க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.
ஜனவரி 31, 2014 at 11:18 முப 20 பின்னூட்டங்கள்
இந்த க்வாக்கமோலே என்பது மெக்ஸிகன் பெயர். இதை அடிக்கடி என்
மருமகள் ஜினிவாவில் செய்வது வழக்கம்.
காயாகவும்,இல்லாமல்,மிகவும் பழுத்த தாகவும் இல்லாத பழத்தில்
இதை தயாரித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மென்மையான சதைப் பகுதியைக் கொண்டது இந்தப் பழம்.
ஸேலட்களிலும் நறுக்கிச் சேர்ப்பார்கள். சட்னியிலும் போடலாம்.
இந்த அவகேடோ உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
ஆன்டி ஆக்ஸிடெண்டுகளும்,பொட்டாஷியமும் இருக்கிறது.
ஸேன்ட்விச்,மில்க் ,ஷேக் செய்யவும் உதவுகிறது இது.
நம்முடைய,வெங்காயமும் ,தக்காளியும் அனேக மருத்துவக் குணங்களை
உடையது அல்லவா?
எல்லாமாகச் சேர்த்து சுலபமாக ஒரு டிஷ்
கார்ன் சிப்ஸோடு, தொட்டுச் சாப்பிட இதைச் செய்வார்கள்.
இந்த அவகேடோவின் உள்ளே கொட்டை பெரியதாக இருக்கும்.
அதை எடுத்து விட்டு பின்னர் தயாரித்த பண்டத்தின் நடுவே அதை
வைத்து விடுவது வழக்கம்.
அக்கொட்டை உடனிருந்தால் அவகேடோ நிறம் மாறுதலடையாமல்
இருக்கும். என்ன வேண்டும் என்பதைப் படத்தில் காட்டி விட்டு
வேண்டியவை சொல்லவே இல்லை அல்லவா?
வேண்டியவைகள்.
அவகேடோ—–1
பச்சை மிளகாய்—-1
நல்ல தக்காளிப்பழம்—-1
கொத்தமல்லி இலைகள்—ஆய்ந்தது—சிறிது.
சின்ன சைஸ்– வெங்காயம்—பாதிகூட போதுமானது.
ருசிக்கு– உப்பு
எலுமிச்சை—பாதி பழம். ருசிக்கேற்ப
கடையில் வாங்கிய கார்ன் சிப்ஸ்—-தேவைக்கேற்ப. உடன் சாப்பிட
செய்முறை.
அவகேடோவை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளியை, மிகவும் பொடிப்பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
அவகேடோ நறுக்கினதை, ஒரு குழிவான கிண்ணத்தில் போட்டு
ஒரு கெட்டியான கரண்டியினால் மசிக்கவும்.
ஸ்பூனைக் கொண்டேமசித்து விடலாம் என்று சொல்வது காதில் விழுகிறது.
பொடியாகிய நறுக்கிய வெங்காயம்,தக்காளி மிளகாயையும் போட்டு
உப்பு சேர்த்துத், திரும்பவும் கரண்டியினால், மசிப்பதுபோல ஒன்று
சேர்க்கவும்.
எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
யாரைச் சாப்பிடக் கூப்பிட்டாலும் முதலில் ஜூஸுடன் கார்ன் சிப்ஸும்
இந்தக் கலவையும் கொடுக்கப் படுகிரது.
நீங்களும் செய்யுங்களேன். மிகவும் ஸுலபமானது.
வித்தியாஸமானருசி.
பெயரைப் பார்த்து பயப்படவேண்டாம். மருமகள் நிறைய படம்
அனுப்பி இருந்தாள். நன்றி அவளுக்குதான்.
சிப்ஸை தோய்த்தெடுத்து ருசியுங்கள். மறக்க வேண்டாம்.
Entry filed under: சுலபமானது.
20 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 11:27 முப இல் ஜனவரி 31, 2014
புதிதாக இருக்கிறது இந்த பழம் – பழமா, காயா? காயாகவும் நன்றாக இருக்கும், பழுத்த பின்னும் சாப்பிடலாமா?
நீங்கள் போட்டிருக்கும் புகைப்படங்கள் ஆவலைத்தூண்டுகின்றன.
2.
chollukireen | 11:53 முப இல் ஜனவரி 31, 2014
காயில் ருசிவராது. பழத்தில்தான் சேர்மானம். வாழைப்பழம் மாதிரி மென்மை. அதிகம் அளிந்து போகாத வாழைப்பழ பக்குவம் நன்றாக இருக்கும்.
விலை அதிகமோ என்னவோ? கிவி, வெளிநாட்டுப் பழம் மதிரி அவகேடோவும் வெளி நாட்டு வகைதான்.பெங்களூருவில் கிடைக்காத ஸாமானா?
மும்பையில் நல்ல காய்கறிக் கடைகளில் பார்த்தேன். உடல் நலம் தேவலையா? உடன் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. ரஞ்ஜனி இல்லாத பின்னூட்டமா
பதில் எழுதி ஓடிப்போய்விட்டது. அவகேடோ பழவகையே. ஆனால் காய் கறிகளுடன் காட்சி தருகிறது. இவ்விடம் மும்பையில் விசேஷமான காய்கறிக்கடைகளில் ஸேலட் வகையராக்களின் பிரிவில் காணப்படுகிறது. பழமே. அதிகம் பழுக்காத வெண்ணெய் போன்ற சதைப் பற்றைக் கொண்டது. பெங்களூருவில் கிடைக்காததே இருக்காது. கிவி போன்ற பழங்களை ஸத்தானதாகக் கொள்வதுபோல இதுவும் அயல் நாட்டு ஸத்தான
ஒருவகைப் பழமே. உடன் மறு மொழிக்கு மிகவும் நன்றி. உடல் நலம் ஸுகமா. அன்புடன்.
3.
திண்டுக்கல் தனபாலன் | 11:43 முப இல் ஜனவரி 31, 2014
அவகேடோ (வெண்ணைப் பழம்) கிடைத்தால் செய்து பார்ப்போம்… நன்றி அம்மா…
4.
chollukireen | 12:21 பிப இல் ஜனவரி 31, 2014
கிடைத்தால் செய்து பார்ப்போம். படிக்க மிகவும் ஸந்தோஷமாக இருந்தது. உடனே பதில். எவ்வளவு ஸந்தோஷம் தெரியுமா. நன்றி.அன்புடன்
5.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 12:06 பிப இல் ஜனவரி 31, 2014
வணக்கம்
அம்மா.
செய்முறை விளக்கத்தை குறிப்பு எடுத்தாச்சி…. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
6.
chollukireen | 12:33 பிப இல் ஜனவரி 31, 2014
நன்றி ரூபன். குறிப்பு இருந்தால் எப்போதும் செய்யலாம். நல்ல யோசனை. அன்புடன்
7.
வை. கோபாலகிருஷ்ணன் | 3:30 பிப இல் ஜனவரி 31, 2014
புதிதாக இருக்கிறது இந்த பழம். கேள்விப்பட்டதே இல்லை. ருசிமிக்க பகிர்வுக்கு நன்றிகள்.
8.
chollukireen | 10:11 முப இல் பிப்ரவரி 1, 2014
உங்களுக்குக் கண் ஆபரேஷன் இனிதே முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது அவ்வளவாக பரிச்யமில்லாத வகையைச் சேர்ந்ததுதான். கவர்ச்சியான வடிவமும் இல்லை. ஆனால் நல்ல ஸத்துள்ளது.
உங்களுக்கு அவசியம் ஓய்வு தேவை.
உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க ஸந்தோஷமே.
இருப்பினும் கண்களுக்குச் சற்று ஓய்வு கொடுக்கவும்.
ஆசிகள்.அன்புடன்
9.
மகிஅருண் | 9:32 பிப இல் ஜனவரி 31, 2014
நல்ல பகிர்வும்மா! நானும் க்வாக்கமோலே எப்பவாவது செய்வேன். சிப்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
10.
chollukireen | 10:18 முப இல் பிப்ரவரி 1, 2014
நன்றி மஹி. உன்னிடமிருந்து இனி கமென்டுகள் எதிர் பார்க்கலாம். குட்டிச் செல்லம் எப்படி இருக்கிரது? நீ
;சற்று நார்மல் நிலைக்கு வந்திருப்பாய் என்று நினைக்கிறேன். அன்புடன்
11.
மகிஅருண் | 8:32 பிப இல் பிப்ரவரி 3, 2014
அம்மா, குட்டிச் செல்லம் நன்றாக இருக்காம்மா! நான் நார்மல் நிலைக்கு வந்துட்டேன், ஆனா அவளுடனே நேரம் சரியாக இருப்பது போல இருக்கு. 🙂
இடையிடையே எட்டிப் பார்க்கிறேன், கமெண்ட் போடத்தான் கொஞ்சம் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கு. சீக்கிரம் சரியாகிரும் என நினைக்கிறேன்!
12.
mahalakshmivijayan | 4:57 முப இல் பிப்ரவரி 1, 2014
அவகேடோ வை நான் என் குழந்தையின் பள்ளி பாட புத்தகத்தில் தான் பார்த்திருக்கிறேன்! ரெசிபி புதியதாக இருந்தது! நன்றி அம்மா!
13.
chollukireen | 10:20 முப இல் பிப்ரவரி 1, 2014
பரிச்சயமானதொன்றுதான். சுலபமான ரெசிபி. முடிந்தபோது செய்து பார். நன்றி அன்புடன்
14.
Jayanthi Sridharan | 10:51 முப இல் பிப்ரவரி 1, 2014
mami, namaskaram, this is the first time I am offering comments
al though I have visited your site so many times.
The avacado dish is super, like all others.
ungalal eppadi ivvalavu anbudan ellorukkum badhil ezhudha mudigiradhu? Engalukkum konjam solli tharungo.
Anbudan,
Jayanthi.
15.
chollukireen | 6:46 முப இல் பிப்ரவரி 2, 2014
ஆசிகள் ஜயந்தி. முதல் வரவிற்கும்,பின்னூட்டத்திற்கும்மகிழ்ச்சியும்,நன்றியும்.வருக என்று வரவேற்கிறேன். உன் பின்னூட்டத்திலும் அன்புதானே கலந்திருக்கிறது. அதையே திருப்புவதில் என்ன கஷ்டமிருக்கிறது? அன்பு கலந்த பின்னூட்டங்கள்
அலாதி மகிழ்ச்சியைத் தரும்.. தருகிரது.
அடிக்கடிவாம்மா. அன்புடன்
16.
chitrasundar | 4:23 முப இல் பிப்ரவரி 2, 2014
காமாக்ஷிமா,
இங்கு நாளைக்கு(ஞாயிறு) நடக்கப்போகும் சூப்பர் பௌலுக்கு கொறிக்க எங்கும் ‘சிப்ஸ்’ மயம். நீங்க கொஞ்சம் க்வாக்கமோலே அனுப்பி விட்டீங்கன்னா நானும் ‘சிப்ஸ்’ பாக்கெட்டுடன் தயாராயிடுவேன்.
இங்கு வந்து ரொம்ப நாள் கழித்துதான் இந்தப் பழத்தை வாங்க ஆரம்பித்தேன். நான் மட்டுமே சாப்பிடுவேன். பழத்தை அப்படியே கீற்றுகள் போட்டு முழுங்கிடுவேன். ரொம்ப பிடிக்கும். படிப்படியான படங்களுடன் விளக்கம் அருமை அம்மா, அன்புடன் சித்ரா.
17.
chollukireen | 6:55 முப இல் பிப்ரவரி 2, 2014
அன்புள்ள சித்ரா ஆசிகள். எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள். ப்லாகில் எவ்வளவு எடுத்தாலும் குறையாது. எனக்கும் இந்தப் பழம் மிகவும் பிடிக்கும்.
உன் பாராட்டான பின்னூட்டம் மகிழ்வைக் கொடுக்கிறது. ஸூப்பர் பவுலுக்கு இது போதுமா?பார்த்துப் பதிலெழுது. அன்புடன்
18.
adhi venkat | 2:45 பிப இல் பிப்ரவரி 2, 2014
வித்தியாசமாக இருக்கு… இந்த பழம் கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்க்கிறேன்..
19.
yarlpavanan | 11:40 பிப இல் பிப்ரவரி 3, 2014
சிறந்த கருத்துப் பகிர்வு
தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.
20.
chollukireen | 11:35 முப இல் பிப்ரவரி 5, 2014
நன்றி. என் தள முகவரி அனுப்பியுள்ளேன். அன்புடன்