மினுமினு முருங்கைக்கீரை அடை
ஜூலை 9, 2014 at 2:52 பிப 20 பின்னூட்டங்கள்
அடை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுவும்
முருங்கைக்கீரையும்,வெங்காயமும் சேர்த்த அடை, வீட்டுக் கீரை
சொல்ல வேண்டுமா ருசிக்கு.?
சென்னையில் வீட்டையொட்டிய எங்கள் மனையில் சின்னதாக
ஒரு முருங்கைமரம்.
வானளாவி போய்க்கொண்டே இருந்தது. உச்சாணிக் கிளையில்
பத்து முருங்கைக்காய்கள். மற்றும்,பூவும்,பிஞ்சும்.
இலை மருந்துக்குக்கூட இல்லை.
இந்த மரம் மட்டுமா? எல்லா இடங்களிலும்,எல்லா மரங்களிலும்
இதே நிலை. பூத்து காய்க்கும் பருவம்.
ஆதலால் முருங்கை இலை குறிப்பு தள்ளிப் போடப் பட்டது.
இருந்த காய்களைப் பறிக்க எலெக்ஷனுக்குத் தோரணம்
கட்டுபவர்களைக் கொண்டு காய்களைப் பறித்தது.
அடுத்ததாகப் பரிக்கவே முடியாமல் காய்கள் நெத்தாகவே
ஆயிற்று.
ஸரி இந்தத் தொல்லையே வேண்டாமென்று எங்கள் மாப்பிள்ளை
தெரிந்த ஆளைக் கூப்பிட்டு, மரத்தையே பேர்பாதியில் வெட்டும்
படி சொல்லி விட்டார்.
அந்த மரம் அழகாகத் துளிர்த்து, தன் இலைகளைப் பரப்பி வா,வா
என்னை என்ன செய்ய வேண்டுமோ செய்து, ருசித்து, உன்
ப்ளாகிலும் போட்டுக் கொள் என்று சொல்வதுபோல என் கற்பனை.
பச்சைப்பசேல் என்று துளிர்த்து என்னிடம் மானஸீகமாகப்
பேசியது.
என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்து
படமெடுத்தாகி விட்டது. முன்னெல்லாம் சாப்பாட்டை வர்ணிப்பது
அதிகமுண்டு.
அந்த வரிசையில் மினுமினுவென்று மின்னும் எது?
எண்ணெய்தான். மினுமினுப்பு. அதுதான் பெயரும்.
வேண்டியவைகள்
பச்சரிசி,புழுங்கலரிசி இரண்டுமாக சேர்த்து– ஒருகப்
கடலைப்பருப்பு—-அரைகப்,
துவரம்பருப்பு—அரைகப்
உளுத்தம் பருப்பு—-கால்கப்.
மிளகாய் வற்றல்—–5 . காரத்திற்கு தேவையானது.
இஞ்சி—-ஒரு துண்டு
ருசிக்கு—உப்பு
உருவிய இளசான முருங்கை இலை—இரண்டு கப் அளவுகூட
சேர்க்கலாம். விருப்பத்திற்கிணங்க சேர்க்கவும்.
பச்சைக் கொத்தமல்லி நறுக்கியது–சிறிது
வெங்காயம்பொடியாக நறுக்கியது—அரைகப்
சீரகம்—-ஒரு டீஸ்பூன்
செய்முறை
அரிசி,பருப்புக்களைத் தண்ணீரில் நன்றாகக் களைந்து மூன்று
மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீரை வடித்துவிட்டு உப்பு,மிளகாய்,சீரகம்,இஞ்சி சேர்த்துக்
கொறகொறப்பாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் வேண்டாம்.
அரைத்த மாவில் முருங்கைக்கீரை,கொத்தமல்லி,வெங்காயம்
சேர்த்துக் கலக்கவும்.
திட்டமாக கெட்டியாகவும் இல்லாமல் சற்று த் தளர இருக்கும்படி
தண்ணீர் சேர்ககவும்.
தோசைக்கல் இரும்பானாலது முன்பெல்லாம் உபயோகப்படும்.
அடி கனமாக அடை வார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.
இப்போதும், ரொட்டி செய்வதற்கான கல் இரும்பாலானது இருக்கலாம்.
நான் ஸ்டிக் கல்லானாலும் , கல்லைச் சூடாக்கி, எண்ணெய்
கொண்டு துடைத்து, பருத்த தோசையளவிற்கு மாவைக்
கரண்டிகொண்டு பரத்தவும்.
தோசைத் திருப்பியால் நடுவில் பொத்தலிடவும்.
எண்ணெயை நடுவிலும்.சுற்றிலுமாக ஸ்பூனினால் எடுத்து
விடவும்.
அடைக்கு சற்று எண்ணெய் அதிகம் விடவேண்டி இருக்கும்.
அளவான தீயில் நன்றா்கச் அடி சிவக்கும்படி வேக விடவும்.
அடை வெந்து சிவந்ததும், திருப்பிப் போடவும்.
திரும்பவும் சிறிது எண்ணெய் சேர்த்து வேக விடவும்.
அடை முருகலாக வெந்ததும், எடுத்து விட்டு, மிகுதி மாவையும்
இதே முறையில் வார்த்து எடுத்து சுடச்சுட சாப்பிடவும்.
சட்னி,அவியல், ஊறுகாய் என எது வேண்டுமானாலும்
ஜோடி சேரும்.
காரம் அதிகமான அடைக்கு வெல்லம் கூட நன்றாக இருக்கும்.
பாருங்கள். சாப்பிடுங்கள்.
என்னுடைய அடைக் குறிப்பு டிபன் வகைகளில் எழுதி
இருக்கிறேன். இது முருங்கைஸ்பெஷல்.
Entry filed under: Uncategorized.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 3:09 பிப இல் ஜூலை 9, 2014
நமஸ்காரம், மாமி.
முருங்கை மரத்தை வெட்ட வெட்ட அது மீண்டும் துளிர்த்து இலைகளுடன் வளர்வது அழகாக இருக்கும். BHEL Quarters இல் இருந்தபோது நானும் இதை நன்கு அனுபவத்துள்ளேன்.
அடை சூப்பராக வந்துள்ளது. அதுவும் வெங்காயைத் அர்ச்சித்து வார்த்தால் அதன் ருசியே தனிதான். 😉
பகிர்வுக்குப்பாராட்டுக்கள், நன்றிகள்.
2.
chollukireen | 11:34 முப இல் ஜூலை 11, 2014
முருங்கைக் கீரையுடன் வெங்காய அர்ச்சனை கலரும் அழகாக வருகிறது. பாராட்டுகளுக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஆசிகளுடனும், அன்புடனும்
3.
angelin | 3:10 பிப இல் ஜூலை 9, 2014
மொரு மொரு மினு மினு அடை அருமையாக இருக்கும்மா ..நாளைக்கு கடையில் கீரை கிடைத்தால் கண்டிப்பா செய்வேன் .
4.
chollukireen | 11:51 முப இல் ஜூலை 11, 2014
அஞ்சு அன்பிற்கு மிகவும் நன்றி. எந்தக் கீரைவகை கிடைத்தாலும் போட்டுச் செய்யலாம். நன்றாகவே அதுவும் ருசியுடனிருக்கும். அன்புடன்
5.
வை. கோபாலகிருஷ்ணன் | 3:11 பிப இல் ஜூலை 9, 2014
’வெங்காயைத்’ என்று தவறாக எழுதியுள்ளேன்.
‘வெங்காயத்தை’ அர்ச்சித்து என மாற்றிப்படிக்கவும். – கோபு
6.
chollukireen | 11:48 முப இல் ஜூலை 11, 2014
மாற்றியே படித்தேன். வெங்காய் இல்லாவிட்டால் செங்காய். இப்படிக்கூட இருக்கலாம். அன்புடன்
7.
Kumar | 2:37 முப இல் ஜூலை 10, 2014
Murungai maram & Adai Supero Super.
Thirumbavaum sappidavendumpol ullathu.
8.
chollukireen | 11:53 முப இல் ஜூலை 11, 2014
நிறைய செய்து சாப்பிடலாமே! கீரையை பறித்து உருவினால்ப் போதுமே! அன்புடன்
9.
mahalakshmivijayan | 4:48 முப இல் ஜூலை 10, 2014
அடை சாப்பிட்டு வருடங்கள் ஆயிற்று அம்மா.. உங்கள் புண்ணியத்தில் இந்த வாரம் இதை செய்து ருசித்து விட வேண்டியது தான் 🙂 முருங்கை மரம் துளிர்த்து அழகு பச்சை நிறத்தில் இல்லை விட்டு பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது 🙂
10.
chollukireen | 11:57 முப இல் ஜூலை 11, 2014
அடை செய்வதற்கு முன் மரத்தின் இலைகளையும் ரஸித்திருக்கிராய். என்ன சொல்கிறாய். நம் வீடுகளில்
அடை நினைத்தால் செய்யும் வஸ்துதானே? செய்துவிட்டு என்னையும் கூப்பிடு. மும்பையில்தான் இருக்கிறேன். அன்புடன்
11.
இளமதி | 7:32 முப இல் ஜூலை 10, 2014
முத்தாம் முருங்கை இலையில் முறுகலடை!
சத்தாகத் தந்தீர் சமைத்து!
அம்மா.. 🙂 அருமையானதோர் அடைக் குறிப்பு!
மனதைக் கொள்ளை கொள்ளும் பசிய நிற இலை.
தகதகவெனும் தங்க நிற அடை!
அப்பப்பா அப்படியே எடுத்துச் சாப்பிடத்தோணுது அம்மா!
இங்கு ஏசியன் கடையில் இக்கீரை வரும்போது
வாங்கிச் செய்து பார்ப்பேன்.. 🙂
மிக்க நன்றிமா!
நீங்களும் நலமோடு இருக்க வேண்டுகிறேன்!
12.
chollukireen | 12:02 பிப இல் ஜூலை 11, 2014
அன்புப் பெண்ணே ,கவிதாயினி கவிதையால் அடையை
வரவேற்றிருக்கிறாய்.
ரஸித்துச் சுவைத்ததற்கு இன்னும் இரண்டொரு அடையை எடுத்துக் கொள்.
எல்லாவித கீரைகளும் சேர்த்துச் செய்யலாம்.
செய்து ரஸித்து உண். அன்புடன்
13.
adhi venkat | 6:30 முப இல் ஜூலை 15, 2014
சுவையான முருங்கைக்கீரை அடை. இப்போதே செய்து சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது.
14.
chollukireen | 8:24 முப இல் ஜூலை 15, 2014
இப்போது கீரை கிடைக்க வாய்ப்புள்ளது. செய்து பார்த்து ஆவலைத் தீர்த்துக் கொள்ளு. வெந்தயக்கீரை முதலானது கூட சேர்த்துச் செய்யலாம். காய்கள்,கீரைகள் மாற்றிப் போட இன்னும் நல்ல ருசிகளிலும் அடை கிடைக்கும். அன்புடன்
15.
gardenerat60 | 6:01 பிப இல் ஜூலை 23, 2014
அம்மா, அழகான மரம், ருசியான அடை, அருமை.
எங்கள் வீட்டு எதிரே மரம் இலைகளோடு. செய்து விடுவேன் சீக்கிரம்.தேங்ஸ்.
16.
chollukireen | 10:08 முப இல் ஜூலை 25, 2014
கீரை எதிரேயே இருப்பதனால் எப்போது வேண்டுமோ செய்து ருசிக்கலாம். இளங்கீரையாகவும் கிடைக்கும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் பெருமைப் படுகிறேன். மகிழ்ச்சி . அன்புடன்
17.
chollukireen | 7:34 முப இல் ஜூன் 17, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை.
திரும்பவும் செய்யுங்கள்.ருசிக்கும். அன்புடன்.
18.
திண்டுக்கல் தனபாலன் | 2:16 முப இல் ஜூன் 18, 2015
இன்றே செய்து பார்க்கிறோம்… நன்றி அம்மா…
19.
தி.தமிழ் இளங்கோ | 9:36 முப இல் ஜூன் 26, 2015
மரியாதைக்குரிய திருமதி. காமாக்ஷி அம்மா அவர்களுக்கு வணக்கம்!
நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (26.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் – 26ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/26.html
20.
chollukireen | 11:44 முப இல் ஜூன் 26, 2015
அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு அன்பான ஆசிகள். உங்களின் தகவலாகிய என் சொல்லுகிறேனைப் பாராட்டி அறிமுகப்படுத்திய வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நினைவில் நிற்போர் நல்ல தலைப்பில் அறிமுகம். நினைவிலே நிற்கும்.
உங்கள் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நல்ல இருதயத்துடன் வரவேற்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன். வரவிற்கும் நன்றி.