அரிநெல்லிக்காய் ஜூஸ்.
மார்ச் 4, 2015 at 9:07 முப 10 பின்னூட்டங்கள்
இது மிகவும் ஸுலபமானது. நெல்லிக்காயே கிடைக்கலே.இதிலே
ஜூஸ் வேரா? எனக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மிகவும் ருசியாக இருக்கிறது. கர்நாடகா, தமிழ்நாட்டில்
ஸாதாரணமாக எங்கும் கிடைக்கும் வஸ்துதான் இந்த நெல்லிக்காய்.
வேண்டியவைகள்
நல்ல பழுத்த அரிநெல்லிக்காய் ஒரு பத்து அல்லது பதினைந்து
எடுத்துக் கொள்வோம்.
ஒருகப் தண்ணீர் சேர்த்து இரண்டு விஸில் வரும்வரை குக்கரில்வேக
விட்டு எடுத்துக் கொள்வோம்.
நீராவி போனபின் தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுவோம்.
காய்களையும் உபயோகிக்கலாம்.
வடிக்கட்டிய நெல்லிக்காய்த் தண்ணீரில் ,சுவைக்கு வேண்டிய அளவு
சர்க்கரை சேர்த்து, துளி இஞ்ஜிச் சார் சேர்க்கவும்.
வேண்டிய அளவு அதனுடன் தண்ணீர் சேர்க்கவும்.
குளிர்பதனப் பெட்டியில் வைத்து எடுத்து ஜில் என்றுக் குடிக்கவும்.
புதினா இலை ஒன்றைச் சேர்த்து எடுத்து விட்டுப் பருகவும்.
தேன் சேர்த்தாலும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நான் குறைந்த அளவு நெல்லிக்காய் சொல்லி இருக்கிறேன்.
புளிப்பிற்காக அதிகம் நெல்லிக்காய் சேர்க்கலாம்
இதுவே திட்டமான இரண்டு டம்ளர் அளவிற்கு ஜூஸ் ஆகும்.
அடுத்து வெந்த நெல்லிக்காயின், கொட்டைகளை நீக்கி விட்டு
சதைப்பற்றை எடுத்துச் சேர்த்து மிக்ஸியில் அறைத்தால் இரண்டு
சுற்றிலேயே மசிந்து விடும்.
எண்ணெய் சேர்த்துக் கிளறி உப்பு,மஞ்சள்,காரத்திற்கு மிளகாய்ப்பொடி
சிறிது, வெந்தயப்பொடி,பெருங்காயம் சேர்த்தால் ருசியான தொக்கும்
தயார். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.
Entry filed under: ஜூஸ்வகைகள். Tags: தேன், புதினா.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:05 முப இல் மார்ச் 4, 2015
ஜூஸ் புதுமை. இனிமை. அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 10:28 முப இல் மார்ச் 8, 2015
சென்னை வீட்டுப் பின்புர மனையில் மரம் காய்க்கத் தொடங்கிய பின்னர் எல்லா வகைகளும் செய்து பழக்கம். மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
chitrasundar | 12:12 முப இல் மார்ச் 5, 2015
காமாக்ஷிமா,
ஒரே கல்லில் ரெண்டு மாங்காயா ! ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் ஜூஸ் புதுசு. பார்க்கும்போதே குடித்துவிடத் தோன்றுகிறது.
அடுத்த முறை ஊருக்குப் போகும்போது எப்படியாவது வாங்கி சாப்பிட்டுவிட வேண்டியதுதான். எப்போது போனாலும் தோப்பு / பெரிய நெல்லிக்காய் வாங்கி சுவைத்துவிடுவேன். ஆனால் இதுதான் கிடைப்பதில்லை. கொஞ்சம் விசாரித்துப் பார்க்க வேண்டும் அல்லது கடைத்தெருவினுள் நுழைந்துவிட வேண்டியதுதான். அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 10:33 முப இல் மார்ச் 8, 2015
இது சீஸனில் மட்டும்தான் கிடைக்கிறது. அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியாது. சித்ரா நான் திடீர் விஸிட்டாக சென்னை வந்துள்ளேன். இடமாற்றம் இருக்கட்டும் என அனுப்பியுள்ளார்கள்.
இ ந்த நெல்லிக்காயும் ஒரு தனி ருசி இல்லையா?
/யாவரும் ஸௌக்கியமா? அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 2:50 முப இல் மார்ச் 5, 2015
நெல்லிக்காய் கிடைக்கிறது…. செய்து ருசித்து விடுகிறோம்.. நன்றி…
6.
chollukireen | 10:35 முப இல் மார்ச் 8, 2015
சிறிது நாட்களில் சீஸன் போய்விடுகிறது.. பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது. அன்புடன்
7.
Ramakrishnan Mallichettiar | 1:18 பிப இல் மார்ச் 10, 2015
Reblogged this on Ramakrishnan Mallichettiar.
8.
chollukireen | 2:34 பிப இல் ஜூன் 26, 2015
மிக்கஸந்தோஷம். அன்புடன்
9.
adhi venkat | 6:58 முப இல் மார்ச் 12, 2015
periya nellikaiyil juice pala maadhangal kaalaiyil verum vaitril kudithirukkiren. rusiyaana juicekku nandrimmaa…
10.
chollukireen | 8:53 முப இல் மார்ச் 12, 2015
பெரியநெல்லிக்காயில் துளி கசப்புமாதிரி ொருசுவையும் இருக்கும். இதில் அரிநெல்லிக்காய் புளிப்பும் இனிப்புமாக
சற்று கட்டாமீட்டாவாக இருக்கும். அன்புடன்