ஸீஸன் மோர்க்குழம்பு.
மே 19, 2015 at 10:54 முப 15 பின்னூட்டங்கள்
எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம்.
தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மருமகள். ஸரி அதை வைத்துவிடு நான் உப யோகப் படுத்திக் கொள்கிறேன்என்றேன். சீக்கிரமே செய்து விடுங்கள் என்றாள்.
அவர்கள் காலை சாப்பாடுகள் செய்து முடித்த பின் நான் சமையலரைக்குப் போனேன். இரண்டு ஸ்பூன் கடலைபருப்பு,துளி தனியா, சீரகம் ,எல்லாவற்றையும் ஊரவைத்து காரத்துக்கு பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து கொஞ்சம் கூடவே தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன்
இந்த மாம்பழத்தை 2 ஒரு பக்கம் துளி கீரல் போட்டுவிட்டு , நன்றாகக் கதுப்பை அழுத்தி எடுத்துக் கொண்டேன். இரண்டுகப் கெட்டி மோரில் புளிப்பில்லாதது எல்லா வற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்தேன். உப்பு,மஞ்சப்பொடியும் போட்டேன். என்ன பிரமாதம் என்கிறீர்களா?கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கூடவே நான்கு குடமிளகாயையும் வறுத்துப் போட்டு தாளித்துக் கொட்டி விட்டு, கறிவேப்பிலையையும் அதன் தலையில் போட்டு இறக்கினேன்.
எங்க வீட்டுக்காரர் சாதம் சாப்பிட்டு நாலு வருஷமாறது. ராக்கொடிஅளவுஇரண்டுதோசை,ரஸம்,அல்லது இரண்டு இட்லி, பிரட்பால் ,கஞ்சி, அந்த மனுஷருக்கு தோசையுடன் இன்று இந்த மோர்க்குழம்புதான் இரண்டு கரண்டி கொடுத்தேன். பிடித்து சாப்பிட்டதை உங்களுக்கும் சொல்லலாமே. நானும் காரமே சாப்பிடறதில்லே. நானும் சாப்பிட்டேன். எனக்கு அதில் இரண்டு வேக வைத்த காயைப் போட்டேன். குழம்பு சூப்பர்தான்.
என் கதையாகத்தான் இருக்கட்டுமே. நாட்டு மாம்பழமானால் இன்னும் காரம் வைக்கலாமோ என்னவோ? போட்டோ பாருங்கோ சூப்பரா இருக்கு. குழம்பும் அப்படிதான். எழுதாமலே போஸ்ட் பண்ணி. , குப்பைக்கு அனுப்பிச்சுட்டு, திரும்ப மனதைக் கொட்டி ஒரு பதிவு. ரஸியுங்கள்
Entry filed under: Uncategorized.
15 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:02 முப இல் மே 19, 2015
மாம்பழச்சாறு கலந்த மோர்க்குழம்பு புதுமை, இனிமை. நாக்கில் நீர் ஊறச்செய்யும் படமும் பதிவும் அசத்தல்.
2.
chollukireen | 11:09 முப இல் மே 19, 2015
புதுமையோ,இனிமையோ ஒரு மனம் திறந்த பிரிபரேஷன் இல்லாத பதிவு. அப்படித்தானே? மிக்க மிக்க நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 3:06 முப இல் மே 20, 2015
பிரமாதம்…
4.
chollukireen | 1:08 பிப இல் மே 25, 2015
அதிகம் சிலவில்லை. இருப்பதைக் கொண்டு தயாரித்ததுதான் பிரமாதம். நன்றி. அன்புடன்
5.
chitrasundar | 10:29 பிப இல் மே 20, 2015
காமாக்ஷிமா,
ஐயாவும், அம்மாவும் விரும்பிச் சாப்பிட்ட பிறகு சுவையைச் சொல்லவும் வேண்டுமா ! இந்தக் குட்டிக்குட்டிக் கதைகள்தான் பதிவுக்கு மேலும் சுவையூட்டுகின்றன.
மாங்காய் என்றால்தான் இங்கு பிரச்சினை, கிடைக்காது. மாம்பழம்தானே செய்து விடலாம் என்றே தோன்றுகிறது. அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 1:14 பிப இல் மே 25, 2015
வயதானவங்களுக்கு இந்தச்சுவை பிடித்தமானது. கதைகள் இல்லாதது எதுவுமே இல்லை. ரஸித்த பின்னூட்டம். அங்கெல்லாம் காய் வாங்கினாலே நறுக்கும் போது இரண்டும் கெட்டானாக ஒரு பழக்காயாக அமைந்து விடும். செய்து பார்த்தாயா.
பரவாயில்லை. ரஸித்துப் படித்ததற்கே எனக்கு மிக்க ஸந்தோஷம். அன்புடன்
7.
angelin | 1:46 பிப இல் மே 21, 2015
காமாட்சியம்மா 🙂 செய்துட்டேன் ஸீசன் மோர்க்குழம்பு
அருமையான டேஸ்ட் ! நான் குடை மிளகாய் சேர்க்கல்ல ,அதற்கு பதில் சுக்காங்காய் /மினுக்கு வற்றல் வதக்கி சேர்த்தேன் .ருசியான ரெசிப்பிக்கு நன்றிம்மா
8.
chollukireen | 1:18 பிப இல் மே 25, 2015
ஜெவ்வரிசிவடாம், பழுபாகல் வதக்கல்,வழியில் இதையும் சேர்த்துக் கொள். உங்களுக்கெல்லாம் நிறைய
கமெட்ன்ஸ் வரும். ருசியான ரெஸிப்பி என்றுசெய்து சாப்பிட்டுச் சொன்னதற்கு விசேஷ நன்றிகள் அஞ்சு. அன்புடன்
9.
பிரபுவின் | 11:45 முப இல் மே 27, 2015
“மாம்பழ மோர்க்குழம்பு”
பெயரும் வித்தியாசமாக இருக்கின்றது.பதிவும் வித்தியாசமாக இருக்கின்றது.பெயரைக் கேட்டவுடனேயே சுவை எப்படி இருக்கும் என்பதை உணர முடிகின்றது.
நன்றி அம்மா.
அன்புடன் பிரபு.
10.
chollukireen | 3:44 பிப இல் மே 27, 2015
உங்களைக் காணோமே என்று பார்த்தேன். பெயரிலேயே சுவைத்து விட்டீர்கள். ருசித்ததற்கு மிகவும் ஸந்தோஷம். யாராவது கேட்டால் குழம்பின் ருசியைச் சொல்லுங்கள். நன்றி. அன்புடன்
11.
chollukireen | 11:49 முப இல் மே 16, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
எப்போதோசெய்த ஒரு மோர்க்குழம்பு ரீப்ளாக் செய்யக் கிடைத்தது.கிராமங்களில் நாட்டுப் பழங்கள் என்று மிகவும் மலிவாகக் கிடைக்கும். அதைப்போட்டும் செய்வார்கள். மொத்தத்தில் ஸீஸனில் செய்யும் குழம்பு. ருசியுங்கள். அன்புடன்
12.
Geetha Sambasivam | 12:50 பிப இல் மே 16, 2022
Super amma. Will try one day.
13.
chollukireen | 10:45 முப இல் மே 17, 2022
ஸீஸன் இருக்கும் போதே செய்து பாருங்கள். அன்புடன்
14.
நெல்லைத்தபிழன். | 12:27 முப இல் மே 17, 2022
பலர் மாம்பழ மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும் என்கிறார்கள். எனக்குத்தான், இனிப்பு எப்படி குழம்பு வடிவில் நன்றாக இருக்கும் என்ற சந்தேகம். செய்முறை எளிது. செய்துபார்க்கிறேன்.
15.
chollukireen | 10:49 முப இல் மே 17, 2022
உப்புகாரம் எல்லாம் சேருகிறது. செய்து ருசித்துப் பாருங்கள். நன்றி. அன்புடன்