எங்களைப் படம் போட்டிருக்காங்கோ பாருங்கோ.
மார்ச் 9, 2015 at 4:09 முப 24 பின்னூட்டங்கள்
நாங்க எப்படின்னு இவங்க எங்களையே படம் பிடிக்கறாங்க
நீங்களும் பாருங்க
பறந்துபோன காக்கைகள் ஒவ்வொன்றாய் வருகிறது.
வரிசையாய் உட்காருகிறது. இன்னும் என்ன செய்யும் இதுகள்?
பார்ப்போமா?
எல்லாரும் வந்தாச்சா? கோடிவீட்டு மரத்து அண்ணா, அண்ணி
வந்துட்டாங்களா?
எல்லாரும் வந்து சாயங்காலம் இங்கே கூடலாம்..
அதோ அவங்களுக்கும் சொல்லுங்க.
எங்ளையும் படமெடுங்க.
அங்கே பாருங்க அவங்க ஒரு ஸெக்க்ஷன்.
நீங்களும் வந்துடுஙகோ!!!!!!!!!
எல்லோரும் இரை தேடி தின்னூட்டு இங்கே இதே இடத்தில் காமாட்சிம்மா
படம் பிடிப்பாங்க குளிச்சுட்டு ஜோரா வந்திடுங்கோ என்ன!!!!!!!!!!!!!
அம்மா படம் பிடிக்க வந்துட்டாங்க. வாங்கவாங்க காகாகா
நாங்க அழகாக ஊஞ்ஜல் ஆடுவோங்க பிறகு எல்லோரும் ஓடுவோங்க
காகாகா
அதுக்குள்ள சிலபேருக்குக் கோவமா ?
நன்றிம்மா நாங்களும் போறோங்க காகாகா.
b
Entry filed under: ஊஞ்ஜல், படங்கள், வகுப்பு. Tags: காக்கைகள் ஸ்கூல், படம்.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
mahalakshmivijayan | 4:28 முப இல் மார்ச் 9, 2015
ஹா ஹா ஹா.. காக்கா ஸ்கூல் சூப்பர் காமாட்சி அம்மா! இது கண்டிப்பா மேல்நிலை பள்ளியாக தான் இருக்கும்! ஏனெனில் எல்லா காக்கைகளும் மேலே வந்து அமர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா 😀 போட்டோ ஷூட் பிரமாதம்!
2.
chollukireen | 5:57 முப இல் மார்ச் 10, 2015
ஆமாம் ஆமாம். மேல்நிலைப் பள்ளிதான்.. ரஸித்து பின்னூட்டம் கொடுத்திருக்கிராய். நன்றி பெண்ணே. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 5:30 முப இல் மார்ச் 9, 2015
ஊஞ்சலாடும் பறவைகள் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
4.
chollukireen | 6:00 முப இல் மார்ச் 10, 2015
ஊஞ்சல் என்பதே பொருத்தம் இல்லையா? அழகான காட்சியாகத் தோன்றியது. நன்றி உங்களுக்கு. அன்புடன்
5.
chitrasundar | 6:10 முப இல் மார்ச் 9, 2015
காமாக்ஷிமா,
கா கா கா ஸாரி ஹா ஹா ஹா ! நானும் என் பங்குக்கு சொல்கிறேன்மா, இவர்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். மஹாவுக்கு வந்த ஐடியா எனக்கும் வந்தாச்சு.
காமாக்ஷிம்மாவின் காமிரா கைவண்ணத்துடன், அதற்கான விளக்கங்களும் என்னை பள்ளி நாட்களுக்கே அழைத்துச் சென்றுவிட்டது. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 6:04 முப இல் மார்ச் 10, 2015
எட்டாவது மாடியிலிருந்து எதிரே காட்சிகள். மனதில் தோன்றிய வார்த்தைகள். . பரவாயில்லை. இதையும் ரஸித்திருக்கிறாய். நன்றி சித்ரா. அன்புடன்
7.
பிரபுவின் | 6:18 முப இல் மார்ச் 9, 2015
புகைப்படக் கலையில் நிபுணர் ஆகி விட்டீர்கள் அம்மா.மிகச் சிறப்பான நகைச்சுவையுடன் கூடிய யோசிக்க வைக்கும் பதிவு.இது பதிவு அல்ல,நிஜத்தின் நிழல்.என்ன ஒற்றுமையான வாழ்க்கை வாழுகின்றன பார்த்தீர்களா?
நன்றி அன்புடன்….
8.
chollukireen | 6:10 முப இல் மார்ச் 10, 2015
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. வாச்சாம்,பொழைச்சாம் ஸங்கதிதான் இது.வாய்த்ததாம், பிழைத்ததாம் என்ற அர்த்தமோ என்னவோ? ஏதோ கிளிக் ஆகி ஒழுங்காக வந்து விட்டது காக்கைகளின் அதிருஷ்டம். நன்றி அன்புடன்
9.
MahiArun | 6:29 முப இல் மார்ச் 9, 2015
🙂
10.
chollukireen | 11:14 முப இல் மார்ச் 10, 2015
ப்ளாக் பக்கம் வர லயா அனுமதித்தா? நன்றி லயாவுக்கு ஆசியுடனும்,அன்புடனும்
11.
marubadiyumpookkum | 8:19 முப இல் மார்ச் 9, 2015
nallathu u understand crows language very well.
12.
chollukireen | 11:16 முப இல் மார்ச் 10, 2015
அதுகள் பேசுகிறதோ இல்லையோ நான் மானஸீகமாக பேசியதைப்போலவே உணருகிறேன். நன்றியுடனும்,அன்புடனும்
13.
marubadiyumpookkum | 5:55 பிப இல் மார்ச் 10, 2015
thanksma
14.
angelin | 9:47 முப இல் மார்ச் 9, 2015
காக்கா கூட்டம் ஊஞ்சலாடும் அழகே தனி …போட்டோ ஷூட் அட்டகாசம் 🙂
15.
chollukireen | 11:19 முப இல் மார்ச் 10, 2015
லக் இருந்தது. காக்கைகளின் அணிவகுப்பைப் படமெடுக்க அவ்வளவுதான். அஞ்சுவின் வருகைக்கு நன்றியுடனும்,அன்புடனும்
16.
திண்டுக்கல் தனபாலன் | 1:19 முப இல் மார்ச் 10, 2015
அழகான ஊஞ்சல்… ரசித்தேன்…
17.
chollukireen | 11:21 முப இல் மார்ச் 10, 2015
ரஸித்தேன் என்ற பின்னூட்டம் ஸந்தோஷத்தைக் கொடுக்கிரது. அன்புடனும்,நன்றியுடனும்
18.
yarlpavanan | 10:39 பிப இல் மார்ச் 10, 2015
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
19.
chollukireen | 6:07 முப இல் மார்ச் 11, 2015
உங்கள் பின்னூட்டம் பார்த்து அவ்வளவு அளவிலா மகிழ்ச்சி. அன்புடன்
20.
adhi venkat | 7:18 முப இல் மார்ச் 12, 2015
kaakaa koottam jor ammaa.
21.
chollukireen | 8:49 முப இல் மார்ச் 12, 2015
அதிகநேரம் நீடிக்காமல் ஒழுங்காக வந்திருக்கு இல்லையா? மிக்கஸந்தோஷம் உன் பின்னூட்டத்திற்கு. அன்புடன்
22.
chollukireen | 11:18 முப இல் செப்ரெம்பர் 19, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இது தினமும் காணும் மும்பையின் காட்சி. ஏதோ ஒரு கற்பனை. அதற்கு சில படங்கள். அந்த காக்கைகளுக்கும் மிகவும் ஸந்தோஷம். ஒரு நிமிஷம் நீங்களும் பாருங்கள். நன்றி. தினம்தினம் பார்க்கலாம். அன்புடன்
23.
நெ | 12:28 பிப இல் செப்ரெம்பர் 19, 2022
இங்க அவ்வளவு இல்லைனாலும் ஒரு சில காக்காய்கள் வரும். ஆனா பாருங்க… ச்ராத்தம் முடிந்து சாத உருண்டை வைத்தால் ஒண்ணும் வருவதில்லை. மும்பைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள் போலிருக்கு
24.
chollukireen | 10:46 முப இல் செப்ரெம்பர் 20, 2022
இங்கே காக்கைகள் ஏராளம். அதேமாதிரி புராவும். கனுப்பிடி வைத்ததை மட்டும் தொடாதுகள்.ஜோடிஜோடியாக காக்கைகள்.மிகவும் நன்றி. அன்புடன்