அன்னையர் தினம்–15
மே 6, 2014 at 9:08 முப 16 பின்னூட்டங்கள்
எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம். அந்தக் குழந்தையின்
நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்
வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ. ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.
அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது
என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.
என்னுடைய இயலாமையை நினைத்துக் கொண்டேன்.
காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து
மீண்டுகொண்டே காலம் கடத்தினது பொதுஜன உறவுகளும், பிரருக்கு உதவி செய்து
மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.
காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி இருந்த நிலத்தையும் விற்று அடுத்த
பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து காலம் பறந்து கொண்டு இருந்தது.
எவ்வளவோ விஷயங்கள்.
என்னுடைய பெண்ணை தன்னுடன் இருக்க வேண்டும் என்று
சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்
கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி
மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்
ஆசைகள்.
கான்ஸர். இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி
பிடித்து விடும் என்று சொல்வார்கள்.
அந்த நோயினால் அப்பா பீடிக்கப் பட்டார். ஆனால் அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்
அவருடைய வாழ்வை முடித்தார்.
அம்மாதிரி ஒரு மன உறுதி எப்படி வரும்? ஆறு வருடங்கள் அம்மாவின் பணிவிடை
அங்கும் அந்த பொறுமையுடன் சிச்ரூஷை.
அந்தக் காலத்தில் மருந்துகளும் கிடையாது.
எங்களை எல்லாம் வரவேண்டாம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிரமமாக
இருக்கும் என்ற ஒரே பதில்
எவ்வளவு பரோபகாரியாக இருந்தால் கூட ஸமயத்தில் சில காரியங்கள்
மறக்கப் படுகின்றன.
அப்பாவிற்கு அந்தியகாலம். பெரிய அக்காமட்டில் உதவிக்கு.
இருப்பதில் அனுபவமுள்ள பெரியவர்கள்,பார்த்து விட்டு அதிக நாள் இருக்க மாட்டார்.
பெண்களுக்குச் சொல்லி விடு. சின்ன பெண் நான், சென்னை பெண் இன்னொருத்தி.
ஆனால் அம்மா சொல்லவில்லை. அடுத்தத் தெருவிலிருக்கும் , பங்காளி உறவினர்களிடம்
போய், நாளை மறுநாள் என்றோ ஒருநாள் அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை
கௌரவமாக நீ செய்ய வேண்டுமப்பா என்று வேண்டுகோள் விடுத்து வந்தார்.
அந்த வயதான ,படித்த,பக்திமானுக்கு எந்த விதக் குறைவும் ,தகன ஸமயத்தில்
ஏற்படக் கூடாது. அப்போதும் சிச்ரூஷ மனப்பான்மைதான்.
எனக்கு அப்பா உயிர் நீத்த பிறகு தந்தி கொடுத்தார்கள்.
வந்த தந்தி அம்மா போய்விட்டாளென்று. கொடுத்தவர்கள் தவறோ,
வாங்கினவர்கள் தவறோ?
இரண்டும் கெட்டான் மனப்பான்மையில் இரண்டு குழந்தைகளுடன் கல்கத்தாவினின்றும்
வருகிறேன். சென்னை பெண்ணிற்கு அவர்கள் விவரம் சொல்லவில்லை.
சென்னயிலிறங்கி, விழுப்புரம் போய் வண்டி மாறி புதுவை வண்டியில் ஊரில் இறங்குகிறேன்.
அதே கம்பார்ட்மென்டில் ஏற உறவுகாரர்கள்.
வந்தயாடி அம்மா, வா. அப்பா நல்லபடி போய்ச் சேர்ந்தார். இறங்க வழி கொடுத்து ஏறும் போதே
ஸமாசாரம்.
அப்பாதானே?
ஆமாம்.ஆமா.
மனது ஒரு நிலைக்கு வந்து , கூட வரும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டுமே?
ஸ்டேஷனில் வெளியில் வந்தால் வெளியில் என் பெண். அவளுக்குத் தெரிந்ததை
அவள் சொன்னாள்.
அந்திய காலம் அப்பாவிற்கு எப்படி இருந்தது?
கடைசிவரை ஞாபகம் இருந்தது. வித்தியாஸமாக மூச்சு வருவதுபோல தோன்றியதும் அம்மா சொல்கிராள். பூஜையில் கடைசியில் ஒரு ஸ்லோகம் சொல்வீர்களே அதைச் சொல்லுங்கள்.
ஸ்லோகத்தை ஆரம்ப வார்த்தை சொல்லிவிட்டு நீ சொல் என்கிரார். அவித்யா மூலநாசாயா ஜென்ம கர்ம நிவர்த்தயே என்று தொடர்ந்து கொண்டே முடியும் வரிக்கு
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் சாம்பசிவ பாதோதகம் சிவம்.
ஸ்லோகத்தை ஆரம்ப முதல் சொல்லி விட்டு
ஸத்குரு பாதோதகம் சுபம். சாம்பசிவ பாதோதகம் சிவம் வரை சொன்னவர். அவர் பாதத்திலே சுபமாகிவிட்டார்.
அம்மா அந்தக் கடைசி நேரத்தைச் சொல்லும்போது, எவ்வளவு முடியாத நேரத்திலும், பூஜை புனஸ்காரங்கள் எப்படி உதவுகிறது?
கூட இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள். அந்த நேரத்தில் கூட அம்மா
தைரியமாக ஒரு அந்தியகாலம் என்ற துக்க நேரத்தைக் கொண்டுவராமல்
ஒரு சிவ பூஜையை அப்பாவிற்கு ஞாபகப்படுத்தி சொல்ல வைத்து,இருக்கவே இருக்கும் கங்கா ஜலத்தைக் கொடுத்து ஒரு பூஜைநடக்கும் இடத்தைக் கொண்டு வந்து விட்டார்.
இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எழுத வில்லை. யாருக்கு எந்ந நேரம் எது தேவையோ
அதைக் கொண்டுவருவதில் அம்மாவிற்கு அனுபவமாகி விட்டது.
இம்மாதிரி எல்லாம் அதிகம் படிக்காத ஒரு ஸோஷியல் ஸர்வீஸை ,தக்க ஸமயத்தில்
ஸந்தோஷத்திலும், தேவையான ஸமயங்களிலும் கொடுக்கும் அம்மாவை, நினைக்க
நினைக்க ஏதோ எழுத நினைத்து ஏதோ எழுதுவது போல நீண்டு கொண்டே போகிறது.
என்ன அம்மாமார்கள் எல்லோருக்கும் மிகவும் முக்கியமானவர்கள். எங்கள் அம்மா
ஒரு விசேஷ ப்ரகிருதி.
எல்லோரின் ஸுகத்திலும் இன்பம் காண்பவர்.
குறைந்த பக்ஷம் இதை எனக்குத்தெரிந்த வகையில் எழுதி வருகிறேன். இன்னும் சில
ஸம்பவங்களை அடுத்து எழுதுகிறேன். அன்னையர் தின நினைவுகள் இன்னும் உள்ளன.
தொடர்ந்து வருவேன்.
Entry filed under: Uncategorized.
16 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 2:22 பிப இல் மே 6, 2014
மனதை என்னவோ பண்ணுகிறது இந்த பதிவு. உங்கள் அம்மாவை நினைக்க நினைக்க ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. என்ன தைரியமாக சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறார்!
இதைபோல எத்தனை பெண்மணிகளோ அந்தக் காலத்தில் குடத்திலிட்ட குத்துவிளக்காக. பல குடும்பங்கள் இப்படிப்பட்ட பெண்மணிகளால் தான் தலையெடுத்து நிமிர்ந்திருக்கிறது.
2.
chollukireen | 11:25 முப இல் மே 11, 2014
சிலஸமயம் இதெல்லாம் எழுதுவது அவசியமா என்று தோன்றும். எழுதவேண்டும் என்று என்றோ நினைத்து உட்காரும்போது மனதில் அணிவகுக்கும் ஸம்பவங்களாக நினைவுக்கு வருபவையே பதிவாகிறது. ஸந்தோஷமான ஸமாசாரங்கள் என்றால்
எல்லாவற்றையுமே டேக்இட் ஈஸி, மற்றவர்களைப் பார்த்து ஸந்தோஷிப்பதையே வழக்கமாகக் கொண்டுவிட்ட படியால் அந்தக் காலங்கள் எப்போதுமே என்று தோன்றும்படியாக இருக்கிறது.
நீங்கள் சொல்வதுதான் ஸரி. உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அன்புடன்
3.
chitrasundar | 6:38 பிப இல் மே 7, 2014
காமாக்ஷிமா,
அப்பா அந்த வியாதியை எதிர்கொண்டது அம்மாவின் பணிவிடையால் மட்டுமே சாத்தியமாகி இருக்க வேண்டும். அம்மாக்களுக்குத்தான் என்ன ஒரு மனவலிமை! அக்கா வரவேயில்லையா. தெரிந்த பிறகு எவ்வளவு வருந்தியிருப்பார்.
ஒரு வேண்டுகோள் அம்மா, அக்காவின் வேதனையான திருமண விஷயங்களுடன் முடித்துவிடாமல், உங்களின் சந்தோஷமான திருமணம் எப்படி நடந்தது என்பதையும் தெரிந்து கொள்ள ஆவல். உங்களால் முடியும்போது எழுத முயற்சி செய்யுங்கள். அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 11:30 முப இல் மே 11, 2014
இந்தக்காலத்து ஸௌகரியங்களைப் பார்க்கும்போது, அந்த நாளில், யாருக்கும் எதுவும் கிட்டவில்லை. கிடைத்ததை அங்கீகரிக்கும் மனப்பான்மையே எல்லோருக்கும் இருந்தது. என்னுடைய ஸுய புராணம்
தேவையானபோது வரும். அக்கா வரவில்லை. நான் திரும்பிப் போகும்போது அவளைப் பார்த்து விட்டுப் போனேன். அன்புடன்
5.
yarlpavanan | 1:00 முப இல் மே 11, 2014
சிறந்த பகிர்வு
6.
chollukireen | 11:31 முப இல் மே 11, 2014
உங்களின் பாராட்டிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
7.
gardenerat60 | 8:24 முப இல் ஜூலை 14, 2014
கண்கள் நிறைந்ததம்மா!
8.
chollukireen | 9:18 முப இல் ஜூலை 14, 2014
அடுத்ததாக எழுத நினைத்தும் வேளை வரவில்லை. எழுதணும். அன்புடன்
9.
chollukireen | 2:03 பிப இல் ஜூலை 14, 2014
எனக்கும் எழுதும் போதும்,இப்போது படிக்கும் போதும் அப்படியே. அன்புடன்
10.
chollukireen | 11:32 முப இல் ஏப்ரல் 26, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
எல்லாம் அடுத்தடுத்து இல்லாவிட்டாலும் நிகழ்வுகள் முக்யமானதை எழுதுகிறேன். மனம் கலந்த உணர்ச்சிகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
11.
ஸ்ரீராம் | 11:54 பிப இல் ஏப்ரல் 26, 2021
அம்மா அப்பா இருவரின் தைரியம்… வருவதை எதிர்கொள்ளும் துணிவு… அசராத தெளிவு.. கலங்க வைத்தது பதிவு.
12.
chollukireen | 11:14 முப இல் ஏப்ரல் 28, 2021
நேற்று மறுமொழி அளிக்க முடியவில்லை. இரண்டாவது தடுப்பூசிக்குச் சென்றபடியால். பதிவை மனதில் வாங்கி விட்டீர்கள். நன்றாகப்புரிகிறது. கடந்த காலச் சம்பவங்கள். அன்புடன்
13.
Geetha Sambasivam | 1:04 முப இல் ஏப்ரல் 27, 2021
தைரியமான பெண்மணி. எதையும் எதிர்கொள்ளும் மனோபாவம்! அற்புதமான பெண்மணி. கொடுத்து வைக்கணும் இவங்க வயிற்றில் பிறக்க. கடைசியில் மரணத்தை அநாயாசமாக எதிர்கொள்ள வைத்துவிட்டார். மனதைக் கலங்க அடித்த பதிவு.
14.
chollukireen | 11:20 முப இல் ஏப்ரல் 28, 2021
நினைத்துப் பார்த்தால் இப்படியெல்லாம் இருக்க முடிந்திருக்கிரது. எங்கிருந்து இவையல்லாம் கற்றுக் கொண்டார். அனுபவங்களே ஆசானாக இருந்திருக்கும். நானும் யோசிக்கிறேன். அன்புடன்
15.
Revathi Narasimhan | 11:15 முப இல் ஏப்ரல் 27, 2021
ஒரு மனைவியின் அம்மாவின் தியாக
மனப்பான்மை. அதைத் தியாகம் என்று அவ்ரகள் கருதவே இல்லை என்பதே
உத்தமம்.
சிஸ்ருஷை பெண்களின் ரத்தத்திலேயே இருந்தது.
நர்செல்லாம் அப்போ ஏது. தாத்தாவும்
ஸ்டிரோக் வந்து சிரமப்பட்ட போது அம்மாவின் அம்மா
தான் உழைத்துப் பார்த்துக் கொண்டார்.
அவர்கள் அதைக் கடமையாகச் செய்தார்கள்.
அம்மா தவறிவிட்டாள் என்ற சோகத்தில் நீங்கள் பயணித்த
கலக்கம் புரிகிறது.
அருமையான விவரிப்பு. சமாதானங்கள்.
நன்றி காமாட்சிமா.
16.
chollukireen | 11:31 முப இல் ஏப்ரல் 28, 2021
நீங்கள் எழுதியிருப்பதுதான் ஸரி. இயற்கை ரத்தத்தில் ஊறி இருக்கும் சுபாவமே .சிச்ரூஷை. அந்த சுபாவம் இல்லாவிட்டால் பெண் மதிக்கப்பட்டுகூட இருக்கமாட்டார்களோ என்னவோ? கடவுளின் படைப்பு அது. உங்கள்பாட்டி, அக்கால,இக்காலப் பெண்கள் யாவருக்கும் பொருந்தும் இது.. நன்றி. அன்புடன்