மூலிகைப் பச்சடி—கற்பூரவல்லி.
மார்ச் 22, 2015 at 6:20 முப 21 பின்னூட்டங்கள்
இது ஒரு தயிர்ப் பச்சடி. உடம்பிற்கு நல்லது. ருசியாகவும் இருக்கிறது..
கற்பூர வல்லி இலை—6
தயிர்—-1கப் புளிப்பில்லாதது.
பச்சைமிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
வறுத்துப் பொடிக்க—தனியா,சீரகம்,வகைக்கு அரை டீஸ்பூன்
தாளித்துக் கொட்ட கடுகு சிறிதளவு.
எண்ணெய் சிறிதளவு.
தனியா,சீரகத்தை லேசாக வெரும் வாணலியில் வருத்துப்
பொடிக்கவும்.
தேங்காய்,மிளகாய், கற்பூர வல்லி இலையை நன்றாக அரைத்துக்
கொள்ளவும்.
அரைத்ததைத் தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பொடியையும் சேர்க்கவும்.
கடுகு தாளிக்கவும். பச்சடி தயார். சாதத்துடன்
துவையல்,பொடி முதலானவைகள் கலந்து சாப்பிடும் போது
தொட்டுக் கொள்ள பச்சடி சுவையாக இருக்கும்.
நெஞ்சுக்கட்டு,சளி முதலானவைகளையும் கட்டுப்படுத்தும்.
சிறியதாக ஒரு தக்காளிப் பழத்தை நறுக்கியும் சேர்க்கலாம்.
நன்றாகத்தான் இருக்கிறது.
Entry filed under: மூலிகைப்பச்சடி. Tags: கற்பூர வல்லி, மூலிகை.
21 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
பிரபுவின் | 7:33 முப இல் மார்ச் 22, 2015
கற்பூரவல்லிக்கு இருக்கும் தனித்துவமே தனிதான். அருமை அம்மா.நான் கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன். மற்றவர்களுக்கும் சொல்லுகின்றேன்.
நன்றி பதிவுக்கு.அன்புடன்….பிரபு.
2.
chollukireen | 12:34 பிப இல் மார்ச் 22, 2015
பரிவுடனான உங்கள் பின்னூட்டம் ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. நன்றி சொல்வதைத்தவிர வேறு என்ன எழுத? நன்றி. அன்புடன்
3.
Mrs.Mano Saminathan | 10:54 முப இல் மார்ச் 22, 2015
சுவையாக பச்சடி செய்யும் அதே வேளையில் உடம்பிற்கு மிகவும் உபயோகமான பலனையும் கொடுக்கிறது! அருமையான பச்சடி குறிப்பிற்கு நன்றி!
4.
chollukireen | 12:37 பிப இல் மார்ச் 22, 2015
உங்கள் பதிவுகளையும் நான் அடிக்கடி படிப்பதுண்டு.
இந்த பின்னூட்டம் மிகவும் உபயோகமானது. ஸந்தோஷத்துடன் வரவேற்கிறேன். அடிக்கடி வந்து ஊக்கமூட்டுங்கள். நன்றியுடனும், அன்புடனும்
5.
திண்டுக்கல் தனபாலன் | 1:27 பிப இல் மார்ச் 22, 2015
உடலுக்கு உபயோகமான பச்சடி அம்மா… நன்றி…
6.
sheela | 11:05 முப இல் மார்ச் 23, 2015
Mami,
Though I have plenty of karpoora valli plants, i never knew we could make pachadi also. Will definitely try this.
Thank you & Regards
7.
chollukireen | 11:25 முப இல் மார்ச் 25, 2015
இந்த இலை ஓம வாஸனைதானே. முதலில் சற்று வித்தியாஸமாகத் தோன்றினாலும் ருசியாகத்தானே இருக்கும். செய்துபார். . காரமான மிளகாய்ச்செடி முன்பு இருப்பதாக எழுதியதுl இருக்கிரதா? மிளகாயும் அதில் துளி சேர்க்கலாமே. பார். பஜ்ஜிகூட போடலாம் என்று எழுதி இருப்பதையும் பார்.. உன் பின்னூட்டம் மிகவும் ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது.
அப்பாவின் நலம் எப்படி இருக்கிறது. நான் சென்னைக்கு
வந்துள்ளேன். அன்புடன்
8.
adhi venkat | 7:41 முப இல் மார்ச் 24, 2015
சத்தான பச்சடி. என் பெண்ணுக்கு குழந்தை முதலே சளி பிடித்தால் கற்பூரவல்லியை கொதிக்க வைத்து தேன் சேர்த்து கொடுப்பேன். இந்த இலையில் பஜ்ஜியும் செய்து ருசித்திருக்கிறோம்.
9.
chollukireen | 11:30 முப இல் மார்ச் 25, 2015
குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமான வைத்தியம்.. பஜ்ஜியும் விசேஷம். ருசியான குறிப்பு . மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
10.
marubadiyumpookkum | 5:44 பிப இல் மார்ச் 25, 2015
nice post.ma…In our home is also karpooravalli(oma valli) spreaded..I
have to do it. good sharing
11.
chollukireen | 1:06 பிப இல் மார்ச் 26, 2015
அப்படி செய்து பார்த்து சுவைத்தால் மிகவும் திருப்தியாக இருக்கும். அன்புடன்
12.
chitrasundar | 4:11 முப இல் மார்ச் 30, 2015
காமாக்ஷிமா,
மருத்துவ குணமுள்ள சூப்பர் பச்சடி. கிடைத்தால் உடனே செய்துவிடலாம். பதிவாக்கியதற்கு நன்றிம்மா, அன்புடன் சித்ரா.
13.
ranjani135 | 8:08 முப இல் ஏப்ரல் 4, 2015
கற்பூரவல்லி இலையில் பச்சடி இன்றுதான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். வெறுமனே சாப்பிடவே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எங்காவது பார்த்தால் பறித்து வந்து செய்து பார்க்கிறேன்.
14.
chollukireen | 11:40 முப இல் பிப்ரவரி 19, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
எதையாவது மறுபதிவு செய்வோமென்று பார்த்தால் இது சிக்கியது. பெண்ணாத்தில் செய்தது. நன்றாக இருந்தது.அன்புடன்
15.
ஸ்ரீராம் | 1:32 பிப இல் பிப்ரவரி 19, 2021
உடம்புக்கு நல்லதுதான். ஆனால் அப்படி நினைத்தாலே சாப்பிடுவதில் சுணக்கம் வரும்!!! நாலுமுழ நாக்கு!
16.
chollukireen | 1:41 பிப இல் பிப்ரவரி 19, 2021
இல்லை இல்லை இது நன்றாகவே இருந்தது ஆனால் எப்போதும் நான் ஞாபகம் வைத்து செய்வதில்லை அதுதான் நிலை தொட்டிகளில் வளரும் டில்லியில் துளசிக்கு பக்கத்திலிருக்கும் நினைத்துக்கொள்வேன் இதில் செய்யலாம் என்று அன்புடன்
17.
chollukireen | 11:42 முப இல் பிப்ரவரி 20, 2021
முயற்சி செய்யலாமே. நாக்கு எல்லாம் அப்படியே இருக்கும். பரிசோதனை. அன்புடன்
18.
நெல்லைத்தமிழன் | 1:46 பிப இல் பிப்ரவரி 19, 2021
ஓ… இதுல பஜ்ஜியும் போடலாமா (பின்னூட்டத்தில் பார்த்தேன்). நிச்சயம் ஒரு முறை செய்கிறேன் (மற்ற பஜ்ஜி போடும்போது)
19.
chollukireen | 11:24 முப இல் பிப்ரவரி 20, 2021
பகோடா போடும்போதும் புதினா சேர்ப்பதுபோல சிறிது செய்தோம். அதுவும் ஸரிதான். தனியாக எதுவும் செய்வதுதான் யோசனை. பரிசோதனை கூடக்கூடதான். பார்ப்போம். உங்களுக்கு எப்படி என்று. அன்புடன்
20.
நெல்லைத்தமிழன் | 1:47 பிப இல் பிப்ரவரி 19, 2021
சாதாரணமா பச்சிடி செய்யும் முறையில்தான் செய்முறை இருக்கு (சீரகம், தனியாதான் எக்ஸ்ட்ரா).
எங்க பால்கனில கற்பூரவல்லி போட்டிருக்கேன். நல்ல வாசனை. கொம்பு உடைந்துவிட்டாலும், அதை இன்னொரு தொட்டியில் நட்டால் நன்கு வந்துவிடுகிறது.
உடம்புக்கு நல்லது என்று சொல்லிட்டீங்க இல்லையா. பசங்க சாப்பிடறது டவுட் (பிரண்டைத் துவையல் போல)
21.
chollukireen | 11:37 முப இல் பிப்ரவரி 20, 2021
என்னுடைய டில்லி பிள்ளையின் வீட்டில் தொட்டியில் வளருகிறது. பார்க்கும் போதெல்லாம் பறித்து வாயில்போட்டு மெல்வேன். அழகு இலைக்காகவே இரண்டு மூன்று தொட்டிகளில் வளருகிறது. சுரைக்காயில் கூட ராய்த்தா என்று ரொட்டியின் துணைக்குச்செய்கிரார்கள் பஞ்சாபியர். மஸாலாபோட்டு புதுப்பெயருடன் ஏதேதோ வருகிறது. அன்புடன்