கோபுரத்துக்கிளி.
ஏப்ரல் 27, 2015 at 6:40 முப 15 பின்னூட்டங்கள்
படம் உதவி—கூகல்
தஞ்சாவூர் எல்லோருக்கும் தெரியுமில்லையா? அங்கு பிரஹதீசுவரர்
ஆலயம் உள்ளதும் உங்களுக்கத் தெரியும்.
அந்த கோபுரத்தையும் தெரியும்.தஞ்சாவூர் முன்பெல்லாம் தனி
ராஜ்ஜியமாக இருந்தது.
அதை ஒரு ராஜா திறம்பட ஆண்டுகொண்டிருந்தார்.
ராஜா,மந்திரிகள்,பிரதானிகள் புடைசூழ,தினமும் சாயங்காலம்
ஸ்வாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்.
அந்தக் கோவில் கோபுரத்தில் ஒரு கிளி வசித்துக் கொண்டு வந்தது.
அதற்கு நன்றாகப் பேசவும் தெரியும். சுபாவத்திலேயே நல்ல குணமுள்ள
கிளி. ராஜா வருவதை தினமும் வேடிக்கை பார்க்கும் அக்கிளி.
ராஜாவுடன் அதற்குப் பேசவேண்டுமென்று மிகவும் ஆசை.
அம்மாதிரி வேடிக்கைப் பார்க்கும் போது ,தரையிலிருந்து ஒரு
தங்கக் காசு கிடைத்தது அந்தக் கிளிக்கு. மிகவும் பெருமையாகவும்
இருந்தது .
ராஜா அன்று கோவிலுக்கு வரும்போது, கிளி சொல்லத் துவங்கியது.
தஞ்சாவூர் ராஜாவே, என் தங்கமானராஜாவே
தரையிலிருந்து எனக்கொரு தங்கக் காசு கிடைத்ததே ,
தரையிலிருந்து எனக்கொரு தங்கக் காசு கிடைத்ததே என்று
இதையே பலமுறைகூறி குதித்து,கும்மாளமிட்டு அதன்
ஸந்தோஷத்தைத் தெரிவித்தது.
ராஜா நிமிர்ந்து பார்க்கிறார். திரும்பவும் கும்மாளமாகப் பேசுகிறது.
ராஜாவுக்குத் திடீரென்று கோபம் வந்து விட்டது.
ஒரு தங்கக் காசுக்காகப் பீற்றிக் கொள்கிறது. சேவகா
நீ போய் அந்தத் தங்கக் காசைப் பிடுங்கி வா என்று உத்தரவிட்டார்.
சேவகன் கோபுரத்தின் மேலேறி காசைப் பிடுங்கிக் கொண்டு வந்து
விடுகிறான்.
வழக்கம்போல ராஜா மறுநாள் கோவிலுக்கு உலா வருகிறார்.
கிளி நோக்குகிறது.
தஞ்சாவூர் ராஜாவே, தொடர்ந்து மிகுதி வரிகளையும் சொல்லி முடித்து
தரையிலிருந்து கிடைத்த தங்கக் காசை வாங்கிக் கொண்ட ராஜாவே,
என குதித்துக் கும்மாளமிட்டு திரும்பத்,திரும்ப இதையே சொல்கிரது.
ராஜா சற்று யோசிக்கக் கூடாதா? இல்லை.
சேவகா நீ போய் அந்தப் பெருமைக்கார கிளியின் தலையில் ஓங்கி
ஒரு குட்டு குட்டி விட்டுவா என்று உத்தரவிட்டார்.
சேவகனும் மளமளவென்று மேலேறிக் கிளியைப் பிடிக்கிறான்.
அதன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டுகிறான்.
தலையில் ரத்தம் வழிகிறது. ராஜா கண்டு கொள்ளாமலேயே
போய்விடுகிறார்.
மறுநாளும் வழக்கம் போல ராஜா கோவிலுக்கு உலா வருகிரார்.
கிளி பார்த்துக் கொண்டே இருந்தது. இராஜாவின் அருகில் வந்தது.
சொல்லத் துவங்கியது. தஞ்சாவூர் ராஜாவே,என் தங்கமான ராஜாவே,
தரையில் கிடைத்த காசை வாங்கிக் கொண்ட ராஜாவே,
தலைக்கு ஒரு அழகான சிவப்பு நிற பட்டுக்குல்லா தைத்துத்தந்த
என் தங்கமான ராஜாவே, என் தங்கமான ராஜாவே, என்று கூறிக்
கும்மாளமிட்டுக் குதித்துக் கூத்தாடியது.
இராஜா கூர்ந்து கவனிக்கிறார். என்ன இது, என்ன சொல்கிறது?
நேற்று வழிந்த ரத்தத்தைப்,பட்டுக்குல்லா வென்று சொல்லிக்
கூத்தாடுகிறது.
ராஜாவிற்கு மனது இளகிவிட்டது. இவ்வளவு நல்ல மனமா?
;சேவகா நிதானமாக அந்தக் கிளியைப் பிடித்து வா என்று உத்தரவிட்டார்.
சேவகனும் செய்கிறான். கிளிக்கோ ஸந்தோஷம் பிடிபடவில்லை.
பெருமை பொங்க ராஜாாவைப் பார்க்கிறது.
இந்தக் கிளியை நம் அரண்மனைக்கு அழைத்துப் போவோம்.
காயம் ஆறும் வரையில் வைத்தியம் செய்து மருந்து போடுவோம்.
பாலும், பழமும், கொட்டைகளுமாகக் கொடுப்போம் என்றார்.
எந்த ஒரு விஷயத்தையும் நல்ல முறையிலேயே எடுத்துக் கொள்ளும்
இந்தக் கிளிதான் எவ்வளவு பெருந்தன்மை கொண்டது?
அரண் மனையிலேயே ஒரு கூண்டில் வைத்து கிளிக்கு வைத்தியமும்
போஷாக்கும் ராஜா தருகிரார்.
அந்தக்கிளி காயம் ஆறி , முன்பைவிடத் தெம்புடன் இருந்தது.
ராஜா அன்புடன் அந்தக்கிளியை பாசமுடன் தடவிக்கொடுத்து, கூண்டைத்
திறந்து பறக்கவிட்டு அன்புடன் வழியனுப்புகிறார்.
திரும்பவும் இப்போது ராஜா கோவிலுக்குப் போகும் போதெல்லாம்
தஞ்சாவூர்ராஜாவே,என் தங்கமாந ராஜாவே
பாலும்,பழமும், பரிந்தளித்த ராஜாவே, நீ வாழ்க, நீ வாழ்க என்று
ஆனந்தக் கூத்தாடுகிறது.
எவ்வளவு நல்ல கிளி? ராஜாவையே மாற்றி விட்டது.
Entry filed under: சிறுவர்கதைகள். Tags: கோபுரம், தங்கமான, தஞ்சாவூர்.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:53 முப இல் ஏப்ரல் 27, 2015
மிக அழகான கிளிகொஞ்சும் பதிவு. சந்தோஷம்.
2.
chollukireen | 12:10 பிப இல் ஏப்ரல் 29, 2015
பேசும் கிளியின் கதை. சின்ன வயதில் கேட்டது இன்னும் நினைவில் அப்படியே இருக்கிறது. நன்றி உங்களுக்கு. அன்புடன்
3.
பிரபுவின் | 7:24 முப இல் ஏப்ரல் 28, 2015
“எந்த ஒரு விஷயத்தையும் நல்ல முறையிலேயே எடுத்துக் கொள்ளும்
இந்தக் கிளிதான் எவ்வளவு பெருந்தன்மை கொண்டது?”
அருமை.மிகச் சிறப்பான தத்துவங்களை உள்ளடக்கிய பதிவு.
நன்றி அம்மா.அன்புடன் பிரபு.
4.
chollukireen | 12:14 பிப இல் ஏப்ரல் 29, 2015
கிளியின் பெருந்தன்மையும்,அதன் வாக்கு வன்மையும், நீங்கள் பாராட்டியதற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
5.
Kumar | 4:52 பிப இல் ஏப்ரல் 28, 2015
Hello!
Very very touching to read ur article.
But, now it is kaligalam
will people understand
Again and again we expect more from you
Thanks a lot
6.
chollukireen | 12:15 பிப இல் ஏப்ரல் 29, 2015
சிறுவர் கதையாக இருந்தாலும் நீதி போதனை பலமாக இருக்கிறதல்லவா? நன்றி அன்புடன்
7.
ranjani135 | 10:19 முப இல் ஏப்ரல் 29, 2015
இந்தக் கதையை என் அம்மா வேறு மாதிரி சொல்லுவாள். தனக்குக் கிடைத்த கொஞ்சூண்டு பஞ்சை வைத்து குல்லாய் தைத்துப் போட்டுக் கொள்ளும் ஒரு கிளி. அந்தக் கிளி ராஜாவைப் பார்த்து ‘நேக்குண்டு நோக்கில்லை’ என்று பாட்டுப்பாடி டான்ஸ் ஆடும். என்ன என்று ராஜா கேட்டவுடன் தன் குல்லாயைக் காண்பிக்கும். உடனே ராஜா அந்தக் குல்லாயை பிடுங்கச் சொல்லுவான். உடனே கிளி ‘என் குல்லாயை ராஜா பிடுங்கிட்டார்’ என்று அப்பவும் பாட்டுபாடி டான்ஸ் ஆடும். கோவம் வந்து ‘சே! உன் குல்லா யாருக்கு வேணும்?’ என்று சொல்லி குல்லாயை திருப்பிக் கொடுத்துவிடுவான். கிளி உடனே ‘எனக்கு பயந்துண்டு என் குல்லாயை கொடுத்துட்டான்’ என்று அப்போதும் சந்தோஷமாகப் பாடி ஆடும்!
ராஜாவும் கிளியின் குறும்புத்தனத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய்விடுவான்.
உங்கள் கதை கிட்டத்தட்ட அம்மா சொல்லும் கதை போலவே இருக்கிறது.
8.
chollukireen | 12:19 பிப இல் ஏப்ரல் 29, 2015
போதனை ஒன்றே. விஷயங்கள் மாறுபட்டாலும் கதையும் நேக்குண்டு நோக்கில்லை வார்த்தை குழந்தைகளுக்கானது. எனக்கு இதுவும் பிடித்திருக்கிறது.
நன்றி. அன்புடன்
9.
shella | 11:47 முப இல் ஏப்ரல் 30, 2015
Mami, kathaiyum super, varikalum super
10.
chollukireen | 11:55 முப இல் ஏப்ரல் 30, 2015
அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. அன்புடன்
11.
chitrasundar5 | 7:43 பிப இல் மே 1, 2015
போகிற போக்கில் சொல்லுகிற கதைகளில்கூட நீதி இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர் பெரியவர்கள் !
மேல்பூச்சு ஏதுமில்லாத இதுமாதிரியான கதைகள் தொடர்ந்து வரும் என்றே நம்புகிறேன். அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 2:58 முப இல் மே 2, 2015
நீதிக்கதையில் ஒரு கிளி. ஒருமரம் இன்னும் ஏதாவது ஞாபகம் வரவேண்டும். நன்றி சித்ரா. அன்புடன்
13.
marubadiyumpookkum | 12:16 பிப இல் மே 5, 2015
இராம கிருஷ்ணர் கதைகளில் துறவியும் தேளும் என்ற கதை உண்டு.அதை நினைவு
படுத்துகிறது உங்களின் இந்த கதை.
14.
rammalar | 3:21 முப இல் ஜனவரி 31, 2016
சிறுவர் கதை அருமை…!
15.
chollukireen | 4:53 முப இல் ஜனவரி 31, 2016
நன்றியும் ஸந்தோஷமும். அன்புடன்