அறிவு கெட்ட ஆச்சாமரம்.
ஏப்ரல் 18, 2015 at 12:14 பிப 8 பின்னூட்டங்கள்
அம்மா சொன்னகதை. அப்புறம் படிக்கத்தெரிந்த பொழுது
சேமித்து வைத்திருந்த கலைமகள் பைண்ட் புத்ககத்தில் படித்தும்
இருக்கிறேன். மனதில் பதிந்து விட்ட கதை. இப்படி இரண்டு மூன்று கதை
மனதில் இருக்கிரது. ஆச்சாமரம் என்பது நுணா,சவுண்டை மரங்கள்
போன்ற தொன்றாக இருக்கும். அதிகம் தகவல் இல்லை. நல்ல உரமாக
தழைகள்உபயோகப்படும்போல இருக்கிறது. நாயனம் செய்ய இந்த மரம்
உபயோகப்படுமாம்.
கதைகளெல்லாம் இப்போது கேட்க யாராவது இருக்கிரார்களா?
எங்கள் நாளையகதை, எங்களுக்குச் சொன்னது, நாங்கள் எங்கள்
குழந்தைகளுக்குச் சொன்னது, அப்புறமும் சொல்லி இருப்பேன்.
இப்போது சொல்கிறேன் கேளுங்கள்.
அழகாபுரி,அழகாபுரி என்று ஒரு தேசம். அழகேசன் அழகேசன் என்ற
பேரில் அதற்கொரு ராஜா இருந்தார்.
அவருக்குப் பெரிய அரண்மனை.. அந்த அரண்மனையிலொரு பெரிய
நந்தவனம் இருந்தது. அது ரொம்ப நாளாய் ஸரியாகவே இல்லை.
கன்னா,பின்னா என்று தாறுமாறாக இருந்தது.
ஒரு நாள் ராஜா ஒரு நல்ல தோட்டக்காரனை நியமித்தார்.
தோட்டத்தைப் பார்க்கவும் வந்தார். தோட்டத்தைப் பார்த்து மிகவும்
வருத்தப் பட்டார்.
தோட்டக்காரன் பெயர் அழகேசன்.
தோட்டக்காரனைக் கூப்பிட்டார்.
அழகேசா,அழகேசா, அழகாபுரியின் தோட்டம், இப்படியா இருக்கும்?
அழகான தோட்டத்தில் அழகு மரங்கள் வேண்டாமா?
அழகிய செடி கொடிகள் வேண்டாமா?
பாக்குமரங்களும்,தேக்கு மரங்களும்,
சந்தன மரங்களும், ஜாதிக்காய் மரங்களும்
புன்னை மரங்களும்,புங்க மரங்களும்,
பலா மரங்களும்,பாரிஜாத மரங்களும்
சண்பக மரங்களும், சரகொன்றை மரங்களும்
அத்தி மரங்களும்,ஆல மரமும்
அரசமரமும்,ஆச்சாமரமும்,
வேங்கை மரங்களும், வேப்ப மரங்களும்
அணிஅணியாக இருக்க வேண்டாமா,
மலர்ச் செடிகளும்,மந்தாரைப் பூக்களும்
மல்லிகைப்பூக்களும்,முல்லைப் பூக்களும்
ரோஜாச் செடிகளும், வாஸனைப் பூக்களும்
அணிஅணியாக அலங்கரிக்க வேண்டாமா?
இப்பொழுதே ஆவன செய். என்று ஆணையிட்டார்.
எவ்வளவு பேர் வேண்டுமோ அவ்வளவு ஆட்களுடன்
இன்றே செய்,நன்றே செய் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை
என்றார்.
அழகப்பனும் பல இடங்களில் தேடித்தேடி, எல்லா மர,செடி, கொடி
வகைகளையும் அருமையாகப் பிடித்தான்.
தோட்டத்தை,தோட்டமா இல்லை பெரிய ஸமவெளியை, நன்றாகச்
செப்பனிட்டு, பாத்திகளமைத்து, வகைவகையான உரங்களைப் போட்டு
செடி,கொடிகளை நட்டு வளர்த்து வரலானான்.
ஓரங்களைச் சுற்றி மரங்கள் அணிஅணியாய். ஒருபக்கம் செடிகள்
வரிசாயாய், தக்க இடங்களில் கொடிகள் வகைவகையாக, மிகவும்
பாடுபட்டு அழகாக அருமையாக என்று சொல்லும்படி வளர்க்கலானான்
அன்று சற்று காற்றுடன் கூடிய லேசான மழை வந்தது.
அழகப்பன் தோட்டத்தைச் சுற்றி வரலானான். ஆங்காங்கே சில
வேண்டாத செடிகள் முளைத்திருந்தது.
ஒவ்வொன்றாக அவைகளை நீக்கிச் செடிகளை அழகு படுத்தினான்.
எல்லாச் செடிகளும் அவனுக்கு தலையசைத்து நன்றி சொல்லியது.
ஆச்சா மரம் கடை கோடியில் இருந்தது.
அந்த மரமோ, இவைகளெல்லாம் இருக்கட்டுமே! நான் தனியாக
இருக்கிறேனேஎன்றது
. வேண்டாம் என்று களைச் செடிகளை நீக்கினான் அழகப்பன்.
ஒருமாதம் சென்றது. நல்ல மழை இரவு முழுவதும்.
செடிகளெல்லாம் சற்று உயர்ந்தது. மழையில் நனைந்து
காற்றில் அலைந்து எல்லாமே சற்று சோர்வாகக் காணப்பட்டது.
அழகப்பன் சிறிய குச்சிகளையும் கம்புகளையும்,கயிற்றையும் கொண்டு
வந்து அவைகளை நட்டு,லேசாகக் கட்டி வைத்தான்.
ஆச்சாமரமோ, வளைந்து,நெளிந்து என்னைக் கட்டாதே,என்னைக்
கட்டாதே என்று கட்டவே விடவில்லை.
ஸரி போ என்று போய்விட்டான் அழகப்பன். இப்படியே சில
காலம் கடந்தது.
அன்றும் நல்ல மழை.நல்ல காற்று.
செடிகளெல்லாம் கட்டப்பட்டிருந்ததால் அவைகளுக்குச் சேதம்
எதுவும் ஏற்படவில்லை. அழகப்பன் ஸந்தோஷமாகச் சுற்றிப் பார்த்துக்
கொண்டே வந்தான்.
சிலவற்றை இருக்கமாகக் கட்டினான். அவைகளும் அழகப்பன் நமக்கு
நன்மைதான் செய்வான் என்றுநினைத்துத் தண்ணீரை உதறியது.
ஆச்சாமரமோ கிளை ஒடிந்து சோர்வாக இருந்தது.
ஆச்சாவே இப்போதாவது சொன்னபடி கேள். என்று கட்டுவதற்கு ஒரு
கோலைக் கொண்டு வந்தான்.
என்னைப் பிணைக்காதே.! கிளைபோனால் என்ன ? வேறு கிளையைக்
கொண்டு வருவேன். என்னைக் கட்டாதே என்று நெம்பியது. பிடிவாதம்
பிடித்து கிளைகளை ஆட்டியது. அலைக்கழித்தது.
நீ சொன்னபடி கேட்க மாட்டாய். எப்படியாவது போ என்று விட்டு
விட்டான் அழகப்பன்.
இப்படியே அது ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டது.
நாட்கள் மாதங்களாயிற்று. மாதங்கள் வருஷங்களாயிற்று. மரங்கள்,
செடி,கொடிகளெல்லாம் பூத்துக் குலுங்கிக்,காய்த்துக் குலுங்கிப்,பழுத்தும்
குலுங்க ஆரம்பித்து விட்டது.
இன்று ராஜா,ராணியுடன் இந்தப் பெரிய நந்தவனக் காட்டைச் சுற்றிப்
பார்க்க வருகிரார்.
அழகப்பன் ஸந்தோஷத்துடன் பாதைகளை ஒழுங்கு செய்து, செடிகளிடம்
குதூகலமாகச் சொன்னான்.
அழகான மரம்,செடி,கொடிகளே, நம்ராஜாராணி விருந்தினர்களுடன் நம்
யாவரையும் சுற்றிப் பார்க்க வருகிறார்கள்.
எல்லோரும் தயாராக இருங்கள்.
செடிகளெல்லாம் தலையசைத்து ஆமோதித்தன. முந்தின நாள் காற்றில்
நிலை தடுமாறிப் போனவைகளை ஒழுங்கு செய்தான்.
சந்தனமரம் நல்ல மணத்துடன் காற்றை வீசச் செய்வேன் என்றது.
கனிமரங்கள் நல்ல கனிகளைக் கொடுப்போம் என்றது.
பாரிஜாதமும்,ஸம்பங்கியும்ஸர கொன்றையும் நாங்கள் மலராகவேப்
பொழிவோம் என்றன.
வேப்பமரம் அருமையாகக் காற்றோடு கலந்து வீசுவேன் என்றது.
இப்படி எல்லா மரங்களும் அதன் மஹிமைகளைச் சொல்லி
பெருமைப் பட்டது.
செடி,கொடி பூக்களோ நாங்கள் மலைபோல மாலையாகக்
கொட்டுவோம் என்றன.
ஆச்சாமரமோ காற்றில் அலைந்து களைத்து தரையில் விழுந்திருந்தது.
ராஜா,ராணி பரிவாரங்கள்,உறவினர்கள் சூழ பார்வையிட வந்து விட்டார்.
செடிகொடி மரங்களெல்லாம் போட்டி போட்டக்கொண்டு, அவைகள்
சொன்னபடி வரவேற்பைக் கொடுத்தது.
ராஜா மிகவும் மகிழ்ச்சியோடு அவைகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு
பாராட்டினார்.
கடைகோடியில் அப்பாடா என்று ஆச்சாமரம் தரையோடு கிடந்தது.
அழகப்பா, அழகப்பா, இது என்ன கோலம்?
என் தோட்டத்திலே இது ஏன் இப்படி?
மஹாராஜாவிடம் நடநத கதைகளைச்
சொல்லி இது சொன்னபடி எதையும் கேட்பதில்லை.
அதனால் இப்படி காற்றில் அடிபட்டுக் கிடக்கிறது. என்றான் அழகப்பன்.
அழகப்பரின் தோட்டத்தில் சொற்படி கேட்காத எதுவும் வேண்டாம்.
அறிவு கெட்ட ஆச்சாமரத்தை வெட்டி ஆற்றோடு போகவிடு என்றார்.
மறுநாள் அப்படியே செய்தான் அழகப்பன்.
அறிவு கெட்ட ஆச்சாமரம் ஆற்றோடு போயிற்று..
எப்படி இருக்கிறது கதை?
கடைசி இரண்டு படங்கள் உதவி. கூகல்
Entry filed under: சிறுவர்கதைகள். Tags: அறிவு, ஆச்சாமரம்.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Venkat | 12:26 பிப இல் ஏப்ரல் 18, 2015
நல்ல அறிவுரை சொல்லும் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா….
2.
chollukireen | 11:09 முப இல் ஏப்ரல் 19, 2015
உங்கள் பின்னூட்டம் என் வரவேற்பைப் பெருகிறது. நன்றி அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 12:27 பிப இல் ஏப்ரல் 18, 2015
மிகவும் அருமையான நிகழ்வினை அழகான கதையாக்கிக் கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
4.
chollukireen | 11:10 முப இல் ஏப்ரல் 19, 2015
மகிழ்ச்சியைத்தரும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 3:12 முப இல் ஏப்ரல் 19, 2015
அருமை… அருமையான கதை…
6.
chollukireen | 11:12 முப இல் ஏப்ரல் 19, 2015
உங்கள் பின்னூட்டம் பெருமையாக உள்ளது. அன்புடன்
7.
vijayalakshmi | 9:21 முப இல் ஏப்ரல் 20, 2015
mami super kathai…
8.
chollukireen | 11:27 முப இல் ஏப்ரல் 20, 2015
உன் பாராட்டுதல்கள் ஷீலாவும் நேரம் கிடைத்தால் படித்து பின்னூட்டம் எழுதுவாள் என்று எனக்குச் சொன்னது. மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். அன்புடன்