இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.
ஜனவரி 19, 2015 at 11:03 முப 8 பின்னூட்டங்கள்
நான்கு வருஷத்துக்கு முன் ஜெனிவாவில் இரண்டு தொக்குகளும் செய்தேன். எலுமிச்சை இனிப்பு தொக்கு மிகவும் ருசியானது. நான் அடிக்கடி செய்து கொண்டு இருந்தேன். நான்கு நாட்களுக்கு முன் என் பெண் விசாரித்தாள்.
ஸரி உங்களுக்கும் உதவலாம் என்ற எண்ணத்துடன் மறு பிரசுரம் பண்ணுகிறேன். கூடவே ஒன்றும் உண்டு. தக்காளி எலுமிச்சை எப்போதும் கிடைக்கும் வஸ்து. செய்து பார்த்துச்
சொல்லுங்கள். made in ஜெனிவா இது.
இது வாய்க்கு ருசியாகவும், ஆரோக்கியமுமான தொக்கு.
செய்வதுமெளிது. விருப்பமானவைகளுடன் சேர்த்துச்
சாப்பிடலாம். டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது.
வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6
சக்கரை—ஒன்றரை கப்
மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
வறுத்தறைத்த வெந்தய சீரகப்பொடி–1 டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்.
உப்பு—–ருசிக்கு ஏற்ப
செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக
இருந்தால் 4 ஆக எடுத்துக் கொள்ளலாம்.
பழத்தை அலம்பி சிறிய ப்ரஷர் குக்கரில் அரைகப் தண்ணீர்
சேர்த்து மிதமான தீயில் 2 விஸில் வரும்வரை வேகவைத்து
இறக்கவும்.
ப்ரஷர் அடங்கியபின் ஆறவைத்து, பழத்தைப்பிய்த்துப்போட்டு
விதைகளை அகற்றிவிட்டு, மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில்
போட்டு நன்றாக அறைத்து எடுக்கவும்.
வேகவைத்த ஜலமும் சேர்த்து அறைக்கலாம்.
அடி கனமான நான்ஸ்டிக் பேனில் சக்கரையுடன் சிறிது
ஜலம் சேர்த்து சற்று கொதிக்கவிடவும்.
சக்கரை கறைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அறைத்த
விழுதை அதனுடன் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் ஹல்வா மாதிரி சுருண்டு வரும் வரைக் கிளறி
உப்பு,மிளகாய்ப்பொடி, வெந்தய, சீரக,பெருங்காய,மஞ்சள்ப்
பொடிகளைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
வேக வைத்த அளவு எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தின்
சாற்றை எடுத்து கொட்டைகளை நீக்கி இறக்கி வைத்துள்ள
கலவையில் சேர்த்துக் கிளறவும். சாறு அதிகம் சேர்க்கலாம்.
சூடு ஆறிய பின்னர் சுத்தமானபாட்டில்களில்
சேமித்துவைக்கவும்.
பெருங்காயம் தூக்கலாக இருந்தால் வாஸனையாக இறுக்கும்.
விருப்பப்பட்டவர்கள் சோம்பு, ஏலக்காய், லவங்கம்,பட்டை,
ஜாதிக்காய், முதலாவதின் ஏதாவதொன்றின் பொடியையும்
ஒரு துளி சேர்க்கலாம்.
எண்ணெய் இல்லாத தொக்கு.பிரிஜ்ஜில் வைக்கும்
அவசியமில்லை.
View original post 149 more words
Entry filed under: தொக்கு வகைகள். Tags: கூட ஒரு தொக்கும்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 2:13 முப இல் ஜனவரி 20, 2015
செய்து ருசிக்கிறோம்… நன்றி அம்மா…
2.
chollukireen | 12:03 பிப இல் ஜனவரி 20, 2015
உங்கள் வருகைக்கும்,ருசிப்பதாகச் சொன்னதற்கும் மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
3.
Jayanthi | 11:52 முப இல் ஜனவரி 22, 2015
Looks novel mami, never heard of it before. Shall try soon.
4.
chollukireen | 11:56 முப இல் ஜனவரி 22, 2015
மிகவும்,ருசியானதும்,ஆரோக்யமானதும் கூட. முயற்சி செய். மிக்க நன்றியும்,மகிழ்ச்சியும். அன்புடன்
5.
ranjani135 | 4:06 பிப இல் ஜனவரி 28, 2015
முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். செய்து பார்க்கவேண்டும்.
6.
chollukireen | 5:23 முப இல் ஜனவரி 29, 2015
நான் இரண்டுநாட்களுக்கு முன்னர் கூடச் செய்தேன். சர்க்கரைக்குபதில் வெல்லம் சேர்த்துச் செய்தேன். நீயும் செய்து பார்த்துச் சொல்லவும். அன்புடன்
7.
VAI. GOPALAKRISHNAN | 9:50 முப இல் மார்ச் 2, 2015
தொக்கிலும் இனிப்பா ? சரி, சரி, இனிப்பு வெல்லப் பச்சடி போல இருக்குமோ என்னவோ ! 🙂
8.
chollukireen | 11:54 முப இல் மார்ச் 2, 2015
பச்சடிமாதிரி இல்லை. வாஸனையாக இருகிய கேஸரிபதத்தில் சுவையாக யிருக்கும். எனக்கு வயதாகிவிட்டது. ஒருவேளை அதனாலோ என்னவோ?அன்புடன்