கீரை வெல்லப் பச்சடி.
திசெம்பர் 14, 2014 at 7:19 முப 4 பின்னூட்டங்கள்
இது மிகவும் சுலபமானது. கணக்குகள் நம் உத்தேசமாகப் போட்டே
செய்யலாம். இரண்டு பிடி கீரை என்றே வைத்துக் கொள்வோம்.
ஆய்ந்த கீரையைப் பொடிப்பொடியாக நருக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
தண்டு கீரைதான் வேண்டுமென்பதில்லை.
எந்தக்கீரையில் வேண்டுமானாலும் செய்யலாம்.
எண்ணெயில் கடுகு,மிளகாய், உளுத்தம்பருப்பு,சிறிது கடலைப்பருப்பு,
பெருங்காயம் , இவைகளைத் தாளித்துக்கொட்டி, கீரையைச் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
இஞ்சி,பச்சைமிளகாயும் போடலாம்.
துளி புளியைக் கரைத்து விடவும். சிறிது உப்பு ,மஞ்சள்பொடி சேர்த்து
கொதிக்க விடவும் இனிப்புக்காக வெல்லப்பொடியும் உத்தேசமாகப்
போட்டுக் கொதிக்க விடவும். துளி மாவைக் கரைத்துவிட்டு ஒரு கொதி விட்டு
இறக்கவும். சற்று கெட்டியாக இருப்பதற்காக.
அளவே இல்லாமல் டெஸ்ட் மாதிரி இருக்கிறதா?
திட்டமாகச் செய்து பாருங்கள். ஒரு வேளை வயதானவர்களுக்குத்தான்
பிடிக்கிரதோ? நீங்கள்தான் பின்னூட்டத்தில் சொல்ல வேண்டும்.!!!!!!!!!!!!
அடுத்து அந்த லெஸொதோ அனுபவத்தை முடிக்க வேண்டும்.
இதற்கும் கமென்ட் கொடுங்கோ.
Entry filed under: ஸ்வீட் காரபச்சடிகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 2:23 பிப இல் திசெம்பர் 15, 2014
நான் இதுவரை கேள்விப்படாத ஒரு உணவு இது. ஒருதடவை கீரை பண்ணும்போது கொஞ்சம் தனியாக எடுத்து வைத்து இதை செய்து பார்க்கவேண்டும். செய்து பார்த்து சாப்பிட்டுப் பார்த்து எழுதுகிறேன்.
2.
chollukireen | 5:44 முப இல் திசெம்பர் 16, 2014
கட்டாயம் செய்து பாருங்கள். சாப்பிட்டும் பாருங்கள். இதெல்லாம் கிராமத்துச் சாப்பாட்டில் ஒன்றுதான். பார்க்கலாம் உங்கள் கமென்டை. அன்புடன்
3.
adhi venkat | 6:22 முப இல் திசெம்பர் 19, 2014
வெல்லம் போட்டு இதுவரை செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் அம்மா.
4.
chollukireen | 10:02 முப இல் திசெம்பர் 19, 2014
செய்து பார்த்தால் கட்டாயம் அபிப்ராயம் கொடு. அன்புடன்