வடு மாங்கா,அல்லது மாவடு
மார்ச் 2, 2014 at 11:13 முப 2 பின்னூட்டங்கள்
வடுமாங்காய் ஸீஸன் வருகிறதே. போன வருஷம் போட்டது இதுவரை இருந்தது. கடையில் விசாரியுங்கள்.வாங்கிப் போடுங்கள். அதற்காகவே மறுபதிவிட்டிருக்கிறேன்.அன்புடன்
மரத்தில் பரித்தபடி வடுமாங்காய்கள்
இவ்வளவு சிறிய வடு கிடைத்து மாவடு போட்டதாக ஞாபகமே
இல்லை.அவ்வளவு வருஷங்கள் கிடைக்காத இடத்தில்தான்
இருந்திருக்கிறேன்.
கடையில் பார்த்து உங்களுக்கு வேண்டுமா என்று மருமகள்
கேட்டவுடன் வாங்கி வரும்படி ஸந்தோஷமாகக் கூறினேன்.
அதுவும் மேலே கொடுத்த குட்டி மாங்காய்கள்.
திட்டமாக காம்பை விட்டு மிகுதியை எடுத்து விடவும்
சுத்தம்செய்து ஒழுங்காக்கப்பட்ட மாவடு
இனி மா வடு தயாரிக்கலாம். அதாவது நன்ராக அலம்பித் துடைத்த
மாங்காய்களை ஒரு உலர்ந்த பாத்திரத்திலோ கண்ணாடி
கிண்ணத்திலோ போடவும்.
எவ்வளவென்று சொல்லவேயில்லையே நான். ஒரு கிலோ மாங்காயில்
ஒரு லிட்டர் தான் கிடைத்தது.
ஸரி, நீங்கள் ஒரு பெரிய டம்ளரினால் அளந்து 4 டம்ளர் மாவடுவை
எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் நல்ல உயர்தரமான உப்புப் பொடி வேண்டும்.
கால்கப் சின்ன சைஸ் கடுகு, விதை நீக்கிய 8 மிளகாய், வெய்யிலில்
நன்ராக காயவைத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து மிக்ஸியிள் பொடிசெய்யவும்.
ஸாதாரணமாக எண்ணெய் விளக்கெண்ணை அரை டீஸ்பூன்
உபயோகிப்பதுண்டு. நான் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு
அரைத்த பொடியைக் கலந்து மாங்காயைக் கிளறி, உப்பு சேர்த்து
சற்று கொள்ளளவு பெரியதாக உள்ள பாட்டிலில் போட்டு குலுக்கி,
அழுத்தமான மூடியினால் காற்று புகாவண்ணம், மூடி வைத்தேன்.
அரைத்துப் பிசறினகடுகு,மிளகாய்,உப்பு,மஞ்சளுடன்
தினமும் அடிக்கடி நன்றாகக் குலுக்கி விட்டேன்.
நிறைய ஜலம் விட்டுக் கொண்டு மாவடு சாப்பிட…
View original post 71 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:50 முப இல் மார்ச் 2, 2014
மாவடுகளின் படமும், சொல்லியுள்ள செய்திகளும் என்னை மஸக்கை வந்தவள் போல மாற்றி ஹிம்சிக்கிறது மாமி. பாராட்டுக்கள். நமஸ்காரங்கள்.
என் பதிவுகள் பக்கம் வந்து வெற்றியாளர்களை ஆசீர்வாதம் செய்யுங்கோ, மாமி.
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html
பிரியமுள்ள கோபு
2.
adhi venkat | 2:05 பிப இல் மார்ச் 3, 2014
மீண்டும் வாசித்தாலும் நாவில் ஜலம் ஊறுகிறது. அம்மா கையால் சாப்பிட்டது. தயிர்சாதத்துக்கு மாவடு சரியான ஜோடி…:))
இன்று கூட சந்தையில் பார்த்தேன். வாங்க வேண்டும்.