சிவப்பு கீரைத்தண்டு கூட்டு.
திசெம்பர் 10, 2014 at 3:57 பிப 14 பின்னூட்டங்கள்
ஸாதரணமாக எங்கள் பால்ய காலத்தில் சாப்பிட உட்காரும்போது
அன்றைய சமையலை அபிப்ராயம் சொல்லும் வகையில், இன்று என்ன
கீரை,கீரைத்தண்டு நாழி இருபத்திரண்டா என்று தமாஷாகச் சொல்லுவார்கள்.
ஆக கீரைத்தண்டு வேக அவ்வளவு நாழிகையா என்று நினைக்காதீர்கள்.
தண்டிலும் எத்தனையோ விதம். எல்லோர் வீட்டிலும், தோட்டத்தில்
கீரை விதைத்திருப்பார்கள்.
முளைக்கீரை,மூன்றுமாதத் தண்டு கீரை,ஆறு மாதத் தண்டு என்று பலவித
வகைகள் இருக்கும். இதில்,சிவப்புக்கீரை,பச்சை என்று விதங்களுண்டு.
வெள்ளை வெளேறென்று சில கீரைகள் இடையே இருக்கும்.
அதை வெள்ளைகாரன் கீரை என்று சொல்லுவோம். முளைக்கீரை
சீக்கிரமே எடுத்துச் சாப்பிடலாம்.
மூன்று மாத தண்டு மெள்ள மூன்று மாதங்களில்தான் விதை பிடிக்கும்.
அதுவரை,தண்டு,,கீரை என நீண்ட நாள் உபயோகம்.
இது மூன்றுமாதத் தண்டு செழிப்பாக இருந்தது.
ஆறுமாத தண்டு ,கீரை நீண்டநாள் பலன் கொடுக்கும். விதை முற்றி ,
விதைசேகரித்தவுடன் கூட அதன் தண்டு, சாப்பிட உபயோகமாகும்.
கிழத்தண்டு.அவ்வளவு ருசி,. வேக கொஞ்சம் நாழியாறது. அவ்வளவு
தான் பட்டாணியோ,கொண்டை,வேர்க்கடலையோ பருப்புடன் சேர்த்து,,
அரைத்துவிட்டுச் செய்தேன்.அவ்வளவு திவ்யமாக இருந்தது. இப்படி
வர்ணனைகளுடன்நல்ல காரமான கூட்டு சாப்பிட்டது, பிறரின்
வர்ணனைகளுடன் ஞாபகம் வருகிறது.
நாங்கள் சென்னையிலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் தரிசனம்
செய்யப் போயிருந்தோம்.. மே மாதம்.
கோயிலினின்றும் வரும்போது இருட்டி விட்டது.காரினின்றும்
வெளியிலே பார்த்தால் சிவப்பு கீரைத்தண்டு கையில் பிடித்துக் கொண்டு
நடை பாதையில்யாரோ போவது போல் இருந்தது.
அதென்ன கீரைத்தண்டா கேள்வி கேட்கும் முன்னரே கார் கொஞ்சம்
முன்னேறிவிட்டது.
ஆமாம் உங்களுக்கு வேண்டுமா? ப்ளாகில் போட.
மாப்பிள்ளை வண்டியை பின்னோக்கிப் போக வைத்து கீழே இறங்கி வாங்கி
வந்தும் விட்டார்
செழிப்பான சிவப்பு கீரைத் தண்டு. இது முன் கதை. பின்கதை செய்முறை.
சிவப்புக் கீரைத்தண்டில் கால்ஷியம்,பாஸ்பரஸ் போன்ற சக்திகள் இருக்கிரது.
ருசியும் நன்றாக உள்ளது. பித்தத்திற்கும் மிகவும் நல்லதாம். அதான்
ருசியானது.
வேண்டியவைகள்.
இரண்டு கிண்ணங்கள்,அதாவது 2 கப்பிற்கு அதிகமாகவே நறுக்கின துண்டங்கள்
இருந்தது. பெரிய துண்டுகளாகப் போட்டு நார் நீக்கி சிறியதாக நறுக்கவும்.
பயத்தம் பருப்பு—அரைகப்.
தேங்காய்த் துருவல்–கால்கப்
மிளகு—ஒரு டீஸ்பூன், வாஸனை அதிகம் வேண்டாமென்றால்
குறைத்துக் கொள்ளுங்கள்
மிளகாய் வற்றல்—5 மேலும் வேண்டியபடி
கடலைப்பருப்பு -சிறிது.
உளுந்துக் கருவடாம்–7 ,அல்லது எட்டு.
இல்லாவிடில் உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்.
தனியா–சிறிது. சீரகம் –சிறிது.
ருசிக்கு உப்பு
புளி இல்லாத கூட்டுகளுக்கு தனியா இல்லா விட்டாலும் பரவாயில்லை.
தாளித்துக் கொட்ட கடுகு,பெருங்காயம். எண்ணெய்.
கொத்தமல்லி,கறிவேப்பிலை.
செய்வோமா?
பச்சையோ,சிவப்போ எந்தக்கலர் தண்டானாலும் சுத்தமாக,நார் நீக்கிச் சிறிய
துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு,மிளகாய்,மிளகு இவைகளைச் சிவக்க துளி எண்ணெயில்
வறுத்துக் கொள்ளவும். கருவடாம் இல்லாவிட்டால் உளுத்தம்பருப்பு சேர்த்து
வறுக்கவும்.
தேங்காய்,சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..
பருப்பைத் தண்ணீர் விட்டுக் களைந்து,திட்டமாகத் தண்ணீர் சேர்த்து,நறுக்கிய
கீரைத்தண்டை யும்,துளி மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைத்து
எடுக்கவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கருவடாம்களைச்
சிவக்க வறுத்தெடுக்கவும். கருவடாம் மிளகாய் சேர்த்துச் செய்தது.
கடுகு,பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டி, வெந்ததைக் கொட்டி, உப்பு சேர்த்து
ஒரு கொதி விட்டு, அரைத்த விழுதையும் கரைத்துவிட்டு, கருவடாம்களையும்
சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி கறிவேப்பிலை,போடவும்.
மணக்க கூட்டு.. கடலைப்பருப்பு, பட்டாணி,மொச்சைப் பருப்புகளும்
சேர்த்துச் செய்யலாம்.
கீரையையும் விடவில்லை. வெல்லப் பச்சடி. அடுத்து வரும்.
அந்த ஆறுமாதத் தண்டு இப்போது பார்க்கக் கிடைக்கவில்லை.
அதை சீவி,நறுக்க,சமைக் என நேரமாவதைக் குறிக்கவே
கீரை கீரைத்தண்டு,நாழி இருபத்திரண்டு போலும்.
ஒரு கீரைத்தண்டு கூட்டுக்கு இவ்வளவு கதையா?
ஆமாம்.
Entry filed under: கூட்டுவகைகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
MahiArun | 5:41 முப இல் திசெம்பர் 11, 2014
வெறுமனே ரெசிப்பி மட்டும் இல்லாமல் இப்படி முன் – பின் கதைகளோடு படிக்கத்தானம்மா ஸ்வாரஸ்யமா இருக்கு. தயவு செய்து நீங்க இப்படியே சொல்லுங்க! 🙂
2.
chollukireen | 5:55 முப இல் திசெம்பர் 11, 2014
எழுத ஆரம்பிச்சதுமே எங்கோபோய் எங்கோவந்து ,இதையும் ரஸித்து எழுதியிருப்பதைப் பார்த்து எங்கோ
மஹியையும் பார்த்துப் பேசிவிட்டு வந்த மாதிjf ஆகாயத்தில் பரக்கிரது மனது.!!!!!!!!!!!!
இதுதான் மகிழ்ச்சி என்பது.. லயா குட்டிக்கு அன்பு. அன்புடன்
3.
Beautiful Jaffna | 6:16 முப இல் திசெம்பர் 11, 2014
நன்றாக எழுதியுள்ளீர்கள் அம்மா.
நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
4.
chollukireen | 8:40 முப இல் திசெம்பர் 12, 2014
வாழ்த்துக்களுக்கும்,வரவிற்கும் நன்றி. அன்புடன்
5.
adhi venkat | 7:06 முப இல் திசெம்பர் 11, 2014
சுவையான கீரைத் தண்டு கூட்டு. கதையுடன் சொல்லியது அருமை. நானும் தங்களின் செய்முறைப்படி தான் இதுவரை செய்து வருகிறேன் என்பதில் மகிழ்ச்சி.
6.
chollukireen | 8:44 முப இல் திசெம்பர் 12, 2014
கூட்டும், கதையும். ஸரியாக இருந்ததா. நம் பக்க சமையல்கள் மற்றும் பல தினுஸுகளில் ஒத்துப் போகிறது. எனக்கும் மகிழ்ச்சியே. அன்புடன்
7.
பிரபுவின் | 1:53 பிப இல் திசெம்பர் 11, 2014
கதையுடன் சொல்லியது அருமை.
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா.
8.
chollukireen | 8:46 முப இல் திசெம்பர் 12, 2014
வெகுநாள் கழித்து வரும் உங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துகளுக்கு நன்றி. அன்புடன்
9.
Jayanthi Sridharan | 9:10 முப இல் திசெம்பர் 12, 2014
Arumayana recipe, Amma. En mamiyar seivadhu pol irukkiradhu.
10.
chollukireen | 5:00 பிப இல் திசெம்பர் 13, 2014
ஜயந்தி வாவா. உன் பின்னூட்டத்திறி்கு மிகவும் நன்றி.
கீரைத்தண்டு கூட்டு உன் மாமியாரை எனக்கும் அறிமுகமானவர்போலத் தோன்றச் செய்கிறது. உன்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிக்க ஆவல். அடிக்கடி
விஜயம் செய். பின்னூட்டமும் கொடு. அன்புடன்
11.
chitrasundar | 2:32 முப இல் திசெம்பர் 14, 2014
காமாக்ஷிமா,
“ஆமாம் உங்களுக்கு வேண்டுமா? ப்ளாகில் போட” ____ ஆஹா, காமாக்ஷிமாவின் மாப்பிள்ளையும் ப்ளாக்குக்கு உதவுகிறார் !
கதையும், கீரைத்தண்டு கூட்டின் மணமும் சேர்ந்து பதிவின் சுவையைக் கூட்டிவிட்டன. இக்கதையைக் கேட்கத்தானே இங்கே விரும்பி வருகிறோம்.
இங்கும் சிவப்பு, பச்சை என தண்டுக்கீரை கிடைக்கும். சில சமயம் தண்டை சாம்பாரில் போடுவேன். பல சமயங்களில் கீழே போட்டுவிடுவேன். இனி கூட்டு செய்துவிடுகிறேன். அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 6:01 முப இல் திசெம்பர் 16, 2014
சித்ரா நான் சென்னை சென்றால் இது கிடைக்குமா,அது கிடைக்குமா என்று கேட்டால் போதும். எல்லாவற்றையும் வாங்கி வந்து கொடுப்பார். அதுதான் காமாக்ஷி அம்மாவின் மாப்பிள்ளையும் ப்ளாகிற்கு உதவுகிறார். ஸரியான வார்த்தை.
என்னுடெய எல்லா வாரிசுகளும் பாட்டிக்கு உதவுவார்கள். உன்னுடைய பதில் காமாக்ஷிம்மாவைப்பற்றி உனக்குள்ள நல்லெண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
ஸந்தோஷம் பெண்ணே. அன்புடன்
13.
ranjani135 | 2:28 பிப இல் திசெம்பர் 15, 2014
உங்களுடைய முன் கதைக்காகவே நான் உங்கள் செய்முறைகளை ரசித்துப் படிக்கிறேன். கீரைத்தண்டு பற்றிய குறிப்புகளும் கீரையைப் போலவே ருசியாக இருக்கு.
14.
chollukireen | 5:54 முப இல் திசெம்பர் 16, 2014
முன் கதைகள் நிஜமாகவே இருப்பதில்தான் எழுத முடிகிறது. என்னுடைய எவர் ஸில்வர் பாத்திரங்கள் கூட
என்னுடன் பேசும். எப்படி வாங்கினோம்,எதற்காக என்று.
சிரிக்கிறீர்களா? எண்ணங்கள் அப்படி. . அதிலும் ஒரு ,ஸந்தோஷம் இருக்கிறது. ரஸித்ததற்கு மிகவும் நன்றி.
அன்புடன்.