எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை
ஜூலை 31, 2014 at 8:43 முப 8 பின்னூட்டங்கள்
ஆகஸ்ட் எட்்டாம் தேதி வரலக்ஷ்மி பூஜை. சென்ற வருஷத்திய என் பதிவை திரும்பவும் அளிக்கிறேன்.
படித்து மகிழுங்கள். அன்புடனும்,ஆசிகளுடனும்.
பெயரே வரலக்ஷ்மி பூஜை. கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் பூஜை.
இதைத் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,மஹாராஷ்டிராமுதலான இடங்களில்
விவாகமான பெண்கள், தலைமுறைத்,தலைமுறையாகக் கொண்டாடி,
வரலக்ஷ்மி அம்மனிடம் நல்ல வரங்கள் வேண்டிப் பூஜித்துவரும் ஒரு நோன்பு.
பல குடும்பங்களில் வழக்கமில்லாதும் இருக்கலாம்.
பிறந்த வீட்டில் உண்டு, புகுந்த வீட்டில் இல்லை என்றும் சொல்வதுமுண்டு.
பொதுவில் குடும்பத்தின் ஐசுவரிய வளத்திற்கும், வளமான வாழ்க்கைக்கும்
கணவரின் க்ஷேமத்திற்காகவும் கொண்டாடப் படுகிறது,அனுஷ்டிக்கப் படுகிறது
என்பதுதான் எங்களின் முன்னோர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது.
நாங்கள் எங்கள் குடும்பத்தில் எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதுதான்
நான் சொல்ல வந்தது.
ஏறக்குறைய எல்லோருமே அம்மனைக் கலசத்திலிருத்தி அலங்காரங்கள் செய்து,
வீட்டற்குள் அழைத்து, மண்டபத்திலிருத்தி நல்ல முறையில் பூஜை செய்வது வழக்கம்.
சிற்சில விஷயங்களில், மாறுபாடு இருந்தாலும்,கொள்கையும்,பூஜையின்
காரணங்களும் ஒன்றேதான்.
தமிழ் நாட்டில் ஸுமங்கலிப் பெண்கள், இப்பூஜையை செய்வது வழக்கம்.
கர்நாடகாவில், கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து, சாயங்காலவேளையில்
இப்பூஜைகளைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
வடை,பாயஸம்,இட்டிலி. கொழுக்கட்டை, மஹாநிவேதநம்,பலவகைச் சமையல்கள்,
பருப்பு,சுண்டல்கள், வகை,வகையான பழங்கள் இவை யாவும் அவரவர்கள்
சவுகரியப்பட்டதை சிரத்தையாகச்,சேகரித்தும்,பூஜையில் நிவேதனம் செய்வார்கள்
பலவித பக்ஷணங்களைச் செய்து, அவைகளை நிவேதனம் செய்யும்
முறை உள்ளவர்களும் உண்டு.
ஆவணிமாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில்
இந்த நோன்பு வரும்.
சில ஸமயம் இது ஆடி மாதத்தில் அமையும். இந்த வருஷம் ஆடி மாதம்
வருகிரது.
ஆடி 31 ஆம்தேதி அதாவது ஆகஸ்ட் 16…
View original post 624 more words
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 9:03 முப இல் ஜூலை 31, 2014
அழகான படத்துடன் அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 10:08 முப இல் ஓகஸ்ட் 4, 2014
உங்கள் பாராட்டு மிகவும் ஊக்கத்தைக் கொடுக்கிரது.அன்புடனும்,ஆசிகளுடனும்
3.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 12:57 முப இல் ஓகஸ்ட் 2, 2014
வணக்கம்
அம்மா.
அருமையாக விளக்கியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
4.
chollukireen | 10:09 முப இல் ஓகஸ்ட் 4, 2014
அப்படியா. மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
5.
ranjani135 | 8:45 முப இல் ஓகஸ்ட் 4, 2014
இந்த வார வல்லமையாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். வல்லமை இதழில் படியுங்கள். இணைப்பு இதோ:http://www.vallamai.com/?p=48747
6.
chollukireen | 10:00 முப இல் ஓகஸ்ட் 4, 2014
அன்புள்ளரஞ்ஜனி வல்லமை இதழுக்குச் சென்றேன்.
அங்கும் நீ இருந்திருக்கிராய். இவ்வளவு அக்கரையாக
யார் இருப்பார்கள். அதே திரு ஸைபர் ஸிம்மன் அவர்கள் என்னைப்பற்றி எழுதியபோது எந்த மனநிலை
ஏற்பட்டதோ அதே நிலைதான் இப்போதும். வாழ்த்துகள்
அனுப்பியுள்ளாய். மிக்க நன்றியும் வாழ்த்துகளும் உனக்கும்,யாவருக்கும். இன்னும் நிறைய உன்னிடம்
தெரிந்து கொள்ள வேண்டும். தான் மதிக்கும் ஒருவரை
இதைவிட எப்படி ஸந்தோஷப்படுத்த முடியும்
என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு. அன்புடன்
7.
வை. கோபாலகிருஷ்ணன் | 5:06 பிப இல் ஓகஸ்ட் 4, 2014
இந்த வார வல்லமையாளராகியுள்ள தங்களுக்கு என் நமஸ்காரங்கள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
இநத இனிய செய்தியினைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அன்புடன் கோபு
8.
chollukireen | 8:26 முப இல் ஓகஸ்ட் 5, 2014
உங்களின் மனப்பூர்வமான,வாழ்த்துகள்.பாராட்டுகள் எல்லாம் என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.
உண்மையான அன்பின் வெளிப்பாடு. மிகவும் நன்றி. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள் என்றும் உரியது. அன்புடன்