ரிஸோட்டோரைஸ். Risotto rice
ஏப்ரல் 28, 2015 at 7:20 முப 11 பின்னூட்டங்கள்
வடஇந்தியா, தென் இந்தியா என சமையல்கள் எழுதுவதுடன்
என் மருமகள் செய்த இந்த கான்டினெண்டல் வகையும பாருங்களேன்.
பேத்தியிடம் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாட்டுப்பெண்
கேட்க, அவள் ரிஸோட்டோ ரைஸ் என்று சொல்ல எனக்கும் குறிப்பு கொடு
என்று தெரிந்து கொண்டு, எழுதியிருக்கிறேன்.
பல வகை குறிப்புகளை அவர்கள் செய்கிரார்கள்.
என்ன ஒன்று. இது செய்ய அந்த ஸ்டிக்கி அரிசியை வாங்கவில்லை.
சீரகச்சம்பாவிலேயே செய்துள்ளாள்.
நான் சீஸ்,மஷ்ரூமெல்லாம் சாப்பிடுவதில்லை. பிடித்தவர்கள்
செய்து சாப்பிடலாமே!
வேண்டியவைகள்
அரிசி—-1கப்
பார்மோஸன் சீஸ்—1கப்
சுத்தம் செய்து நறுக்கிய மஷ்ரூம்—1 கப்
நறுக்கிய காரட்—அரைகப்
ஜுசுனி நருக்கியது—1கப்
மேலே தூவ—-நறுக்கிய வெங்காயத்தாள் விருப்பத்திற்கிணங்க
ஆலிவ் ஆயில்—3 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு, உப்பு,காரத்திற்கு மிளகாய்ப் பொடி. சிறிது
செய்முறை.
மஷ்ரூம் அமிழ தண்ணீர் வைத்து மைக்ரோவேவ் அவனில் 4நிமிஷங்கள்
வேக வைத்து எடுக்கவும்.
தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். இதுவே மஷ்ரூம் ஸ்டாக்.
காய்கறிகள் வேக வைத்து அதன் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஏதாவதொன்று.
அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து, தண்ணீரை வடிக்கட்டவும்.
ஆழமான நான் ஸ்டிக் வாணலியில், ஆலிவ் ஆயிலைச் சுடவைத்து
காரட்,ஜுசுனியை வதக்கவும்.
அரிசியையும் சேர்த்து வதக்கி, மஷ்ரூம் ஸ்டாக்கும் தண்ணீருமாக
இரண்டு கப்சேர்த்து வேக வைக்கவும். அரிசி வேக எவ்வளவு தண்ணீர்
வேண்டுமோ சேர்க்கவும். உப்பு காரம் சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும், தீயைக் குறைத்து ஸிம்மில் வைத்து,சீஸைச்
சேர்த்துக் கிளரவும் உடன் வெந்த மஷ்ரூமையும் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்று சேர்த்துக் கிளறி, நறுக்கிய பச்சை வெங்காயத்தாளைச்
சேர்த்து இறக்கவும். ரிஸோட்டாரைஸ் தயார்.
காப்ஸிகம் சேர்க்கலாம். பீன்ஸ்,மட்டர்,காலிஃப்ளவர், ப்ரகோலி இன்னும் வேண்டியவைகள்
எதெதுவோ அவைகளைத் தேர்ந்தெடுத்தும் செய்யலாம். இது வீட்டிலிருந்ததைக்
கொண்டு செய்தது. கலர்கலராக கேப்ஸிகம்சேர்த்தால் பார்க்கவும் அழகாக இருக்கும்.
நன்றி பிரதீஷா.
Entry filed under: கான்டினெண்டல். Tags: சீஸ், மஷ்ரூம்.
11 பின்னூட்டங்கள் Add your own
திண்டுக்கல் தனபாலன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 9:01 முப இல் ஏப்ரல் 28, 2015
தாங்களும் என்னைப்போலவே சீஸ்,மஷ்ரூமெல்லாம் சாப்பிடுவதில்லை என்றாலும் பிடித்தவர்கள் செய்து சாப்பிடலாமே! என்ற நல்லெண்ணத்துடன் கொடுத்துள்ள பதிவு பாராட்டுக்குரியதே !
2.
chollukireen | 12:40 பிப இல் ஏப்ரல் 29, 2015
நாம் சாப்பிடாவிட்டாலும் புதுமை விருப்பமாக தற்காலம் விருப்பமானதொரு உணவு. பாராட்டுக்கு நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:00 முப இல் ஏப்ரல் 29, 2015
செய்து பார்க்கிறோம் அம்மா… நன்றி…
4.
chollukireen | 12:39 பிப இல் ஏப்ரல் 29, 2015
செய்து பார்க்கிறோம். நன்றி தனபாலன். அன்புடன்
5.
ranjani135 | 10:08 முப இல் ஏப்ரல் 29, 2015
ஜுகுனியா? ஜுசுனியா? காய்கறியா அது? எப்படி இருக்கும்?
மஷ்ரூம் சைவ உணவுதான். நிறைய பேர்கள் அதை சாப்பிடுவதில்லை. இங்கு எல்லாம் பழக்கம்.
புதுவகையான ரெசிபி போலிருக்கிறது.
6.
chollukireen | 12:33 பிப இல் ஏப்ரல் 29, 2015
ஜுசுனிதான். ஜெனிவாவில் குர்ஜர் என்று சொல்வார்கள். அங்கு நிறைய கிடைக்கும். இங்கும் கிடைக்கிறது. விலை அதிகம். இதுவும் காய்கறிதான். நான் கறியும் செய்வேன் அங்கு இருக்கும் போது. வெளிநாட்டு காய்கறிஇது. வெள்ளரிக்காய் போல விதைகளில்லை. அன்புடன்
7.
ezhil | 11:39 முப இல் ஏப்ரல் 29, 2015
படிக்கும் போது வித்தியாசமாய் இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கணும்“
8.
chollukireen | 12:37 பிப இல் ஏப்ரல் 29, 2015
சீஸ் ஒன்று அதிகம். வெளிநாட்டுப் பெயர். அவ்வளவுதான். உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
9.
adhi venkat | 7:54 முப இல் ஏப்ரல் 30, 2015
புதுமையாக இருக்கும்மா. நானும் இதுவரை காளான், சீஸ் சாப்பிட்டதில்லை…:)
10.
chollukireen | 11:10 முப இல் ஏப்ரல் 30, 2015
பிட்ஸா சாப்பிடுபவர்களாயின் அதிலும் சீஸ் முக்கியப் பொருள். மஷ்ரூம் இப்போது
டாக்டர்களாலும் சிபாரிசு செய்யப்படுகிறது. வெஜிடேரியன்தான். அன்புடன்
11.
marubadiyumpookkum | 12:11 பிப இல் மே 5, 2015
எம் வீட்டில் / குடும்பத்தில் இதை வெஜிடபுள் பிரியாணி போல காளான் பிரியாணி என
செய்கிறார்கள்.