும்பப் பெண் தேவை.
பெண் பார்க்கும் படலம் முடிந்து அவர்கள் பச்சைகொடி காட்டி விட்டார்கள்.
காங்கிரஸ் அபிமானிகள். எல்லா சிலவும் நம்மது,இரண்டு திருமங்கல்யம்
உட்பட யாவும்,தவிர அவர்களுக்காக போக்குவரவு சிலவு,வேஷ்டி
வகைகளுக்காக. கதராடை உடுத்துபவர்கள்.
மாமா இதெல்லாம் நீயே பார்த்துச் செய்வது. உங்காத்துக்காரருக்கு
நீதான் சொல்ல வேண்டும். நாங்கள் எதற்கும் பொருப்பில்லை என்று
சொல்லி விட்டார் அம்மாவிடம். அம்மாவிற்கு யோசனையானாலும்
செய்தே தீருவதென்று.
நகைகளை அழித்து இரண்டு பிரிவாக மாற்றிக் கொண்டும் வந்தாகி
விட்டது.
அவர்களுக்கு அப்பாவைக் கலந்து பேசி திரும்ப வந்து நிச்சயம் செய்வதாகக்
கூறி ஊருக்கும் வந்சாச்சு.
பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னால்தான், அப்பா என்ன வேண்டுமோ
செய்து கொள் என்று சொன்னார்.
யுத்த காலத்து சம்பளப்பிடிப்பை டேனிஷ் மிஷின் கொடுப்பதாகச் சொல்லவே
அது வொரு ஆயிரம் ரூபாய் வந்தது.
மேலும் பிதுர்ராஜ்ஜியம் விற்றும் பணம் தருவதாகச் சொன்னார்.
ஓரளவு பணம் போதும்.
எல்லாம் உங்கள் மனிதர்களைக் கொண்டே செய்து கொள். எனக்கு
மனது இன்னும் பண்படவில்லை என்றும் தீர்மானமாகக் கூறிவிடவே
என்ன செய்வது?ஏது செய்வது புதியதாகப் பிரச்சினைகள் ஆரம்பம்.
காங்கிரஸ் அபிமானியாக இருந்து, எதிராக மாரியவர் அப்பா.கதர்
வேஷ்டி பிரச்சினை ஆயிற்று. எப்படி?
அடுத்து பார்க்கலாம். வருகிறேன்.
Entry filed under: அன்னையர் தினம்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundars blog | 11:24 பிப இல் ஜனவரி 22, 2014
மீண்டும் நினைவுவைத்து வேளைக்கீரையைப் பற்றி விளக்கம் அளித்தது மகிழ்ச்சிமா. ‘வேளை கூடி வந்தால் தானாக எல்லாமும் கூடி வந்துவிடும்’ என்பது ஒருவேளை இந்தக்கீரையை வைத்துதான் சொல்லியிருப்பாங்களோ! தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் பிள்ளைகளுக்குக் கொடுப்பதால்தான் தாய். பாவம், அந்த மாட்டுப்பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கை அமைகிறதோ என எண்ணும்போதே இப்படியாகிவிட்டதே.
மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க வருவதற்கும் நாம்தான் பணம் தரவேண்டுமா? ‘பிதுர்ராஜ்ஜியம்’ என்பது என்னன்னு சொல்லுங்கோ. அடுத்த பதிவுக்கு இப்போதே துண்டுபோட்டு இடம் பிடிச்சிட்டேன். அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 11:03 முப இல் ஜனவரி 24, 2014
அப்பா,தாத்தா,அப்பாக்குதாத்தா,தாத்தாக்குதாத்தா
இப்படி மூதாதையர்கள், வழி வரும் ஸொத்துக்களுக்கு
பிதுர் ராஜ்ஜிய ஸொத்து என்பார்கள். இதில் முன்பெல்லாம் பெண்களுக்கு உரிமை கிடையாது.
பிள்ளைகளுக்கு உரிமையானது. சில ஷரத்துகளுடன்
பிள்ளைகள் வி.ற்கலாம். இன்னும் கூட
விஷயங்கள் இருக்கும்..
வெளி ஊரிலிருந்து வருபவர்கள், புதிய ஸம்பந்தம், இப்படி அயலார்கள் ,பெண்பார்க்க வரும் போது, சிலவுக்கு கொடுப்பதும்,வாங்கிக் கொள்வதும், ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருந்தது..
எத்தனை பெண்களை சிலவழித்துப் பார்க்க முடியும்.?
உள்ளூர் இல்லாவிட்டால் இப்படியும் யிருக்கும்.
இதெல்லாம் புதியதில்லை. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 4:47 முப இல் ஜனவரி 23, 2014
அந்த மாட்டுப்பெண்னின் நிலை வருத்தம் தருகிறது…
4.
chollukireen | 11:08 முப இல் ஜனவரி 24, 2014
ஆமாம் அவள் கதை மனது கஷ்டமானது.. அதனால் வளர்த்தவில்லை..போதும் என்று அனுப்பி விட்டேன்.
பாவம். அன்புடன்
5.
adhi venkat | 2:07 பிப இல் ஜனவரி 23, 2014
ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆகறதுக்குள் எத்தனை போராட்டங்கள்… வேளைக்கீரை சொன்னது குறித்து சந்தோஷம் அம்மா…
துணி போட்டு பாத்திரம் வாங்குதல்… சிறுவயது முதலே கல்யாணத்துக்காக சேமிப்பது…அடடா! அம்மாக்களே இப்படித் தான்.. எனக்கு கல்யாணம் நிச்சயம் செய்வதற்குள் அத்தனையும் ரெடியாக இருந்தது…:))
தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் குழந்தைகளை எண்ணியே வாழ்க்கை…
6.
chollukireen | 11:19 முப இல் ஜனவரி 24, 2014
இந்த நாளில் படிப்பைக் கொடுத்து, அயல் நாட்டுக்கு அனுப்புவதால்,பாத்திரம் சேமிப்பதில்லை. பெண்களுக்கு படிப்பும், வேலையும் இருந்தால் போதும்.
காலம் மாறுவதுபோல் பாத்திரங்களும் எவ்வெப்படியோ மாறிக்கொண்டு வருகிறது.
இன்னும் என்ன வெல்லாம் மாறுமோ?தெரியாது.
ஆனால் தாய்,பெண் என்ற பாசம் மட்டிலும் இன்னும் மெருகேறி வருகிறது. அது போதும்.
வேளைக்கீரை கூட அர்த்தமுள்ளதாக அப்போது இருந்தது.
உன் பின்னூட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.
ஸந்தோஷம். அன்புடன்
7.
வை. கோபாலகிருஷ்ணன் | 4:20 பிப இல் ஜனவரி 31, 2014
//குழந்தை வேறு பிறக்கவில்லை. கேட்கவேண்டுமா பிடுங்கல்களுக்கு!!!!!
சாந்த ஸக்குபாய் ஸினிமா வந்த புதிது.நான் கேட்டே விட்டேன்.
ஸக்குபாயை மாமியார் படுத்துவது மாதிரி நீயும் படுத்தரயே என்று.//
அந்த நாட்களில் பெண்களின் நிலை படிக்கவே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. நன்றாக எழுதியுள்ளீர்கள். ஒருசில பிரச்சனைகளால் என் வருகையிலும் தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் படிக்க முடிந்தது.