காரடையான் நோன்பு.
மார்ச் 12, 2015 at 1:50 பிப 17 பின்னூட்டங்கள்
பூஜைக்குச் செய்யும் முக்கியமான நிவேதனப் பொருளின் பெயரைக்
கொண்டே இந்தப்பூஜையை,அதாவது நோன்பைச் செய்கிறோம்.
இதற்காகத் தொன்று தொட்டு ஒரு கதையும் உண்டு.
ஸாவித்ரி அவள் கணவர் ஸத்யவானின் உயிரை மீட்டு வந்து
நன்றிக்காக இவ்விரதத்தை அநுஷ்டித்ததாகச் சொல்லுவார்கள்.
அசுவபதி என்கிற அரசனுக்கு நெடுநாட்கள் குழந்தைப்பேரின்றி, தவமிருந்து
பெற்ற பெண் ஸாவித்ரி.
மிக்க அருமையான குணம் நிறைந்த,தெய்வ பக்தியுள்ள,, ஒரு பெண்.
அரசர் ஒருஸமயம் நாரதரைப் பார்க்கும் பொழுது இவ்வளவு உத்தம் சீலமான
பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வினவினார்.
நாரதரும் அவள் ஒரு உத்தமமான தாய்தந்தையரிடம் பக்தி கொண்டு
அவர்களை ரட்சிக்கும் ஒரு நல்லவனை மணப்பாள் என்றாராம்.
ஆனால் அவனுக்கு ஆயுள் குறைவு என்றும் சொல்லி வைத்தார்.
வழக்கம்போல ஒருமுறை தோழிகளுடன் ஸாவித்ரி வனத்திற்குச் சென்ற
போது அவ்விடம் ஸத்யவானைச் ஸந்திக்கிறாள்.
ஸத்யவானையே மனதில் வரித்து விடுகிறாள்
ஸத்யவானின் தந்தை பகையரசர்களால் நாடு கடத்தப்பட்டு
வனத்தில் வசிக்கும், கண்தெரியாத அரசர். மனைவிக்கும் கண்தெரியாது.
அவர்களைப் புதல்வன் ஸத்யவான் காப்பாற்றி வருகிரார்.
காட்டில் விரகு வெட்டி, அதை நாட்டில் விற்று அந்தத் தொகையில்
காட்டில் குடிசை அமைத்து அதில் வாழ்ந்து வருகிரார்கள்.
ஸத்யவானைச் சந்தித்த விஷயம் சொல்லி அவளின் விருப்பத்தைச்
சொல்லுகிறாள் தந்தையிடம்.
அவருக்கு ஆயுள் குறைவு, என்று சொல்லியும் ,ஸாவித்ரியின் விருப்பப்படி
ஸத்யவானுடன் மணமுடித்து வைக்கிரார்.
ஸாவித்ரியும் மாமனார்,மாமியாருக்குச் சேவை செய்து கணவருடன்
உத்தமமான வாழ்வை நடத்தினாள்.
கணவரின் நீண்ட ஆயுளுக்காக பூஜை,புனஸ்காரங்களும் செய்து வந்தாள்.
நாரதர் சொன்ன விஷயம் அவளுக்கு ஞாபகம் வந்து கொண்டே
இருந்தது.
அன்று ஸத்யவான் காட்டிற்கு விறகு சேமிக்கப் புரப்படும் போது
பெரியவர்களுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து விட்டு
ஸாவித்ரியும் உடன் புறப்பட்டாள்.
விறகுகள் சேமிக்கும்போது ஸத்யவான் பாம்பு தீண்டி விழுகிரான்
ஸாவித்ரி மடியில் தாங்கிக் கொள்கிராள்.
பாசக்கயிற்றுடன் எம தர்மன் தோன்றுகிறது பதிவிரதையான
ஸாவித்ரிக்குத் தெரிகிரது.
நீங்கள் யார் என்று கேட்க நான் யமதர்மன் . உன் கணவனின் ஆயுள்
முடிகிறது. எடுத்துப் போகிறேன்.
ஸாவித்ரியும் பின்தொடர்கிறாள்.
சினேகிதரே சற்றுத் தாமதியுங்கள் என்கிராள் ஸாவித்ரி.
நானா சிநேகிதன்?
. ஏழடி ஒருவருடன் சேர்ந்து நடந்தால் சினேகிதம்தான்
நன்றாகப் பேசுகிராய். என்னைப் பின்தொடராதே.
உனக்கு உன்கணவர் உயிரைத்தவிர வேறு ஏதாவது மூன்று வரங்கள்
கேள். தருகிறேன் என
ஸாவித்ரி அவருக்கு நன்றி சொல்லி
என்னுடைய மாமனார் மாமியாருக்குக் கண்பார்வை திரும்ப வேண்டும்,
என் தந்தைக்கு ஆண் வாரிசாக நூறு ஆண் குழந்தைகள் வேண்டும்,
மேலும் எனக்கும் நூறு குழந்தைகள் வேண்டும்.
வரங்கள் கேட்டாயிற்று.
எல்லா வரங்களும் கொடுத்தேன். இன்னமும் என்னைப் பின்தொடராதே.
யமதர்மனும் சொல்லியாயிற்று.
ஆனாலும் பின்தொடர்கிறாள் ஸாவித்ரி.
மிக்க கோபத்துடன் யமதர்மன் தொடராதே, இன்னும் என்ன வேண்டும்?
உங்கள் வாக்கு தப்பாது. ஆனால் கணவரில்லாமல் குழந்தைகள் எப்படி
பிறக்கும்?
ஓ யோசிக்காது வரம் கொடுத்து விட்டேன்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.
ஸத்யவானின் உயிரைக் கொடுத்து விடுகிறார்.யமதர்மர்.
திரும்பி வந்த ஸாவித்ரி உயிருடன் கணவரையும்,நல்ல பார்வையுடன்
மாமனார்,மாமியாரையும் பார்த்து ஸந்தோஷமடைகிராள்.
மாசிமாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் நேரம்.
வீட்டிலிருந்த கார் நெல்லை அரிசியாக்கி,மாவிடித்து,அதனுடன்
காராமணி,வெல்லம் சேர்த்து, இனிப்பான அடைகளை வேக வைத்தெடுத்து
நிவேதனம் செய்து நோன்பு செய்தாள் என்பது வழிவழியாகச் சொல்லக்
கேட்கும் கதை.
இக்கதையைக் கேட்பவர்களுக்கும்,இந்த விரதத்தை அனுஸரிப்பவர்களுக்கும்
கணவருக்குப் பூரண ஆயுளும்,,குடும்பத்திற்கும் நல்ல போக பாக்கியங்களும்
வந்து சேரும் என்பது திடமான அபிப்பிராயம்.
இந்த மாதப்பிறப்பு நேரம் எப்போதாகிலும். அந்நேரத்திற்குமுன்
இந்தஅடையைச் செய்து நிவேதித்து ,நோன்பை அனுஸரிக்கிறோம்.
அவரவர்கள் சிறிது மாற்றத்துடன் இவ்விரதத்தை அனுஸரித்தாலும்
மஞ்சள் சரடு வைத்து பூஜை செய்து கணவரின் தீர்காயுளை வேண்டி
கழுத்தில் அணிந்து கொள்வதுதான் இப்பூஜையின் முக்கிய அம்சம்.
காமாக்ஷி அம்மன் விரதம் என்று கலசம் வைத்து பூஜிக்கும் முறையும்
உண்டு.
மஞ்சள் பூசி தலைக்குக் குளித்து விரதமிருந்து, மடி ஆசாரத்துடன்
நிவேதநம் தயாரித்து , வினாயக பூஜை செய்து, நுணி வாழை இலையில்
காரடையுடன்வெண்ணெயும் வைத்து, அதன்மேல் சரடைச் சாற்றி
பூஜித்து உருக்காத வெண்ணெயும்,ஓரடையும் தட்டி வைத்தேன்.
ஒருகாலும் என்கணவர் பிரியாதிருக்கணும் என்று சொல்லி
நிவேதித்து சரடை அணிந்து கொள்ள வேண்டும்.
தனித்தனியாகக் கோலமிட்டு நிவேதனம் செய்து, அவரவர்களே
சரடைக் கழுத்தில் அணிவதும் சில குடும்பத்து வழக்கம்.
பூஜையை எல்லோரும் செய்து பெரியவர்களால் நோன்புச் சரடைக்
கட்டுவதும் வழக்கம்.
கன்னிப்பெண்கள்,ஸுமங்கலிகள் அனுஸரிக்கும் இந் நோன்பு 2015
மார்ச் 15 அதிகாலை நான்கு மணியளவில் நேரம் குறிப்பிடப் பட்டுள்ளது.
எனக்குத் தெரிந்த அளவில் எழுதியிருக்கிறேன். கதைகளில்
சில மாறுபடவும் வாய்ப்புண்டு. யாவருக்கும் அன்புடன் ஆசிகளும்
ஸுமங்கலிகளுக்கு தாம்பூலமளித்து, பசுமாட்டிற்கும் பூஜை செய்து
வழிபடுவது உண்டு.
Entry filed under: எங்கள் வீட்டு பூஜைகள். Tags: காரடை, காராமணி, வெல்லம்.
17 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:59 பிப இல் மார்ச் 12, 2015
கதையையும் சொல்லி, படங்களும் போட்டு, பூஜித்து சரடு கட்டும் தேதி, கிழமை, நேரம் முதலியனவும் சொல்லி, அனைவருக்கும் தங்களின் ஆசிகளும் கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
2.
chollukireen | 10:30 முப இல் மார்ச் 14, 2015
நான் சென்னை வந்துள்ளேன். திடீரென்று எழுதும் எண்ணம் வந்தது. உட்கார்ந்து சாப்பாடு. நேரம் கிடைத்தது. தெரிந்ததை எழுதினேன். உங்கள் மறுமொழி கிடைத்தது மிகவும் ஸந்தோஷமாக உள்ளது. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 2:22 பிப இல் மார்ச் 12, 2015
இதே நோன்பு பற்றி நான் சென்ற சில வருடங்களில் எழுதி வெளியிட்ட பதிவுகள் என் நினைவுக்கு வந்தன:
2012: http://gopu1949.blogspot.in/2012/03/14032012.html
2013: http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html
4.
chollukireen | 10:31 முப இல் மார்ச் 14, 2015
பதிவுகளைப் படிக்கிறேன்.நன்றி. அன்புடன்
5.
Kumar | 4:41 பிப இல் மார்ச் 12, 2015
Vella Adai Rombavum Nanraga Irukkirathu.
Sappital pol Irukkirathu.
Nonmbu cheyya enna karanam enru chonnathirkku rombavum thanks.
6.
chollukireen | 10:34 முப இல் மார்ச் 14, 2015
உப்பு அடைகூட முன்பு பதிவில் எழுதியுள்ளேன். கதை எழுதினதிற்கு உங்கள் நன்றியையும் எழுதியுள்ளீர்கள்.
இரண்டு அடையும் சாப்பிடக் கிடைக்கப் போகிறது.
உங்கள் மறு மொழிக்கு மிக்க மகிழ்ச்சி.
7.
திண்டுக்கல் தனபாலன் | 2:56 முப இல் மார்ச் 13, 2015
மிகவும் நன்றி அம்மா…
8.
chollukireen | 10:36 முப இல் மார்ச் 14, 2015
உங்களின் நன்றி நவிலுதல் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. எழுதுபவர்கள் எல்லோருக்குமே. நன்றியுடனும்,அன்புடனும்
9.
adhi venkat | 8:07 முப இல் மார்ச் 13, 2015
கதையும் தகவல்களும் அருமை அம்மா. முதல் நாள் இரவு 9.30க்கும் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.
10.
chollukireen | 10:43 முப இல் மார்ச் 14, 2015
ஆமாம் ஆதி. இவ்விடமும் அப்படிச் சொல்லியிருக்கிரார் வாத்தியார். மாசிச் சரடு பாசி படியும் என்றும் விசேஷமாகச் சொல்வதுண்டு. கதை எல்லாம் தெரிந்திருந்தாலும், திரும்பப் படிப்பதில் ஒரு`திருப்தி இல்லையா? விவரமான பதிலுக்கு ஸந்தோஷமும், நன்றியும்
11.
chitrasundar | 9:13 பிப இல் மார்ச் 13, 2015
காமாக்ஷிமா,
சின்ன வயசுல சாவித்திரி கதையைக் கேட்டதுண்டு. ஆனால் மறந்துவிட்டேன். இப்போது தெரிந்துகொண்ட திருப்தி. நோன்பு முறை, அனுசரிக்கும் நேரம், ஆசிகள் என கலக்கிவிட்டீர்கள். நன்றிம்மா. அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 10:48 முப இல் மார்ச் 14, 2015
சின்ன வகுப்பு படிக்கும் போது, இம்மாதிரி கதைகளெல்லாம் பாட புத்தகத்திலும் போட்டிருப்பார்கள்.
நாயன்மார்கள்,ஆழ்வார்கள் என்று எல்லாருடயதும் படித்ததாக நினைவு. இப்பொழுதய நிலவரம் தெரியாது.
எனக்குத் தெரிந்ததை எழுதினேன். ரஸித்து பின்னூட்டம். நன்றி சித்ரா.
13.
chollukireen | 8:14 முப இல் மார்ச் 10, 2016
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இவ்வருஷத்திய பூஜை காரடையான்நோன்பு மார்ச் பதினான்காம்தேதி திங்கட்கிழமை காலை பத்து மணி முதல் பத்து மணி ஐம்பது நிமிஷத்திற்குள் செய்யலாம் என்று வாத்தியார் சொல்லி சரடு கொடுத்துவிட்டுப் போனார். யாவரும் பூஜையை பக்தி சிரத்தையுடன் அனுஸரித்து, வேண்டும் வரங்களைப் பெறவேண்டும். உங்கள் யாவருக்கும் மஞ்சள்,குங்குமம்,தாம்பூலத்துடன் என்னுடைய அன்பான நல் ஆசிகளையும் சொல்லுகிறேன். அன்புடன்
14.
ranjani135 | 10:35 முப இல் மார்ச் 10, 2016
சென்ற வருடம் இந்த நோன்பின் பொது நான் சென்னையில் அக்கா அகத்தில் இருந்தேன். நான் தான் காரடை, வெல்ல அடை செய்தேன். அக்கா ரொம்பவும் ஆசையாகச் சாப்பிட்டாள். அக்காவின் பேத்திகள் இருவரும் பட்டுப்பாவாடை அணிந்துகொண்டு நான் சொன்னதை திருப்பிச் சொல்லி சரடு கட்டிக்கொண்டார்கள்.
என்னவோ எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதினேன்.
15.
chollukireen | 12:38 பிப இல் மார்ச் 11, 2016
மனதைவிட்டு அகற்ற முடியுமா? எவ்வளவு வருஷங்களானாலும் எண்ணம் ஒரு நிமிஷமாவது வந்துதான்போகும். ஆசீர்வதிப்பாள். அப்படி மனதில் எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அன்புடன்
16.
meenakshi sivasankaran | 2:23 பிப இல் மார்ச் 12, 2016
மிக அருமை! நான் இந்த நோம்பைக் கொண்டாடி 5 வருடங்கள்ஆகிவிட்டன.
டிபன் வகைகள் பார்க்கப்போய் உங்கள் இடுகைப் பார்த்தேன் காரடையான் நோம்பு என் கண்ணில் பட்டது. இந்த வருடம் மார்ச் 14ம் தேதியையும் குறித்து கொண்டாடும் நேரத்தையும் குறித்தது
மிகவும் எனக்குப் பயன் உள்ளதாஇருந்தது. நன்றி.
17.
chollukireen | 8:19 முப இல் மார்ச் 13, 2016
வெளி நாட்டில் இருக்கிறாயா அன்புப் பெண்ணே. நோன்பைக் கொண்டாடி சரடு கட்டிக்கொள். உன் பின்னூட்டம் என்மனதை வெகுவாகக் கவர்ந்தது. அன்பு அப்படி. முடிந்தபோதெல்லாம் இந்த பகுதிக்கும் வந்து ஸந்தோஷப்படுத்து. அன்பும் ஆசிகளுமாவது கிட்டும். ஆசிகளுடனும், அன்புடனும் சொல்லுகிறேன்.