அன்னையர்தினப்பதிவு—16
ஓகஸ்ட் 20, 2014 at 9:08 முப 18 பின்னூட்டங்கள்
என்ன எந்தமாதிரி ஒரு இடத்தில்க் கொண்டு நிறுத்தி விட்டுத்
தொடரவில்லை. அந்த அளவிற்கு சுகவீனம் எனக்கு.
இப்போது எழுதத் துவங்க ஆரம்பித்து இருக்கிறேன்.
வாருங்கள். என்னவென்று,
வாசலில் சவுக்கு வண்டி அதாவது விரகுக்கட்டை விற்பனைக்கு
வந்திருக்கு, வாங்கிப்போட்டால்தான் காயும்.
பெரிய காரியம் இருக்கு. நேக்கு எங்கும் போக முடியாது.
நீதான் செய்யணும். பசங்கள் நீ அழுதால் அதுகளும் அழும்.
ஆச்சு ஒருகாரியம்.நல்லபடியா போயாச்சு. மீதியைச்
செய்து கடையேத்தணும். ஒரு பத்து குண்டாவது விரகுவேணும்.
அப்படியே பொளந்தும் குடுத்துடச் சொல்லு. காசு கொடுத்துடரேன்னு
சொல்லு. வேலை சுலபமாகப் போய்விடும். அம்மா.
வாசலில் வந்தவுடனே மத்தவாள்ளாம் வந்துடரா.
நீ போ நாங்க பொளந்து வாங்கி வைக்கிரோம். பணத்தை
வாங்கிக் கொண்டு பொருப்பை ஏற்றுக் கொள்கிரார்கள்.
உங்கப்பா கேட்டாள்னு இந்த சின்ன பையன்கையாலே
மீதி காரியம் எல்லாம் வேண்டாம்.
ஸொத்தா வைச்சிருக்கோம். என் கை பில்லு வாங்கி
உங்க அத்திம்போரோ, மாமாவோ செஞ்சூடட்டும். அது
போதும். மீதி என்ன வேண்டுமோ,வேண்டாதோ அதில்
கவனம் செய். இது அம்மா
பார் எனக்கும் இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது,அக்காவின்
குறை.
தானம்,தர்மம், எல்லாம் எது செய்யணுமோ அதெல்லாம்
குறையாதிருக்க ஏற்பாடுகள் நடந்தது.
மெட்ராஸுலே அவளுக்குச் சொல்லிகூட இருக்க மாட்டார்கள்.
இல்லாட்டா அனுப்பி இருக்க மாட்டார்களா. அம்மாவிற்கு
இப்போதாவது பெண் வருவாளா என்ற நைப்பாசை.
அம்மாவுடய உடன்பிறந்தவர், மாப்பிள்ளை என எல்லோரும் வந்தாகிவிட்டது.
ஆளுக்கொரு லக்ஷணமான புடவையுடன்.
உடன்பிறந்தவர்,மைத்துனர், மாப்பிள்ளை,பிள்ளை என எல்லோரும்
பத்தாவது தின காரியத்தில் புடவை அளிப்பது என்பது ஒரு
கட்டாய வழக்கமாக இருந்தது. இருக்கிறது.
கணவர் போய்விட்டாரென விசாரப்படவேண்டாம்.
நாங்களெல்லாம் பார்த்துக் கொள்வதற்குக் கடமைப் பட்டவர்கள்
என்று மறை முகமாகத் தெரிவிக்கும் நிகழ்ச்சிதான் அது என்று
நான் நினைப்பதுண்டு.
ஏதோ புடவைகள் வாங்கி இருப்பது தெரியறது. நீ பாரு.
இந்தக் கலர் புடவையெல்லாம் எனக்கு வேண்டாம். நான்
பெரிய வைதீகக் குடும்பத்தில் பிறந்தவள்.
எங்காத்திலே ஸம்ரதாயம் மீருவது கிடையாது. எனக்கு
இதெல்லாம் புதுசும் இல்லை.
வாக்கப்பட்ட இடத்திலும் பழமை விரும்பிகள்தான்.
உங்கப்பாவிற்கும் கௌரவம் வேண்டும் புரிந்துகொள்
எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று. ஊஹூம்.
விழுப்புரத்தில் நம் வாடிக்கை புடவைக்காரன் கடை இருக்கு. அவனிடம்
இந்தப் புடவைகளைக் கொடுத்துவிட்டு நான் சொன்னேன் என்று சொல்
நார்மடி அவனிடம் இருக்கும். மாத்திக் கொடுப்பான்.
அவனுக்கு இந்த புடவைகள் நஷ்டம் கொடுக்காது. நல்ல
புடவைகள்.
எந்தப் பேச்சும் எடுபடவில்லை. அம்மா சொன்ன படி விழுப்புறம்
போனேன். புடவைகளை மாற்றினேன். கண் கலங்க
இந்த ஒரு வருஷம் வெளியில் போகக் கூடாதாயிற்றே.
அது பரவாயில்லை. வயதானவதானே நானு.
எதற்கும் மசியவில்லை.
கிராமங்களில் எதற்கும் ஆள் பிடிக்க வேண்டாம். எல்லாம் ஸரிவர
நடத்திக்கொடுக்க யாராவது முன் வந்து விடுவார்கள்.
வேஷம் மாற்றமும் எந்தவித பாசாங்கு,துக்கம் காட்டாமல் அதது
நடந்தது.
எவ்வளவு மன உறுதி. பத்தாவதுநாள் காரியத்திற்குக்கூட ஒரு பெண்
வரவில்லை.
கேட்பவர்களுக்குப் பதில் சொல்வது கஷ்டமாக இருந்தது.
அவள் அனுப்பினால்தானே வருவா. நீ கல்கத்தா போகும் போது கட்டாயம்
அவளைப் பார்த்து எல்லாம் விவரமாகச் சொல்லிவிட்டுப்போ.
உன்னுடைய நாத்தனார் வரவில்லை. என்ன அஸௌகரியமோ?
அவளையும் பார்த்து விட்டுப் போ. அவ வராம இருக்க மாட்டா. நீ
போய்விட்டுதான் போக வேண்டும்.
எனக்குக் கோரிக்கைகள் ஆரம்பமாகி விட்டது.
அப்பாவின் விருப்பப்படி என்னுடைய பிள்ளையின் கையால்தான்
காரியம் நடக்க வேண்டும் என்பதில் நானும் பிடிவாதமாக இருந்தேன்.
இப்போதானால் யார் கையாலானா என்ன என்று கூட தோன்றலாம்.
நான்கு வயது என்னுடைய இரண்டாவது பிள்ளையின் கைப் பில்
வாங்கிதான் காரியம் நடந்தது.
யார் கர்மம் பண்ரா, பேரன்தானே. பேரன் செய்வதும் புத்ர கர்மா போல தான்.
அந்த வார்த்தைகள் யாவருக்கும் ஒருவித கௌரவத்தைக் கொடுத்தது
என்றால் மிகையாகாது.
மறுநாளே என்னுடைய நாத்தனார் அகத்துக்காரர் உபசாரம் கேட்க
வந்திருந்தார்.
உடல்நலம் ஸரியில்லை ஏதோ காரணங்கள் சொன்னார்.
மனுஷாள் என்றால் இப்படி இருக்கணும். விட்டுக் கொடுக்காமல்
வந்து விட்டார்.
இப்படி உறவுக்காரர்கள் வருகைகூட பதிவெடுக்கப் படுகிறது.
ஏம்மா நீசொல்லக்கூடாதா? இதெல்லாம் எதற்காக? அம்மாவைப்
பார்த்ததும் கேட்டார்.
விரதங்கள் முடிப்பது போல அம்மாவிற்கு அசட்டு நம்பிக்கை.
இதுவே இந்த ஊரின் கடைசி நிகழ்வாக இருக்கும்.இருக்கட்டும்
என்று சொன்னேன்.
அப்படியேதான் ஆகியது.
ஒரு காலத்தில் அக்ரஹாரம் பூராவிலும் வீட்டிற்கு ஒருவர்,இருவர்
என இப்படி விதவைகளின் கோலங்கள் மனதிற்குக் கஷ்டம்
கொடுப்பதானபடி இருந்தது.
அந்த நிலை பூராவும் மாறிஇருக்கிறது இப்பொழுது.
காரியங்கள் முடிந்து ஊருக்குத் திரும்புமுன் நாத்தனாரைப் பார்க்கப்
போனேன்.
உள்ளே நுழைந்ததும் வாங்க மாமி அம்மாவைக் கூப்பிடறேன்.
மருமாள் வரவேற்கிராள்.
இங்கதான் அம்மா இருக்காள். பார்த்தால் கையில் நான்குநாள்க்
குழந்தை.
வாவா என்னால் வரமுடியலே இதுதான் காரணம்.
ஒருவார்த்தை அவர்கூடச் சொல்லவில்லை. என்ன உடம்போ
ஏதோ என்ற கவலை நமக்கு.
பெண்ணுக்கு கல்யாணம் ஆகலே, அதான் சொல்ல யோசனை.
பிள்ளை குழந்தை.
கருத்தடை பாப்புலராகிக் கொண்டிருந்த காலம்.
தான் செய்து கொள்ளவில்லையே,அது உறுத்தல்.
பெண்களுக்கு எவ்வளவு மனக்கிலேசம்? இஷ்டப்பட்டால் கூட
பயம் அதிகமாக இருந்தக் காலம்.
ஆச்சு. கல்கத்தா போகும்போது என் அக்காவைப் பார்க்கவும் திட்டம்.
நீ அங்கு போய் அவா வரலையே,போகலையேன்னு பேச்செல்லாம்
சொல்லாதே.
எனக்குப் பார்க்கணும், வந்தேன்னு சொல்லி பார்த்து விட்டு ப் போ.
அம்மாவின் அறிவுரை.
கையிலே சுப சீக்கிர ஆசீர்வாத அக்ஷதை, சில பக்ஷணங்கள் நானும்
போனேன்.
வா என்று கூப்பிடும் வழக்கமே இல்லாதவர்கள். எதுவுமே சொல்வதற்கு
முன் என் அக்கா கதறித் தீர்த்து விட்டாள்.
நேற்றுதான் எனக்குத் தெரியும். சின்ன பையனுக்கு உடல் நலம்
ஸரியில்லை. ஆஸ்பத்திரி வாஸம்.
அப்பா ஆசீர்வாதம்தான் செய்திருப்பார். அதுவும் தோன்றியது.
பெற்ற குழந்தைகளை எந்தத் தாய் தந்தையரும் எந்த ஸமயத்திலும்
ஆசீர்வதிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டார்கள்.
அந்தியக்காலம் எப்படி இருந்தது, காரியங்கள் எப்படி நடந்தது எல்லாம்
நீயும் தெரிந்து கொள்ளவே சொல்ல நான் வந்தேன்.
சொல்லியாயிற்று. துக்கம் பகிர்ந்து கொண்டாயிற்று. வேறு உறவுகார்கள்
வீட்டில் தங்கினேன். போய் வருகிறேன். என்னுடைய ரோல்
முடித்து விட்டேன்.
திரும்பவும் வருவேன். அம்மாவைப் பற்றி எழுதத்தான்.
Entry filed under: அன்னையர் தினம்.
18 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 9:42 முப இல் ஓகஸ்ட் 20, 2014
//பெற்ற குழந்தைகளை எந்தத் தாய் தந்தையரும் எந்த ஸமயத்திலும் ஆசீர்வதிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டார்கள்.//
மிக அழகாக அனைத்தையும் அணுஅணுவாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள். ரஸித்துப்படித்தேன். இருப்பினும் மனதுக்குக் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
2.
chollukireen | 10:10 முப இல் ஓகஸ்ட் 27, 2014
ரஸித்துப் படித்தேன். இந்த வார்த்தை ஒன்றே போதும்.
எப்பொழுதோ நடந்ததுதானே இது. மனதில் பதிந்துபோன நினைவுகள். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.அன்புடனும் ஆசிகளுடனும்..
3.
பார்வதி இராமச்சந்திரன். | 11:59 முப இல் ஓகஸ்ட் 22, 2014
ரொம்பவே உருக வைக்கிறது.. தங்கள் அம்மாவின் மன உறுதி, என் அம்மாவும் திடமுடன் இதையெல்லாம் எதிர்கொண்டதை நினைவுபடுத்தியது. அம்மாவுக்கும் போனில் படித்துக் காண்பித்தேன்.
4.
chollukireen | 10:15 முப இல் ஓகஸ்ட் 27, 2014
ஸம்பந்தப்பட்ட இம்மாதிரி நிகழ்வுகள் படித்தால் நம் வீட்டு நிகழ்வுகளும் ஞாபகம் வந்து மநதைச் சிரமப் படுத்தும். அம்மாவிற்குப் படித்துக் காண்பித்தேன் என்றும்,அதுவும் போனில் என்றும் எழுதியிருக்கிராய்.
என்னவென்று சொல்வதுன்னை.!!!!!!!!!!!!
அடிக்கடி வா. அன்புடன்
5.
adhi venkat | 6:45 முப இல் ஓகஸ்ட் 23, 2014
அந்த கால மனிதர்களின் சுபாவங்கள்….. நாங்கள் இருக்கிறோம் என்பதற்காகத் தான் பத்தாம் நாள் புடவை…….. தெரிந்து கொண்டேன் அம்மா.
முடியும் போது தொடருங்கள். காத்திருக்கிறோம்.
6.
chollukireen | 10:21 முப இல் ஓகஸ்ட் 27, 2014
ஸுமங்கலியாகக் காலமானாலும் பெண்களின் பிறந்த வீட்டிலிருந்து பத்தாவதுநாள் புடவை,வெற்றிலைப்பாக்கு,பூ,மஞ்சள் குங்குமம் வகையராக்கள் யாருக்கேனும் கொடுத்து கௌரவப் படுத்தும் வழக்கமும் உண்டு. உன் மறுமொழிக்கு மிகவும் நன்றி பெண்ணே. அன்புடன்
7.
chitrasundar | 2:35 முப இல் செப்ரெம்பர் 25, 2014
கமாக்ஷிமா,
உடல்நிலை சரியானதும் மீண்டும் வாங்கம்மா. எங்கள் ஊர் பக்கம் புடவை கொடுப்பது இப்போதும் உள்ளது. அம்மாவின் துணிச்சல் அசாத்தியமானது. அவருக்கேற்ற பெண்ணாய் நீங்க இருந்திருக்கீங்க.
ஊருக்குப் போனதால் பல பதிவுகளைப் படிக்காமல் விட்டிருக்கிறேன். எப்படியும் ‘அன்னையர் தினப் பதிவு’ இருக்கும் என்ற நம்பிக்கையில் அவற்றுள் இதைத் தேடிப் பிடித்து படித்துவிட்டேன். மற்ற பதிவுகளையும் படித்துப் பார்க்கிறேன். அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 7:36 முப இல் நவம்பர் 13, 2014
நான் மிக்கத் தாமதமாகத்தான் உன் பின்னூட்டம் பார்த்தேன். நன்றி. இப்போது பதிவுகள் அதிகம் எழுத முடிவதில்லை. பார்க்கலாம். அன்புடன்
9.
chollukireen | 11:12 முப இல் மே 3, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
போகிறவர்கள் போய்விட்டாலும், காரியங்கள் நடக்க வேண்டுமே! அந்தநாள்க் கதைகள்.அம்மாவினுடயது அலாதிதானே. படியுங்கள். பகுதி 16. அன்புடன்
10.
Geetha Sambasivam | 11:31 முப இல் மே 3, 2021
வேதனையான நிகழ்வுகள். பிள்ளை இல்லை எனில் பெண் வயிற்றுப் பேரன் தௌஹித்திரன் செய்வது மிகவும் உயர்த்தியாகச் சொல்லுவார்கள். பெண்ணும் செய்யலாம் என்பார்கள். ஆனால் யாராக இருந்தாலும் கைப்புல் வாங்கித் தான் செய்வார்கள். தௌஹித்திரன் செய்யலாம் என்றாலும் பெண்ணின் புக்ககத்தார் பெரும்பாலும் ஒத்துக்கொள்ளுவது இல்லை. கண்ணில் நீருடன் படித்தேன். உங்கள் அம்மா செய்து கொண்ட கோலம் மனதை அறுக்கிறது. கண்ணால் பார்க்கவே மனம் வேதனைப்படும்.
11.
chollukireen | 11:41 முப இல் மே 3, 2021
அதுவும் பெரிய பெண்ணின் பிள்ளைதான் செய்ய வேண்டும் . அவர்களுக்கும் இரண்டாவது பிள்ளைதான் செய்யலாம் என்பார்கள். எனக்கு மாமனார்,மாமியார் இல்லை. அப்பா கேட்டுக் கொண்டது. வயதானவர். அவருக்கு என் இரண்டாவது பிள்ளையைக் கொண்டு செய்தது. இன்னமும் நடக்கிறது இரணயரூபமாக.
12.
chollukireen | 11:53 முப இல் மே 3, 2021
கைப்புல் வாங்கி செய்தாலும் அதுதான் உயர்வாக மதிக்கப்படும். அந்தக்கால முறையோ,மனப்பக்குவமோ அம்மா எளிதில் ஸமாளித்ததுதான் அதிசயம்.அதுவே எங்களூரில் கடைசி இந்தக்கோலம். நன்றி. அன்புடன்
13.
Revathi Narasimhan | 3:39 பிப இல் மே 3, 2021
அன்பின் காமாட்சிமா,
ஒவ்வொரு சொல்லும் மந்தில் பதிகிறது. மனிதர்களின் உயர்வை
என்னவென்று சொல்வது??
1949 இல் இந்தக் கோலம் பாட்டிக்குச் செய்யவில்லை.
தப்பித்தாள்.
உங்கள் அம்மாவை நினைக்கையில்
மனம் கலங்குகிறது. இது என்ன உறுதியோ.
உபசாரம் கேட்கவந்த மாப்பிள்ளை. வார்த்தப் பிரயோகங்கள்
அசர வைக்கிறது. நன்றி மா.
விட்டுக் கொடுக்காத உறவுகள். அக்காவை நீங்கள் சமாதானம் செய்தது
எல்லாமே மனசுக்கு நிறைவு,. உயர்ந்த குடும்பம்.
நல்ல நாட்கள்.
14.
chollukireen | 11:29 முப இல் மே 4, 2021
ஆமாம். நீங்கள் சொல்வது ஸரியே. அதுவும் கிராமப்புரங்களில் இம்மாதிரி செய்து கொள்ளாவிடில் மடிகாரியங்களில் பங்கு கொள்ள முடியாது. விரதங்கள் செய்து கொள்ள முடியாது. இப்படி தொடரும் கதைகள். எல்லாம் கூட காரணங்களாக இருக்கலாம்.நன்றிம்மா. அன்புடன்
15.
நெல்லைத்தமிழன் | 4:05 பிப இல் மே 3, 2021
குடும்பம்தான் எவ்வளவு சிக்கல்கள் நிறைந்தது.
அம்மாவின் கோலம்… அந்தக்கால வழக்கப்படி சரிதான். அதற்கு அடுத்த தலைமுறையிலிருந்து மாறிவிட்டது.
இப்போது, கணவர் வேறு, தன் கோலம் வேறு என்ற எண்ணம்தான். காலத்துக்கு ஏற்ற மாற்றம்.
16.
chollukireen | 11:37 முப இல் மே 4, 2021
வைதீகக் குடும்பங்கள்,கிராமக், கட்டுப்பாடு,அந்த வழக்கம் மாறினதும் ஸரிதான். விழிப்புணர்வு வந்து விட்டது நல்ல காலம். நன்றி அன்புடன்
17.
ஸ்ரீராம் | 12:03 முப இல் மே 4, 2021
எதிரில் அமர்ந்து பேசுவதுபோல நடந்தவற்றை சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். மிகவும் கஷ்டமான நிகழவ்ஹ்கள். அப்போது இதெல்லாம் வழக்காமான நடைமுறையாகக் கூட இருந்திருக்கலாம். நல்லவேளை, இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறது.
18.
chollukireen | 11:50 முப இல் மே 4, 2021
நிறையவே மாறி இருக்கிரது. வைதீகக் குடும்பங்களே கிடையாது. வைதீகத்திற்கும் யாரும் இல்லை. பழக்கங்கள் வயதான என்னைப்போன்றவர்களுக்கு பார்த்த ஞாபகங்கள் இருக்கலாம்.நல்ல காலம்தான். அன்புடன்