காரடை. உப்பு
மார்ச் 11, 2014 at 12:12 பிப 1 மறுமொழி
ருசிமிக்க உப்படையும் செய்வது யாவருக்கும் வழக்கம். அதையும் செய்ய வேண்டுமல்லவா?செய்யுங்கள்.ருசித்து மகிழுங்கள். திரும்பவும் ஆசிகளுடன்
பச்சரிசி–1கப்
தேங்காய்த் துருவல்—அரைகப்
பச்சைமிளகாய்—2
இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு
ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—வாஸனைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு
செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்
ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது
உலர்த்தவும்.
கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை
வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில்
பொடிக்கவும்.
காராமணியை வெறும் வாணலியில் சற்று முன்னதாகவே
வறுத்து ஹாட்கேஸில் வென்னீர் விட்டு ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,உ.பருப்பு
தாளித்து இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி ரவையின் அளவைப்
போல இரண்டு பங்கு தண்ணீரைச் சேர்க்கவும்.
வேண்டிய உப்பு, தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை சேர்த்து
தண்ணீரைக் கொதிக்க விடவும்.
ஊறின காராமணி, பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
கொதிக்கும் நீரில் ரவையச் சேர்த்துக் கிளறவும்.
தீயை மட்டுப் படுத்தவும்.
பந்துபோல வெந்து சேர்ந்து வரும்போது கிளறி மூடி இறக்கி
வைக்கவும்.
சற்று நன்றாக ஆறியபின் மாவைப் பிறித்து ஸமமாக உருட்டி
கனமான வடைகளின் உருவத்தில் , ஒரு பாலிதீன் கவர் மீது
எண்ணெயோ ஜலமோ தொட்டுத் தடவி
தட்டி எடுத்து, நீராவியில் 15 நிமிஷங்கள் வேகவைத்து
எடுக்கவும்.
இட்லி ஸ்டீம் செய்வது போலவேதான்.
உப்பு அடை தயார். தேங்காய் மணத்துடன் உப்பு காரத்துடன்
கூடிய மெத்தென்ற காரடை தயார்.
எது இஷ்டமோ அதை கூடச் சாப்பிடலாம்.
View original post 42 more words
Entry filed under: இனிப்பு வகைகள்.
1 பின்னூட்டம் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:35 பிப இல் மார்ச் 11, 2014
காரடையான் நோன்பு உப்புக்கொழுக்கட்டையும் ஜோர் ஜோர் !
பகிர்வுக்கு நன்றிகள்.
என்னுடைய இந்தப்பதிவினையும் படங்களையும் முடிந்தால் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html
அதிலும் கொழுக்கட்டை பற்றிய முக்கியச் செய்திகள் உள்ளன.