கமகமக்கும் மிதிபாகல் பிட்லை
ஜூன் 4, 2014 at 11:39 முப 8 பின்னூட்டங்கள்
பாகற்காய் என்றாலே கசக்கும் என்பவர்களுக்கும் இந்தக் காயைச் சாப்பிட்டால் வாஸனை பிடித்துப் போகும். கடலூர்,அதைச்சார்ந்த இடங்களில் மிகவும் பெயர் போனது இந்தக்காய்.
சின்னச் சின்ன உருவத்தையுடைய இந்தக்காயை, சிரார்த்தங்களுக்குத் தேடி வாங்கி வந்து உபயோகிப்பார்கள்.
சதைப்பற்றுக் குறைந்து, காய்களில் விதைகள் அடர்த்தியாக இருக்கும்.
காயை,சுத்தம் செய்து நறுக்கி, விதைகளை எடுத்து விட்டுதான் உபயோகிப்போம். சென்னை வந்திருப்பதால் இதையும் சமைத்து ருசித்துவிட்டு உங்களுடனும் சொல்லலாமே.
திரும்பவும் மும்பை சென்றால் இந்த விதக்காய்கள் தேட வேண்டும்.
இருக்கும் போது உங்களையும் விட்டு விடுவதா?
சுலபமாக செய்யும் முறையைப் பாருங்கள்.
வேண்டிவைகள்.
மிதி பாகற்காய்—-கால்கிலோ
கடலைப்பருப்பு—கால்கப்
துவரம் பருப்பு—கால்கப்
தேங்காய்த் துருவல்—-அரை கப்.
மஞ்சள்பொடி—அரை டீஸ்பூன்
வெல்லப்பொடி—-2 டீஸ்பூன்
வறுத்தரைக்க
தனியா—ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு—ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—1 டீஸ்பூன்
கடலைபருப்பு—1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—4
நல்ல தக்காளிப்பழம்—-1
சிறிது பச்சைக் கொத்தமல்லி.
ருசிக்கு—-உப்பு
புளி—சின்ன எலுமிச்சையளவு
தாளித்துக் கொட்ட—அரைடீஸ்பூன் கடுகு,பெருங்காயம்.
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை.
கடலைப்பருப்பு,துவரம் பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டுக் களைந்து
மஞ்சள்பொடி சேர்த்து, திட்டமான தண்ணீருடன் ப்ரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
மிதி பாகற்காயைத் தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
காய்களை இரண்டாகப் பிளந்து விதைகளை நீக்கிவிட்டு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய காய்களில் சிறிது உப்பு சேர்த்துப் பிசறி, பாத்திரத்தில் அழுத்தி வைக்கவும்.
மிளகாய்,மிளகு,தனியா,கடலை,உளுத்தம் பருப்புகளை எண்ணெய்விட்டு
சிவக்க பக்குவமாக வறுத்தெடுக்கவும். அதிலேயே நறுக்கிய தக்காளியையும் சேர்த்து சிறிது வதக்கி எடுக்கவும். நன்றாக ஆறிய பின்
தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
புளியை தண்ணீரில் ஊறவைத்து, 2 கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, பாகற்காயைச் சற்றுப்
பிழிந்தாற் போல சேர்த்து வதக்கவும்.
காய் சற்று வதங்கியதும்,புளித்தண்ணீர்,உப்பு,மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
காய் நன்றாக வெந்து புளி வாஸனை போனதும், வெந்த பருப்பைச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அரைத்த விழுதையும் சிறிது தண்ணீரில்க் கரைத்துச் சேர்க்கவும். வெல்லப் பொடியும் சேர்க்கவும்.
நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கி, கடுகு,பெருங்காயம் தாளித்துக் கொட்டி கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்க்கவும்.
புளிப்பு,உப்பு,காரம்,துளி இனிப்பு இவையாவும் கசப்புத் தன்மையை
மிகவும் குறைத்து விட்டு பாகற்காய் சுவையுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
காயில் சிறிது உப்பு போடுவதால் பிட்லையில் உப்பு குறைத்துப் போடவும்.
கெட்டியாகவோ,சற்று தளர்வாகவோ நம் இஷ்டப்படி செய்யலாம்.
காரத்தை அதிகமாக்கி, கடைசியில் சிறிது மெல்லிய தேங்காய்த் துருவலை, வறுத்தும் போடுவதுண்டு.
ஸாதாரண பாகற்காயிலும் இதே முறையில் செய்யலாம்.
பலாக்கொட்டை, கடலை,வேர்க்கடலை, பட்டாணி இவைகளை வேகவிட்டு உடன் சேர்த்தும் செய்யலாம்.
நம்முடைய ரஸனைக்கேற்ப பல விதங்களில்த் தயார் செய்யலாம்.

Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:54 முப இல் ஜூன் 4, 2014
நமஸ்காரம். செளக்யமா? இப்போது சென்னையிலா? நேபாளத்திலா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.
மிது பாகற்காய் பிட்ளை படங்களும் வர்ணிப்பும் செய்முறையும் மிக அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 8:17 முப இல் ஜூன் 7, 2014
திருச்சிக்காரர் நீங்கள். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. 3மாத சென்னை வாஸம். அடுத்து மும்பை. மிக்க உடல்நலக் குறைவிலிருந்து மீண்டிருக்கிறேன். உங்கள் ரஸனைக்கு மிகவும் நன்றி.
யாவரும் நலமா? அன்புடன்
3.
yarlpavanan | 10:36 முப இல் ஜூன் 5, 2014
பயனுள்ள தகவல்
4.
chollukireen | 8:19 முப இல் ஜூன் 7, 2014
உங்கள் மதிப்புரைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
chitrasundar | 10:05 பிப இல் ஜூன் 9, 2014
காமாக்ஷிமா,
சென்னைக்கு பெண் வீட்டிற்கு வந்தும் ரெஸ்ட் எடுக்காமல் சமையலிலும் உதவி செய்து அசத்துறீங்க. தேவையான டிப்ஸ்களுடன் செய்முறையும் சூப்பரா இருக்கும்மா.
செய்முறை இரண்டு தடவை பதிவாகியிருக்கும்மா. அன்புடன் சித்ரா.
6.
மகிஅருண் | 5:34 முப இல் ஜூன் 20, 2014
ஒரு முறை இங்கே ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் இந்த மிதி பாகல் கிடைத்தது. அதற்குப்பின் இந்த வகைக் காயைப் பார்க்கவே முடியலை. சாதா பாகற்காயில் செய்து பார்க்கிறேன்மா! நன்றி!
7.
Geetha Sambasivam | 1:14 முப இல் ஜூலை 12, 2015
இதைச் சிலர் அதலக்காய் என்றும் சொல்கின்றனர். சென்னையிலும் கிடைக்கும். எப்போதேனும் அரிதாக! நாங்களும் பிட்லை இதில் செய்தாலும் முழுசாகக் கீறி விட்டுப் போடுவோம். கடலைப்பருப்பைத் துவரம்பருப்போடு வேகவைத்துச் சேர்த்ததில்லை. தக்காளி சேர்த்ததில்லை. மற்றபடி செய்முறை இது தான் நாங்கள் செய்வதும். பெரிய பாகற்காயிலும் செய்தாலும் இதன் ருசி தனி தான்.
8.
chollukireen | 10:10 முப இல் ஜூலை 14, 2015
சமையலில் ரஸம்,பாகற்காய் பிட்லை இவைகளெல்லாம் நன்றாகச் செய்யத் தெரிந்தால் நல்ல சமைக்கத் தெரிந்தவர்கள் என்றே சொல்வார்கள். எப்போதுமே கிடைக்கக் கூடியது பெரிய பாகற்காய். அதலக்காய். இந்தப்பெயர் எனக்குப் புதிது. இந்த தக்காளி ஸமாசாரமெல்லாம் புளி குறைவாகப்போட்டு,தக்காளி சேர்த்தால் கண்ணுக்கும் விருந்தாக அமையும். அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. மிக்க நன்றி. அன்புடன்