ஒன்றில் மூன்று
மே 29, 2015 at 8:01 முப 8 பின்னூட்டங்கள்
மாங்காய் ஸீஸன் இது. நல்ல மாங்காய் கிடைக்கும்போது செய்து ருசிக்க சென்ற மாங்காய் ஸீஸனில் எழுதிய குறிப்புகளே இது. மறுபதிவு செய்யத் தோன்றியது. பார்த்தோ,செய்தோ ருசியுங்கள். ஒரு வரி எழுதுங்கள்.
மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்
செய்ததுதான் இது.
இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்
பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.
மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.
மூன்றாகப் பிரித்ததில் எல்லா வகையும் செய்ய முடிந்தது.
பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்
பார்ப்போமா உங்களுடன்.
காரமாங்காய் தொக்கு.
வேண்டியவைகள்.
துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.
மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்–அரைகப்
ருசிக்கு– உப்பு
கடுகு—1 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.
செய்முறை–
கடுகையும்,வெந்தயத்தையும், சூடான வாணலியில் எண்ணெய்விடாது
வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை
நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது அலுமினியம் வாணலியிலோ பாதி
எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு வதக்கவும்.
புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்
சுருள வதக்கவும்.
நீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி
எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்
கிளறவும்.
பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து
உப்பு காரம் ருசி பார்த்து சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்து நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது
இனி.ப்புத் தொக்கு.
வேண்டியவைகள்
மாங்காய்த் துருவல்—-2கப்
வெல்லம்—-2கப்
உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்
எண்ணெய்—-3…
View original post 143 more words
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 8:05 முப இல் மே 29, 2015
ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் …..
மூன்றுவிதமான ஊறுகாய்கள் …………..
அருமையான ருசியான பதிவு.
படத்தில் பார்க்கவே குஷியாக உள்ளது.
2.
chollukireen | 8:17 முப இல் மே 29, 2015
இரண்டு தொக்குவகை ஊறுகாயும்,பச்சடியுமாக ஒன்றில் மூன்று. சற்று ஸௌகரியக் குறைவுகளின் காரணம் ரிப்ளாகாவது செய்வோம் என்று தோன்றியது. உங்கள் வரவுக்கும்,ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:21 முப இல் மே 30, 2015
நாங்களும் செய்து பார்க்கிறோம்…
4.
chollukireen | 10:49 முப இல் ஜூன் 7, 2015
அப்படியா ஸந்நோஷந்தான்.
5.
Pandian | 2:32 முப இல் மே 31, 2015
பேஷ் பேஷ்
6.
chollukireen | 10:50 முப இல் ஜூன் 7, 2015
அப்படியா,,,பேஷாக இருக்கும். நன்றி.
7.
chitrasundar | 2:57 முப இல் ஜூன் 1, 2015
காமாஷிமா,
மாங்காய் சீஸனில் பதிவைத்தேடி எடுத்து பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிமா.
இங்கு கிடைக்கும் மாங்காயில் இனிப்பு பச்சடி மட்டும் செய்வேன். ஆனால் வெந்தயம் சேர்த்ததில்லை. மீண்டும் செய்தால் வெந்தயம் சேர்த்து செய்கிறேன். அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 10:53 முப இல் ஜூன் 7, 2015
சென்ற வருஷம் சென்னையினின்றும் போட்ட பதிவுதானிது. மிக்க உடல் நலக்குறைவு. உன் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்