அன்னையர்தினம் 14
ஏப்ரல் 10, 2014 at 8:49 முப 25 பின்னூட்டங்கள்
கல்யாணம் ஆகிவி்ட்டது. விசாரம் விட்டது என்பது எல்லோருடைய
வாக்குகளும்.
விசாரங்கள், ஆரம்பம்தானே சிலருடைய வாழ்க்கைகளிில்.
ரிடயரான பின்னும் பெண்கள் பள்ளியில் அப்பாவிற்கு ஆங்காங்கே ஒரு
ஆறுமாத காலத்திற்கு வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு முறை
சென்னை வந்தபோது பெண் பாசம் பெண் வீட்டிற்குப் போயுள்ளார்.
இரண்டொருநாள் தங்கி விட்டு தங்க இடம் பார்த்துப் போவதாகச் சொல்லியும்
இருக்கிரார். அப்படி இருக்கையில் அவர்கள், அவ்விடமே தங்கி விடுவாரோ, என்ற
ஐயத்தில், அக்காவிடம் கேள்வி எழுப்பி இருக்கிரார்கள்.
அக்காவிற்கு மனது பொருக்க முடியாமல்,
அப்பா நீங்கள் இவ்விடமே தங்கிவிடுவீர்களோ என்று அச்சப் படுகிரார்கள்
என்று சொல்லி விட்டாள்.
போதுமே கோபக்கார மனிதர்களுள் ஒருவராகிய அப்பாவிற்கு, கிளம்பி விட்டார்.
எதிரே வந்த மாப்பிள்ளை, பெட்டியை கையில் வாங்கிக் கொண்டு, கொண்டுவிட
எத்தனித்தவரை, உங்கள் மரியாதை உங்களுடன் இருக்கட்டும், என்று சொல்லியபடி
வெளியே வந்தவர்தான்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், திரும்பப் போகவேயில்லை.
பெற்றவருக்கு இம்மாதிரி வீம்பு உண்டா? பெண்ணைப் படுத்துவதற்கு இதைவிட வேறு
காரணம் வேண்டுமா?
உங்களால் நம்ப முடியாது. இதை வைத்தே எவ்வளவோ நடந்து விட்டது.
அம்மா யார் எதைச் சொன்னாலும், வாவென்ற வார்த்தை சொல்லி, வரவேற்காமல்ப்
போனாலும், அம்மா அங்கு போய்ப் பார்ப்பதை விடவில்லை.
யார் சென்னை சென்றாலும், போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி
அனுப்புவார்கள். இப்படியே மூன்று வருஷங்கள் கடந்தது.
அப்படிதான் அன்றொருநாள் கோவிலாராத்தில் ராஜி வந்திருந்தாள்.
அவளும் சென்னையில்தான் வாழ்க்கைப் பட்டிருந்தாள்.
மாமி உங்கள் பெண்ணைப் பார்த்தேன். அதான் சொல்ல வந்தேன் என்றாள்.
எங்கெம்மா நீ ஒருகோடி அவர்கள் ஒரு கோடி ஆயிற்றே!!!!!!!!!!
எங்கே எப்போ பார்த்தாய்?
மாமி நான் எதற்கு வந்திருக்கிறேன் தெரியுமா?
ரொம்ப முடியாது போய் ரெஸ்ட் வேணும்னு டாக்டர் சொன்னார்.
அதான் வந்திருக்கேன்.
எழும்பூர் ஆஸ்ப்பத்திரியில் அவளைப் பார்த்தேன்.
உனக்கென்ன உடம்பு? அவளுக்கு என்ன பதட்டத்துடன் கேட்கிராள்.
இரண்டுபேரும் ஒரே மாதிரிதான். அபார்ஷன். ஒரே வார்டில் படுக்கை. நான்தான்
அவளை அடையாளம் தெரிந்து கேட்டேன்.
அவளுக்கும் அப்புறம் தெரிந்தது. எங்காத்திலிருந்து ,யாராவது வந்தா
நீ தெரிந்தவள் என்று காட்டிக் கொள்ளாதே, அது கூட அவர்களுக்குப்
பிடிக்காது என்று சொன்னாள்,
இரண்டு நாள் எனக்கு சாப்பாடு வரும்போது அவளுக்கும் சேர்த்துக் கொண்டு
எங்காத்தில் கொடுத்தார்கள்.
அம்மாவிடம் எதுவும் சொல்லாதே, விசாரப் படுவாள் என்று சொன்னாள்.
டிஸ்சார்ஜ் ஆகி போகும்போது கூட தலையை ஆட்டி போய் வருவதாக
ஸமிக்ஞைதான். அவ ஆத்துக்காரர் என்று நினைக்கிறேன்.
அம்மா ஒரே வேதனைதான்.
இப்படியும் ஒரு வருஷம் கழிந்தது.
மிக்க வேண்டியவர்கள் கலியாணத்திற்காக அம்மா சென்னை சென்றாள்.
அக்காவையும் பார்க்க வேண்டி அவ்விடம் சென்றபோது, அவள் 7 மாத கர்பிணியாக
இருப்பது பார்க்க மிக்க ஸந்தோஷம்.
அம்மா என்னை அழைத்துப் போ. எனக்கு வரவேண்டும் என்று இருக்கிறது
என்ற ஒரு வார்த்தை மட்டும் அடிக்கடி சொன்னாள்.
அம்மாவும் அவர்களிடம், பெண்ணை அனுப்புங்கள், ஏதோ முடிந்ததை என்னால்
முடிந்தவரை செய்கிறேன், என்று சொல்லிப்பார்த்தாள்.
அப்பா கோபமாகப்போனது,திரும்ப பார்க்க வராதது,ஒரு பெண்ணைப் பெற்றவருக்கு
இவ்வளவு வீம்பு,நாங்கள் அனுப்ப மாட்டோம்.
அவர் சுபாவமே அப்படிதான்.
உங்களுக்கு அப்படி, எங்களுக்கு இல்லை.
போகட்டும் என்றும் இருக்கிறது,வீம்பும் காட்டுகிரார்கள்.நீ
இன்னும் 4,5தரம் வந்து கூப்பிடு.
பெண் இப்படி சொல்கிறாள். என்ன செய்வது?
நமஸ்காரம் செய்யவில்லை.
கடைசியில் அனுப்பினார்கள். அழைத்து வந்து செய்யமுடிந்ததைச் செய்து
போட்டு, சீமந்தம் எப்போது வைத்துக் கொள்ளலாம், எதற்கும், அவளுக்கும்
ஒரு கடிதமும் போடவில்லை.
இடையே ஆஸ்த்துமா ஓரிருதரம் அவளுக்கு அங்கிருந்த போது வந்திருக்கிறது.
அதை வேறு மறைத்து விட்டோம் என்ற பழிவேறு.
அக்காவும் வந்து விட்டாளே தவிர மனதில் பயம் வந்து விட்டது.
எல்லாமாகச் சேர்ந்து உடல் நலம் பாதிக்கத் தொடங்கி விட்டது.
இங்கே வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று, பெரிய அக்காவாத்திற்கு
பெங்களூருக்கு அவளை அழைத்துப் போனாள் அம்மா.
அவ்விடம் அப்பா இல்லையே, இவர்கள் வந்து போவதானால் சௌகரியமாக
இருக்கட்டுமே என்று.
நல்லபடி பிரஸவமும் ஆயிற்று. பெண் குழந்தை பிறந்தது.
எல்லாம் கடிதங்கள்போட்டு அழைப்பு விடுத்து
எதற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவே இல்லை.
குழந்தைக்குப் பேரிட்டு எதற்கும் பதிலே இல்லை. பெங்களூரினின்றும்
சென்னைவரை ஏதோ கார் வந்ததென்று , அதில் அம்மா வந்து விட்டு,
அவ்விடமிருந்து ஊர் வந்து சேர்ந்தனர்.
தப்பித் தவறிகூட அவர்களிடமிருந்து எந்த விசாரிப்பும் இல்லை.
குழந்தை சிரிக்கிறது,விளையாடுகிறது,என்ற வகையில், அவ்வப்போது
நாங்களும்,கடிதம் தவராது போட்டுக் கொண்டிருந்தோம்.
அக்கா தினமும் ஒன்று கூட எழுதுவாள்.
எல்லாம் படித்து குப்பைக் கூடைக்கு போகுமோ என்னவோ?
அவர்கள் வீட்டிலும், இரண்டு மூன்று வருஷங்களாக, கடைசிப் பெண்
ஏதோ காரணங்கள்,பிறந்த வீட்டுடன் இருக்கிறாள் என்றுத் தெரிந்தது.
கஷ்டங்கள் எல்லோருக்கும் ஏதாவொதொரு ரூபத்தில்.
அவர்கள் கூப்பிடாவிட்டால்ப் பரவாயில்லை, என்னைக் கொண்டு விடு என்ற
அக்காவின் பிடிவாதங்கள், ஸரி இப்படியாவது ஆகட்டும் என்று ஒரு தபால்
அவளே வருவதாக எழுதிப் போட்டு விட்டாள்.
அப்பாவிற்குக் காரணம் காட்டியாக வேண்டும், எப்படிச் சொல்லுவது?
கிளம்ப வேண்டுமே யோசிப்பதற்குள், இப்போது வரவேண்டாம், என்று
ஒரு தந்தி அப்பா பேருக்கு வந்து நிற்கிறது.
வீட்லே, எனக்குத் தெரியாமல் என்ன வேலைகளெல்லாம் நடக்கிறது?
ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக அப்பா விசுவ ரூபம். எவ்வளவு கஷ்டம்
அப்பாவிற்கு ஸமாதானம் கூறுவது.
இல்லேப்பா.அவர்கள் என்ன சொன்னாலும்ஸரி,நான் போகத்தான் வேண்டும்.
பிறகு என்ன நடக்கிறதோ, அது நடக்கட்டும், துணிந்து பதில் சொல்லி விட்டாள்.
அக்காவின் தைரியம்,வாழ்க்கைப் பிரச்சினை.
வேறு ஒரு நாள் அவர்களுக்குச் சொல்லாமலேயே கிளம்பி விட்டாள்.
அம்மா ஏதோ பருப்புத்தேங்காய் பக்ஷணம் செய்து கொண்டு உடன்
சென்றாள்.
போயிறங்கி வீட்டிற்குள்ளும் போயாச்சு.
யாரைக்கேட்டுக் கொண்டு வந்தாய், இடிமுழக்கமாய் குரல்.
இரும்மா. யாரையும் கேட்டுண்டு வரலே. உங்காத்துக் குழந்தை உங்களைப்
பார்க்க வந்திருக்கு. ஸாமிண்டே குழந்தையை விடறேன். என்ன சொல்லணுமோ
என்னை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லு.
முன்னே குழந்தையைப் பாருங்கோ.அப்புறம் நான் எல்லாத்தையும் கேட்டுக்கறேன்.
மனது கஷ்டம் வார்த்தைகள் சொல்ல முடிந்தது. அவர்கள் லெக்சரும் முடிந்தது.
மாப்பிள்ளை ஊரிலில்லை. வரவழைத்தனர்.
குழந்தையுடன் விதவிதமாக படமெடுத்துக் கொண்டனர். 6மாதம் வெளியூர்
படிக்க போக வேண்டும். அப்புறம் வா என்றனர்.
அம்மா திரும்ப அழைத்து வந்தாள். 6, 7 மாதம் கழித்து அக்காவிற்கு ஒரு கடிதம்
வந்தது. நீ மட்டிலும் குழந்தையை எடுத்து வரவும். கூட யாராவது வந்தால்
அவர்களுடனும் நீயும் திரும்பப் போகவேண்டி வரும்.
அக்காவைக் குழந்தையுடன் விழுப்புரத்தில் ரயிலேற்றி , சென்னை போகிறவர்களிடம்
ஒரு கார்ட் விலாஸமிட்டுக் கொடுத்து அவரகளைப் பதிலெழுதக் கேட்டுக் கொண்டு
ஊர் திரும்பினோம். அப்படியே கூடச் சென்றவர்கள் பதிலெழுதினர்.
அம்மா அவர்களுடனும் விரோதமே பாராட்டாமல் உயிருள்ளவரை, போக
பார்க்க செய்ய என்பதன் ஒரு பார்வையே இது. அன்னை அல்லவா?
தாமதமாக வந்தாலும் தொடருகிறேன்.
Entry filed under: அன்னையர் தினம்.
25 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 5:17 பிப இல் ஏப்ரல் 10, 2014
அன்னை என்றும் சிறப்பு தான் அம்மா…
2.
chollukireen | 8:35 முப இல் ஏப்ரல் 12, 2014
அந்த நினைப்புதான் இன்னும் வளர்ந்து கொண்டே வருகிறது. நன்றி தனபாலன்.அன்புடன்
3.
yarlpavanan | 10:38 பிப இல் ஏப்ரல் 10, 2014
சிறந்த குடும்பப் பின்னணிப் பதிவு
4.
chollukireen | 8:36 முப இல் ஏப்ரல் 12, 2014
மறக்க முடியாத பின்னணி. நன்றி உங்கள் பதிலுக்கு.
5.
ranjani135 | 9:18 முப இல் ஏப்ரல் 11, 2014
என்ன ஒரு மனக்கஷ்டம்! அந்தக் காலத்தில் பெண்கள் எப்படியெல்லாம் உடலாலும், மனதாலும் வருத்தப்பட்டார்கள் என்று நினைக்கவே மனது பதறுகிறது.
6.
chollukireen | 8:40 முப இல் ஏப்ரல் 12, 2014
அந்த அக்காவிற்கு அனுகூலமாக இருந்த அவளின்
பிள்ளை வந்திருந்தான். கதைகள் கேட்டால் இப்படியுமா
என்கிரான். இது ஒரு சோற்றுப் பதம்தான். பானை நிறைய இதே பக்குவமானதுதான். நன்றி அன்புடன்
7.
chollukireen | 8:44 முப இல் ஏப்ரல் 12, 2014
முடிந்துபோன வரலாறுதான். அம்மா என்ற ஞாபகத்தின்
நிகழ்ச்சி நிரல்களின் ஒரு துளி. உடல் நலம் உங்களுக்கு எப்படி இருக்கிறது? நன்றி உங்களுக்கு. அன்புடன்
8.
வை. கோபாலகிருஷ்ணன் | 2:10 பிப இல் ஏப்ரல் 11, 2014
படிக்கப்படிக்க மனம் பதறியது. பெண்களுக்கு அந்த நாட்களில் எவ்வளவு கஷ்டங்கள் பாருங்கோ. நினைக்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.
9.
chollukireen | 8:54 முப இல் ஏப்ரல் 12, 2014
உங்கள் பின்னூட்டத்திற்கு,மேலே பதில் எழுதிவிட்டேன். இப்படிதான் சிலசமயம் ஆகி விடுகிறது. ஆசிகள். அன்புடன்
10.
chitrasundar5 | 7:27 பிப இல் ஏப்ரல் 11, 2014
காமாக்ஷிமா,
‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டங்களா’ என்று கோபம்தான் வருகிறது. வயதானவர், கோபக்காரர் ஏதோ செய்துவிட்டார் அதற்கு இவ்வளவு பிரச்சினைகள் செய்வதா ! தான் பெற்ற பெண் வீட்டில் தங்குவது அவ்வளவு பெரிய குற்றமா ! பாவம் அக்காவுடன் சேர்ந்து அம்மாவுக்கும்தான் எவ்வளவு கஷ்டங்கள். குழந்தையைப் பார்த்தும்கூட திருப்பி அனுப்புகிறார்கள் என்றால் ? ………. ஒருவேளை அந்த நாளில் மாப்பிள்ளை வீட்டார்கள் எல்லோருமே இப்படித்தான் இருந்திருப்பார்களோ !
இப்போது பெண் நினைப்பதுதான் வீட்டில் சட்டமாக இருக்கிறது ! நாட்கள் உருண்டோடி உலகம் எவ்வளவு மாறிவிட்டது ! அன்றைய நாட்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய உங்களுக்கு நன்றிகள் அம்மா .
அன்புடன் சித்ரா.
11.
chollukireen | 9:04 முப இல் ஏப்ரல் 12, 2014
கோபம் வந்து என்ன செய்ய முடியும்? புக்ககத்தார் செய்வதை பிறந்த வீட்டில் சொல்லாமலேனும், அந்த இடத்தில் இருந்தால்தான், யாவருக்குமே கௌரவம் என்று
பெண்கள் நினைத்த காலம். ஒரு ஸகாப்தம் அது.
பெண்கள் மாறி விட்டாலும், வயது,முதுமை என்றெல்லாம் ஒன்று இன்றும் இருக்கிறது.
மிக்க உணர்ச்சியுடன் எழுதியிருக்கிராய்.
கடந்த கால சித்திரம்தானிது. இன்றும் வாயில்லாது தவிக்கும் பெண்களும் இருக்கிரார்கள்.
சில விஷயங்கள் தொடரும் கதைகளாகவும் சிலருக்கு இருக்கிரது. அதுதான் உண்மை,நன்றி சித்ரா. அன்புடன்
12.
chollukireen | 11:13 முப இல் ஏப்ரல் 19, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று சொல்லுகிறேன் என்ற இந்த பிளாகை வேர்ல்ட் பிரஸ்ஸில் ஆரம்பித்து 12 வருஷங்கள் பூர்த்தி ஆகிறது. வாழ்த்து வந்தது. மிக்க நன்றி அவர்களுக்கு.
அன்னையர்தினப் பதிவு 14 உங்கள் பார்வைக்கு வருகிறது. பெண்ணிற்குப் பணிவு இருந்தால்மட்டும் போதாது. அவர்களின் பெற்றோருக்கும் பணிவு வேண்டும். இப்படியும் சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
13.
ஸ்ரீராம் | 1:25 பிப இல் ஏப்ரல் 19, 2021
இப்படிக் கூட மனிதர்களா… சே என்று ஆகிவிடும். பாவம் அந்தப் பெண்.
14.
chollukireen | 11:00 முப இல் ஏப்ரல் 20, 2021
எல்லோருமா அப்படி? இல்லையில்லை. அனுபவிக்க என்றே சில பிறவிகள். அன்புடன்
15.
நெல்லைத்தமிழன் | 12:36 முப இல் ஏப்ரல் 20, 2021
அந்த அப்பாவிற்கு அவ்வளவு கோபம் ஆகுமா? அதுவும் பெண் கொடுத்த வீட்டில்?
என்ன என்ன வார்த்தைகளோ, பெரிய ரசாபாசத்திற்கு வித்திட்டிடுகிறது. கஷ்டப்படுவது என்னவோ வீட்டின் பெண்கள்தான்.
பெண்களை பூமாதேவிக்கு ஒப்பிட்டு பொறுமையைத்தான் இந்த உலகம் கற்றுக்கொடுக்கிறது.
16.
chollukireen | 11:10 முப இல் ஏப்ரல் 20, 2021
இந்தக்காலத்தில் அவ்வளவு கோபக்காரர்கள் இல்லை என்று நினைக்கிரேன். பெண்கள் வீட்டிற்குப் போவதே தவறுதானே. ஆசை,பாசம், இருக்கலாமே தவிர கோபம் தவறுதானே. நிறைய ஸம்பவங்கள். இப்படியே. நன்றி. அன்புடன்
17.
Geetha Sambasivam | 12:52 முப இல் ஏப்ரல் 20, 2021
அழுதுட்டேன், படிக்கும்போதே. என் அம்மாவின் நினைவும் அவர் பட்ட கஷ்டங்களும் கண்ணெதிரே தோன்றின! இத்தனைக்கும் உள்ளூர் தான்! 😦 என்னவோ போங்க! பெண்கள்னாலே கஷ்டம் தான் கூடப் பிறந்தது போல!
18.
chollukireen | 11:17 முப இல் ஏப்ரல் 20, 2021
இன்னும் பலதரப்பட்ட ஸம்பவங்களை, உங்களுக்கு நினைவூட்டிவிட்டதா? மன்னிக்கவும்.வெவ்வேறு மாதிரிகளில் நிகழ்வுகள் அந்தக்காலங்களில். ஏதோ ஒரு முறையில் பெண்களுக்கு கஷ்டம் கேள்விப்பட்ட வரையில். பெண்கள் பூமாதேவிகள் நெல்லை சொல்லிய மாதிரி. நன்றி. அன்புடன்
19.
Geetha Sambasivam | 12:53 முப இல் ஏப்ரல் 20, 2021
முகநூலிலும் படித்தேன். பனிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து பகிர்ந்து வரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
20.
Ezhil.V | 7:40 முப இல் ஏப்ரல் 20, 2021
பெண்களுக்குத்தான் எப்படியெல்லாமோ பிரச்சனைகள்…
21.
chollukireen | 11:23 முப இல் ஏப்ரல் 20, 2021
உங்கள் பின்னூட்டம் வரவேற்கிறேன். அந்தக் காலநிகழ்வு.நன்றி. அன்புடன்
22.
chollukireen | 11:32 முப இல் ஏப்ரல் 21, 2021
நன்றி. அன்புடன்
23.
chollukireen | 11:20 முப இல் ஏப்ரல் 20, 2021
ஸந்தோஷம். பெயரளவில் இப்போது. இருந்தாலும் மனதில் திருப்பிப் பார்க்க ஒரு நிகழ்ச்சி. அன்புடன்
24.
Revathi Narasimhan | 1:22 பிப இல் ஏப்ரல் 20, 2021
அன்பு காமாட்சிமா. 12 வருடங்கள் தொடர்ந்து எழுதி வருவது பெரிய விஷயம். நமஸ்காரமும் வாழ்த்துகளும்.
உங்கள் பதிவு என் அம்மா வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டு வந்தது.
அப்பா எப்பொழுதும் அம்மாவுக்கு ஸப்போர்ட்.
அதனால் தாண்டி வந்தார்கள்.
அம்மா உள் வேலையாக இருந்த போது,
அழுத குழந்தையின் தூளியை ஆட்டி விட்டதற்காகப்
பாட்டி கோபித்ததாக அப்பா பின்னாட்களில்
எனக்குக் குழந்தை பிறந்த போது சொல்லி இருக்கிறார்.
என்னவோ மனிதர்கள். எதை எடுத்துக் கொண்டு போனார்கள்.
மிக நல்ல தொரு எழுத்துக்கு மிக நன்றி காமாட்சி மா.
தங்கள் அக்காவும் ,அம்மாவும் நமஸ்காரத்துக்குரியவர்கள்.
25.
chollukireen | 11:30 முப இல் ஏப்ரல் 21, 2021
ஆசிகளும் நன்றியும். இந்தப்பதிவு அந்தக்கால வாழ்க்கை இப்படிதான் என்ற சில ஸம்பவங்கள் உங்கள்
அம்மாவை ஞாபகப்படுத்தியுள்ளது உங்களுக்கு. எப்போவோ எழுதினது என்றாலும் இப்போது படிப்பவர்களுக்கு இப்படியெல்லாம் கூட உண்டா என்று தோன்றும். கோபம் என்ற ஒரு ஸுபாவம் இடம்,பொருள்,ஏவல் என்று எதையும் பார்க்காது என்றும் தெரிந்து கொள்ள முடிகிரது. உடல் நலம் கவனித்துக் கொள்ளுங்கள்.நன்றி. அன்புடன்