அன்னையர்தினப் பதிவு—27
ஏப்ரல் 23, 2015 at 9:23 முப 19 பின்னூட்டங்கள்
பெங்களூர் குடும்பத்தைப் பற்றி நினைத்து விட்டால் அவ்வளவு
பெருமிதமாக இருக்கும் அம்மாவிற்கு.
அந்தக்குடும்பத்துப் பெண்களும்தான் என்ன எவ்வளவு மனதில்
ஒருவர்க்கொருவர் முரண்பாடுகளிருந்தாலும், அதையதை அப்படியே
விட்டு விட்டு, எதையும் ரகளையாக ஆக்காமல் நேசம் பாராட்டுவார்கள்.
அண்ணன் தம்பிகளும் அப்படியே. அவர்கள் குடும்பத்து பெண்கள்,
பேத்திகளெனஅவர்கள் வாழ்க்கைப்பட்ட இடத்திலும் யாவரையும்
நேசித்து இன்றளவும் வாழ்ந்து வருகிரார்கள்.
இப்படியெல்லாம் இந்த விசுப்பலகையில் உட்கார்ந்து யோசிப்பதுதான்
வேலையாக இருக்கிரது.
அதென்ன விசுப்பலகை.? விசுபலகையா? விசைப் பலகை இல்லை. நல்ல
பருமனான ,அழுத்தமுள்ள பலகைகளை ஒன்று சேர்த்து படுப்பதற்கு
இரண்டு மூன்று பெஞ்சுகளைச் சேர்த்தால் வரும் அகலத்திற்குச்
செய்யப்பட்ட அகலமான படுக்கும் பலகை.
அழகாக தாங்குவதற்கு நான்கு கால்களுக்குப் பதில், பிடிமானம்
இருக்கும்.? அது எந்தத் தலைமுறையில் செய்ததோ?
அவ்வளவு கனம்.
ஒரு முறை பிரார்த்தனைக்கு மயிலம் சென்ற போது,வளவனூரிலிருந்து
வேனின் மீது கட்டி யெடுத்து வந்தது.
ஹாலில் அதைப்போட்டு அதில்தான் அம்மாவின் வாஸம்.
காலையில் படுக்கை சுருட்டி வைத்தாகிவிடும். அதில்தான் மெத்
என்ற உணர்வுக்காக எத்தனை பழம் புடவைகள் மடித்துப்
போட்டிருக்கும். இதெல்லாம் ஏம்மா என்று கேட்பேன். வேண்டாமே
இதெல்லாம்.!
அசடே உனக்குத் தெரியாது. வயதானவர்களுக்கு இந்தப்புடவைகளால்
எவ்வளவு சுகம் கிடைக்குமென்று.
வயதானவர்கள் சமத்துதான். நாம்தான் அசடு.
உபயோகி. வேண்டாதபோது தூக்கி எறி.
எதையும் வீணாக்காது உபயோகிக்கும் சுபாவம். இதுதான் தியரி.
ஒரு ஸமயம் தில்லி வந்திருந்தேன். சென்னைக்கும் போகத்தான்.
தேதி முடிவு செய்யவில்லை.
அன்று எங்களுக்கு வேண்டியபெண் வந்திருந்தாள். அவள் ஒரு ஏர்
ஹோஸ்டஸ். என்னுடையபிள்ளையும் அவள் தம்பியும் சென்னையில்
காலேஜில் ஒன்றாகப் படித்தவர்கள். டில்லியிலும் ஒன்றாக வந்து
ஒன்றாகவே வசித்து வேலைக்கு செல்பவர்கள். தம்பியைப் பார்க்க வந்தவள்
என்னையும் நேராக வீட்டில் கொண்டு விட்டு விடுகிறேனென்றாள்.
நானும் கிளம்பி விட்டேன்.
முன்னறிவிப்பில்லாமலேயே, வாசலில் இறங்கி உள்ளே வருவதற்குள்
அந்தப்பெண், பாட்டி யார் வந்திருக்கிரார் பாருங்கள் என்றாள்.
யாரு வா,வா என்னை யார் பார்க்க வரப்போகிரார்கள்?
டில்லி போனாயா? பசங்கள் எல்லோரும் ஸௌக்கியமா? காசு பணமில்லாத
பொவோ,கவோ ம்மம்டாட்டி நான் . என்று ,வைத்துக்கொள்ளுங்கள்
நான் பெட்டியைத் தூக்கி்கொண்டு உள்ளே வருவதைப் பார்த்ததும்,
இது எங்கிருந்து திடீர் னு வந்தது?
கொஞ்சநாட்களாக மனதிலே பார்க்க எண்ணம் வந்துண்டே இருந்தது.
எங்கே போய் யாரைப் பாக்கரது?
அழுகை அடக்க முடியாமற் சொல்லுகிறாள்.
யாரைம்மா பார்க்கணும். நாங்கள்தான் வந்து கொண்டே இருக்கிறோமே!!!!
அந்த ஒரு ஸமயத்தில்தான் காசில்லாமல் என்ற வார்த்தை
உபயோகமாகி உள்ளளது.
அசடு மனதை அடக்காமல் ஏதோ இந்த வார்த்தை வந்து விட்டது.
தோ நீ வந்துட்டே. காசுதானா பிரமாதம்.
ஸமாளித்துக் கொள்கிறாள்.
வா,நீயும் வா. ஒரு வாய் சாப்பிடு. அவளையும் உபசாரம் செய்தாகிரது.
பசங்களெல்லாம் ஸம்பாதித்து வேண்டியதைச் செய்கிரார்கள்.
அங்கே இங்கே என்று எங்கும் தனியாகப் போவதில்லை.
எங்காவது விழுந்து வைப்போமோ என்ற எண்ணம் வந்து விட்டது.
முன்பெல்லாம் அப்படி இல்லை.
உன் பெண்ணெல்லாம் கொண்டு விடுவதற்கு முன்னால் ஒரு ஸமயம்
மெட்ராஸ் ஏதோ துக்கம் விசாரிக்க வந்திருந்தேன்
நேராக எழும்பூர் ஸ்டேஷனில் விசாலத்தையும் பார்த்துப் போகலாம்
என்று அவாத்திற்குப் போனேன். வீடு ஸ்டேஷனலேயே இருந்தது.
காலையில் ஐந்து மணிக்குக் கதவைத் தட்டுகிறேன்.
வா பாகி அத்தே உன்னைதான் நினைச்சுண்டேன்.
என்ன கண்ணு எல்லாரும் ஸௌக்கியம்தானே? ஆமாம்
எல்லா பொண்ணு பசங்களுக்கும் மாரியம்மன் விளையாடரா.
நாத்தனாருக்குத் துணையாக மாமியார் போயிருக்கா. கடிதாசும் யாருக்கும்
போடக்கூடாதென்று சொல்லிட்டா அம்மா!!!!
ராத்திரி பூரா தூக்கமில்லே. அம்மாவும் எப்பவும் வந்ததில்லே.
நீ வந்து நிக்கறே கடவுளாட்டமா. கண் கலங்குகிறாள்.
அசடே இவ்வளவுதானே. அவள் எல்லா இடத்திலும் இருக்கிராள்.
ஸரி,கைகால் அலம்பிண்டுவரேன், தாயே மாரியம்மா,பசங்களை
நல்லபடி காப்பாத்து. இரண்டு வேப்பிலையை வாசலில் சொருகு.
பசங்களுக்கு சுத்தமா,மெத்துனு வெள்ளை வேஷ்டியை மடித்துப்போடு.
உள்ளு வாசல்லே மஞ்சபொடி ஆரத்தி கரைச்சு வை.
நான் பாத்துக்கறேன் மற்றதை. குழந்தைகளை நீ கவனிச்சுக்கோ.
இந்தப்பொண்ணும் அப்பாவின் ஆஸ்தி பாஸ்தி இருந்தும் பெண்களுக்கு
எந்த பாகமும் கொடுக்க சட்டம் இல்லாத காலத்தில் அப்பா போனபின்
அண்ணன்கள் ஆதீனத்தில் கலியாணம் செய்து கொடுத்த பெண்.
எதொன்றிற்கும் பொதுவான அத்தை என்ற முறையில் அவள்
அம்மாவின் தூதுவர் அம்மா.
பார் இதுதான் கடவுள் செயலென்று மனதில் நினைத்துக்கொண்டு
ஒரு பத்துநாள் இருந்து பசங்கள் ஓரளவு குணமான பின்தான்
வந்த காரியத்தைப் பற்றியே நினைத்தது.
இப்போது எதுவும் முடியவில்லை.
பரவாயில்லை முடிந்தவரை செய்தது போதும். இதெல்லாம்
நல்லைதுதானே செய்திருக்கிராய்.
நான் அந்தமுறை சென்னையை விட்டுக் கிளம்பும் போது பாட்டிக்கு
வயதானாலும் , காண்பித்துக் கொள்வதில்லை.
நீங்களும் ரொம்ப தூரத்தில் இருக்ககிறீர்கள். எதாவது பாட்டிக்காக
ஒத்தாசை என்றால்தான் ,யார் வருவார்கள் தெரியவில்லை என்று
மாப்பிள்ளை ஒரு தற்காப்பு யோசனையை வெளியிட்டார்.
அதற்கென்ன எதுவானாலும் பெங்களூர் அக்காவிற்குச் சொன்னால்
அவள் வந்து விடுவாள் என்றேன் நான்.
நான் என்ன அப்படி போய்விடுவேனா? நிறைய கிழம்,கட்டைகளுக்கு
நான் செய்திருக்கேன். அனாயஸமாகத்தான் போக வேண்டும்.
அதுக்கெல்லாம் வேளை ரொம்ப இருக்கு என்றாள்.
ஒரு வார்த்தைக்குதான் .நாங்கள் அறியாதவர்கள் இல்லையா?
இதுவரை கடிதத்தையே காணோம். அந்தக்காலம் வரும்போது
பார்த்துக் கொள்லலாம்.
பேரன் டில்லியிலிருக்கான். நானும் காட்மாண்டுவில்தான் இருப்பேன்
என்று மெதுவாகச் சொன்னேன்.
அம்மாவிற்கு உடம்பு படுத்துகிறது என்று எதுவும் இல்லை.
வீட்டு வேலைகளில் சமையல் அது இது என்று எதுவும் செய்யாது
இருப்பதும் இல்லை.
நெருப்புன்னா வாய் வெந்து விடுமா? என்று சொல்வதுபோல இப்படி
ஒரு வார்த்தையும் நடுவில் நடந்தது.
பெங்களூரில் எல்லோரும் ஸௌக்யம். ஏதோ கலியாணத்திற்கு
வந்தவர்கள் அம்மாவைப் பார்த்து விட்டுப் போக வந்தார்கள்.
பார்த்திருந்த அபார்ட்மென்ட் வாங்கியாகி விட்டது. மேற்கொண்டு
வேலைகள் செய்ய வேண்டும்.
க்ரஹப்பிரவேசத்திற்கு பெரியம்மாவையும் கூப்பிடு என்று அம்மா
சொல்வதாகப் பெண்ணின் கடிதம் வந்தது.
பென்ஷனுக்கு மந்திரி ஏதாவது செய்கிறேன் என்று சொன்னதும் ஒன்றும்
தகவல் தெரியவில்லை.
எல்லோருக்கும்,ஸரி செய்கிறேனென்ற சொல் அவர்களுக்கும் மாமூல்தானே?
ஸரி நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்ற எண்ணம் வரை
வந்தாகிவிட்டது.
அபார்ட்மென்டில் மிகுதி வேலைகள் தொடருகிரது.
அம்மாவின் சிந்தனையும் தொடருகிறது. நீங்களும் அவசியம் தொடருங்கள்.
Entry filed under: அன்னையர் தினம். Tags: 27 ஆம் பதிவு. விசுபலகை.
19 பின்னூட்டங்கள் Add your own
திண்டுக்கல் தனபாலன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 9:34 முப இல் ஏப்ரல் 23, 2015
தங்களின் அனுபவப்பகிர்வுகள் அனைத்தும் அசத்தல். நேரில் அமர்ந்து கதை கேட்பதுபோலவே உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.
2.
chollukireen | 8:03 முப இல் ஏப்ரல் 28, 2015
விசு பலகையை நினைத்தாலே அநுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகம் வருகிறது. வாழ்த்து,பாராட்டு,என நிறைய எழுதியுள்ளீர்கள்.நன்றியும்,ஆசிகளும். அன்புடன்
3.
ranjani135 | 12:13 பிப இல் ஏப்ரல் 23, 2015
விசுப்பலகையைப் பார்த்து எத்தனை வருடங்களாகிவிட்டன! எனக்குக் கூட பழம் புடவைகளை விரித்துப் படுத்துக் கொள்வது ரொம்பவும் பிடிக்கும்.
பென்ஷன் இன்னும் தாமதமாகிறதே!
4.
chollukireen | 8:15 முப இல் ஏப்ரல் 28, 2015
மெத்தென்ற உணர்ச்சியை பழய நூல்ப்புடவைகள் கொடுப்பதால் மவுஸே தனிதான் அதற்கு. தாமதத்திற்கு என்ன செய்வது என்பதே கேள்வி. நன்றி. அன்புடன்
5.
chitrasundar5 | 1:34 முப இல் ஏப்ரல் 24, 2015
காமாக்ஷிமா,
நானும் மரத்தாலான பென்ச்ஐ விசுபலகை என சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். இப்பதிவின் மூலம் பெரியவர்களின் பேச்சு வழக்கத்தை அறிய முடிகிறது. அந்த நாளிலேயே மந்திரிகளின் வாக்குறுதியை நம்ப முடியாது என்பதும் தெரிகிறது.
தொடருங்கள், வாசிக்க வருகிறோம், அன்புடன் சித்ராசுந்தர்.
6.
chollukireen | 8:20 முப இல் ஏப்ரல் 28, 2015
பழைய கால மந்திரிகள் வேறுவிதம். ஜநநாயக மந்திரிகள் வேறு விதம்தான். பென்ச் எனக்குக்கூட
பிடிக்கும்.
டூரிங்டாக்கீஸில் பென்ச் டிக்கட் உண்டு. அது ஞாபகம் வருகிறது. வருகிறோம் என்று கூறியது மிக்க ஸந்தோஷம். அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 3:31 முப இல் ஏப்ரல் 24, 2015
தொடர்ந்து வருகிறோம் அம்மா…
8.
chollukireen | 8:23 முப இல் ஏப்ரல் 28, 2015
கட்டாயம் வாருங்கள். மிக்க ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன்
9.
chollukireen | 11:51 முப இல் ஜூலை 19, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதிலும் சில ஸம்பவங்களின் ஞாபகத்துடன் தொடருகிறது. 27 வரை வந்துவிட்டோம்.வாருங்கள். அன்புடன்
10.
Revathi Narasimhan | 12:20 பிப இல் ஜூலை 19, 2021
அம்மாவின் அருமை அவள் செய்கைகளில். அவள் வாழ்வில் தான் எத்தனை அன்புப் பின்னல்கள்.!!!!
அம்மா வந்த வீட்டை எப்படி ஸ்வீகரித்துக் கொண்டாள்!!!
அன்பு அன்பு அன்பு. வேறு ஒன்றும் இல்லை.
பென்ஷன் சீக்கிரம் வந்தால் மனஸ்ஸமாதானமாக
இருக்கும்.
இந்த விசுப்பலகை எங்கள் இரண்டு இருக்கிறது. மஹா
சௌகரியம். வெறும் பென்ச்சே வழ வழா என்று இதமாக இருக்கும்.
நாங்களும் புடவைகளைத் தைத்து
போர்வையாகவோ படுத்துக்கவோ உபயோகிப்பேன்.
அவ்வளவு இதம்,.
மிக நன்றி காமாட்சிமா.
11.
chollukireen | 11:33 முப இல் ஜூலை 20, 2021
உங்களுக்கு பதில் முகனூலில் கொடுத்து இருக்கிறேன். நன்றி. அன்புடன்
12.
ஸ்ரீராம் | 12:19 முப இல் ஜூலை 20, 2021
அந்த விசுப்பலகையில் அமர்ந்து நீங்கள் சொல்ல, எதிரில் அமர்ந்து நாங்கள் கேட்பது போல இருக்கிறது! மாமாவின் அன்பும், அனுபவமும், பொறுமையும் கனிவும் அருமை.
13.
chollukireen | 11:26 முப இல் ஜூலை 20, 2021
மிகவும் நன்றி. எனக்கும் அம்மாவை பார்த்ததுபோல ஒரு உணர்ச்சி. அன்புடன்
14.
Geetha Sambasivam | 2:43 முப இல் ஜூலை 20, 2021
இதற்கு முன்னால் உள்ளதைப் படிக்காமல் விட்டிருக்கேனோ? தொடர்பு புரியலை. இதுவும் நல்ல நினைவலைகள். அதிலும் பெரியவர்கள் வயதானால் சொல்லும் வார்த்தைகள்! அது நம் மனதைத் தாக்கினாலும் காட்டிக்கொள்ள முடியாது. கடந்து போகணும். எல்லாம் அருமை. விசுப்பலகை என்றால் என்னனு எனக்கும் தெரியாமல் இருந்தது. ஒரு வேளை பெஞ்சு என இக்காலத்தில் சொல்வதைத் தான் அந்தக் காலத்தில் விசுப்பலகைனு சொல்லி இருக்கலாமோ?
15.
chollukireen | 11:30 முப இல் ஜூலை 20, 2021
விசுப்பலகை அகலமாக இருக்கும். 2,3 பலகைகள் சேர்த்து தாராளமாக இருக்கும். நீங்கள் படித்ததுதான். ஞாபகம் வல்லையா. நன்றி. அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 4:57 பிப இல் ஜூலை 20, 2021
மிகுந்த ரசனையுடன் செல்கிறது.
உடம்பால்தான் பெரியவர்கள் தங்கள் சந்ததிக்கு எவ்வளவு செய்திருக்கிறார்கள்… பணம் கையில் இல்லை என்ற ஒன்றுதான் குறை.
ஆனால் பணத்தால் உதவி செய்வதைவிட உடலால் உழைப்பால் செய்யும் உதவிகள் எல்லோர் மனத்திலும் தங்கும்.
நீங்கள் அம்மாவின் வயதான கதையை இப்போது வெளியிடுகிறீர்கள். சுவாரசியத்துடன் செல்கிறது.. என்னென்னவோ எழுத்த் தோன்றுகிறது.
17.
chollukireen | 8:38 முப இல் ஜூலை 22, 2021
மிக்க நன்றி விவரமாக நான் பதில் கொடுக்கவில்லை மருந்துகள் என்று போய்க்கொண்டு இருக்கிறது உங்களின் அழகான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அன்புடன்
18.
நெல்லைத்தமிழன் | 5:00 பிப இல் ஜூலை 20, 2021
விசுப்பலகை, ஊஞ்சலில் உட்காரும் பலகை, கொஞ்சம் கூடுதல் கனம். பகலில் ஆசாரமாக உள்ள அந்தக் காலப் பெரியவர்கள் படுக்கை விரித்துத் தூங்காமல் பலகையில் படுத்துக் கொள்வார்கள். இரவில் அதன்மீது விழுப்புத் துணிகளைப் பரத்தி (போர்வை) படுத்துக்கொள்வார்கள்.
அதன் நவீன வடிவம்தான் திவான்.
19.
chollukireen | 8:39 முப இல் ஜூலை 22, 2021
மிக்க நன்றி அன்புடன்