அன்னையர் தினப் பதிவு—29
மே 6, 2015 at 1:37 பிப 15 பின்னூட்டங்கள்
டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யாரையும்வரச்சொல்லிஎழுதவில்லை.அனாவசியமாகஎல்லோருக்கும்ஆஸ்ப்பத்திரியிலும் அனுபவங்களுக்குக் குறைவில்லை. ஸ்பெஷல்வார்டானாலும்நான்குபடுக்கை.ஒருசின்னஹால்மாதிரி. துணைக்கு ஒருவரிருக்கலாம். பிள்ளை அறியாத வயது என்று நான்அவனை ஆஸ்ப்பத்திரியில் இரவு இருக்க விடுவதில்லை. அடுத்த படுக்கைக்கும்,நமக்கும் நிறைய இடம் உண்டு.அடுத்த படுக்கைக்காரர் ஒரு திபெத்தியர். நமக்கு பாஷை புரியாது. யாரும் உறவினர்கள்,பிள்ளை குட்டி எதுவும் இல்லாதவர். யாரோ ஒரு வயதான கிழவி பத்து மணி.சுமாருக்கு வருவாள். கஞ்சிமாதிரி ஏதோ நிறைய வைத்து விட்டுப் போவாள். ஆஸ்ப்பத்திரி சாப்பாடு யென ஏதோ நர்ஸ் கொண்டு கொடுப்பாள்.
நாளுக்குநாள் எழுந்திருக்கக் கூட முடியாமற் பலஹீனமானது தெரிந்தது. நர்ஸ் எப்போதாவது இல்லாவிட்டால் அந்தக் கஞ்சியை யாரையாவது எடுத்துக் கொடுக்கும்படி ஜாடை காட்டுவார். மற்ற உடல்நலமில்லாதவர்களுக்கு வேண்டியவர்கள் கூடவே இருப்பதால் யாவருக்கும்பாவம்என்றுதோன்றும். திபெத்திய லாமாக்கள் அடிக்கடி வந்து ஏதோப்ரார்த்தனைஅவர்கள் முறையில் செய்து போவார்கள். கூடவேஇருப்பவர்களுக்கு,பஸ்சிநேகிதம்,ரயில் சிநேகிதம்ஆகாயவிமாண சிநேகிதம்பேரன்பேத்திகளை பள்ளியிலிருந்து அழைத்துவரும்போதுஏற்படும்,சினேகிதம், வாக்கிங் சிநேகிதம் போல ஆஸ்ப்பத்திரி சிநேகமும் பல விதங்களில் ஏற்படுகிரது. நேற்று முன் நாள் பக்கத்து பேஷண்ட்ஸரியேயில்லை. என்னவானாலும் கடைசி வரை வைத்தியம் கொடுக்க வேண்டும். லாமாக்களுக்குச் சொல்லியாயிற்று. பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பேசிக்கொண்டார்கள் சிறிது பாஷை புரிந்தவர்கள். சாயங்காலம் நான்கு மணிக்கு மேல் இருக்கும். கைஜாடை செய்து கூப்பிடுகிறார். என்ன ஏது என்று கேட்கப் போனால் தண்ணீர் வேண்டுமென்கிரார். கையால் வாங்கிக் குடிக்கும் நிலையிலில்லை அவர். நம் வீட்டு விளிம்பு வைத்த ஸ்டீல் டம்ளரில் விட்டு வாயில் விடுகிறேன்.
கொடகொட என்று உள்ளே சத்தத்துடன் போகிறது. போதும்,போதுமென சைகை வருகிறது. இன்னும் ஒருபத்துநிமிஷம்ஆகியிருக்கும்நர்ஸ்வருகிறாள்பார்க்கிறாள்.பார்க்கிராள்.மிகவும்யோசனை யசெய்து விட்டுப்பிரஷர் பார்க்கிராள். ஏதோ மருந்தை வாயில் விடுகிறாள். நோயாளியிடம் ஏதோ கேட்கிறா்ள் இப்போதும் ஜாடை மூலம் ஏதோ பதில் வருகிறது. டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறாள். டாக்டரும் ஏதோ கேட்கிரார். சுற்றிலும் திரை போடப்படுகிறது. அவ்வளவுதான். அவருடைய பிரயாணம் முடிந்து விடுகிறது.எதுவுமில்லாமல் இந்த நினைவு மனதைவிட்டு அகல மறுக்கிறது.
வழக்கம்போல காலையில் ஆஸ்ப்பத்திரியிலிருந்து வந்து சமைத்து,எடுத்துப் போகவந்தேன்.இட்லிக்கு உளுந்து அரைத்துப் போட வேண்டும். குளித்து,தோய்த்து,பெருக்கி என வீட்டு வேலைகள்.
ஸ்டவ்வில் குக்கரில் அரிசியும் பருப்பும் வைத்தேன். ஆச்சு இரண்டு விஸில் வந்தாச்சு. இன்னொன்ரு வந்தால்ப் போதும். திடீரென்று மூன்றாவது பிள்ளை ஸுரேஷ் அம்மா என்று வந்து நிற்கிறான்.நாம்தான் யாரையும் வா, என்று சொல்ல வில்லையே! என்னப்பா திடீர்னு. இல்லை அப்பாவைப் பார்க்கத்தான் வந்தேன். மூன்றாவது விஸில் வந்து விட்டது. குக்கரை இறக்கி வைக்கிறேன். ஒரு நிமிஷத்திலே குளிச்சுட்டு வந்துடறேன். அப்பா எப்படி இருக்கா. ரெஸ்ட்தான் அவசியம். இன்னும் நாட்களாகும்னு சொல்ரா.
மெட்ராஸிலிருந்து ஏதாவது ஸமாசாரம் வந்ததா? ஏன் அப்படி கேக்கரே யாருக்கானும் உடம்பு ஸரியில்லையா? உனக்கு எப்படிம்மா தெரியும்? என்னடா என்ன ஸமாசாரம்?
பாட்டி போய்ட்டாம்மா. பாட்டி போய்ட்டாளா?என்னது எப்படிடா சொல்றே? எனக்கு ஒண்ணும் தெரியாதே. பதற்றம். இன்னிக்கு மூன்றுநாள் ஆகிவிட்டது. சாயங்காலம் தந்தி வந்தது. கணேஷ் ப்ளேன் கிடைத்துப் போனான்.நேற்று அந்த ஏர் ஹோஸ்டஸ் ஃப்ரெண்ட் வந்திருந்தாள். உங்களுக்கும் தந்தி கொடுத்ததாகச் சொன்னாள். மற்ற விஷயங்கள் அவளும் போயிருந்ததால் எல்லா விஷயங்களும் சொன்னாள். உனக்கு ஒத்தாசைக்காக நான் வந்தேன். என்ன ஒரு பத்து நிமிஷம் மலைத்து நின்றேன். மளமளவென்று . டெரஸிற்குப் போகிறேன். தெற்கு பார்த்து ஒருநமஸ்காரம்செய்கிறேன். பச்சைத் தண்ணீரை நிறைய தலைக்குக் கொட்டிக் கொள்கிறேன். புடவையை ஒரு சுற்று சுற்றிக் கொள்கிறேன். குக்கரிலும் ஆவி அடங்கி இருக்கிறது. ஒருகரண்டிசாதம்,பருப்பு,நெய் சேர்த்து, அம்மா நீ நல்லபடி போய்விட்டாயா, இந்தா புதுசா சமைச்சதுதான் சாப்பிடு என்று காக்கைக்குப் போடுகிறேன்.கொல் என்று காக்கைகள் வருகிறது. பேசுவதற்கு நேரமில்லை. உளுந்து அரைக்கணும். ஆஸ்ப்பத்திரி போகணும்யோசனை பண்ண நேரமில்லை. ஏதோ ஒரு ரஸம் கறி. நான் அரைக்கிறேன் பிள்ளை அரைக்கிரான் உளுந்தை. சாவகாசமாக நீ எல்லாத்தையும்,சொல்லு . நீயும் கிளம்பு ஆஸ்ப்பத்திரிக்கு.ஆஸ்ப்பத்திரி இரண்டு பஸ்டாப் தூரம்தான்.
சாப்பாட்டைக் கொடுத்து விட்டு வெளியே வந்து துக்கம் தீர அழுதுவிட்டு எழுதும் போதுகூட துக்கமாகத்தான் உள்ளது. சொல்லு என்ன ஆச்சு, எனக்கு எதுவும் தெரியாது. பெரிய பிள்ளையும் தந்தியைக் கொண்டு வருகிறான்.
இத்தோடு போஸ்ட் செய்து விட்டு மீதியை இரண்டொரு நாளில் எழுதி முடித்து விடுகிறேன்.
இல்லாவிட்டால் பதிவு மிகவும் நீண்டு விடும். அடுத்த பதிவும் பாருங்கள். மன்னிக்கவும். அன்புடன்
Entry filed under: அன்னையர் தினம். Tags: சாவகாசமாக யுனைடெட்மிஷின்.
15 பின்னூட்டங்கள் Add your own
Kumar க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:41 பிப இல் மே 6, 2015
முதலில் காட்டியுள்ள வீடு படம் நன்னா இருக்கு. சுவாரஸ்யமா எழுதி சஸ்பென்ஸா முடிச்சிருக்கீங்க ! தொடரட்டும் … அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கறேன்.
2.
chollukireen | 12:10 பிப இல் மே 7, 2015
ஸஸ்பென்ஸாமில்லே. எனக்கும் 83 முடி்சு போச்சு இருந்தாலும் அம்மாவைப்பற்றி நினைக்கும் போது சிறிது மனது தடுமாற்றம் ஏற்பட்டது. ஸரி போதும் என்று போஸ்ட் செய்து விட்டேன். மறக்காமல் வந்து பின்னூட்டம் தந்து ஊக்குவிப்பதற்கு பிரத்யேக நன்றிகள். அன்புடன்
3.
ranjani135 | 2:09 பிப இல் மே 6, 2015
என்ன ஒரு துக்கம். இங்கு அகத்துக்காரருக்கு உடம்பு சரியில்லை. அங்கு அம்மா பரமபதித்துவிட்டாள்; மூன்று நாட்கள் கழித்துத்தான் செய்தியே வருகிறது என்ன ஒரு கையறு நிலை. நீங்கள் உங்கள் அம்மாவை நினைத்துக் கொண்டு, காக்காவிற்கு சோறு வைத்தது படித்து அழுகை வந்துவிட்டது.
உங்கள் அனுபவங்கள் நிறைய. எழுத எழுத வளர்ந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை எழுதுங்கள்.
நிதானமாக அவசரமில்லை. இந்தத் தொடரை அவசரமாக முடிக்க வேண்டாம்.
4.
chollukireen | 12:17 பிப இல் மே 7, 2015
அந்த தைரியங்கள் எல்லாம் எங்கே போச்சுதோ காணும்.
சமயத்துக்கு கடவுள் யாவையும் தருவார்.
பெண்,பிள்ளைகள் என்று பெற்றவர்களுக்கு என்ன வென்ன பிரசினைகள் ஏற்படுமோ அத்தனையும் எதிர் கொண்டவள்நான். வயோதிகம் மட்டும் ஸொந்தப்பிரச்சினை. கடந்தகாலங்கள் மறக்க முடியாதவைகள். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 2:46 முப இல் மே 7, 2015
காத்திருக்கிறேன் அம்மா…
6.
chollukireen | 12:18 பிப இல் மே 7, 2015
உங்கள் காத்திருக்கிறேன் வார்த்தைகள் ஒரு விமரிசனத்திற்கு ஈடாகும். நன்றி. அன்புடன்
7.
chitrasundar | 2:51 முப இல் மே 7, 2015
காமாக்ஷிமா,
கண்கள் குளமாக்கிவிட்டன. எதுவும் எழுதத் தோன்றவில்லை :(( ஒன்று மட்டும் தெரிகிறது, வந்தால் எல்லாமும் ஒன்றாகத்தான் வந்து சேரும்போல !
வீட்டுக்காரர் நிலை, அம்மாவின் இழப்பு ….. எப்படித் தாங்கினீர்கள் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
அவசரமாக முடித்துவிட வேண்டாம். முடிந்தபோது எழுதினால் போதுமானது. அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 12:24 பிப இல் மே 7, 2015
வாழ்க்கையே சேலஞ்சாக இருந்தது. கரையேற முடியுமா என்று தோன்றியது. நீங்களெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதெல்லாம் ஸகஜம் என்ற நிலை உருவாகிவிடுகிறது. அன்புடன் நன்றியும்.
9.
shella | 9:10 முப இல் மே 7, 2015
Mami,
Never knew all these things, may be amma would have known. But we all know you were always a strong lady.
Hats of to you mami.
Namaskaram.
10.
Kumar | 12:34 பிப இல் மே 7, 2015
Akka,
enakku enna ethzuthuvathu enrey theriyavillai.
marupadiyum kalachakkaram 1986 June 30 sendruvittathu.
Nangal koduthuvaithathu avalavuthan.
11.
chollukireen | 12:44 பிப இல் மே 7, 2015
நான் நினைத்தேன். காட்மாம்டுவைத்தானே பார்த்தீர்கள். இனிதான் நான் மெட்ராஸைப் பார்க்க வேண்டும். என்ன எழுத வேண்டும். காலத்தே செய்த உதவி ஞாலத்தே பெரிதென்பர். கொடுத்து வைத்தது பாட்டி. பதமான பிரயாணம். அன்புடன்
12.
chollukireen | 12:36 பிப இல் மே 7, 2015
நானும்,அம்மாவும் அன்னன்றாட நிகழ்ச்சிகள் வரை இருவருக்கும்,பகிராத விஷயமே இல்லை. இப்போ நான் ஸ்ட்ராங்லேடி இல்லை. இந்த பகிர்வுகள்,அதற்கு வரும், இரண்டொரு பதில்கள் ,இதுவே எனக்கு மகிழ்வைக் கொடுக்கும் உபகரணங்கள். எல்லோரையும் பார்க்க ஆவல்.
இம்மாதிரி உங்களுடைய பதில்கள்,fb பார்க்கும் போது ஸந்தோஷ,மாக இருக்கிறது.
வெகு நாட்களாக ஒரு கேள்வி. உங்களைப்போல முடியாது என்ற வார்த்தை எப்போதும் யாவரும் என்னைப் பார்த்துச்சொல்வீர்கள். உன்னுடைய போன் நம்பர் கொடு.
அதற்கெல்லாம் விடை தெரிந்து கொள்கிறேன். நன்றி. அன்புடன்
13.
chollukireen | 12:48 பிப இல் மே 7, 2015
9 ஆம் நம்பருக்கு 12 இல் பதில் வந்துள்ளது. ஷீலாவின் கவனத்திற்கு. அன்புடன்
14.
பார்வதி இராமச்சந்திரன். | 12:01 பிப இல் மே 9, 2015
நடுவில், கொஞ்சம் டூரில் இருந்ததால், தொடர்ந்து வர இயலவில்லை.. ஆனால் வந்தவுடனோ!.. மலைத்துப் போனேன்.. அனுபவத்தைத் தவிர பெரிய ஆசான் வேறெதுவுமில்லை.. இப்படியெல்லாம் வாழ்ந்த மனிதர்களே நமக்குப் பொக்கிஷம் போல் தான்.. குறைவான நேரத்திலும், சட்டென்று, இருக்கும் சூழலுக்கேற்றாற் போல் விரைவாகவும், நிறைவாகவும் செயல்படும் தன்மை, உங்களைப் போல், யாருக்கும் வருவது கஷ்டம்.. ஆனால், உங்கள் வயதில், நீங்கள் சந்தித்த அனுபவங்களும், அவற்றுக்குத் தகுந்தாற்போல் நீங்கள் நடந்து கொண்டதும், உங்கள் தாயாரை நினைவுபடுத்துகின்றன. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்!…
15.
chollukireen | 5:12 முப இல் மே 10, 2015
எப்போதும் உணர்ந்து எழுதும் உன் பின்னூட்டங்கள் மன நிறைவைக் கொடுக்கும். அந்த முறையில்
கடைசி பகுதியும் முடித்து விட்டேன். உடன் வந்து கொண்டிருக்கும் உனக்கு நன்றி