கோடைக்கேற்ற ஒரு மோர் வாழைத்தண்டில்.
ஏப்ரல் 7, 2015 at 12:05 பிப 10 பின்னூட்டங்கள்
இதுவும் ருசியாக உள்ளது. வாழைத் தண்டு என்றால் எதுவும்
யோசிக்காமலேயே அதெல்லாம் பிடிக்காது என்று சொல்பவர்கள்
அநேகம்பேர்.
ஆனால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் அதனால் உண்டாகிறது?
உடலின் கொழுப்பு ஸத்தைக் குறைக்க மிகவும் உதவுகிறது.
வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். பித்தம்,கபம்
முதலானவைகளைப்போக்கும்.
சிறுநீரக எரிச்சலையும் போக்கும். ஏ மற்றும் ஸி வைட்டமின்கள்
அடங்கியது. பொடாஷியமும் இருக்கிறது.
குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு தண்டில்
சுவையான நீர் மோர் செய்து நாமும் அருந்தலாம். கோடைக்கேற்ற
குளிர்ச்சியான பானமிது.
வேண்டியவைகள்.
நல்ல இளம் வாழைத்தண்டில் நார் நீக்கி மெல்லியதாக
நறுக்கிய வாழைத்தண்டின் துக்கடாக்கள்—-1கப்
இஞ்சி—ஒரு சிறிய துண்டு
ஸாம்பார் வெங்காயம்—4
கறிவேப்பிலை. துளிரான நான்கு இலைகள்
கடுகு,பெருங்காயம் சிறிது. ருசிக்கு உப்பு
மோர்—இரண்டு டம்ளர்
துளி எண்ணெய்.
செய்வோமா?
நறுக்கிய வாழைத் தண்டை துளி மோரில் முதலிலேயே போட்டு
வைத்தால் துண்டுகள் கறுக்காது.
இஞ்சி,வெங்காயம் எல்லாவற்றையும் தோல்நீக்கி நறுக்கிக்கொண்டு,
வாழைத்தண்டு நறுக்கியதையும்,கறிவேப்பிலை இலைகளையும்
சேர்த்து,மிக்ஸியின் சிறிய கண்டெயினரில் போட்டு அரைக்கவும்.
ஒரு நிமிஷத்தில் அரைந்து விடும்.
அரைத்தவிழுதைத் தண்ணீர் சிறிது சேர்த்துக் கரைத்து டீ வடிக்கட்டியில்
நன்றாக வடிக்கட்டவும்.
மோருடன் இந்தச் சாற்றைச் சேர்க்கவும். உப்பு,பெருங்காயம் சேர்க்கவும்.
கடுகைத் தாளித்துக் கொட்டி கண்ணாடி கோப்பைகளில் விட்டு
விருந்தினருக்கும் கொடுக்கவும். நீங்களும் பருகவும்.
வேண்டுமானால் இரண்டொரு சொட்டு எலுமிச்சை சாற்றைச்
சேர்க்கவும்.
புதினா,கொத்தமல்லித் தழை, இவைகளில் ஏதாவதொன்றையும்
சேர்த்து ருசி மாற்றம் செய்யலாம்.
குளிர் சாதனப் பெட்டியில் குளிரூட்டிப் பருகவும்.
ஏற்கெனவே என்னுடைய குறிப்புகளில்,மோர்க்கூட்டும், பிட்லையும் உள்ளது.
ஸேலட்,இனிப்புப் பச்சடி, தயிர்ப்பச்சடி முதலானவைகளும் தயாரிக்கலாம்.
Entry filed under: ஜூஸ்வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:48 பிப இல் ஏப்ரல் 7, 2015
வாழைத்தண்டின் அருமை பெருமைகளை, அழகான ஜில்லென்ற இளம் வாழைத்தண்டு போலவே எடுத்துச் சொல்லிப் புரிய வைத்துள்ளீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 10:55 முப இல் ஏப்ரல் 13, 2015
சென்னையில் நான் இருந்த ஒ ரு மாதத்தில் வீட்டில் அனேக வாழைத்தார்கள். இளந் தண்டும் நிறைய.
எல்லாவித சமையல்களும், மாற்றி மாற்றி. அதனால் மகிமைகளையும் தேடித் தொகுத்தேன்.
பயனுள்ள பதிவு. என்று எழுதியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். இனி மும்பை வாஸம்.
அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 1:18 முப இல் ஏப்ரல் 8, 2015
அருமையான குறிப்பு அம்மா…
குறித்து வைத்து கொண்டோம்… நன்றி…
4.
chollukireen | 10:56 முப இல் ஏப்ரல் 13, 2015
அருமையான குறிப்பு என்ற பின்னூட்டம் பெருமையாக இருக்கிறது. அன்புடன்
5.
adhi venkat | 2:44 பிப இல் ஏப்ரல் 8, 2015
சுவையான குறிப்பும்மா. நான் தயிர் பச்சடி பண்ணி சாப்பிடுவேன். இனி மோரும் செய்கிறேன்..
6.
ezhil | 2:59 பிப இல் ஏப்ரல் 8, 2015
அருமையான குறிப்பு… நன்றி
7.
chitrasundar | 11:48 பிப இல் ஏப்ரல் 8, 2015
காமாக்ஷிமா,
வீட்டிலேயே வெட்டிய வாழைத்தண்டு கிடைத்தபோதெல்லாம் சாப்பிட மாட்டேன். இப்போது ஆசையாக உள்ளது. என்ன செய்வது ? மனதளவில் உங்க வீட்டு வாழைத்தண்டு மோரை குடிச்சாச்சு.
பார்க்கவே சூப்பரா இருக்கு, சுவையைச் சொல்லவே வேண்டாம். கிடைக்குபோது செய்து பார்க்கிறேன். அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 11:03 முப இல் ஏப்ரல் 13, 2015
என்ன பிரமாதம்? முருங்கைக்காயெல்லாம் ஃப்ரோஸன்னில் கிடைப்பதுபோல் வாழைத்தண்டும் கிடைக்காதா? பின்னொரு முறை சென்னை வரும்போது கிடைக்காதவற்றை ஞாபகமாக வாங்கி,ரஸித்தால் போகிறது. பூ,இந்த வாழைத் தண்டையும்,கீரைத் தண்டையும் எழுதுகிரார்களா?என்று கேட்பார்கள். அவ்வளவுதான்.
நன்றி சித்ரா. அன்புடன்
9.
பிரபுவின் | 9:18 முப இல் ஏப்ரல் 13, 2015
வாழைத்தண்டின் அருமை, பெருமைகளை அருமையாகவும் பெருமையாகவும் தெளிவாக விளக்கி எங்கள் வாழைத் தண்டு பற்றிய வறுமையான எண்ணங்களை அகற்றியுள்ளீர்கள்.
நன்றி “சொல்லுகிறேன்” புகழ் அம்மா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
10.
chollukireen | 11:08 முப இல் ஏப்ரல் 13, 2015
புத்தாண்டு வாழ்த்துகள். உங்களின் வாழ்த்திற்கு மிக்க ஸந்தோஷம். சொல்லுகிறேன் புகழா,இல்லை பிரபுவின் புகழ் அம்மாவாக இருக்கும்.. வாழைத்தண்டிற்கு பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து விடலாம். நன்றியுடனும் அன்புடனும்.