அன்னையர் தினப்பதிவு—23
பிப்ரவரி 10, 2015 at 9:52 முப 24 பின்னூட்டங்கள்
rev father ஸுபோல், ரெ டௌனி, ரெ மோரன், ரெ காயின், ரெ மில்லர்,பிரதர் கெம்பன்ஸ்கி,
மற்றும் அவர்களுடன் வேலை செய்த ஆசிரியர்கள் முதலானவர்களின் படங்கள்.
மற்றபடி
நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். பேத்தியும்,மாப்பிள்ளையும்
வருவதற்கு முன்பே, அம்மாவும் வந்து விட்டாள்.
புத்தி சொல்லிவிட்டு வந்தேன்.
அடிக்கடி போய் பார்த்துவிட்டுவா என்று சொன்னேன். சென்னை
பெண்ணிற்கான புத்திமதி இது.
மற்றபடி யாவும் நல்லபடி நடந்தது. நாங்கள் காட்மாண்டு திரும்பும்
போது அம்மாவிடம் சென்னையில் சின்னதாக ஒரு இடம் பார்த்து
பேரன்களோடு இரேன். என்றேன். யோசனை செய் என்றேன்.
ஐயோ எனக்குப் புருஷக் குழந்தைகளே ஆவிவரவில்லை.
எங்காவது என் பெயர் சொல்லாமலேயே நன்றாக இருக்கட்டும்.
இங்கே ஊரையும்,மக்கமனுஷாளையும் விட்டு விட்டு பட்டின மாஸக்
குடித்தனம் எனக்கு ஸரிபட்டுவருமா?
அங்கே வீடுபார்க்கணும்,இங்கே எல்லாத்தையும் ஸெட்டில் பண்ணணும்
சட்டுனு ஆரகாரியமா.?
புருஷபசங்க நன்னா படிச்சு பேர் வாங்கணும். எனக்கு என்ன தெரியும்.
மனஸாலே கூட நினைக்காதே! நானும் என் வேஷமும். புடவையை
பாத்தாலே பாப்பாத்தின்னு திட்ர கூட்டம் ஒண்ணு.
அங்கெல்லாம் ஸரிப்பட்டு வராது.
எங்களுக்கும் அதிகம் வற்புறுத்த,இருந்து எல்லாம் செய்ய நேரமில்லை.
ஒருவழியாக பைரோடாகவே ஊர் போக நினைத்தும் பாட்னா,கங்கைப்
பிரவாகம் என ப்ளேன் சிலவு செய்தே காட்மாண்டு போய்ச் சேர்ந்தோம்.
வீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் செய்து பார் என்று சொல்வார்களே
அதைக் கணக்குகள் பார்த்தால்தானே தெரியும்?
இந்தியன் கரன்ஸிக்கான மதிப்பு கூடிக்கொண்டேபோய், நேபால்க்
கரன்ஸியின் மதிப்பு குறைந்து கொண்டே போயிற்று.
அம்மாவிற்கு நிர்பந்தமாக சென்னைக்கு வரச்சொல்லி, வீடுபார்க்கும்
பொருப்பை மாப்பிள்ளை செய்வார் என்று சொன்னேன்.
அதேமாதிரி வீடும் பார்த்தாகி விட்டது.
ஒரு சின்ன சமைக்கும் இடத்துடன் கூடிய ஒரு ரூம்.
சிலபல ஸாமான்களை திரும்ப வரும்போது வாங்கிக் கொள்வதாகக்
கொடுத்தும்,விற்றும் சமைக்க வேண்டிய ஸாமான்களுடன்
அம்மா சென்னை வந்தாள்.
மாப்பிள்ளை எதெது,எங்கெங்கே கிடைக்கும், எனவும் ,கூடிய
சுலபமான ஒத்தாசைகளைச் செய்து கொடுத்தார்..
காலேஜ் வெகு தூரம். வயதானவர் குடும்பம் அருகிலென ஏற்பாடுகள்.
அம்மாவிற்கு திரிஸ்டவ்வைப்பற்றிதான் தெரியும். உபயோகிப்பாள்
குடும்பம் ஆரம்பமாகிவிட்டது.
இரவு இரண்டு மணியிருக்கும். கடிகாரம் மாட்டலியோ என்னவோ?
உம்ரா ஸ்டவ்வைப் பற்ற வைத்துக் கொண்டு பருப்பு வேகிறது.
மற்றவைகள் ரெடிபண்ணத் தயார்.
பாட்டி இன்னும் மூன்று மணிகூட ஆகவில்லை. நாங்க இரண்டுநாள்
வெளியில் பாத்துக்கறோம்..
இல்லேப்பா. மணி தெரியலே. பருப்பு வெந்துட்டா காரியம் சுலபம்.
நான் பண்றேன் அதைவிட வேறென்ன காரியம்?
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு பேரன்கள், ஒரு பம்ப் ஸ்டவ்வும்,
பிரஸ்டிஜ் குக்கரும் வாங்கி வந்து விட்டு, நாளைக்கு நாங்கள் லீவுதானே
சமைக்கிறோம்.
குக்கரில் கீழ் பாத்திரத்தில் சாதமும், மேலே பருப்பும் வைத்து வேக வைத்து
இறக்கினதைப் பார்த்து, பாட்டிக்கு வாயெல்லாம் பல்.
இதென்ன ஆச்சரியம், இந்தப் புருஷபசங்கள் என்னமா செய்யறது? அந்த
புஸ்ஸுனு சத்தம் வரதே பயமாயில்லையா? இப்படி பல கேள்விகள்.
ஊரில் காஸ்,குக்கர், பம்ப் ஸ்டவ் இதெல்லாம் பார்த்ததில்லை.
இப்படி மயமா பருப்பு வெந்துட்டா சமையல் என்ன பிரமாதம்?
பாட்டி எல்லாம் உனக்கிருக்கா, நீயும் வெச்சுண்டு எங்களுக்குப்போடு!
அம்மாக்கு ஒன்றொன்றும் அனுஸரணையான வார்த்தைகள்.
பெருமை பாட்டிக்கு பசங்கள்,நம்மிடம் வந்திருக்கு பகவானே! நீதான்
நன்னா வைக்கணும், பகவானை துணைக்கு கூப்பிடரா பாட்டி பேரன்கள்.
இரண்டொருமாதம் பக்கத்து போர்ஷன் டான்ஸ் மாஸ்டர்.
தானா சமைச்சுண்டு திண்டாடரார்.
ஒருகரண்டி கொழம்பு ரஸம் எப்பவாவது கொடுப்பேன். அவருக்கு
ஸமயங்களில் உபகாரம்.
வெகேஷன் லீவு மாதிரி பென்ஷன் வாங்க ஊர்ப்பிரயாணம்.
ரயில்ச்சிலவு போக மீதியில் பக்ஷணம் பலகாரம் பண்ணிண்டு
வந்துடுவா பாட்டி.
அவ்வப்போது ஸமாசாரங்கள் வரும்.
பக்கத்தில் கேகேநகர் பிள்ளையார் கோவில்,அம்மன் கோவில்.
கதாகாலக்ஷேபம்,உத்ஸவம்,பழக்கமான பாஷை. போதாதா?
தனிக்குடுத்தனம் வந்த பெண்ணும் வரபோக, பேத்தி வரபோக இப்படி
ஒரு வத்த குழம்பு வைச்சாகூட பசங்க வரபோக இருந்தா நிம்மதிதானே
அம்மாவிற்கு ச் சென்னை குடும்பம் ஸந்தோஷத்தைத்தான் கொடுத்தது.
ஆனாலும் சொந்த ஊருக்குப்போய் அங்கு இருக்க வேண்டும் என்ற ஆசை
பரிபூரணமாக இருந்தது.
பேத்திபுக்கத்தில் எல்லோரும் விசேஷத்திற்காக வெளியூர் போனார்கள்.
பேத்தி சமையலில் ஈயச்சொம்பு உருகிவிடப் போகிரது என்று அங்கு போய்
எச்சரித்து விட்டு வந்தேனென்று கூட ஒரு முறை சொல்லியிருக்கிராள்.
பேரன்கள் ஒத்தாசையாக யிருப்பதும், எந்த வேலையானாலும் கூடவே வந்து
உதவுவதும்,
நல்ல பசங்கடா நீங்கள் நான்கூட யாருக்கும் எதுவும் சொல்லிக்
கொடுத்தது இல்லே. கட்டாயப் படுத்தியதும் இல்லை.
ஆமாம் பாட்டி நாங்கள்ளாம் வெல்லம் போட்ட பசங்கள். பேரன்களுக்கும்
பாசம் கூட இருப்பதில் அதிகமாகிக்கொண்டே வந்தது. நல்ல சாப்பாடு
கவனிப்பு ஸகஜம்தானே!!!!!!!!!!!!!!!
காட்மாண்டுவினின்றும் ஃபாதர் ஒருவர் வருகிறார். அவர் நம்மாத்தில்தான்
நான்கு நாள் இருப்பார்
பாட்டிக்கு ஸமாசாரம் சொல்லியாகிறது.
வெள்ளைக்காராள்ளாம் நம்முடனே இருக்கப்படாது. நான் விதவை.
அவாளுக்கெல்லாம் சமைத்சுப்போட்டா மடி கொறைஞ்சு போயிடும்.
எதைச் சமைத்துப்போட முடியும்? ; சேஷமாயிடாதா?
அதெல்லாம் ஒண்ணும் கிடையாது பாட்டி நாங்கள் படித்ததெல்லாம்
அவர்களிடம்தான்.
அம்மாவைக் கேட்டா தெரியும் உனக்கு அவர்களைப் பற்றி.
ஸரி வரட்டும். என்ன பண்ணி போடணும் னுசொல்லு.
அக்காவும் பாட்டிக்குச் சொல்லவே ஃபாதர் வரப் போகிரார்.
அமெரிக்கன் ஃபாதர். வாருங்கள் பார்க்கலாம். தொடருவோம்.
அம்மா என்ன செய்து போட்டாள்?
ஃபாதர்கள் படம் மேலே.
Entry filed under: அன்னையர்தினம். Tags: ஃபாதர், குக்கர், பிரஷர்ஸ்டவ், மாப்பிள்ளை.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
பார்வதி இராமச்சந்திரன். | 2:27 பிப இல் பிப்ரவரி 10, 2015
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருப்பம்!…. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வதை விடவும் சுவாரஸ்யம் வேறென்ன!!..எங்கிருந்தாலும், உபகார சிந்தையுடனும், உறவுகள் மேல் பாசத்துடனும் இருக்கும் பாட்டியை நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது!… ரொம்ப ஆர்வத்துடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்!…
2.
chollukireen | 1:50 பிப இல் பிப்ரவரி 12, 2015
ஆர்வத்துடன் எதிர்பார்க்கிராய். மிக்க ஸந்தோஷம் இந்த வார்த்தைகளுக்கு. அழகான எதார்த்தமான பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி. அன்புடன்
3.
ranjani135 | 5:07 பிப இல் பிப்ரவரி 10, 2015
பாட்டிக்கும், பேரன்களுக்கும் இருக்கும் உறவே தனி தான். என்னுடைய அனுபவம் சொல்லுகிறேன்.
பழைய வழக்கங்களையும் விடாமல், புதியவற்றையும் ஏற்றுக்கொண்டு, எனக்கு என் பாட்டி நினைவு வருகிறது.
பாதர்கள் வந்தார்களா? பாட்டி கையால் சாப்பிட்டார்களா? அறிய காத்திருக்கிறேன்.
4.
chollukireen | 1:55 பிப இல் பிப்ரவரி 12, 2015
உண்மை அதுதான். கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களிடம் பெற்றுக்கொள்வதிலும் அலாதி அனுபவம்தான். எல்லா பாட்டிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அடுத்த பதிவில் விவரம் கொடுத்து விடுகிறேன். பாட்டிகள் ஞாபகம் வருவதே இதன் விசேஷம். அன்புடன்
5.
chitrasundar | 6:02 பிப இல் பிப்ரவரி 10, 2015
காமாக்ஷிமா,
உடன் பேரன்கள், பார்க்கவே முடியாத பெரிய மகள், திருமணமான பேத்தி என கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருக்கும்.
அமெரிக்கன் ஃபாதர்கள் என்ன சாப்பிட்டு, என்ன சொல்லிவிட்டுப் போனார்கள் என அறியும் ஆவலில் நானும். அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 1:59 பிப இல் பிப்ரவரி 12, 2015
பெண்,பேரன்கள்,பேத்தி , பேத்தியின் கணவர் என்று அம்மாவிற்கு ஸந்தோஷ வருகைகள் இருந்தது. அது ஒரு நல்ல வருஷங்களாக இருந்தது. நீ கேட்டதற்கெல்லாம் பதிவில் பதில்எழுதுகிறேன். நன்றி. அன்புடன்
7.
பிரபுவின் | 5:56 முப இல் பிப்ரவரி 11, 2015
பசங்க என்று நீங்கள் அழைப்பதை,எங்கள் ஊரில் பொடியன்கள் என்று அழைப்பார்கள்.மிகவும் ஆர்வத்துடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்!…
நன்றி அம்மா.அன்புடன்…
8.
chollukireen | 2:02 பிப இல் பிப்ரவரி 12, 2015
பொடியன்கள் இதுவும் அன்பைக் குறிக்கிறது. பசங்கள் எனக்குச் சொற்களில் அதிகம் உபயோகமாகிறது. உங்கள் ஆர்வத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
ranjani135 | 4:12 முப இல் பிப்ரவரி 12, 2015
இன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
10.
chollukireen | 2:04 பிப இல் பிப்ரவரி 12, 2015
பார்த்தேன். மிகவும் ஸந்தோஷம். நன்றியும். அன்புடன்
11.
தூ…….தூ…….போ……போ………! | ranjani narayanan | 4:18 முப இல் பிப்ரவரி 12, 2015
[…] அன்னையர் தினப்பதிவு அவரது அன்னையின் நினைவுகளை நமக்குக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அப்பா இறைவன் திருவடி அடைந்தபின் அந்தக் குடும்பத்தை இவரது அம்மா தனியாக நிர்வகித்ததையும், பேரன் பேத்திகளை வளர்த்துக் கொடுத்ததையும் நெகிழ்வாகப் பகிர்ந்து கொள்ளுகிறார். […]
12.
chollukireen | 2:06 பிப இல் பிப்ரவரி 12, 2015
உன் பதிவுகளை ரஸித்துப் படித்தேன். தூ,தூ ஹாஸ்யரஸம் ததும்பியது. அன்புடன்
13.
Kumar | 10:37 முப இல் பிப்ரவரி 13, 2015
Dear Ma,
Bhagi Patti Is not only my Big M.I.L She is more than that.
Thank U Very much for bringing back the old memories.
14.
chollukireen | 11:35 முப இல் பிப்ரவரி 13, 2015
யார் சொன்னது. ? நான் எழுதினதை நானே படித்துக்கூட
நிகழ்வுகள் சினிமா மாதிரி கண்முன் வந்து கொண்டு இருக்கிறது. கூடவே இருந்த உங்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. சிந்தனை ஓய்வதில்லை. சீக்கிரம் முடிக்க வேண்டும். பாட்டியின் நினைவலைகளுக்கு. நன்றி உங்களுக்கு. அன்புடன்
15.
adhi venkat | 6:41 முப இல் பிப்ரவரி 19, 2015
இதைப் படித்ததும் என் பாட்டியின் நினைவு வந்தது. மடி , ஆசாரம் கெட்டு போய்விடும் என்று கத்தினாலும் வாய்க்கு ருசியாக சமைத்து தந்த பாட்டி.
தொடர்கிறேன்.
16.
VAI. GOPALAKRISHNAN | 9:38 முப இல் மார்ச் 2, 2015
குக்கர் சமையலைப் பார்த்த பாட்டிக்கு வாயெல்லாம் பல். படித்ததும் சிரித்தேன். இப்போதெல்லாம் எவ்வளவு செளகர்யங்கள் வந்து விட்டன !
17.
chollukireen | 7:51 முப இல் மார்ச் 3, 2015
முதன்முறை அதுவும் பேரப்பிள்ளைகளின் மூலம். பரவசம்தானே?
18.
chollukireen | 11:33 முப இல் ஜூன் 21, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அம்மாவின் சென்னைக் குடும்பமும் பாதிரியார்களின் வருகையும்.பாருங்கள் அன்புடன்
19.
Revathi Narasimhan | 3:01 பிப இல் ஜூன் 21, 2021
மிக எளிமையான மனுஷி. அந்தப் பேரப்பிள்ளைகள் தான் எத்தனை சமத்து.
சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷமடையும் பாட்டியின் உத்சாகம் மனசை
நிறைக்கிறது.
இந்தப் புது சால்லஞ்சை
பாட்டி எப்படி சமாளித்தார் என்று பார்க்கலாம்.
மிக மிக நன்றி காமாட்சிமா.
20.
chollukireen | 3:11 பிப இல் ஜூன் 21, 2021
ஆமாம் காலேஜ் போகும் பேரன்களுக்கு கட்டிக்கொடுக்கும் பாட்டிதான் பேரன்களும் பாட்டிக்கு ஒத்தாசையாக இருந்தார்கள் இல்லாவிட்டால் அந்தப் பணத்தில் இவ்வளவு நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிட முடியாது நன்றி அன்புடன்
21.
ஸ்ரீராம் | 8:11 பிப இல் ஜூன் 21, 2021
அம்மா என்ன, வத்தக்குழம்பும் வடாமும் செய்து போட்டிருப்பார்!
22.
chollukireen | 3:06 பிப இல் ஜூன் 21, 2021
என்ன அப்படி சொல்லிட்டீங்க அம்மா நன்றாக சமைக்கக் கூடியவர் கொஞ்சம் ஆச்சாரம் அவ்வளவுதான் அன்புடன்
23.
நெல்லைத்தமிழன் | 12:09 முப இல் ஜூன் 23, 2021
பாட்டிக்கு சந்தோஷமாக பேன்கள் அக்கம் பக்கம் அமைந்தது சந்தோஷம். அவர்களுக்கும் ரொம்ப உதவியாயும், நல்ல உறவினராயும் இருந்திருக்கும்.
அப்போதெல்லாம் வெங்காய உபயோகம் உண்டா? சாதாரண உணவு செய்திருந்தாலும் கைமணம் ருசித்திருக்கும்.
24.
chollukireen | 11:20 முப இல் ஜூன் 23, 2021
அம்மா குடும்பத்தில் உபயோகிப்பது இல்லை வெங்காயம். உங்களைக் காணோமே என்று நினைத்தேன். பாதர்களுக்கு எங்கள் வீட்டில் தென்னின்தியச் சாப்பாடு சாப்பிட்ட பழக்கம் ஓரளவு உண்டு. அன்புடன்