வேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே சோறு என்றால் வாய்திறப்பீரோ?
மே 15, 2015 at 11:06 முப 12 பின்னூட்டங்கள்
ஒரு சின்ன நாடு அதில் ஒரு சின்ன காடு. அங்கு பக்கத்தில் ஒரு கிராமம்.
அதிலும் நிறைய வீடுகள். நிறைய பக்ஷிகளும்,விதவிதமாக வசித்து வந்தது.
இரண்டு கோழிக் குடும்பம். அதுவும் ஒற்றுமையாக இருந்தது. அவைகளுக்கு
மனிதர்களைப்போலவே தாங்களும் வாழ வேண்டுமென்றுஆசை.
தினமும் ராஜாமாதிரி சேவல் முன்னாடிபோகும். பின்னாடி பெட்டைக்கோழி.அதன் பின்னர் கோழிக் குஞ்சுகள் இரை தேடப் போகும். இரண்டு கோழிக் குடும்பமும் ஒ ரு குப்பை மேட்டைப் பார்த்தது. அது கொள்ளாமல் நிறைய நெல் மணிகள் இருந்தது. இரண்டு குடும்பத்திற்கும் குஷியோ,குஷி. கொக்கொக் என்று வேண்டிய அளவு கொரித்துச் சாப்பிட்டதுகள். இன்னும் நிறைய இருந்தது. பெரிய கோழிகளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
நாமும் இந்த நெல்லை எல்லாம் எடுத்துப்போய்ப் பயிர் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மற்ற பறவைகளையும் கூப்படுவோமஎன்றது.ஸரிஸரிஎன்றதுமற்றவைகள். ஒரு நல்ல இடமும் கிடைத்து விட்டது. மறு நாள் காலை இரண்டு சேவல்களும், குப்பையைக்,குப்பைைத் தோண்டினோம். நெல் மணிகள் கிடத்தது. இடமும் தேடிவிட்டோம்.
கிடைத்தஇடத்தைஉழவுசெய்துசெப்பனிடவருவாருண்டோ,உழவுசெய்யவருவாருண்டோ, என்று கத்திக் கத்திக் கூவிற்றாம். காக்கை வந்து நான் மாட்டேன் என்றது, குருவிவந்து நான் மாட்டேன் என்றது. கொக்கு வந்து நான் மாட்டேன் என்றது. புராவும் அப்படியே சொன்னது. வாத்தும் கஷ்டம்,கஷ்டம் என்றது. கிளி கீகீன்னுசிரிச்சது. இப்படி எல்லா பறவைகளும் நான் மாட்டேன் என்று சொல்லிப் போயின.
இவ்வளவுதானா நீங்கள். நாம் பெற்ற செல்வங்களுடன் நாமே ஸரி செய்வோம் என்று, களைக்கொத்தாலும்,ஏராலும் மண்வெட்டியாலும்நிலத்தைநன்றாகஉழுதுசெப்பனிட்டது கோழிக் குடும்பம். குப்பை மேட்டு மண்ணைக் கொத்திக் கொண்டு வந்து போட்டு உரமிட்டது. போனால்ப் போகிறது. இப்போவாவது வருகிரார்களா பார்ப்போமே என்றது ஸம்ஸாரிக் கோழி. சேவல்களும் ஸரி என்று, உழுத நிலத்தில் கிடைத்த விதையை விதைக்க வருவாருண்டோ,விதைக்க வருவாருண்டோ என்று இரண்டு சேவல்களும், கோரஸாகக் கத்திக்கத்திக் கூவிற்றாம். பழையபடியே ஒன்றன்பின் ஒன்றாக வந்து நான்மாட்டேன்,நான் மாட்டேன் என்று கர்வமாகச் சொல்லியதாம்.
நல்ல வேளை,நான் பெற்ற பிள்ளைகளே ஓடிவாருங்கள் என்றதாம் தாய்க்கோழி. கொக்கொக் என்று ஆர்பரித்துக்கொண்டே குஞ்சுகள் ஓடி வந்து எல்லாமாக நெல்லை விதைத்ததாம். அடுத்து பெய்த மழையில், நெல் எல்லாம் கொல் என்று முளைத்து,பச்சென்று மாறி மெள்ளவே வளர்ந்து விட்டனவாம். கோழிக்குடும்பத்திற்கு கொள்ளை மகிழ்ச்சி. அவைகளையெல்லாம் பிடுங்கி,கட்டு கட்டி ஒருபக்கம் சேற்றில் புதைத்து வைத்து விட்டு, மறுபடியும் நிலத்தை பண்படுத்தி
அடுத்திருக்கும் கூரைவீட்டின் உச்சியில் ஏறிக்கொண்டு,தேர்ந்தெடுத்த நாற்றுகளை,நாற்று நடவாருண்டோ, நாற்று நடவாருண்டோ என்று இரண்டுசேவலுமாகக் கத்திக் கத்திக் கூவிற்றாம். வேறு வேலையில்லையா எங்களுக்கு,நாங்கள் எவ்வளவு கூவிநாலும் வரவேமாட்டோம் என்று முகத்தைத் திருப்பிக் கொண்டனவாம்.
கோழிக் குஞ்சுகளெல்லாம், போபோ நாங்க எல்லாம் செய்து கொள்வோம் என்று நாற்றுக் கத்தைகளைநான்குநான்குகோழிக்குட்டிகளாகத்தூக்கிவந்ததாம்.அப்பாக்கோழிகளும்நாற்றைநட்டுவளர்த்ததாம்நாற்றுகளும்,வேர்பிடித்துச்சிலும்பி, கோழிகளின்,களைநீக்கலிலும்,நீர்ப்பாய்ச்சலிலும்மற்றப்பறவைகளின்உதாசீனமிருந்தும் செழுமையாக வளர்ந்ததாம். இப்படியே கூவிக்கூவியேஎல்லாவற்றையும்,தானாகச் செய்தே நெல் கதிர்விட்டு,முற்றி,மஞ்சள்மசுக்க, அறுவடைக்குத் தயாராகிவிட்டது.பார்க்கக் கண்கொள்ளாத அழகு. மகிழ்ந்துபோன கோழிக் குடும்பம். அம்மாக் கோழிகளுக்கு வேலை அதிகம்
இந்தஅழகைப்பார்த்தாவதுஉதவிசெய்ய,எல்லோருமாகக்கட்டாயம்வரும்,போனால்ப் போகட்டும் என்று சொல்லி கதிர் முற்றிய நெல்மணிகளை அறுக்க வருவாருண்டோ, அறுக்க வருவாருண்டோ என்று இரண்டு குடும்பமுமாக கூவிற்றாம்,கூவிற்றாம் .அப்படி கூவிற்றாம். நமக்குதான் தெரியுமே அவைகளைப் பற்றி. சோம்பேறிகள். வேடிக்கை பார்த்தனவாம்.
கோழிக்குடும்பம்,பரபரவென்று கதிரை அறுத்து,தட்டி,தூற்றி,காயவைத்து,மூட்டை கட்டிஎவ்வளவு நெல், மூட்டைகளை எண்ணி எண்ணி, அடுக்கிப் பரவசப்பட்டதாம்.
டும்டும் என்று நிறைய நெல்லைக் குற்றி அரிசியாக்கியதாம். அப்பவும் கூப்பிட்டிருக்கும் சேவல்கள். புடைத்துப்புடைத்து கொஞ்சம் அதிக அரிசி தயாரித்ததாம். நிறைய காய்கறி கீரை எல்லாம் பரித்து வந்ததாம்.
அருமையாக தாய்க்கோழிகள் சமைத்ததாம்.
மறுநாள் காலங்காத்தாலே,பொங்கல்,சாதம்,கறி, குழம்பு,கீரை தினுஸு தினுஸாக பலகாரம் எல்லாம் செய்ததாம் கோழிக்குடும்பங்கள்.
அத்துடன் வரிசையாக வட்டத் தட்டுகளில் அவைகளைப் பறிமாறி,திரும்பவும் கோரஸாகக் குடும்பத்தினர் வடித்த சோற்றையும்,வகையான சமையலையும், வட்டத்தட்டில் பறிமாறியுள்ளதைச் சாப்பிட வருவாருண்டோ,சாப்பிட வருவாருண்டோ என்று கோழிக்குடும்பம் கத்திக்,கத்திக் கூவிற்றாம். குதித்துக்,குதித்துக் கூவிற்றாம் குட்டிக்கோழி. வரிசையாக,கும்பலாக, நான் வருகிறேனென்றதாம் காக்கை. குருவி,கிளி,புறா,கொக்கு எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி,நீ முந்தி என்று போட்டி போட்டனவாம். இருங்க இருங்க எல்லோரும் நானொரு வார்த்தை சொல்கிறேன் என்றதாம் பெரிய கோழிகள். அதுவும் அம்மா கோழிகள்.
வேலை என்றால் வீழ்ந்து கிடக்கும் கள்ளிகளே
சோறு என்றால் வாய் திரப்பீரோ? இது ஸரியில்லை.
நல்ல வேளை நாங்கள் பெற்ற செல்வங்கள் கடின ஒத்தாசை செய்தது.
அவைகள் வட்டத்தட்டில் விருந்து சாப்பிடட்டும்.
உங்களுக்கும் பெரிய உருண்டையாகத் தருகிறேன். உழையுங்கள். உழையுங்கள் என்றது. பரவைகள் வெட்கத்துடன் சாப்பாட்டை ருசித்தது. நெல் மூட்டைகள் அவைகளைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது.
Entry filed under: சிறுவர்களுக்கான கதை. Tags: நான்பெற்ற செல்வங்கள், வேலை என்றால்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:32 முப இல் மே 15, 2015
மிகவும் அழகான நீதிக்கதை. படித்தேன். மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.
2.
chollukireen | 8:31 முப இல் மே 18, 2015
சிறுவர் கதையும் எழுதினேன் என்ற ஒரு எண்ணம். ரஸித்து பாராட்டியதற்கு ஸந்தோஷம். அன்புடன்
3.
chitrasundar | 11:22 பிப இல் மே 15, 2015
காமாக்ஷிமா,
இந்தக் கதையை நான் ஆரம்பப் பள்ளியில் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். படிக்கும்போது நினைவுகள் அந்த நாட்களுக்கே சென்றுவிட்டது.
உழைத்தால்தான் ஊதியம், நல்ல கதை. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 8:37 முப இல் மே 18, 2015
நான் நினைத்தேன் எங்கள்காலக் கதையென்று. னீயும் படித்ததுதானா? படமெல்லாம் பார்த்துத் பார்த்துப் போட்டேன். இரண்டு உருண்டை உருண்டையாக கோட்டுப்படம். ஒருதட்டில் சாதம், ஒரு குப்பைமேடு.
இதுவும் கூகல் படம்தான். பாராட்டுக்கு ஸந்தோஷம். அன்புடன்
5.
chitrasundar | 11:24 பிப இல் மே 15, 2015
காமாக்ஷிமா,
கதையின் தலைப்பிலுள்ள எழுத்துக்களின் அளவைக் கொஞ்சம் குறைத்தால் எழுத்துக்கள் ஒன்றன்மீது மற்றொன்று இல்லாமல் இருக்கும் என நினைக்கிறேன்.
6.
chollukireen | 8:40 முப இல் மே 18, 2015
அப்புரம் மேம் படுத்துவில் சிறியதாக்கி முயற்சி செய்தால் சொன்னபடி கேக்கலே. போனாப்போ என்று விட்டு விட்டேன். அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 3:10 முப இல் மே 16, 2015
அருமை…
8.
chollukireen | 8:41 முப இல் மே 18, 2015
பெருமை கோழிக்கதைக்கு. அன்புடன்
9.
sheela | 4:45 பிப இல் மே 17, 2015
Super
10.
chollukireen | 8:43 முப இல் மே 18, 2015
கிளி,மரம்,கோழி எல்லாம் கதை சொல்லியது. நன்றி. ஸந்தோஷம். அன்புடன்
11.
ranjani135 | 10:39 முப இல் மே 22, 2015
எங்கள் பாட்டி சொல்லி இந்தக் கதையைக் கேட்டிருக்கிறேன். இதே போல சிறகு ஒடிந்த ஒரு குருவி எல்லா மரங்களிடமும் போய் மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் கேட்கும். எல்லாம் மறுத்துவிட, கடைசியில் இடம் கொடுத்த ஆலமரம் அடைமழையில் நிலைத்து நிற்கும். மற்ற மரங்கள் வீழ்ந்துவிடும்.
அடுத்தமுறை சென்னை போகும்போது அக்கா பேத்திகளிடம் சொல்ல எனக்கு ஒரு கதை கிடைத்தது!
உங்கள் எழுத்தில் கோழிகளும் குஞ்சுகளுமாக உழவுத் தொழில் செய்வது ரசிக்கும்படி இருந்தது.
பழைய கதையை நினைவு படுத்தியதற்கு நன்றி.
12.
chollukireen | 1:22 பிப இல் மே 25, 2015
உங்கள் கதையும் கேட்டிருக்கிறேன். உங்கள் அழகான கதைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்