பிள்ளையாரே வாரீர்,பெருமாளேவாரீர்
ஓகஸ்ட் 13, 2014 at 9:10 முப 9 பின்னூட்டங்கள்
எந்த ஒரு காரியத்தையும் துவக்குமுன்னரே வினாயகரை,
அதுதான் நம்முடைய இஷ்ட வல்லமை பொருந்திய பிள்ளையாரைத்
துதிக்காமல் இந்துக்கள் எதுவும் செய்வதில்லை.
முக்கியமாக ஒரு கடிதம் எழுதுவதானாலும் பிள்ளையார் சுழியாக
உ என்று தலைப்பில் நடுநாயகமாகப் போட்டே எழுதும் வழக்கம்
பெரியவர்களிடம் இருந்து வந்தது.இந்தக் காரியம் கை கூடினால்
பிள்ளையாருக்குத் தேங்காய்தான். வேண்டாமல் கூட முடித்துக்
கொடுப்பார் பிள்ளையார்.
சூரைத் தேங்காய்-அதாவது சிதரும்படி தேங்காயை உடைத்து
மற்றவர்களுக்குக் கொடுப்பது,தோப்பக்கரணம் போடுவது,
இதெல்லாம் கூட அதிகமாகக் அவருக்கு வேண்டிக் கொண்டு
செய்ய முடியும்.
எந்த காரியத்தையும் கஷ்டப்படாமல் முடித்துக் கொடுக்க
பிள்ளையாரை வேண்டிக்கொண்டு ச் செய்வதென்பது
வழக்கம்.
எந்த பூஜையானாலும் முதலில் மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து
அதற்கு,தீப,தூப அர்ச்சனை,அலங்காரங்களுடன்,நிவேதனங்கள் செய்து
அவருடைய ஸ்தானத்தில் அவரை இருத்தி, வேண்டுதல் செய்தே
எடுத்த பூஜையை விக்கினமில்லாமல் செய்ய உதவி புரியுமாரு
வேண்டுகிறோம்.
விவஸாயிகள் நமது தமிழ் நாட்டில் முன் நாளில்
நிலபுலன்களுக்கு கிணற்றினின்றும் ஏற்றம் இறைத்து வரண்ட காலங்களில்
தண்ணீர் பாய்ச்சும் போது கூட முதலில், பிள்ளையாரே வாரீர்
பெருமாளே வாரீர் என்றுதான் ஏற்றம் இறைக்கும் போது பாடுவார்கள்.
அவர் பெயரைச் சொல்லி ஆரம்பித்துவிட்டால் சிரமம் கூடத் தெரியாது
என்பர். தண்ணீரும் ஏராளமாகச் சுரக்குமாம்.
பிரதிவருஷம் ஆவணிமாதம் அமாவாஸைக்கடுத்த சதுர்த்தியில் வினாயக
சதுர்த்தி கொண்டாடப் படுகிறது.
பெரும்பாலும் களிமண்ணால் செய்த புத்தம் புதிய உருவச் சிலைகள்
தமிழ்நாட்டில் அப்போது விற்பனைக்குக் கிடைக்கும் .
சிலர் அவரவர்களாகவே களிமண்ணில் தெரிந்த அளவிற்கு பிள்ளையாரைச்
செய்து வழிபடுவதும் வழக்கமாகவே கொண்டிருப்பார்கள்.
யாவரும் குடைமுதலானது வைத்து வித விதமான மஅலங்காரங்கள்
செய்து வழிபடுவார்கள்.
அன்றையதினம் சதுர்த்தி விரதம் எடுத்துக் கொண்டு, வருஷம் பூராவும்
மாதாமாதம் வரும் சதுர்த்திியில் பூஜை விரதங்கள் அனுஸரித்து
மறுவருஷம் பூஜையை முடித்து, தானங்கள், செய்து போஜன பலகாரங்கள்
அளித்து, மேலும் பல விரதங்கள் அனுஸரிக்க முதற்கட்டமாக இந்த
பூஜையை பெண்கள் அனுஸரிப்பது முன்பெல்லாம் வழக்கமாக இருந்தது.
இதை சதுர்த்தி விரதம் முடிப்பது என்று சொல்வார்கள்.
இதைத் தொடர்ந்து ரிஷி பஞ்சமி, உமா மஹேசுவர விரதமெல்லாம்
அனுஷ்டிக்கத் தொடங்குவார்கள்.
வெள்ளிக்கிழமை,திங்கட்கிழமை ,சதுர்த்தி இந்த தினங்கள் அவருக்கு
உவந்த தினங்கள்
வினாயக சதுர்த்தி பூஜையை
வீட்டில் பிரம்மசாரிப் பிள்ளைகளிருந்தால் அவர்களுக்கு இப்பூஜையைச்
செய்ய முன்னுரிமை அளிப்பார்கள்.
மிகவும் கொண்டாட்டமானபூஜை இது.
கல்,மண், மஞ்சள்,வெல்லம்,சந்தனம்,சாணி, மரம் வெள்ளி, தங்க,பித்தளை இப்படி
எதில் வேண்டுமானாலும் அவர் அவராகவே காட்சி கொடுப்பார்.
பிடித்தால் பிள்ளையார்தான்.
வீதிக்கு வீதி ,மூலை ,முடுக்கு ,குளம் .குட்டை, ஆற்றங்கரை, அரசமரம், எந்த
இடத்தில் வேண்டுமானைலும் இஷ்டத்திற்குக் காட்சி கொடுப்பார்.
கோவில்களில் இவரைத்தான் முன்னாடி பார்த்து தரிசனம் செய்கிறோம்.
எங்கும் நிறைந்தவர்.
சுத்தமான இடம்,கோலம், பூஜை ஸாமான்கள்,புஷ்ப வகைகள் இது போதும்.
இவருக்கு மிக்க எளிய பொருட்கள் கூட நிவேதனம் செய்தால் போதும்.
அவல்,கடலை,பொரி,வெல்லம், கரும்பு இதுவெல்லாம் கூட மிகவும் இஷ்டம்.
இட்லி,கொழுக்கட்டை, வடை,அப்பம்,சுண்டல்,பாயஸம்,நல்ல போஜனங்கள்
இவைகள் நம் தமிழ்நாட்டு நிவேதனங்கள்.
பழங்களில் வாழைப்பழம்,பேரிக்காய்,நாகப்பழம்,திராக்ஷை,விளாம் பழம்,
கொய்யாப்பழம், கரும்புத் துண்டு, தேங்காய் என நம் பிராந்தியங்களில்
கிடைக்கும் வகைகளே மிகவும் விரும்பப் பட்டவைகள்.பிள்ளையாரைப்
பூஜிக்க விசேஷமான இருபத்தியோரு வித இலைகள் சொல்வார்கள்.
பலவித மலர்கள்,அக்ஷதை இவைகளுடன் இந்த வகை இலைகள் விசேஷமாகச்
சொல்லப்பட்டு இருக்கிறது.
அவை முல்லை கரிசலாங்கண்ணி,அருகம்புல், , வில்வம், இலந்தை, ஊமத்தை,
வன்னி,நாயுருவி,கண்டங்கத்திரி,அரளி, எருக்கு,மருதம், விஷ்ணுக்ரந்தி,
மாதுளை, தேவதாரு, மருக்கொழுந்து, அரசு, ஜாதிமல்லி, தாழம், அகத்தி
தவனம் ஆக 21 விதமான இலைகளினால் பூஜித்தால் மிகவும் விசேஷம்
என்பார்கள்
குறைந்த பக்ஷம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
எல்லாவற்றையும் விட 21 அருகம் புல்லால் பூஜித்தாலும் நல்ல பலன் உண்டு
நமக்குச் சுலபமாக கிடைக்கும் இது.
பிள்ளையாருக்கு பூணல் அணிவித்து வயிற்றில் நான்கணா அதாவது
அந்த நாளைய கால் ரூபாயை அழுத்தி வைத்திருப்பார்கள். பூஜைகள்முடிந்து
விஸர்ஜனத்தின்போது பிள்ளைகளுக்கு அந்த ரூபாய் கிடைக்கும்
அது அவர்களுக்குக் குஷி.
மும்பையில் பத்து நினங்கள் வினாயகரை வழிபட்டுக் கோலாகலமாகக்
கொண்டாடுகிறார்கள்.
கடலில் கரைக்கும் தினத்தில் கோலாகலம்
சொல்லிமுடியாது.
ஊரே திருவிழாதான் .
தமிழ்நாட்டில் இப்போது பொதுவான இடங்களிலும் பெரிய அளவில் வினாயகர்
சிலை வைத்து வணங்கிக் கொண்டாடுகிரார்கள்.
வீட்டிற்கு வீடு,கடைக்குக்கடை, வெளிநாடுகளானாலும் நம் வீடுகள் யாவற்றிலும்
கொண்டாட்டங்கள் நடந்து கொண்டுதானிருக்கிரது.
29–8–2014 இவ்வருஷ வினாயக சதுர்த்தி. அருமையான திருநாள்.
மூலமே கணத்திற்கெல்லாம்–முதல்வனாம் என் அப்ப காஞ்சி
ஆலடிப் பிள்ளையாரே -அடியேனுக்கருள் செய்வாயே.
எல்லோரும் துதித்துக் கொண்டாடுவோம். உலக க்ஷேமத்திற்கும்யாவரின்
நன்மைக்கும் வேண்டுவோம்.
வாக்குண்டாம்— நல்ல மனமுண்டாம்
மாமலராள்–நோக்குண்டாம் மேனி நுடங்காது
-பூக்கொண்டு துப்பார்த்திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
Entry filed under: பூஜைகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 9:26 முப இல் ஓகஸ்ட் 13, 2014
நமஸ்காரம். அருமையான படங்களுடன் அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
2.
chollukireen | 10:57 முப இல் ஓகஸ்ட் 18, 2014
ஆசிகள். உங்கள் பின்னூட்டம் மிக்க உற்சாகததைக் கொடுக்கிரது. நன்றி. அன்புடன்
3.
mahalakshmivijayan | 4:43 முப இல் ஓகஸ்ட் 16, 2014
என் இஷ்ட தெய்வமான பிள்ளையார் பற்றிய பதிவு என்றவுடன் ஓடோடி வந்து விட்டேன்.. எத்தனை அருமையான தகவல்கள்.. நிறைய தெரிந்து கொண்டேன் காமாட்சி அம்மா! நன்றி!
4.
chollukireen | 11:00 முப இல் ஓகஸ்ட் 18, 2014
ஓடிவந்ததற்கு மிகவும் ஸந்தோஷம்.. நல்ல உடற்பயிற்சியும் ஆகியதுதானே? அன்புடனான பதிலுக்கு
நன்றிகளும், அன்புடனும்
5.
Rajarajeswari jaghamani | 3:00 முப இல் ஓகஸ்ட் 19, 2014
க்ஷேமம் அளிக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் .
http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_19.html?
6.
chollukireen | 1:37 பிப இல் செப்ரெம்பர் 3, 2014
உங்கள் அபிப்ராயத்தை இப்போதுதான் பார்க்க முடிந்தது. உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கும் வரவு,பாராட்டுகள். னன்றியும் ஸந்தோஷமும்.அன்புடன்
7.
chollukireen | 5:37 முப இல் ஓகஸ்ட் 19, 2014
இப்பதிவை விரும்பிய திருபாண்டியன்,இராஜராஜேச்வரி ஜகன்மணி,மஹாலக்ஷ்மி விஜயன்,திரு கோபாலகிருஷ்ணன் ஆகிய யாவருக்கும் என் நன்றிகள். அன்புடன்
8.
adhi venkat | 7:02 முப இல் ஓகஸ்ட் 23, 2014
என் இஷ்ட தெய்வமும் பிள்ளையார் தான். அவரை நினைக்காமல் ஒருநாளும் புலராது. எல்லாவற்றிற்கும் பிள்ளையார் தான். அழகான படங்களும், தகவல்களும்.
9.
chollukireen | 10:37 முப இல் ஓகஸ்ட் 27, 2014
மிக்க ஸந்தோஷம். சித்திர கணபதி அழகாக இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியம். பிள்ளையார் எல்லோருக்குமே இஷ்டதெய்வம். ஸரியாகச் சொன்னாய்.
அன்புடன்