ஆலு டிக்கி.
மார்ச் 20, 2015 at 11:13 முப 21 பின்னூட்டங்கள்
என்ன ஹிந்திப் பெயரா இருக்கே என்று பார்க்கிறீர்களா?
அந்தப்பெயர்தான் எல்லோரும் சொல்கிரார்கள்.
வட இந்தியர்கள் விரும்பும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்
வரை மிக்க விரும்பும் நம்மவர்களும் கூட ருசிக்கும் சிற்றுண்டி இது.
முன்பே சோலே எழுதும்போது ஆலு டிக்கி எழுதுகிறேன் என்று
எழுதினேன்.
இப்போது ஒரு புளிச் சட்னி,வட இந்தியர் பாணியில் எழுதி டிக்கியும்
எழுதுகிறேன்.
சோலே,தயிரும் கூட போட்டு டிக்கியை செய்து ருசியுங்கள்.
அல்லது ரஸியுங்கள்.
ஜெனிவா பேத்தி, அவளுடைய சினேகிதிகளைக் கூப்பிட்டால்
பாட்டி,ஆலு பரோட்டா,அல்லது இந்த டிக்கியை செய்யச் சொல்லுவாள்.
வேண்டியவைகளைப் பார்ப்போமா?
புளிச்சட்னி பிரமாதம் ஒன்றுமில்லை.
செய்முறை — ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை ஊறவைத்து
கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பொடித்துப் போடவும்
பெருஞ்சீரகமும் சேர்க்கலாம்.
வெல்லம் ஒரு சிறியத் துண்டு
ருசிக்கு—உப்பு
சாட்மஸாலா வின் ஒரு சிட்டிகை இந்துப்பு
பெருங்காயம் சிறிது. இவைகளைச் சேர்த்து நிதான தீயில்
கொதிக்க விடவும்.
சாஸ் மாதிரி திக்காக ஆகும்போது இறக்கி சிறிய கிண்ணத்தில்
மாற்றவும்.
இப்போது இம்லி சட்னி தயார். புளிக்குழம்பு என்றே வைத்துக்
கொள்ளுங்களேன்.
அடுத்து டிக்கி.வேண்டியவைகள்
உருளைக்கிழங்கு, திட்டமான சைஸ்—4
பச்சைமிளகாய்—-2
உப்பு–ருசிக்கு
பச்சைக் கொத்தமல்லி இலை சிறிது.
எண்ணெய்—-வேண்டிய அளவு.
செய்முறை.
உருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தண்ணீரில் வேக வைத்தோ
அல்லது மைக்ரோவேவில் ஒரு ஈரத்துணியில் பொதிந்து
உருளைக்கிழங்கை ஹைபவரில் 5 அல்லது 6 நிமிஷங்கள்
மைக்ரோவேவ் செய்தோ தோலை உறித்து நன்றாக மசித்து
வைத்துக் கொள்ளவும்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,உப்பு சேர்க்கவும்.
உருளைக் கலவையை திட்டமான சைஸில் சற்றுப் பருமனான
வடைகளாகத் தட்டி வைக்கவும்.
மேலே காட்டியுள்ளமாதிரி செய்து வைத்துக் கொள்ளவும்.
நான்ஸ்டிக் தோசைக் கல்லிலோ,அல்லது அடை வார்க்கும்
கனமான அடைக் கல்லிலோ இந்த டிக்கிகளை மிதமான தீயில்
சுற்றிலும் எண்ணெய் விட்டு தவலடைபோல சிவக்க விடவும்.
முருகலாகச் சிவந்ததும் எடுத்துத் தட்டில் வைக்கவும்.
இதற்கான சோலே மஸாலா முன்பு எழுதியிருக்கிறேன்.
ப்ளேட்டில் ஆலு டிக்கியை வைத்து, ஒரு கரண்டி செனாமஸாலா,
ஒரு டீஸ்பூன் புளிசட்னி, கொஞ்சம் தயிர், மேலே சில மல்லி இலைகள்
ஒரு ஸ்பூனைப் போட்டு கொடுத்து விடுங்கள்.
பச்சைமிளகாய் காரம்,சோலேயின் ருசி, திதிப்பு ,புளிப்பு சுவைக்குசட்னி என்று ஒரு கலவை ருசி.
வெளியில், தில்லியில் ,ஷாப்பிங் போவோர்கள் இதைச் சாப்பிடாது
வரமாட்டார்கள்.
பேத்தியின் சினேகிதிகளும் ஒரு கை பார்ப்பார்கள் ஜெனிவாவில்.
நானும் தில்லியில் இருந்திருக்கிறேன்.
வேண்டாததை நீக்கி நீங்களும் ருசிகிக்கலாமே.
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
21 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:25 முப இல் மார்ச் 20, 2015
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் …. ஆனால் இந்தப்பதிவு பாதியில் நிற்பதுபோல உள்ளதே ?
வெல்லம் ஒரு சிறியத் துண்டு ….. அதை நான் முதல் வேலையாக என் வாயில் போட்டு அடக்கிக்கொண்டு விட்டேன்.
2.
chollukireen | 11:41 முப இல் மார்ச் 20, 2015
சேமிக்கறதுக்குப் பதிலாக பிரசுரி என்ற இடத்தில் குரித்துவிட்டேன் போலுள்ளது. மன்னிக்கவும் மன்னிக்கவும். அன்புடன்
3.
chollukireen | 11:43 முப இல் மார்ச் 20, 2015
அவஸரவேலை. அன்புடன்
4.
திண்டுக்கல் தனபாலன் | 2:00 முப இல் மார்ச் 21, 2015
அருமையான பதார்த்தம்… நாங்களும் செய்து பார்க்கிறோம்… நன்றி…
5.
chollukireen | 10:24 முப இல் மார்ச் 21, 2015
இந்த கலவையே ஆலு பரோட்டாவாகவும்,உருளைக்கிழங்கு போண்டோவாகவும்,
படாடா வடாவாகவும் சிறிது சேர்மானத்துடன் உருவாகிறது. நன்றி அன்புடன்
6.
adhi venkat | 7:39 முப இல் மார்ச் 24, 2015
டிக்கி ஜோரா இருக்குமே… உங்க செய்முறைப்படியும் செய்து பார்த்து விடுகிறேன்.
7.
chollukireen | 6:39 முப இல் மார்ச் 25, 2015
செய்வது மாத்திரமில்லை. ருசித்து எப்படி என்றும் எழுது..
8.
chitrasundar | 4:16 முப இல் மார்ச் 30, 2015
காமாக்ஷிமா,
பதிவை முன்பே படித்திருந்தால் சுவைத்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டேன்.
சென்ற வாரம் ஒரு உணவகம் சென்றிருந்தபோது இதேபோல்தான் சென்னா மசாலாவுடன் உருளைக்கிழங்கு கட்லட் மாதிரி இருந்தது. பக்கத்தில் தயிர், சட்னி வகைகள் எல்லாம் இருந்தன. எனக்குத்தான் தெரியாமல் போய்விட்டது. அடுத்த தடவ போனால் காமாக்ஷிம்மாவின் புண்ணியத்தால் ஒரு பிடி பிடித்துவிட்டு வருகிறேன். அன்புடன் சித்ரா.
9.
chollukireen | 11:25 முப இல் மார்ச் 25, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
சுலபமான ஆலுடிக்கி மீள்பதிவு செய்திருக்கிறேன்.சுலபமானது. செய்துதான் பாருங்களேன்.
அன்புடன்
10.
Geetha Sambasivam | 12:22 பிப இல் மார்ச் 25, 2021
ரொம்பப் பிடிச்சது இது. ராஜஸ்தானில் மதார் கேட் என்னும் பகுதியில் இதற்கெனப் பிரபலமான இரண்டு கடைகள் இருக்கின்றன. அங்கே போனால் டிக்கியும், தயிர்வடையும் சாப்பிடாமல் வர மாட்டோம். நினைவுகளைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு. நன்றி.
11.
chollukireen | 12:37 பிப இல் மார்ச் 25, 2021
டில்லியிலும் பெயர்போனது இது. பானிபூரி, முதலானவைகள் சாப்பிடாமல் வரமாட்டார்கள்.கடையில் வாங்கிச்சாப்பிடுவது அலாதியான ருசிக்கான காலம். டெல்லியில் இன்னும் எவ்வளவோ சொல்லலாம். நினைவுகளை அசைபோடுவதும் ஒரு ருசிதான். நன்றி. அன்புடன்
12.
நெல்லைத்தமிழன் | 12:58 பிப இல் மார்ச் 25, 2021
ஆலு டிக்கி இதுவரை நான் சாப்பிட்டதில்லை. செய்முறை சுலபமா இருக்கு.
இந்த சோலே மஸாலா எப்படிப் பண்ணறதுன்னு பார்க்கிறேன். அது கஷ்டம்னா, கிச்சன் என் கையில் வரும்போது செய்ய இயலாது.
இந்த மாதிரி ஐட்டங்கள் பண்ணினால், பசங்க நல்லா சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன், சும்மா அரிசி உப்புமா, அடை, தோசை என்று ஜல்லியடிக்கிறதைவிட.
13.
chollukireen | 11:03 முப இல் மார்ச் 26, 2021
சோலே மஸாலா நான் முன்பு எழுதியிருந்தேன்.அதை முதலில் மீள்பதிவு செய்திருக்க வேண்டும். இப்போதும் அதையும் பதிவு செய்கிறேன். சோலே செய்யத் தெரிந்து விட்டால் ரொட்டி,பூரி யாவிற்கும் ஏற்றது. வட இந்திய வகைகளுக்கு இதிலும் பலவகை. நல்ல பதில். வரவேற்கிறேன். அன்புடன்
14.
நெல்லைத்தமிழன் | 1:00 பிப இல் மார்ச் 25, 2021
தயிர்வடைன்னு பின்னூட்டத்துல பார்த்தேன்.
நம்ம ஊர் தயிர்வடை மாதிரி வராது என்பது என் அபிப்ராயம். வட இந்தியாவில் தயிரை இனிப்பாக்கிடறாங்க. சமீபத்துல பெங்களூர்ல ஒரு கடைல பார்த்து என் பையனுக்கு ரொம்பப் பிடிக்குமேன்னு இரண்டு தயிர்வடை வாங்கினேன்..நல்லாவே இல்லை இனிக்குதுன்னுட்டான்.
15.
chollukireen | 11:14 முப இல் மார்ச் 26, 2021
நம் ஊர் தயிர் வடை பெயர் போனது. அவ்விடம் தஹி பல்லா என்று சொல்லுவார்கள். தயிரிலேயே சிறிது சர்க்கரை கலப்பார்கள். பெங்களூரும் அப்படியா? நம் சென்னைப் பசங்களை தயிர்வடை என்று வடக்கே நம் தமிழ்ப் பெண்களே சொல்லுவார்கள். பழக்க வழக்கங்களுக்கு. இது தெரியுமா?வேளைக்கீரை பார்த்தீர்களா. நன்றி. அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 2:35 முப இல் மார்ச் 27, 2021
வேளைக்கீரை பார்த்தேன்…நன்றி….
‘தயிர்வடை’ என்பது சிகரெட் இத்யாதி புரட்சிகர வழக்கம் இல்லாத, கொஞ்சம் பழமைச் சிந்தனை உள்ள இளைஞர்களுக்கான பெயர். இது 50 வருடங்களுக்கு மேலாக வழக்கத்தில் இருக்கிறது (இல்லைனா தயிர்சாதம்னு சொல்வாங்க). ஜெமினி கணேசனுக்கும் இந்தப் பெயர் ஆரம்பகாலத்தில் இருந்தது.
17.
chollukireen | 11:21 முப இல் மார்ச் 27, 2021
அப்படியா? எனக்குத் தெரியாது. சோலே முன்பே மீள்பதிவு செய்துவிட்டேன் என்று காண்பிக்கிறது. தயிர் வடை நல்ல உபயோகம். ஸ்வாரஸ்யம். அன்புடன்
18.
ஸ்ரீராம் | 1:35 பிப இல் மார்ச் 25, 2021
செனாமசாலா சும்மா கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக் கொண்டால் போதுமா?புளிச்சட்னி என்பது கொத்சு போல இருக்கிறது. ஆளு டிக்கி என்பது கட்லெட் பாணியில் இருக்கிறது. ஒருநாள் செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.
19.
chollukireen | 11:22 முப இல் மார்ச் 26, 2021
சோலே என்ற தயாரிப்பை முன்பு எழுதியிருந்ததை தெரிந்து இருக்கும் என்ற நினைப்பு எனக்கு.அதை செய்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.வெள்ளைக் கடலையில் மஸாலா சேர்த்துச் செய்வதுதான் சோலே. நமக்கு கட்டாயம் உவமை தோன்றும். அது ஸரியும் கூட. உங்களுக்கும் வேளைக்கீரை படம் அனுப்பினேன்.
கட்லெட்மாதிரி. அதுவும் ஸரிதான். நன்றி. அன்புடன்
20.
Revathi Narasimhan | 11:35 முப இல் மார்ச் 26, 2021
அன்பு காமாட்சிமா,
அருமையான விளக்கமான செய்முறையுடன் கொடுக்கும் போது
ஆலூ டிக்கி உடனே செய்யத் தோன்றுகிறது.
நாங்கள் PattIS. இந்த முறையில் செய்வோம்.
படங்களும் அருமை. நல்ல உழைப்பாளியான
உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வது மனதை மகிழ்விக்கிறது.
நன்றி மா.
21.
chollukireen | 11:59 முப இல் மார்ச் 26, 2021
சோலேயும் முதலிலேயே செய்து கொள்ள வேண்டும். இந்தக்கால பசங்களுக்கு மிகவும் பிடித்தது. நான் இதெல்லாம் மருமகள்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன். இப்போது என் நிலை உங்களுக்குத் தெரியாது.உங்கள் பதில் ஓயஸிஸ் மாதிரி. மகிழ்விக்கிரது. நன்றி. அன்புடன்