அன்னையர்தினப்பதிவு—21
ஜனவரி 12, 2015 at 7:37 முப 23 பின்னூட்டங்கள்
அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள்
ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள் தெளிவில்லை.
அவர்கள் கேட்கக் கேட்க என் மனஸில் ஓடிய ஓட்டங்கள்.
ஒரு பெரிய பெட்டி நிறைய அடுக்கு ஸெட்டுகள்,ப்ளேட்டுகள்
,கிண்ணங்கள், இன்னும் பலவித பாத்திரங்கள் என வகைவகையாக
அடுக்கி வைத்து இருக்கிறேன்.
அந்தக்கால இந்தியாவின் சுங்க இலாகா , நேபாளத்திலிருந்து ஒரு
தூசி தும்புகூட உள்வர அனுமதிக்க மாட்டார்கள்.
நேபாளத்தில் ஜப்பான்,ரஷ்யா, சீனா என அயல்நாட்டு ஸாமான்கள்
எல்லாம் ஓரளவு மலிவாக இருக்கும்.
ஸாமான்கள் தரம் மிக நன்றாக இருக்கும். ஜப்பான் ஸ்டீல் வெகு
நன்றாக இருக்கும். வெள்ளிப்பாத்திரம் மாதிரி. துக்கர்,ஹுல்லாஸ்
என்று இரண்டு கம்பெனிகள், நேபாளத்திலேயே அவர்களுக்கு வேண்டிய
மாதிரி வடிவங்களில் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொடுத்துக்
கொண்டிருந்தது.
ஒருவழியாக அவ்விடத்தை விட்டு வருவதானால், பர்மிஷனுடன்
ஏதோ சிறிது எடுத்துவரலாமோ என்னவோ/?
வாங்கி வைத்தேன் என்று சொல்வதில் என்ன லாபம்?
யாராவது இந்தியன் கவர்மென்டின் ஆஸாமியாகப் பிடித்தால்தான் உண்டு.
இதைச் சொல்லிப் பிரயோஜனமில்லை.
பெண்களுக்கு நகை போடுவதற்கு அவர்களம்மாவின் நகைகள் ஸமயத்தில்
கைகொடுக்கும். ப்ராப்ளம் ஓவர்.
பசங்களின் அட்மிஷன்,ஹாஸ்டல் பீஸ் அது வொரு விசுவ ரூபம்..
அந்த நாட்களில் பிள்ளைவீட்டு குலதெய்வத்தைக்கூட கொண்டாடும்
அளவிற்கு அவர்களுக்கு கைவிட்டு சிலவாகாமல், பெண் வீட்டார்
கையில் கொடுப்பது என்ற வழக்கமிருந்த காலம்.
என்ன சொல்லலாம்?
இல்லை மாமி. அம்மாதிரி எல்லாம், மனஸில் எதுவுமே தயார் செய்து
யோசிக்கவே இல்லை.
எல்லாம் செய்வேன். என்ன செய்வேன் என்று இப்போது சொல்லும்படியான
ப்ரிபரேஷன் எதுவுமில்லை.
பசங்கள் தலையெடுத்து விட்டால் அப்புறம் எதுவுமே கஷ்டமில்லை.
ஆறுமாதம் அவகாசம் . வேண்டுமானால் அப்புறம் எல்லாவற்றையும்
தீர்மானம் செய்து கொண்டால்ப் போகிறது.
நீங்கள் ஸரி என்றால் ஸரி.
இல்லாவிட்டால் டைம் இருக்கிரதே பார்த்துக் கொள்ளலாம்
.மனதில் உருவான அப்போதைய நிலையை, தெளிவாக பிசிறில்லாமல்
சொல்லி விட்டேன்.
இல்லை காமாட்சி நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.
இல்லை மாமி . உங்களைப் பற்றி எனக்குத் தெரியும்.
பொதுவாக மாமி யாவரிடமும் மிகவும் அன்பானவர். கஷ்ட ஸுகங்கள்
அனுபவித்தவர்.
ஆல்ரெடி மூன்று பெண்கள், இரண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம்
ஆகிவிட்டது.
ஆனால் என்மாதிரி யாரும் நேரில் சொல்லியிருக்க மாட்டார்கள்.
பொதுவாக ஜாதகப் பரிவர்த்தனையின் போதே, பெண் வீட்டார்
எவ்வளவு நிதி உள்ளவர்கள்,செய்யும் கணக்கும், பிள்ளை வகையில்
என்ன எதிர்ப்பார்ப்பார்கள் என்ற கணக்கும் போகும்.
கல்யாணம் நிச்சயமாயிற்றென்றால் பிள்ளை வீட்டினர், அவர்கள்
உற்றார் உறவினர் கேள்விகளுக்கும், பதில் சொல்லியாக வேண்டும்.
இதுவும் என் மனதில் கணக்குகள் வந்தது.
என் சூழ்நிலை இது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைச் சொல்லுங்கள்.
நீ தப்பாக நினைத்து விட்டாயோ என்னவோ?
எங்க மன்னிதான் எனக்கான வேண்டிய மனுஷி. எல்லாம் நல்லபடி
நடக்க வேண்டும் என்று சொன்னேன். உன்னையும் பார்க்க
விரும்பியதால் ஸகஜமாக எல்லாம் கேட்டிருக்கிராள்.
தப்பே இல்லை. அம்மா எல்லாம் நன்றாக செய்யணும் என்று சொல்லி
இருக்கிறாள்.
ஸரி நீங்கள் எத்தனைபேர் வருகிறீர்கள். என்று வேறு விதமாக
ஸம்பாஷணை போயிற்று.
இவ்வளவு எழுதுகிறீர்களே! உங்கள் கணவரின் ரோல் என்ன?
சின்ன வயதிலேயே அம்மாஇல்லை. குடும்பத்தின் நீக்கு,போக்கு
ஸம்பிரதாயம் எதுவும் பழக்கமில்லை.
போட்டுக் கொள்ளும் அக்ஷதையை நாமாக போட்டுக்கொண்டு
எழுந்து வாழ்த்திக் கொள்வதும் நாமாகவே இருக்க வேண்டிய
நிலைதான் எப்போதும் எனக்கு.
முதன்முதலாக என் அக்காவின் பிள்ளை, அம்மாவுடன் வருவதாகச்
சொல்லியிருக்கிரான்.
காட்மாண்டுவில் ஏரோடிரம் ஆபீஸராக இருந்தவர் குடும்பம் இங்கு
உள்ளது.
ஊரிலிருந்து எங்கள் குருஸ்தானத்தில் இருக்கும், மாமா பிள்ளை
வருகிறார். அவர்களுக்கும் அதே குருஸ்தானம்தான்.
இன்னும் சில வேண்டியவர்கள். யாருக்கும் தெரியப்படுத்தி வர வழைக்க
எங்களுக்கு லீவில்லை. உடனே புறப்பட வேண்டும்.
அவர்களும், அவர்களின் சம்பந்தி வகையினர்,உடன் பிறந்தோர்,மற்றும்
முக்கியமானவர்கள் என ஒரு சிறிய கூட்டம்தான்.
அம்மா வரவில்லையா?
நல்ல காரியங்கள் நடக்கட்டும். நான் அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் என்று
சொல்லி விட்டார்.
அம்மா செய்து கொடுத்த பருப்புத் தேங்காயுடன்,அவசியமாக என்ன செய்ய
வேண்டுமோ அதைச் செய்து கொண்டு யாவரும் போனோம்.
நான் ஒரு தௌஸன் புட்டா புடவை கட்டிக்கொண்டு போனால்
அவர்கள் வீட்டு மருமகள்களும் அதே டிஸைன் வேறுகலர்களில் .
அது கூட சுப ஸூசகம் என்று பட்டது. எனக்கு.
நிச்சயதார்த்தம் வெகு ஸிம்பிளாக அழகாக நிம்மதியாக நடந்தது.
அம்மாவிற்கு ஒரு எக்ஸ் பிரஸ் தபால்.
காட்மாண்டுபோய் ஒரு வாரத்திலேயே இந்தியன் எம்பஸிகாரர் ஒருவருக்கு
மாற்றல் வந்தது.
கல்யாணத்திற்கு உதவாமலா? அத்தனை பாத்திரங்களும் பெட்டியுடன்
அவர்கள் ஸாமான்கள் எனச் சொல்லி சென்னை போய்ச் சேர்ந்து விட்டது.
சொன்ன ஆறுமாத காலத்தில் முகூர்த்தம் வைத்தாகி விட்டது.
பணம் சேகரமாகிக்கொண்டு இருந்தது. அம்மா எங்களூரில் கல்யாண சத்திரம்
புக் செய்து, ஸாமான்கள் சேகரிக்க ஆரம்பித்து விட்டாள்.
சமையல்க்காரர்,மேளதாளம்,பட்ஜெட் என தயாரிப்பு.
ஒரு கல்யாணத்திற்கு வேண்டிய சர்க்கரை வேண்டியவர்களின், கார்டுகள்
மூலமாகவே நியாய விலைக்கே சேகரம். அம்மாவின் சாய்காலில் என்ன என்ன
முடியுமோ அவையாவும்.
நெல் முதல் எரி கரும்புவரை சேகரம்,சேகரம். சேகரம்.
ஒரு பதினைந்து நாட்களுக்குமுன் நான் போய்ச் சேர்ந்தேன். சீர் வைக்க
அப்பளாம்,வடாம், சிலவுக்கு அப்பளாம் வடாம் என மற்றவர்கள் உதவியுடன்
காரியங்கள் வெகு துரிதம்.
பால்,பூ,பந்தல்,ஸமாளிப்பு என எங்களுக்கு வேண்டியவர் ஸகாயம் செய்வதாகச்
சொன்னார்.
அம்மா சொல்லுவார். தினமும் அவரைப்போய்ப் பார்த்து விசாரித்து, நன்றி
சொல்லி விட்டு வரவேண்டும்.
அவர் எனக்கு மாணவர்.சின்ன வயதில் அவர்கள் எல்லோருக்கும் பாடம்
சொல்லிக் கொடுத்தவள் நான்.
சம்பந்தி வீட்டு மாப்பிள்ளையும் அவர்.
கார் மாப்பிள்ளை அழைப்புக்கு அவர்தான் ஏற்பாடு செய்தவர்.
இன்றுவரை நான்தான் மாமிக்கு, என் அம்மாவிற்கு எல்லா ஒத்தாசைகளும்
செய்தேன் என்று மறவாமல் சொல்லிக்கொண்டு இருக்கிரார்.
நானும் நன்றி,நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
அம்மாவை அதிகம் இழுத்து விட்டு விடாதே. திரும்ப யாவரும் காட்மாண்டு
போக வேண்டும், என்று எச்சரித்துக் கொண்டே இருப்பேன்
காரியங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. மஹாநதியில் வெள்ளம்,
காட்மாண்டு வாசிகள் வந்து சேர வேண்டுமே என்ற கவலை
ஒருநாள் ஸ்வீட் வெண்ணிலா கேக் போடச்சொல்லி இருக்கிறேன்.
அது என்ன வெண்ணிலாகேக்? அம்மாவின் பாஷையில் வெனிலா
கேக்காம் அது.
கலியாணப்பெண்ணுக்கு ஒரு மேச்சிங் ப்லவுஸ் தைக்கக்கூட நேரமில்லை
.அவர்கள் வந்து சேர்ந்தனர்.
அம்மாவின் ஸ்பெஷல்,அரிசிஅப்பளாம்,வேப்பிலைக்கட்டி,வடுமாங்காய்
இதெல்லாமும் பரிமாரவேண்டும்.பந்தி விசாரிக்க அம்மா வந்து விடுவாள்.
ஒவ்வொருவராக,ஒவ்வொரு வேளைக்கும் அவர்களிடம் நானாக போய்
எல்லாம் விசாரிக்க வேண்டும். என்ன வேண்டும் கேட்டு உபசரிக்க வேண்டும்,
இப்படி எனக்கு திரும்பத் திரும்பச் சொல்லி துரத்திக்கொண்டே இருந்தாள்.
எங்கள் வீட்டவர் பிள்ளை வீட்டுக்காரர்களுடன் அவர்களுடன் சேர்ந்து
உபசாரத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார். அவரும் எங்கள் அம்மாவிற்கு
மாப்பிள்ளை ஆயிற்றே.!!!!!!!!!!!!
கல்யாணம் வெகு ஸம்ரமமாக முடிந்தது. எதையும் குறை சொல்லாமல்
சம்பந்தி அம்மா, அவர்களின் பிள்ளைகள் , குடும்பத்தினர் நல்ல முறையில்
ஸந்தோஷமாக விடை பெற்றனர். அவர்களுக்கு என் நன்றி.
மாமியின் மன்னி, பாத்திரங்களெல்லாம் ரொம்ப நன்றாக இருக்கு.
எல்லாம் நன்றாக செய்து விட்டாய் என்று சிலாகித்துச் சொன்ன
வார்த்தைகள் இதமான வார்த்தையாக இருந்தது.
எங்கள் அம்மாவிற்கும் நன்றி . இன்னும் எவ்வளவோ எழுதலாம்.
எப்பொழுதோ நடந்த விவாகத்தைக் கண்டுகளித்த உங்களுக்கும் நன்றி.
அடுத்து அன்னையர் தினத்தைத் தொடருவோம்.
Entry filed under: அன்னையர் தினம். Tags: 21ஆம்பதிவு.
23 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
marubadiyumpookkum | 9:42 முப இல் ஜனவரி 12, 2015
hard works asks some words as recognition
2.
chollukireen | 1:35 பிப இல் ஜனவரி 14, 2015
உண்மையாகக் கிடைத்தால் மகிழ்ச்சிதான். நன்றி. அன்புடன்
3.
chollukireen | 1:40 பிப இல் ஜனவரி 14, 2015
பொங்கல் வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்
4.
ranjani135 | 10:08 முப இல் ஜனவரி 12, 2015
அப்பாடி! மகளின் கல்யாணம் நல்லபடி நடந்தேறியது. சந்தோஷம். என் பெண்ணின் கல்யாணத்தின் போதும் இப்படித்தான் என் அம்மாவும், அக்காவும்தான் வெள்ளிப் பாத்திரங்கள், நகைகள் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தார்கள். ‘தௌசன் புட்டா’ புடவையைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.
தொடருங்கள். அருமையான மலரும் நினைவுகள்.
5.
chollukireen | 1:39 பிப இல் ஜனவரி 14, 2015
உங்களுக்காகவே சீக்கிரம் எழுதினேன். ஊக்க மருந்து பின்னூட்டங்கள்தானே. இப்போது அந்தபுடவை இல்லை. அதேமாதிரி காட்டன் புடவை இருக்கிறது.
முடிந்தபோது பார்க்கலாம். நன்றி. அன்புடன் பொங்கல் வாழ்த்துகளும், ஆசிகளும்.
6.
Kumar | 4:41 பிப இல் ஜனவரி 12, 2015
Dear Akka,
Thanks a lot for bringing back old but unforgettable events.
7.
chollukireen | 1:44 பிப இல் ஜனவரி 14, 2015
ஒரு முறை கல்யாண மாப்பிள்ளையாகி ஊர்வலம் வந்த மாதிரி உள்ளதா? மிக்க ஸந்தோஷம். பொங்கல்
வாழ்த்துக்கள் உங்கள் யாவருக்கும். அன்புடன்
8.
பார்வதி இராமச்சந்திரன். | 1:33 பிப இல் ஜனவரி 13, 2015
கல்யாணத்துக்கு வந்துட்டேன்!.. படிக்கப் படிக்க மலைப்பாக இருக்கிறது!!. எத்தனை மனோதிடத்துடன், சிநேக பாவத்துடன், இதமாக உறவுகள் இருந்திருக்கின்றன…வாழ்க்கையில் எல்லா பக்கமும் நிறைவே காணும் கலை வசப்பட்ட மனிதர்கள்!!!.. இந்த பதிவுகளை தொகுத்து ஒரு மின்னூலாகப் போடணும் அம்மா!.. அவ்வளவு உபயோகம்!….
9.
chollukireen | 1:50 பிப இல் ஜனவரி 14, 2015
வாம்மா வா. மிக்க ஸந்தோஷம். நடந்த நிகழ்வுகள், மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி இந்த பதிவுகளில் எழுதுகிறேன். அதனால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது உன்னால். உன் பின்னூட்டம் அருமை. வரவேற்கிறேன். யாவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அன்புடன்
10.
பிரபுவின் | 4:52 முப இல் ஜனவரி 14, 2015
மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
அன்புடன் பிரபு.
11.
chollukireen | 1:51 பிப இல் ஜனவரி 14, 2015
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. நன்றாக உள்ளதா? மகிழ்ச்சி. அன்புடன்.
12.
chitrasundar | 3:33 முப இல் ஜனவரி 15, 2015
காமாக்ஷிமா,
“இவ்வளவு எழுதுகிறீர்களே! உங்கள் கணவரின் ரோல் என்ன?” ____ படித்ததும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன். எல்லாவற்றையும் தனியாளாக இருந்து செய்வது எவ்வளவு சிரமம் !
அம்மாவின் திறமையும் உங்களிடம் உள்ளது. இருவருமாக சேர்ந்து இனிதாக திருமணத்தை செய்து வைத்துவிட்டீர்கள். அந்நாளைய திருமணத்திற்கு எங்களையும் அழைத்துச் சென்று காணச் செய்த காமாக்ஷிம்மாவிற்கும் நன்றிகள். அடுத்த பதிவை நோக்கி ……. சித்ராசுந்தர்.
13.
chollukireen | 1:08 பிப இல் ஜனவரி 27, 2015
தாமதமான பதில். மன்னிக்கவும். உன் வரவிற்கும் மிகவும் நன்றி. அப்படியே கடந்தகாலத்திலும் வந்து
சிறப்பித்ததற்கு ஸந்தோஷம். அன்புடன்
14.
VAI. GOPALAKRISHNAN | 9:53 முப இல் மார்ச் 2, 2015
மலரும் நினைவுகளை அருமையாக அழகாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
15.
chollukireen | 11:21 முப இல் ஜூன் 8, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நீங்கள் நினைத்தமாதிரி இல்லாமல் வேறுதிசையில் போகிரதா. க்ஷணத்திற்குச் க்ஷணம் மனது சிந்தித்ததில் போட்ட கணக்குகள். சிரமங்கள் நம்முடன் பிறந்தவை. ஒருநாள் தாதமாகப் பதிவு. அன்புடன்
16.
Geetha Sambasivam | 12:22 பிப இல் ஜூன் 8, 2021
நல்லபடிக் கல்யாணம் முடிந்ததில் சந்தோஷம். எப்படியோ பாத்திரங்களும் சமயத்துக்குப் போய்ச் சேர்ந்தன. உங்கள் கணவர் எதில் வேலை செய்தார்? இந்தியன் எம்பசி இல்லையா?
17.
chollukireen | 11:36 முப இல் ஜூன் 9, 2021
இல்லை. ராயல் Fப்ளைட். பஞ்சாயத்து ராஜ்யம். ராணாக்கள் அதிகாரம். தானாக பொரியில் அகப்பட்டுக்கொண்ட எலி. காண்ட்ராக்ட் . விதிகளே வேறு. அ திகம் எழுத முடியாத என் தற்போதைய ஸுகக் குறைவு. நன்றி. அன்புடன்
18.
Geetha Sambasivam | 12:25 பிப இல் ஜூன் 8, 2021
இந்த தவுன்சன்ட் புட்டாப் புடைவை மாதிரியே “பாபி” ஹிந்தி சினிமா வந்தப்போ ஒரு புடைவை பாபி புடைவை என்னும் பெயரில் வந்திருக்கு. என் அண்ணா எனக்கும்,மன்னிக்கும் எடுத்துக் கொடுத்திருந்தார். அந்த வருஷம் தீபாவளிக்கு அதைக் கட்டிக்கொள்ள வைத்திருந்தேன். முதல் நாளில் இருந்தே வலி எடுத்து தீபாவளிக்குக் குளித்துவிட்டு வந்ததுமே ஆஸ்பத்திரிக்குப்போகும்படி ஆச்சு! என்னோடது நல்ல நீல நிறம். மஞ்சள் நிறப் புட்டாக்கள். நீங்கள் போட்டிருக்கும் புடைவை மாதிரியே இருக்கும். நல்லியில் எடுத்தாங்கனு நினைக்கிறேன்.
19.
chollukireen | 11:37 முப இல் ஜூன் 9, 2021
நன்றி அன்புடன்
20.
நெல்லைத்தமிழன் | 8:33 பிப இல் ஜூன் 8, 2021
திருமணத்துக்கான வேலைகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்து எழுதிவிட்டீர்கள். சுபஸ்ய சீக்கிரம் என்பதுபோல டக்டக் என எல்லாம் ஆகிவிட்டது.
பெண்களுக்குத்தான் குடும்பத்தில் எவ்வளவு பெரிய ரோல்.
ஊர்கூடித் தேர் இழுத்தது போன்ற கல்யாணம். பணம் தவிர ஆண்களுக்கு பொதுவாக இன்வால்வ்மென்ட் இல்லையோ?
21.
chollukireen | 11:39 முப இல் ஜூன் 9, 2021
ஸாமர்த்தியம் போதாது. அனுபவமே இல்லை. நன்றி. அன்புடன்
22.
ஸ்ரீராம் | 12:02 முப இல் ஜூன் 9, 2021
நல்லபடியாக திருமணம் நடந்தது சந்தோஷம். பிரச்னை வந்தால்தான் மனதில் கிலேசம். பாத்திரங்களை சமயோசிதமாக எடுத்து வந்தததும் இறைவன் அருள். “போட்டுக் கொள்ளும் அக்ஷதையை நாமாக போட்டுக்கொண்டு எழுந்து வாழ்த்திக் கொள்வதும் நாமாகவே இருக்க வேண்டிய நிலைதான் எப்போதும் எனக்கு.” என்கிற வரிகள் நெகிழ வைத்தன.
23.
chollukireen | 11:40 முப இல் ஜூன் 9, 2021
உடல் நிலை ஸரியில்லை எனக்கு. நன்றி. அன்புடன்