பெப்பர் கார்லிக்சாஸ். நூடல்ஸுக்கானது.
நவம்பர் 27, 2014 at 5:14 முப 12 பின்னூட்டங்கள்
இந்தச் சாஸை நூடல்ஸுடன் செய்து கொண்டால் சாப்பிட ருசியாக
இருக்கும். எல்லாக் காய்வகைகளும் இதனுடனிருப்பதால்
நூடல்ஸுடன்லேசான காய்களைச் சேர்த்து வதக்கினாலே போதும்..
செய்வதும் கஷ்டமொன்றுமில்லை. ஸாதாரணமாக சைனீஸ் ஃபிரைட்
ரைஸ் ,நூடல்ஸ் சாப்பிட்டு ருசித்தவர்களுக்கு இதைப் பற்றித் தெரியும்.
உங்களுக்கும் எங்கள் வீட்டில் செய்வது மாதிரி பார்க்க வேண்டாமா?
என்னுடைய நாட்டுப் பெண் செய்வதைப் பார்த்துதான் நானும்
செய்கிறேன்.
வேண்டியவைகள். காய்கறிகள்
வெங்காயத்தாள்—-நறுக்கியது–அரைகப்
பேபி கார்ன்–2—மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கோஸ்–மெல்லியதாக நறுக்கியது—அரைகப்
காரட் —-தோல் சீவி மெல்லியதாக நறுக்கியது–அரைகப்
பாலக் கீரை—நறுக்கியது அரைகப்
காப்ஸிகம்—-நறுக்கியது கால்கப்.
காலிப்ளவரும் போட்டுள்ளேன்.
5,6 துண்டு பனீரும் போடலாம்.
யாவற்றையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
அடுத்து அரைப்பதற்கு வேண்டியவைகள்.
மிளகு—ஒரு டீஸ்பூன்
உரித்த பூண்டு இதழ்கள்—-6
தக்காளி—1
பொடிக்க
வெள்ளை எள்—-1 டீஸ்பூன்
வேர்க்கடலை—-1 டேபிள்ஸ்பூன்.
ருசிக்கு—-உப்பு
ஒரு துளி சர்க்கரை.
எண்ணெய்—-2 டீஸ்பூன்.
செய்முறை.
எள்ளையும்,வேர்க் கடலையையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்
கரகரப்பாகவே பொடித்துக் கொள்ளவும்.
தக்காளியுடன் மிளகு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயை நன்றாகச் சூடாக்கி, வெங்காயத்
தாளை நன்றாக வதக்கவும்.
மற்ற காய் கறிகளைச் சேர்த்து,3கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக
வேக வைக்கவும்.
வேண்டிய உப்பு துளி சர்க்கரை, அரைத்த பூண்டு தக்காளி விழுதைச்
சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
நீர்க்கத் தோன்றினால் ஒரு டீஸ்பூன் மாவைக் கரைத்துச் சேர்க்கவும்.
ஒரு கொதிவிட்டு இறக்கி பொடித்த எள்,வேர்க்கடலைப் பொடியைக்
கலந்துக் கிளறவும்.
நான்தான் முதலிலேயே கூறினேனே. அப்படி நூடல்ஸ்
,ஃபிரைட் ரைஸின் உகந்த ஜோடியிது.
இளம் வயதுப் பிள்ளைகள் ருசித்துச் சாப்பிடும் வகை. பாருங்கள்.
முயற்சியுங்கள்.
படத்தில் தக்காளி இல்லையா?
Entry filed under: சாஸ்வகைகள். Tags: சாஸ்வகைகள்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 7:39 முப இல் நவம்பர் 27, 2014
நிச்சயம் இந்த செய்முறை பெண்ணிற்கும், நாட்டுப் பெண்ணிற்கும்தான்!
எனக்கென்னவோ இந்த நூடுல்ஸ் பிடிப்பதில்லை. படங்கள் நல்ல கலர்புல்! கொதிக்கும் சாஸ் நன்றாக இருக்கிறது.
2.
chollukireen | 8:51 முப இல் நவம்பர் 29, 2014
படங்கள் பிடிச்சிருக்கு. அது போதுமே. பிடிச்சவா சாப்பிடட்டும். பேத்தி ஃபேஸ் புக்கிலே அமெரிக்காவிலிருந்து லைக் போடரா. எப்படியாவது கமென்ட் வந்தா ரொம்ப ஸந்தோஷம். வந்து கமென்ட் கொடுக்கரது ஸந்தோஷம். அன்புடன்
3.
adhi venkat | 7:24 முப இல் நவம்பர் 28, 2014
பார்க்க அழகாக இருக்கிறது. எங்கள் வீட்டில் யாருமே இந்த நூடுல்ஸ் சாப்பிடுவதில்லை…
அம்மா இம்முறை தீபாவளிக்கு உங்களின் மாலாடு ரெசிபியை வைத்து தான், நானும் மாலாடும், மைசூர்பாகும் செய்தேன். மாலாடு ஜோரா பிடிக்க வந்தது. தங்களின் முந்திரியை பொடித்து போடும் டெக்னிக்கால்…
சில மாதங்களாக நான்வலைப்பக்கமே வராததால் தாங்கள் அழைப்பு விடுத்திருந்த தொடர்பதிவை என்னால் தொடர இயலவில்லை. மன்னிக்கவும்.
4.
chollukireen | 10:34 முப இல் நவம்பர் 29, 2014
மூன்றாவது முறையாக பதில் எழுதுகிறேன். போஸ்ட் செய்யுமுன்னரே ப்ராப்ளம் வந்து விடுகிறது. மாலாடு செய்து கமென்ட்.டெக்னிகல் குறிப்பிட்டது மகிழ்வு.
தொடரைத் தொடரமுடியாததற்கு பரவாயில்லை.
உன்னைக் காணோமே என்று சிந்தித்தது என்னவோ
உண்மை. நூடல்ஸ் மேகி ப்ரபலமாக இருக்கே. இங்கெல்லாம் நூடல்ஸ் வகை சற்றுப் பிரபலம் என்றே சொல்ல வேண்டும். எனக்கு வேண்டிய இரண்டு பேர்களுக்கு
நூடல்ஸ் பிடிக்காது. எதற்கெடுத்தாலும்,பூண்டு,வெங்காயம் என்பது நமக்கு இல்லாததே காரணம்.
சேவை,சேமியா இப்படி நம்முடைய உபயோகங்கள்.
யாருக்காவது ஸமயத்தில் சொல்லி உதவலாமே.
வாங்கின அவார்டைக் கூட பதிவில் போட்டுக்கொள்ளும் வகை தெரிந்துகொள்ளவில்லை.
உன் அன்பான பின்னூட்டம் கண்டு நன்றி. அன்புடன்
5.
இளமதி | 9:16 முப இல் நவம்பர் 29, 2014
அம்மா அன்போடு தரும் அனைத்தும் அமிர்தமே!
எங்கள் வீட்டில் நூடில்ஸ் பெரும்பாலும் இருக்கும்! பிடித்த உணவு! விரைவு, அதைவிட நான் இங்கு விதவிதமான ருசிதரும் கீரை பாஸ்தா, தக்காளி பாஸ்தா, முழுக்கோதுமை பாஸ்தா இப்படியானவையே
வாங்கிச் சமைப்பேன்!
இந்த சோஸ் சற்று வித்தியாசமாகச் செய்துகாட்டியுள்ளீர்கள்.. அருமையாக இருக்கும் என நினைக்கின்றேன்! செய்து பார்க்கின்றேன்!
மிக்க நன்றி அம்மா!
—————————————————
அம்மா! அங்கு வந்து கவிதைகளை ரஸித்தமைக்கு
மிக்க நன்றி மா!
முதலில் என்னை மன்னிக்க வேண்டும் அம்மா!…
இங்கு உங்கள் வலைக்கும் வரமுயலும் ஒவ்வோர் சமயமும் ஏதாகிலும் இடையே தடங்கல் வந்திடவே வருவது ஒத்திப்போடப்பட்டு அப்படியே விடுபட்டுவிட்டது.
அம்மா!..உங்கள் பக்கம் என்றில்லை பலபேரின் வலைப்பகங்கள் தற்போதெல்லாம் எனக்கு வீட்டில் ஏற்பட்டுள்ள பணி நெருக்கடி அதிகரிப்பால் போகவே முடியவில்லை! வருந்துகிறேன் மா!..:(
தற்சமயம் இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் அதிகரிப்பு அதனால் எனக்கேற்படும் மனநிலைச் சிதைவுமே காரணம்!..
மீண்டும் இங்கு வந்து பார்த்துக் கருத்திட முடிந்தவரை முயல்கிறேன்மா! மன்னியுங்கள் என்னை!…
முடிந்தால், விரும்பினால் உங்கள் ஈமெயில் முகவரி தாருங்கள் அம்மா! உங்களுடன் எழுத நிறைய உண்டு எனக்கு! என் வலையின் கருத்துப் பகுதியில் எழுதிவிடுங்கள். வெளியே விடாமல் பெற்றுக்கொள்வேன்! மிக்க நன்றி அம்மா!
6.
chollukireen | 10:56 முப இல் நவம்பர் 29, 2014
உன் நீண்ட மறுமொழி மனதுக்கு ஸமாதானமாகிவிட்டது.
வலைப்பூவின் என் பெண்களை ஸாக்ஷாத் என்பெண்களாகவே நினைத்துப் போற்றும் ஒருவித மனநிலை. விருப்பமானவர்களைப் பார்க்காவிட்டால்ஏதோ வெற்றிடம். பரவாயில்லை. உன்நிலை தெரிகிரது. எனது ஈ.மெயில் முகவரி உனது வலையின் கருத்துப் பகுதியில் கொடுத்திருக்கிறேன்.
தவறாக நினைப்பதற்கு ஒன்றுமே இல்லை.
மனதைத் தைரியமாக வைத்துக்கொண்டு செயல்படவும்.
எல்லாம் நன்றாகவே நடக்கும். மன்னிப்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை. இதுவும் அன்புத்தேடல்தான். அன்புடன்
7.
chollukireen | 10:58 முப இல் நவம்பர் 29, 2014
நூடல்ஸ் சாஸ் குறித்த விருப்பத்திற்கு நன்றி. அன்புடன்
8.
chollukireen | 11:27 முப இல் நவம்பர் 29, 2014
நீண்ட பதிவுதான், அன்னையர்தின 17, 18 பதிவுகள் .
முடிந்தபோது பார்க்கவும். அன்புடன்
9.
இளமதி | 1:13 பிப இல் நவம்பர் 29, 2014
அம்மா!… மிக்க மிக்க நன்றி மா!..
அன்னையர் தின பதிவு தொடராகப் படித்தது இடையில் தவறவிட்டுவிட்டேன். மீண்டும் நேரத்தைப் பிடித்து இழுத்துவந்து படிப்பேன் மா..:)
உங்களின் ஈமெயில் கிடைத்தது. விரிவாக பின்னர் எழுதுகிறேன். அன்பாய் அரவணைக்கவும்
கண்டிக்கவும் என் அம்மாவுக்கு இல்லாத உரிமையா!..
எனக்கு என் அம்மா சென்றுவிட்ட வலியே தெரியவில்லை உங்களுடன் பேசும்போது…
அவளையே இங்கு மீண்டும் காமாக்ஷியம்மா வடிவத்தில் அத்தனை வாஞ்சையுடன்… காணுகின்றேன்!
மீண்டும் நன்றி மா!
10.
chollukireen | 5:31 முப இல் திசெம்பர் 2, 2014
இளமதி உன் அன்பிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
11.
பார்வதி இராமச்சந்திரன். | 11:36 முப இல் திசெம்பர் 1, 2014
இப்போதான் பார்க்கிறேன். ரொம்ப உபயோகமான பகிர்வு!. நான் அவ்வளவாக சாப்பிடாவிட்டாலும் வீட்டில் ஆர்வமுடன் சாப்பிடுவார்களே!.. சுவையும் வித்யாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது.. சைனீஸ் சாமானெல்லாம் அதிகமாக சேர்க்காமல், இருக்கும் பொருட்களை வைத்து, சுருக்க செய்து விடலாம் போல… ரொம்ப நன்றி அம்மா!!!..
12.
chollukireen | 5:37 முப இல் திசெம்பர் 2, 2014
இதெல்லாம் நாட்டுப் பெண் செய்வதைப் பார்த்து,அவர்களின் பெண்களுக்காக நான் செய்வதிது. இந்த நாட்களில் சிறிய வயதுப் பசங்களுக்கு விதவிதமான
ருசிகள் வேண்டியுள்ளது. பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி.
அன்புடன்