ஸந்தோஷ விருதுகளும், அளித்தவர்களும்.
செப்ரெம்பர் 23, 2014 at 11:07 முப 25 பின்னூட்டங்கள்
விருதுகள் எப்போதும்,யாவருக்கும் ஸந்தோஷத்தைக்
கொடுப்பவை.
அதுவும் தொடர்ந்து கிடைக்குமாகில் பன்மடங்காக மகிழ்ச்சி
அதிகமாகும்.
கொடுத்தவர்களுக்கும்,வாங்குபவர்களுக்கும், காரணமானவர்களுக்கும்
குறைந்த பக்ஷம் , நன்றியையாவது இதன்மூலம் தெரிவித்துக் கொள்வது
அவசியமாகிறது.
இந்த வகையில் ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்குக் கிடைத்த இந்த விருதை
எனக்கும் அவர் பரிவு செய்திருந்தார்.
அடுத்து யாழ்பாவாணன் , அவருக்குக் கிடைத்த இந்த விருதை மற்றவர்களுடன்
எனக்கும் பரிந்துரைத்திருந்தார்.
மேலும் விஜிகுமாரி அவர்களும், அவருக்குக்குக் கிடைத்த இந்த விருதை
எனக்கும் பரிவு செய்திருந்தார்.
ஆக அடுத்தடுத்து மகிழ்ச்சியான ஸந்தோஷம்.
இதைப் பகிர்தளித்து என்னை ஞாபகமாக குறிப்பிட்ட மூவருக்கும்
மிகவும் நன்றி.
நிறைய பதிவுகள் படிக்கிறோம். எல்லோரும் ஆச்சரியத்தக்க வகையில்
பொருள்நிறைந்த,அவசியமான விஷயங்களை அருமையாகப் பதிவு
செய்கிரார்கள்.
இந்த விருது என்பது விருந்து மாதிரி. இதை ஆரம்பித்துத்,தொடர்ந்து
பலபேருக்கு அளித்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
எல்லோரும் எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்தினார்களாம்.
எலியும் தன் பங்கிற்குத் தன் வாலை உலர்த்தியதாம்.
பூனை இருந்திருக்காது. அது போல நானும் என்னைக் கவுரவித்தவர்களுக்கு
மனப்பூர்வமான அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கிடைக்கும் தளங்களையெல்லாம் படித்து விடுவேன்.
திரும்பவும் அங்கு போக எழுதிவைத்து இருக்கமாட்டேன்.
ஆக எல்லாவற்றையும் பார்த்துப் படித்த ரஸித்த அனுபவம் உண்டு.
ஆக இந்த விருதைத் தொடங்கி ,பலபேருக்கு அக்ஷயபாத்தி ரம் மாதிரி
ஊக்கத்தையும்,பெருமையையும் அளிக்கக் காரண கர்த்தாவான
எல்லா பதிவர்களுக்கும், நன்றியும் அன்பும் சேர வேண்டும்.
யாவருக்கும்,தனித்தனியே சென்றடைய விரும்புகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.
எனக்குத் தெரிந்த சுலபமாக போகக் கூடிய பதிவுகளை இங்கே பதிவு செய்கிறேன்.
அதிகம் நேரம் செலவிட முடியவில்லை. மனப்பூர்வமாகப்படிக்கும் உங்கள்
யாவருக்கும் விருதுகள்தான். அன்புடன் சொல்லுகிறேன்.
இன்னும் பல எண்ணற்ற தளங்கள் படிக்கிறேன். யாவரும் பெருமைபெற
வேண்டுகிறேன். ஆசிகள்
http://kovai2delhi.blogspot.in/
http://manammanamveesum.blogspot.in/2014/08/blog-post_13.html
http://kaagidhapookal.blogspot.de/
http://2008rupan.wordpress.com/
http://chitrasundar5.wordpress.com/
http://www.aalosanai.blogspot.com/
http://mahikitchen.blogspot.in/
http://ilayanila16.blogspot.in/
http://tamilmayil.blogspot.com/2013/07/blog-post_23.html
http://rajalakshmiparamasivam.blogspot.com/
http://mahalakshmivijayan.wordpress.com/
http://gardenerat60.wordpress.com/
http://hainalama.wordpress.com/
எனக்குப்,படிக்க,எழுதப் பிடிக்கும். வயோதிகம் சிறிது நாட்களாகத்
தடை செய்கிறது.
எவ்வளவோ எழுத நினைத்தும் ,ஏதோ ஒரு துளி மனதில் தோன்றியவைகளே
எழுதியிருக்கிறேன்.
வலையுலகநட்பு மறக்க முடியாதது. அதில் நனைந்து போகிறேன்.
யாவரின் பெயர்களும் ஞாபகம் வருகிறது.
Entry filed under: Uncategorized. Tags: விருதுகள்.
25 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:20 முப இல் செப்ரெம்பர் 23, 2014
ஒரே நேரத்தில் மூன்று விருதுகள் பெற்றுள்ள தங்களுக்கு என் நமஸ்காரங்கள், பாராட்டுகள், வாழ்த்துகள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. தங்களுக்குக் கிடைத்ததனால் இந்த விருதுகளுக்கே ஓர் தனிப்பெருமை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
பிரியமுள்ள கோபு
2.
chollukireen | 11:06 முப இல் செப்ரெம்பர் 24, 2014
உங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி. உங்களின் அபிமான வார்த்தைகள், பின்னூட்டங்கள்,இவைகளுடன், இதுவும் ஒரு ஸந்தோஷம். ஆசிகளும் அன்பும்.
3.
angelin | 11:54 முப இல் செப்ரெம்பர் 23, 2014
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் அம்மா !
எங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து விருதை எங்களுக்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றிகள் .
4.
chollukireen | 11:09 முப இல் செப்ரெம்பர் 24, 2014
நன்றி பெண்ணே. நீயும் இதை ஐந்து பேருக்குப் பகிர்ந்து
பெருமை அளிக்கலாம். உனக்குத் தெரிந்தவர்கள் ஏராளமாக இருக்கும். ஏற்றுக்கொண்டு பதிவிடவும்.
அன்புடன்
5.
ranjani135 | 3:34 பிப இல் செப்ரெம்பர் 23, 2014
மூன்று விருதுகள் உங்களை ஒரே சமயத்தில் தேடி வந்திருக்கின்றன. பாராட்டுக்கள். உங்களது நல்ல மனதிற்கு ஏற்றாற்போல் எல்லோருடனும் பகிர்ந்து சந்தோஷத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்.
மேலும் மேலும் விருது வந்து குவிய வாழ்த்துக்கள்!
6.
chollukireen | 11:14 முப இல் செப்ரெம்பர் 24, 2014
ரஜ்ஜனிக்குச் ஜே போடவேண்டும். வந்தாரை வாழவைக்கும் மகராஜியின் கப்பல். இந்த வார்த்தை ஸரியாக இருக்கும். என்னிடம் இருப்பது அன்பும் ஆசிகளும். இதையாவது கொடுத்துக் கொண்டு இருக்கலாமல்லவா? அன்பிற்கு அன்புடன்
7.
இளமதி | 7:21 முப இல் செப்ரெம்பர் 24, 2014
வணக்கம் அம்மா!
மிக்க மகிழ்ச்சி அம்மா!
விருதுகள் உங்கள் கைகளுக்கு வந்திட அவை அத்தனை பாக்கியம் செய்திருக்கின்றன.
உங்களால் விருதிற்குப் பெருமை சேர்ந்திருக்கின்றது!..
உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் அம்மா!
அதையும் எங்களெல்லோருக்கும் பகிர்ந்து தந்துள்ளீர்களே.. அம்மாவின் அன்பென்பது இதுதான்!
மிக்க நன்றி மா!…
இன்னும் இன்னும் பல விருதுகள் உங்களை வந்தடைய வேண்டி வாழ்த்துகிறேன்!
8.
chollukireen | 11:19 முப இல் செப்ரெம்பர் 24, 2014
பெண்ணே நீயும் ஐந்து தளங்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு இந்த விருதைக் கொடுக்கலாம்.
உன்னைப் பற்றியும் எழுதலாம்.
பெண்களுடன் அம்மாவின் உறவு இந்த முறையில் இருப்பது நல்லது. நன்றி பெண்ணே. அடிக்கடிவா. ஆசியும்,அன்பும்
9.
mahalakshmivijayan | 10:06 முப இல் செப்ரெம்பர் 24, 2014
காமாட்சி அம்மா!! முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்… மூன்று விருதை ஒரே நேரத்தில் பெற்று சாதனை புரிந்து விட்டீர்கள்! சமையல் பற்றிய பதிவுகள் ஆகட்டும் , அனுபவங்களை பற்றிய பதிவுகள் ஆகட்டும் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும்! உங்கள் அனுபவங்களை ஒவ்வொரு தடவை படிக்கும் பொழுதும் மிகவும் ரசித்திருக்கிறேன். அந்த பழைய காலத்து தமிழ்நடை ரொம்ப பிடிக்கும் எனக்கு. உங்கள் விருது மட்டும் அல்ல உங்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றென்றும் எங்களுக்கு அருள் புரிய வேண்டும். நன்றி !
10.
chollukireen | 11:23 முப இல் செப்ரெம்பர் 24, 2014
நன்றி மஹா. வாழ்த்துகளும்,ஆசிகளும் கொடுத்துக் குறையாதவை. சிலவில்லாதவை.
நவராத்திரி ஆரம்ப நாளில் ஸ்பெஷலாக உங்களுக்கு அளிக்கிறேன். உன் மறுமொழி மிகவும் அன்புடனுள்ளது.
ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்
11.
பார்வதி இராமச்சந்திரன். | 12:37 பிப இல் செப்ரெம்பர் 24, 2014
என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மா!.. நன்றியால் நெஞ்சு நிறைகிறது.. ‘ஆலோசனை’ வலைப்பூவுக்கும் விருதளித்து கௌரவித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேன்மேலும் எழுத ஊக்குவிக்கிறது.. அதற்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. ஒரே சமயத்தில் மூன்று விருதுகள் வென்றுள்ள தங்களுக்கு என் நல்வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும்.. தொடர்ந்து தாங்கள் எழுத்துலகில் சாதனைகள் புரியவும், நல்ல உடல் நலத்துடன், மன மகிழ்வுடன் பல்லாண்டு நீடுழி வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நவராத்திரி சமயத்தில், என் வலைப்பூவுக்கு தாங்கள் அளித்த இந்த கௌரவத்தை எந்நாளும் மறக்க முடியாது!.. மீண்டும் தங்களை வணங்குகிறேன்!.
12.
chollukireen | 8:05 முப இல் ஒக்ரோபர் 1, 2014
உன் ஸந்தோஷத்தை வரவேற்கிறேன். இளவயது ஸமுதாயம், மேன்மேலும் புகழ்பெற வேண்டும்.
யாவருக்கும் நவராத்திரி, விஜயதசமி நல் வாழ்த்துகளும் ஆசியும்,அன்பும்
13.
ஸ்ரீராம் | 2:49 பிப இல் செப்ரெம்பர் 24, 2014
விருது பெற்றமைக்கும், பெற்ற விருதைப் பகிர்ந்து கொடுத்தமைக்கும் நன்றிகள். விருதில் ‘எங்களு’க்கும்பங்கு கொடுத்தது சந்தோஷம் தருகிறது. நன்றி அம்மா.
14.
chollukireen | 8:06 முப இல் ஒக்ரோபர் 1, 2014
உங்கள் ஸந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
ஆசியுடனும்,அன்புடனும்.
15.
rajisivam | 3:05 பிப இல் செப்ரெம்பர் 24, 2014
காமாட்சி அம்மா!
எனக்கு மகிழ்ச்சியில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. என் தளத்தை நினைவில் வைத்திருந்து எனக்கும் விருது கொடுத்திருக்கிறீர்கள் என்பது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டது .
மூன்று விருதுகளை ஒன்றாக வாங்கியிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்களை வணக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். என்னுடன் விருது பகிர்ந்து கொண்டு உங்கள் அன்பில் என்னை திக்கு முக்காட வைத்து விட்டர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு இன்னும் பல விருதுகள் வந்தடைய வேண்டும் . அந்த விருதுகள் உங்கள் மூலமாக எங்களை வந்தடைந்து விடும் என்று தெரியுமே.விருது மட்டுமல்ல உங்கள் ஆசிகளும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தேவை அம்மா.
என் நமஸ்காரங்கள்
ராஜலக்ஷ்மி.
16.
chollukireen | 8:24 முப இல் ஒக்ரோபர் 1, 2014
உங்களுடைய, அன்பும்,ஆதரவுமான பின்னூட்டம் மிகவும்,மகிழ்ச்சியைத் தருகிறது. இம்மாதிரி பின்னூட்டங்கள் மூலம் நாமும் அடிக்கடி ஸந்திக்கலாம். உங்கள் குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும் , இனிய நவராத்திரி,விஜயதசமி வாழ்த்துகள்.ஆசிகளுடனும்,அன்புடனும்
17.
chitrasundar | 2:38 முப இல் செப்ரெம்பர் 25, 2014
கமாக்ஷிமா,
நீங்கள் விருதுகளைப் பெற்றதற்கும், அதை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கும் வாழ்த்துக்கள் அம்மா. விருதைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் சித்ரா.
18.
chollukireen | 8:26 முப இல் ஒக்ரோபர் 1, 2014
மகிழ்ச்சி சித்ரா. நவராத்திரி , விஜயதசமி வாழ்த்துகள்,
உனக்கும்,உன் குடும்பத்தாருக்கும். அன்புடன்
19.
vijikumari | 4:05 முப இல் செப்ரெம்பர் 25, 2014
நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விருதினைப் பெற்றுக்கொண்டு என்னை கௌரவித்துள்ளீர்கள் என்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆவலியும் அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை. உங்களைப்போன்ற பெரியவர்களின் அன்பையும் ஆசிகளையும் பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். அன்புக்கு நன்றி அம்மா
20.
chollukireen | 8:28 முப இல் ஒக்ரோபர் 1, 2014
உங்களுக்கும்,குடும்பத்தினர் அனைவருக்கும், நவராத்ரி,விசயதசமி நல் வாழ்த்துகள். ஆசியுடனும்,அன்புடனும்
21.
yarlpavanan | 4:54 பிப இல் செப்ரெம்பர் 29, 2014
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
http://wp.me/pTOfc-bj
22.
chollukireen | 8:30 முப இல் ஒக்ரோபர் 1, 2014
நன்றி. வந்து விட்டேன். படித்து மகிழுகிறேன். அன்புடன்.
23.
MahiArun | 1:09 பிப இல் ஒக்ரோபர் 1, 2014
விருது பெற்றதற்கு என மனமார்ந்த பாராட்டுக்கள் அம்மா! என்னையும் நினைவு வைத்துப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்!
24.
chollukireen | 6:56 முப இல் ஒக்ரோபர் 2, 2014
உன்னையும் நினைவு வைத்து . எப்போதுமே நினைவிலிருப்பவர்கள்தான் உன் போன்ற பெண்கள்.
ஸந்தோஷமும்,ஆசிகளும். அன்புடன்
25.
gardenerat60 | 9:36 முப இல் ஒக்ரோபர் 7, 2014
பாராட்டுகள் அம்மா!. வீட்டில் உடல் நலக்குறைவுகளால்
ப்ளாக் பார்த்தவுடன் , பதில் எழுத தாமதம் ஆகி விட்டது.
மன்னிப்பு கோருகிறேன்.
என்னையும் அவார்ட் லிஸ்டில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி. மிகப் பெருமையாக கருதுகிறேன்மா. நமஸ்காரங்கள்.