தனி வெங்காயச் சட்னி.
ஜனவரி 27, 2015 at 12:47 பிப 22 பின்னூட்டங்கள்
துவையல், சட்னி முதலானது வகைவகையாக அரைக்கும் போது
உடன் ஏதாவது பருப்புகளையும் வறுத்துச் சேர்த்து அரைக்கிறோம்.
ஆனால் இது தனி வெங்காய சட்னி என்ற பெயர் பெற்றது.
இதுவும் காரக்குழம்பு செய்யக் குறிப்பு கொடுத்தத் தெரிந்தவர்களின்
குறிப்புதான் . நான் இரண்டு வெங்காயத்தில்தான் செய்தேன்.
மிக்ஸி ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் சட்னி தரமாகத்தானிருந்தது.
இன்னும் சற்று அரைபட வேண்டும்.
வேண்டியவைகள்.
பெரிய வெங்காயம்—5
மிளகாய் வற்றல்—–5
புளி—–ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தேங்காய்த் துருவல்—கால்கப்
எண்ணெய்—-ஒரு டேபிள்ஸ்பூன்.
ருசிக்கு உப்பு.
கடுகு—சிறிது.
செய்முறை—-
இது நிறைய என்று தோன்றினால் ஸராஸரியாக யாவற்றையும்
சிறிய அளவில் எடுத்துச் செய்யவும்.
வெங்காயத்தை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகைத் தாளித்து,மிளகாயை
,வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
தேங்காயும் சேர்த்து அரைக்கவும்.
அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
நல்ல கரகரஎன்று தோசையுடன் பல சட்னிகளில் இதுவும் ஒரு
சட்னியாக விருந்தினருக்குக் கொடுத்து உபசரிக்கவும்.
பச்சை,வெளுப்பு சட்னிகளுடன் இதுவும் ஒரு கலரான கார சட்னி.
சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.
நல்லெண்ணெயுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்
இரண்டொருநாள் ஃபரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
தேங்காய் கட்டாயமில்லை. செய்து பார்த்து ருசியுங்கள்.
அதிகம் செய்வதானால் , நல்லெண்ணெயில் தொக்குமாதிரிக்
கிளறி வைத்தால் நாள்ப்பட உபயோகிக்கலாம்.
சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி கூடும்.
Entry filed under: சட்னி வகைகள். Tags: தேங்காய், புளி, வெங்காயம்.
22 பின்னூட்டங்கள் Add your own
chitrasundar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar | 1:35 முப இல் ஜனவரி 28, 2015
காமாக்ஷிமா,
சட்னியைப் பார்த்தால் வெங்காயம் ஒன்றிரண்டாக அரைபடாமல் இருப்பதுவும் சாப்பிடும்போது கடிபட்டு நன்றாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. சின்ன வெங்காயம் மிகுதியாவே இருக்கு. செய்திடுறேன். கேட்டதையும் செய்து பார்த்து இங்கே பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிம்மா.
நாங்க செய்வது இதேபோல்தான் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். சின்ன வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், புளி வச்சு அம்மியில அரைச்ச துவையல் தொட்டு சாப்பிட்டால் ‘ஆஹா’ என்றிருக்கும். அன்றைக்கு அம்மா இரண்டு பங்கு சாதம் வைக்க வேண்டியிருக்கும்.அன்புடன் சித்ரா.
போன வாரம் உங்க குறிப்புல இருந்து வெந்தயக்கீரை புலவு செய்தேன். சூப்பரோ சூப்பர்.
2.
chollukireen | 4:44 முப இல் ஜனவரி 29, 2015
நான் மிக்ஸி ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தேனே! அதுதான் காரணம். நீ சொன்னமாதிரியே சாப்பிடும்போது கடிபட்டு அதுவும் ஒரு தனி ருசி.
செய்து பார்ப்பதாகச் சொன்னாய்.பார்க்கவும். நீ சொல்லும் சட்னி பச்சையாகவே வதக்காமல் அரைப்பது. இது கிராமங்களில் மிக்க விசேஷம். பழைய சாதத்துடன் வீட்டு விலக்கு ஸமயங்களில், இம்மாதிரி சட்னிதான் கிடைக்கும்.
படித்தே ருசித்தாயிற்று.
வெந்தயக்கீரை புலவு சித்ராவின் கைமணத்தில் சூப்பரோ சூப்பர், மிக்க ஸந்தோஷம். அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:34 முப இல் ஜனவரி 28, 2015
இன்றே செய்து பார்ப்பதாக வீட்டில் சொன்னார்கள்…
நன்றி…
4.
chollukireen | 4:46 முப இல் ஜனவரி 29, 2015
அன்றே செய்து நன்றாய் வந்திருக்கும். நன்றி. அன்புடன்
5.
marubadiyumpookkum | 10:08 முப இல் ஜனவரி 28, 2015
in our home chinna vengayac chutney already in usage amma
6.
chollukireen | 4:53 முப இல் ஜனவரி 29, 2015
நன்றாகச் சொன்னீர்கள். இந்த வெங்காய சட்னி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். இந்தச்சுவையை ஏற்கெனவே அறிந்த உங்களின் மறு மொழி செய்பவர்களுக்கு வேண்டப்பட்டது. சின்ன வெங்காயம் பெயர் பெற்றதல்லவா? ; சின்ன வயதுகளில் வெங்காயம் என்றால் சின்னதுதான் தெரியும். நன்றி உங்களுக்கு. அன்புடன்
7.
marubadiyumpookkum | 6:51 முப இல் ஜனவரி 29, 2015
thanksma…for your reply on this post and exchange of thoughts…vanakkam.
8.
ranjani135 | 4:03 பிப இல் ஜனவரி 28, 2015
சில சமயங்களில் சட்னியை ரொம்பவும் நைசாக அரைக்காமல், ஒன்றிரண்டாக அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். நீங்கள் செய்த இந்த சட்னியும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
9.
chollukireen | 5:03 முப இல் ஜனவரி 29, 2015
பாரக்பூரில் இருந்த போது சேஷாத்ரி என்று ஒருவர் இருந்தார். அவரம்மா வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி, உளுத்தம்பருப்பு,மிளகாய்,பெருங்காயம் வறுத்து, புளி , உப்புசேர்த்து அரைத்துக் கடைசியில் வெள்ளரிக்காயையும் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுப்பார். அவ்வளவு ருசியாக இருக்கும்.
ஆனால் இந்த வெங்காய சட்னி மிக்ஸி ஸ்ட்ரைக் செய்து விட்டது. அதனால் தோற்றம் இப்படி.
இதெல்லாம் ஸகஜம் ஸரிதானே.
துவையல்களில் பருப்புகள் கரகர பக்குவம்தான் வரவேற்பைப் பெறும். நன்றி. அன்புடன்
10.
ranjani135 | 12:55 பிப இல் ஜனவரி 29, 2015
என் அம்மா கூட இந்த மாதிரி வெள்ளரிக்காயை துவையல் அரைப்பாள். நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் அம்மா, வெள்ளரித் துவையல் இரண்டின் நினைவும் வந்துவிட்டது.
11.
பிரபுவின் | 5:07 முப இல் ஜனவரி 29, 2015
அருமையான பதிவு.பதிவுக்கு நன்றி அம்மா.
12.
chollukireen | 5:28 முப இல் ஜனவரி 29, 2015
சுலபமாகச் செய்யக் கூடியது. மறுமொழிக்கு மிக்க நன்றி. அன்புடன்
13.
mahalakshmivijayan | 10:22 முப இல் ஜனவரி 29, 2015
நல்ல அழகான கலர் சட்னி.. கண்டிப்பாக செய்து விட்டு சொல்லுகிறேன் காமாட்சி அம்மா 🙂
14.
chollukireen | 11:04 முப இல் ஜனவரி 29, 2015
சுலபமானதும் கூட இல்லையா? மிளகாய் கலர் சட்னியில் இருக்கு. அழகானகலர். உன் ரஸனையை மெச்சுகிறேன். அன்புடன்
15.
chollukireen | 8:10 முப இல் ஜனவரி 30, 2015
நான் எழுதியதில் சேஷாத்ரி என்று எழுதியிருந்தேனே அவர் உங்களுக்கு ஏதாவது முறையில் உறவுக்காரராக இருக்கலாம். பக்குவம் ஒத்துப்போகிறதே. அதனால். அன்புடன்
16.
adhi venkat | 2:29 பிப இல் பிப்ரவரி 6, 2015
சட்னி பார்க்கவே ஜோரா இருக்கும்மா.
இதே போல் தான் என் அம்மாவும் வெங்காயச்சட்னி செய்வார். சாதத்தில் கலந்தும் சாப்பிடுவேன். ஜோராக இருக்கும். ஆனால் நான் இப்போ வெங்காயமும், தக்காளியும் சேர்ந்து தான் சட்னி அரைக்கின்றேன். இதை படித்ததும் வெங்காய சட்னி அரைக்க வேண்டும் போல் உள்ளது. அம்மாவின் ருசியை அதில் தேட வேண்டும்…:)
17.
chollukireen | 2:48 பிப இல் பிப்ரவரி 6, 2015
உன்னை நான் தேடினேன். கட்டாயம் அம்மாவை நினைத்துக்கொண்டு செய்தால் ருசி தானாகவே வந்து விட்டுப் போகும். அன்னாயர் தினப்பதிவுகளும் முடிந்தபோது படி. அன்புடன்
18.
adhi venkat | 2:53 பிப இல் பிப்ரவரி 6, 2015
என்னவரின் வருகையால் ஏறக்குறைய ஒரு மாதமாகவே கணினி பக்கம் வரவில்லை அம்மா.முடியும் போது விடுபட்ட பதிவுகளை படிக்கிறேன்.
19.
chollukireen | 2:53 பிப இல் பிப்ரவரி 6, 2015
அன்னையர் தினப்பதிவுப்பதிவு தவறு திருத்திக் கொள்ளவும். அன்புடன்
20.
chollukireen | 2:50 பிப இல் பிப்ரவரி 6, 2015
சட்னியைவிட பிஞ்சுகாயில் தொக்கு அதைவிட நன்றாக இருக்கும். நன்றி பெண்ணே. அன்புடன்
21.
chollukireen | 2:52 பிப இல் பிப்ரவரி 6, 2015
புளியங்கா சட்னி மறுமொழியைப் படித்து விட்டு பதில் இதிலேயே கொடுத்து விட்டேன் பெயருக்கு ஏற்றவள் நான் என்று நினைத்துக் கொண்டேன் அன்புடன்
22.
VAI. GOPALAKRISHNAN | 9:47 முப இல் மார்ச் 2, 2015
புதுமையான அருமையான வெங்காயச்சட்னி … காரசாரமாக ஜோராக உள்ளது … தங்களின் பதிவினில். 🙂