பொரி உருண்டை
திசெம்பர் 4, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்
கார்த்திகையை நினைத்துக் கொண்டு நாம் ஏதாவதுஎழுதினோமா என்று பார்த்தால் ஜெனிவாவில் கிடைத்த பொரியில் செய்தது நான் இருக்கிறேன் என்று முன் வந்து நிற்கிறது. அதுதான் நானே எடுத்த முதல் போட்டோவும். காமா,சோமா என்று இருந்தாலும் கார்த்திகைப்
பருப்பு தேங்காயும்,உருண்டைகளும் கிடைத்த வெல்லத்தைக் கொண்டு செய்தது. நான் எடுத்த முதல் படம்.
என் கேமிராவில் என்ன இருக்கும்? கம்யுட்டரில்தான் என்ன இருக்கும்.? இதுவே அது.அதுவே இது என்ற கணக்கில்தான்.
பாருங்கள்.அண்ணாமலைக் கார்த்திகை வாழ்த்துகளுடன்.
அன்புடன்கோபுர தரிசனம் கோடி புண்யம். திருவண்ணாமலை கோபுரம்.
இவைகளும் கோபுரமும் என் காமிராவின் பதிவே.
சுத்தம் செய்த அவல் பொரியோ அல்லது நெல் பொரியோ எது
கிடைக்கிரதோ ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.
வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்
சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்
மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்
ஏலப்பொடி—கால் டீஸ்பூன்
சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை சிறிது
நெய்—-சிறிது
செய்முறை. —-நெய்யில் தேங்காய்த் துண்டுகளை சிவக்க
வறுத்து வைத்துக் கொள்ளவும்.
சற்று கொள்ளளவு பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி
நன்றாக மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நிதான தீயில் வைத்து
பாகாகக் காய்ச்சவும்.
பாகில் பொடிகளைச் சேர்க்கவும். முதிர் பாகாக வரும் போது
பொரியையும், தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு கையில்
அரிசி மாவை லேசாக தடவிக்கொண்டு வேண்டிய சைஸில்
உருண்டைகளாக உருட்டவும்.
விருப்பமுள்ளவர்கள், பொட்டுக் கடலையையும், வறுத்த
வேர்க் கடலையையும் பொரியுடன் சேர்க்கலாம்.
பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.
காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்
கரையாமல் கெட்டியாக உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.
திருக்கார்த்திகைக்கு விசேஷமான பொரி உருண்டை.
சாதாரணமாக எப்போதும் கிடைக்கும் முட்டைப்பொரி[அதாவது அரிசிப் பொரி]
இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம் பொரி 3 பங்கு, வெல்லம் 1 பங்கு கணக்குதான்.
பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக
வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி…
View original post 7 more words
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar | 11:19 பிப இல் திசெம்பர் 4, 2014
காமாக்ஷிமா,
பொரி உருண்டை குறிப்பைத் தேடிப்பிடித்து பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிம்மா.
ராஜ கோபுரத்தை அழகா படம் எடுத்திருக்கீங்க. என் பதிவுக்கும் வாங்கோம்மா. திருவண்ணாமலை கோயில் பற்றிதான் படங்களுடன் பதிவிட்டிருக்கிறேன். அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 8:59 முப இல் திசெம்பர் 5, 2014
உன் பதிவிற்குப் போய்விட்டு வந்தேன். அருமை.
கோலியனூர்,வளவனூர் படங்களும் எடுத்தேன். எழுதுவதில் சற்றுச் சிரமம் ஏற்படுகிறது. அதையும் எழுதுகிறேன்.
பொரி உருண்டைக்கு மகிழ்ச்சியா? ஃபாரின் பொரிஉருண்டை அது. அன்புடன்
3.
adhi venkat | 8:16 முப இல் திசெம்பர் 5, 2014
பார்க்கவே ஜோரா இருக்கும்மா. நானும் கொஞ்சமாக பொரி வாங்கி உருண்டைகள் செய்தேன். அப்பத்துக்கு ஊற வைத்திருக்கிறேன்.
அண்ணாமலைக்கு அரோகரா!
4.
chollukireen | 9:05 முப இல் திசெம்பர் 5, 2014
ஊறினால் அப்பம் இன்னும் மிருதுவாக வரும். உன்னுடைய பின்னூட்டத்தில் எனக்கு ஒரு அபிமானம் கலந்திருக்கிறமாதிரி தோன்றும். என்ன காரணம் தெரியாது.ஸரிமளமளவென்று காரியம் முடிந்தால், ஊரின் முதல் விளக்காக தீப வரிசையைப் பூசித்து அழகாக
அலங்காரம் செய்து மகிழவும். ஆசிகள் அன்புடன்
5.
அழகான யாழ்ப்பாணம் | 1:46 பிப இல் திசெம்பர் 5, 2014
பார்க்கவே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகின்றது.
6.
chollukireen | 2:04 பிப இல் திசெம்பர் 5, 2014
செய்முறைதான் உள்ளதே. யார் கிச்சன் அதிகாரியோ செய்து விட்டால்ப் போகிறது. அன்புடன்
7.
இளமதி | 8:02 முப இல் திசெம்பர் 6, 2014
தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அம்மா!
பொரி உருண்டை அழகாக இருக்கின்றது மா!
நானும் அவலைப் பொரித்துச் செய்து பார்த்து சுவாமிக்கு நிவேதித்து வீட்டில் சாப்பிட்டார்கள்..:)
பாகை கெட்டிப்பாகாக காய்ச்சாமல் சற்று முன்னரே எடுத்து சேர்த்து விட்டதால் முழுவதையும் உருண்டை பிடிக்க முடியவில்லை. ஆயினும் சூட்டுடன் 8 – 10 உருண்டை செய்தது போக மிகுதி உதிரியாக விட்டுவிட்டேன்!..:)
வீட்டில் விரும்பிச் சாப்பிட்டார்கள்.!
குறிப்பிற்கு மிக்க நன்றிமா!..
நேரக் குறைபாடு! அதுதான்.. மீண்டும் வருகிறேன்!
எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
8.
chollukireen | 8:11 முப இல் திசெம்பர் 9, 2014
உன் பின்னூட்டத்தினால் உன் பொரி உருண்டையை நானும் சாப்பிட்ட உணர்வு. சிலஸமயங்கள் பாகு வெல்லமாக கிடைக்காவிட்டாலும் இம்மாதிரி நேர்வதுண்டு. கார்த்திகையன்று ருசி விசேஷமாகத் தெரியும். மனம்தான் காரணமாக இருக்கலாம்..
உனக்கு நேரம் கிடைக்கும்போது வன்தால்ப் போதும். னன்றி. அன்புடன்
9.
ranjani135 | 2:32 பிப இல் திசெம்பர் 15, 2014
கோபுர தரிசனமும் தீபங்களின் வரிசையும் மனதை கவர்ந்தன. ரொம்பவும் தாமதமாக வந்திருக்கிறேன். நாளை மார்கழி மாதம் பிறக்கப் போகிறது!!!
10.
chollukireen | 5:38 முப இல் திசெம்பர் 16, 2014
வந்ததுதான் கணக்கே தவிர எப்போது வந்தீர்கள் என்பது
ஏதும் இல்லை. மறுமொழிக்குச் ஸந்தோஷம். அன்புடன்