அன்னையர் தினப்பதிவு–17
நவம்பர் 17, 2014 at 5:14 முப 16 பின்னூட்டங்கள்
தாமதமாகத் தொடர்ந்தாலும், ஒரு சங்கின் தரிசனம் பற்றி
எழுதுகிறேன்.
ஒருமாதத்திற்கு முன்னர் என்பிள்ளையின் குடும்பத்தினருடன் புனே போய்
வந்த போது,அவ்விடம்தங்கிய என்னுடையஅம்மா வழி மூன்றுதலை
முறையிலானநெருக்க உறவுகுடும்பத்தினருடன் ஒருநாள் தங்கி இருந்தேன்.
பேச்சுக்கள் எங்கெங்கோ சென்று அப்பாவின் பூஜையில் உபயோகித்த
சிறியஉருவிலான பழமை வாய்ந்த சங்கின் ஞாபகம்வந்தது.
அம்மா, அதை அவர்கள் அப்பாவை பூஜையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்
எனக் கொடுத்திருந்தார். அதைப்பற்றி விசாரித்தேன்.
அதை பூஜையில் உபயோகிப்பதாகவும், இவ்வளவு பழமை வாய்ந்தது
எனத்தெரியாதெனவும் சொல்லி அதை எடுத்துக் காட்டினார்
.அவரப்பாவின்பூஜையது.
கணவன் மனைவி இருவரும் உத்தியோகத்திலிருந்தாலும், ஆசார சீலமான
குடும்பம்,
அந்தச் சங்கின் தரிசனம் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் குடும்பமும்
அவர்களின் அன்பும் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது.
சங்கை படமெடுத்து வந்தேன். பொக்கிஷமான தரிசனம் அல்லவா?
பின்னாடி வரும் டாக்டரும் பரிச்சயமானதும் அவரின் தாத்தாவிற்கு
வைத்தியம் செய்த போதுதான்.
இது ஒரு ஐம்பது வருஷக் கதை. உன் அப்பா பூஜையில் உபயோகித்தது,
என் அப்பாவின் பொக்கிஷம் என்றுசொல்லிவிட்டு வந்தேன்.
இனி அம்மாவைப் பார்க்கலாம்.
அம்மாவிற்கு எங்கும்,போகவர முடியாத அந்த வொரு வருடம் எப்படிக்
கழிந்தது என்ற போது அதுவும் ஸரியான முறையில்தான்க்
கழிந்தது. என் பெண் அவர்களுடன் இருந்தவளைத் தொடர்ந்து
படிக்க அவ்விடமே இருக்கும்படிச் சொன்னதினால் பிரச்சினை
ஏதும் இல்லை.
இருப்பினும் ஸோஷியல் ஸர்வீஸ் செய்யாதிருக்க முடியவில்லை.
எங்கள் ஊரில் ஒரு லோகல் ஃபண்ட் ஆஸ்ப்பத்திரி இருந்தது.
அதில் நியமித்திருக்கும் டாக்டரே அவ்வூருக்கும்,சுற்று வட்டார
கிராமங்களுக்கும் வைத்தியம் பார்ப்பார்.
எங்கள் கால கட்டத்திலேயே ராஜஸ்தானைச் சேர்ந்த பண்டாரி
என்ற டாக்டர் புதியதாக நியமிக்கப்பட்டிருந்தார். ஸர்நேம்தான்
பண்டாரி.
பெயர் சொல்லிப் பழக்கமில்லாததால் அவர் பெயரே பண்டாரிதான்.
தமிழ் தெரியாது.இளம் மனைவி,கைக்குழந்தையுடன், ஆஸ்பத்திரிக்கு
அடுத்த ஒரு பங்களா என்று சொல்லும் கிராமத்துப் பெரிய வீட்டில்
தங்கியிருந்தார் அவர்.
அந்த நாட்களில் சிவராத்திரி,கோகுலாஷ்டமி, போன்ற நாட்களில்
கண் விழிக்கிறோம் என்று சொல்லி, ஸக வயதுச் சிறிய பெண்கள்
கூடிக்கொண்டு கும்மாளக் கூத்து, பஜனை,பாட்டு என்று கூத்தடிப்போம்.
அப்படிதான் பெரியவர்கள் வர்ணிப்பார்கள்.
அப்படிப்பட்ட ஸமயத்தில் காசு வஸூல் செய்வோம்.மலிந்த காலமல்லவா?
காசென்றுதான் சொல்ல வேண்டும்.
கிட்டே இருக்கும் ஸ்டேஷனருகே வசிக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்,
பர்மாஷெல், டாக்டர்,யூனியன் ஆபீஸ் என இவர்கள் முக்கியமான
நபர்கள். மாத வருமான முள்ளவர்கள்.
இப்படி அந்த டாக்டரிடமும் எப்படியோ புரிய வைத்து ஒரு ரூபா
வாங்கி விட்டோம்.
அந்த டாக்டர் எங்கள் அப்பாவிற்கு அறிமுகமானவர்.எப்படியா?
எங்கள் உறவுகாரருக்கு வீட்டிற்கு வந்து தொடர்ந்து வைத்தியம் செய்ய
வேண்டியிருந்தது. அப்போது டாக்டருக்கு நிலையை விளக்கி தமிழில்
மொழி பெயர்த்துச் சொல்வதில்அப்பாவுடன் ஏற்பட்ட சினேகம் வலுவடைந்தது.
நாளாக ஆக டாக்டரும் ஓரளவு கொச்சையாகப் பேசினாலும் தமிழ்
பேசிப்,புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்.வைத்தியத்திலும் பிரபலமாக
ஆகிவிட்டார்.
மேலும் பிரபலமாவதற்கு வேலையை ராஜிநாமா செய்துவிட்டுச்
ஸொந்தமாகத் தொழில் செய்ய ஊரையடுத்த நகரமான விழுப்புரத்தைத்
தேர்ந்தெடுத்தார்.
என் அப்பா அவருக்கு தன்னிடம் படித்த நல்ல நிலையிலுள்ள ஒருவருக்கு
அவரைத் தபால்மூலம் அறிமுகப்படுத்தி, அவருக்கு வேண்டிய உதவிகள்
செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரும் மெடிகல் ஸம்பந்தப்பட்டவர். ஆதலால் அவருக்கு வேண்டிய
உபகரணங்கள்,மற்றும் வேண்டியவைகளை ஸகாய விலைக்கு, குறித்த
நேரத்தில் கிடைக்கச் செய்தார்.
விழுப்புரத்தில் அவருடைய கிளினிக் ஏக வரவேற்பைப் பெற்றிருந்தது.
எங்கள் ஊரிலும் அவருக்குப் பிறகு அநேக டாக்டர்கள் வந்தார்கள்.
போனார்களாகவே இருந்தது.
அம்மாதான் பரோபகாரியாயிற்றே?
டாக்டரும் ரொம்பப் பழக்கம். அவரின் மகத்துவமும் அதிகம்.
யாருக்குத் தேவையானாலும் மாமி கூடவேண்டும்.
மத்தியானம் மூணரை மணி வண்டி பிடித்துப் போவது.
ஐந்தரை மணி வண்டிப் பிடித்து வந்தூடலாம்.
புதுவை,விழுப்புறம் புகைவண்டி. நினைத்தபடி போகவர பஸ்ஸெல்லாம்
கிடையாது.
ஸ்டேஷனுக்கு அருகிலேயே கிளினிக். போனோம் வந்தோம் என வந்து
விடலாம்.
இந்த ஒருவருஷ கட்டாய ஓய்வு நிலையும் அம்மா எடுத்துக் கொள்ளவில்லை.
மாமி ஸ்டேஷனுக்கு வந்து விடுங்கள்எனச்சொல்லி அவர்களும் வந்து
விடுவார்கள்.
அம்மா பேச்சுவாக்கில் சொல்லுவார்கள்
பண்டாரி ஒரு பென்ஸிலம் அதாவது பென்ஸிலின் போட்டால் எல்லாம் ஒழுங்கா
வந்து விடும். என்ன உடம்போ தெரிஞ்சுடும்.
தெம்பில்லாட்டாக் கூட ஒரு இரண்டு மூணு ஊசி பண்டாரி போட்டாரான்னா
அவ்வளவு தெம்பு வந்து விடும், நல்ல கைராசி. விட்டமின் பி.12 ஆக இருந்திருக்கும்.
இப்படி ஸமயத்துக்கு ஏற்றமாதிரி மனதுக்குகத் தைரியமூட்டி ஒத்தாசைகள்
தொடர்ந்தது.
ஆஸ்த்மா மூச்சு வாங்கறதா.ராத்திரி நேரம்,பயமாயிருக்கு மாமி.
பயப்படாதே. அந்தாத்து மாமாக்குக் கூட அப்படி இருந்தது. அவரிடம் ஸத்தியா ஒரு
மாத்திரை வாங்கிக்கோ. கார்த்தாலே விழுப்புரம் போய் ஒரு ஊசி போட்டுடலாம்.
இப்படி உத்தேசங்கள்.
கல்யாணத்துக்கு முகூர்த்தம் பிள்ளையாத்திலே சொன்ன தேதிக்கு அவளுக்கு
இரண்டும் கெட்டானாக நாள். என்ன பண்றது.? நம்ம டாக்டர் இருக்கார் விசாரப் படாதே.
நல்ல மருந்தாகத்தான் கொடுப்பார். எப்போதாவது ஒரு முறைதானே விசாரப்படாதே.
இதெல்லாம் அம்மாவால் சொல்ல முடியும்.
நம்பிக்கை பொய்த்ததும் இல்லை.
அம்மாவுடன் வந்தவர்கள் ரயிலில் வந்திருப்பார்கள். அடுத்த ரயிலைப் பிடிக்க
என்று உடனுக்குடன் பார்த்து அனுப்புவார்.
என்னம்மா நல்லா இருக்யா, உன்னை விடமாட்டாங்கோ இவங்க.
எல்லாம் நல்லா கவனிச்சு மருந்து குடுத்திருக்கேன்.விசாரம் வேணாம்.
ஐயாதான் மருந்து சாப்டலே. ஒர்ரியே வேணாம். டாக்டரின் பரிவு.
இந்த நாளில் டாக்டர் வேறு யாருடனோ போனில் பேசிக்கொண்டு நமக்கும்
மருந்து சீட்டு எழுதிக் கொடுப்பார்.
நமக்கு என்ன சொல்ல வேண்டும் என்பது நமக்கே மறந்து போகும் நிலை.
இப்படியே மாமிகூட வந்தால் ராசி, பண்டாரி டாக்டர் ராசி என்ற நிலையிலேயே
காலம் ஒடிக்கொண்டு இருந்தது. இப்போது பண்டாரி இல்லை.
அவராஸ்ப்பத்திரி இருக்கு. பாண்டிரோடில் அதே இடத்தில்.
ஒரு நாள் ஐந்து ஆறுபேர் கும்பலாக வந்து உங்களைப்பற்றிய விவரங்கள்
கொடுங்கள், வேண்டும் என்று சொன்ன போது தூக்கி வாரிப் போட்டது.
யாரிவர்கள்? எதுக்கு வந்திருக்கிரார்கள்? ஏதாவது தப்பு தண்டாவா?
பொய் ஸாக்ஷி சொல்லக் கூப்பிடுகிரார்களா? அம்மாவின் நினைப்பு.
திகைப்பும், பயமுமாக என்ன வேண்டும் உங்களுக்கு?
என்ன ஆயிற்று? யோசனையாக இருக்கு. பார்ப்போம் அடுத்து.
பதிவு நீண்டுவிட்டது.
Entry filed under: அன்னையர் தினம்.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 6:50 முப இல் நவம்பர் 17, 2014
முதல் முறை வந்தபோது தமிழ் எழுத்துக்கள் வரவில்லை. கம்ப்யூட்டரை restart பண்ணிவிட்டு இப்போது வந்தேன்.
சங்குகளின் வகைகள் பிரமிப்பூட்டுகின்றன. அழகழகான சங்குகளின் அணிவரிசை!
உங்கள் பண்டாரி டாக்டர் போல எங்களுக்கு திருவல்லிக்கேணியில் ரிஷி டாக்டர், புரசைவாக்கத்தில் ஆச்சார்யா. ஆச்சார்யா டாக்டரின் பிள்ளைகளும் டாக்டர்கள். ஒரே மருத்துவமனையில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
நானும் உங்களைபோல பழைய காலத்திற்குப் போய்விட்டேன்.
பரோபகாரி அம்மாவிற்கு எந்த தொந்திரவும் வந்திருக்காது, என்றே நினைக்கிறேன்.
இது ஒன்றும் நீளமான பதிவு இல்லை. இப்படியே எழுதுங்கள், நன்றாக இருக்கிறது.
2.
chollukireen | 8:47 முப இல் நவம்பர் 21, 2014
பண்டாரியின் பிள்ளையும் டாக்டர்தான்.அதான் இப்பொழுதும் தொடர்கிறது. பாருங்கள் யாவருக்கும் ஒரு குடும்ப டாக்டர்,ராசிவந்த டாக்டர், என ஒரு ஒற்றுமை ஏற்படுகிறது.. அவர்களுக்கும் நல்ல பெயர் உண்டாகிறது. கடவுளுக்கு அடுத்தபடி டாக்டர்தான்.
நன்றாக இருக்கிறது.. உங்கள் வார்த்தைக்கு நன்றி.
வெகுநாட்களுக்குப் பிறகு தொடருகிறேன். அதுதான்
யோசனை. அன்புடன்
3.
chitrasundar | 11:30 பிப இல் நவம்பர் 18, 2014
காமாக்ஷிமா,
“இப்போது பண்டாரி இல்லை.அவராஸ்ப்பத்திரி இருக்கு. பாண்டிரோடில் அதே இடத்தில்” _____ ஆஸ்பத்திரி பேர் சொல்லுங்கம்மா. என்னக்காச்சும் பார்த்தா உங்களை நெனச்சுக்குவேன்.
இவ்வளாவு வருடங்களுக்குப் பிறகு அப்பா வைத்திருந்த சங்கை மீண்டும் பார்ப்பதும் ஒரு அதிர்ஷ்டம்தானே. பதிவின் முடிவு எங்களுக்குள்ளேயும் ஒரு திகைப்பைக் கொண்டுவந்துவிட்டது. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 8:58 முப இல் நவம்பர் 21, 2014
ஒரு பெரிய வீடு. இரண்டு கட்டு கூடம்,தாவாரம்,முற்றம்
என ,மாடியிலும் அதேமாதிரி கட்டமைப்பு. பண்டாரி ஆல்ப்பத்திரி என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய போர்டுகள். பார்க்க எளிமையாக இருக்கும்.. விழுப்புரம் ரயில் ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்ட் போகும் வழியிலேயே ஆரம்பத்தில் 7,8 வீடுகள் தள்ளி இருக்கும்.
விழுப்புரம் ஞாபகம் வந்தாலே வளவனூரும்,காமாக்ஷியம்மாவும் உனக்கு ஞாபகம் வரும்.
எங்கள் வீட்டிலும் சித்ரா சுந்தரைத் தெரியும். என்னைப் பொருத்த வரையில் அந்தச் சங்கு மிகவும் மகிழ்ச்சியைக்
கொடுத்தது. அதான் பதிவிலும் ஏற்றி விட்டேன். அன்புடன்
5.
chollukireen | 9:02 முப இல் நவம்பர் 21, 2014
இப்பகுதியை விருப்பம் கொடுத்ததிருமதி ரஞ்ஜனி அவர்களுக்கும், திரு ஆறுமும் அய்யாஸாமி அவர்களுக்கும் என் நன்றிகள்.
6.
பார்வதி இராமச்சந்திரன். | 9:28 முப இல் நவம்பர் 21, 2014
பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் போற்றத்தக்கவை அல்லவோ?!!..நம் முன்னோர் பூஜை செய்த பொருட்கள் ஒவ்வொன்றிலும் அவர்கள் ஆசீர்வாதமும் கலந்திருக்கில்லையா?!..அந்நாளைய மனிதர்களின் ஆத்மார்த்தமான அன்புக்கு ஈடே இல்லை.. டாக்டர்களிலிருந்து சாமான் வாங்கும் கடைக்காரர்கள் வரை ஒவ்வொருவரும் அன்பால் வாழ்வில் இணைந்திருந்தார்கள்.. படிக்க படிக்க சொல்லத் தெரியாத சந்தோஷம் வருகிறது.. முடிவு, தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது!!..சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்கோ!!..
7.
chollukireen | 10:52 முப இல் நவம்பர் 24, 2014
உன் மறுமொழி பார்த்து மிகவும் ஸந்தோஷம். வேலைக்காரர்கள்கூட அவ்வளவு அன்பும் ஆதரவுமுள்ளவர்களாக இருப்பார்கள்.. இந்தக்காலத்திலிருந்து கொண்டு அந்தக்காலத்தை அசை போடுவதில் ஒரு திருப்தி.. இப்படி பதிவேற்றினால் யாராவது இஷ்டமுள்ளவர்கள் படித்து அவர்களும் ஏதோ
ஒரு சிறிதளவாவது இதையும் நினைப்பார்கள். இந்த டாக்டர் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்றவர்.. நாராயணீயம் உன்னிடமிருந்து தெரிந்து கொள்ளப்போவதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
8.
chollukireen | 11:20 முப இல் மே 10, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அப்பா பூஜையில் உபயோகப்படுத்திய சங்கைப் பார்த்ததில் ஒரு ஆனந்தம். அதனை ஒட்டியே இந்தப்பதிவு நீள்கிறது. அம்மாவின் அந்த ஒருவருஷம். டாக்டரின் ராசி என்று செல்கிறதுஇந்தப் பதினேழாவதுப் பதிவு. நேற்று அன்னையர்தினப்பதிவு முதலாவதை வேர்ட்பிரஸ்ஸே ஞாபகப்படுத்தி இருந்தார்கள் விசேஷப் பதிவினில், படியுங்கள். அன்புடன்
9.
Revathi Narasimhan | 2:14 பிப இல் மே 10, 2021
அன்பின் காமாட்சிமா,
எங்கள் வீட்டிலும் அப்பா கொடுத்த வெண்சங்கு
இருக்கு. ராமேஸ்வரத்தில் கிடைத்து
கோவிலில் வைத்திருந்து
கொடுத்தார்.
உங்கள் நினைவு எனக்கும் வேறு நினைவு.
பண்டாரி டாக்டர் பற்றி அறிய நன்றாக இருக்கிறது.
எத்தனையோ நல்லவர்கள்
நம் வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்கிறது.
உங்கள் அம்மாவைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்.
ஆவலாகக் காத்திருக்கிறோம்.
10.
chollukireen | 11:32 முப இல் மே 11, 2021
அவரவர்கள் ஞாபகங்கள் வருகிறது இல்லையா? ஆழ்ந்து படிப்பதால் வரும் நினைவுகள். நல்லவர்களைச் சந்தித்தோம். இப்போது அவர்களைப் பற்றி சிந்திக்கிறோம். திங்கட் கிழமை தோறும் அம்மா வந்துகொண்டு இருக்கிறாள். நன்றி உங்கள் மறுமொழிக்கு. அன்புடன்
11.
Geetha Sambasivam | 12:53 முப இல் மே 11, 2021
அருமையான நினைவுகள். அந்தக் காலங்களில் குடும்ப மருத்துவர் என்பவர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். குடும்ப விஷயங்களையும் நிஜம்மாகவே அறிந்தவராகவும் இருப்பார். வைத்தியமும் பார்ப்பார்/ஆலோசனைகளும் கொடுப்பார். நல்லதொரு நினைவலை.. தொடர்ந்து ஏன் தேடினார்கள் உங்கள் அம்மாவை எனத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கேன். இதெல்லாம் வந்தப்போப் படிக்காமல் விட்டிருக்கேன்.
12.
chollukireen | 11:41 முப இல் மே 11, 2021
பரவாயில்லை. இப்போது வந்து படிக்கிறீர்களே அதுவே போதும். எல்லாம் அவரே பார்ப்பார். ஸகல கலா வல்லவராகவும் டாக்டர் இருப்பார். இப்படியெல்லாம் கூட காலம் இருந்தது..நேர் எதிராக இப்போது இருக்கிறது. ஓடிப்போகிறது ஒருவாரம். நன்றி. அன்புடன்
13.
நெல்லைத்தமிழன் | 1:56 பிப இல் மே 11, 2021
அப்பா கைபட்ட சங்கு – நிச்சயம் உங்களை நெகிழ்த்தியிருக்கும்.
சங்கு படங்கள் மிக அழகு.
எங்க அப்பா உபயோகித்த “தந்த” நெத்திக்கு இட்டுக்கொள்ளும் குச்சியை எங்கு வைத்தேன் என்றே தெரியலை.
கைராசி டாக்டர் …. இதெல்லாம் அந்தக் காலத்தில் நிறையவே உண்டு. நெல்லையில் டாக்டர் வரதராஜன்…
14.
chollukireen | 11:16 முப இல் மே 12, 2021
அப்பாவின் வயது இப்போது கணக்குசெய்தால் 140 வருஷங்கள். அந்தச் சங்கைப் பார்க்கும்போது எவ்வளவோ கதைகள் ஞாபகத்திற்கு வந்தது. அம்மாதிரியே வெள்ளி gகோ முகம் யாருக்கோ தானம் செய்தது. பூஜைப் பாத்திரங்கள் இப்படிப் பலவிஷயங்கள். பெரியவர்கள் உ பயோகித்த ஸாமான்கள் யாவும் பொக்கிஷம்தான் பார்த்தால். டாக்டர்களும் மறக்க முடியாதவர்கள். அன்புடன்
15.
ஸ்ரீராம் | 12:15 முப இல் மே 12, 2021
பழமையான சங்கு விசேஷம். அதைப் பாதுகாத்து வைத்திருப்பபது ஆச்சர்யம்
அந்தக்காலத்தில் எல்லாம் ஒரு பெனிசிலின் ஊசியில் சரியாகிவிடும் என்று நம்பிக்கிற்கு. இன்னமும் பெனிஸிலாயின்ட்மென்ட் போட்டேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். சஸ்பென்சாக நிறுத்தி இருக்கிறீர்கள்!
16.
chollukireen | 11:20 முப இல் மே 12, 2021
சிலருக்கு பெனிஸிலின் அலர்ஜி. எனக்குக் கூட. இப்போது உபயோகத்தில் இல்லை அல்லவா? அன்புடன்