தினமும் நான் பார்த்த பறவைகள்.
ஜூலை 4, 2015 at 12:18 பிப 16 பின்னூட்டங்கள்
உபயம் கூகல்
தினமும் தான் எல்லோரும் பறவைகளைப் பார்க்கிறோம். அதில் நான் பார்த்த பறவைகள் எனக்குப் பொழுது போக்காகச் சிறிது காலங்கள் மறக்க முடியாமல் இருந்தது.அவைகளைப்பற்றிதசிந்தித்தும்,யோசனைகளும் வலுத்தது. இப்போது இல்லை. அது என்ன நீங்களும் பாருங்களேன். தினமும் காலையில் எங்கள் கட்டிடத்தின் எமர்ஜென்ஸி எஸ்கேப்புக்காக அடுத்துக் கொடுத்துள்ள எங்கள் டெரஸில் நான் நடப்பது வழக்கம். அப்படியே பூக்களையும் பறிப்பது வழக்கம். வெள்ளைநிற சைனீஸ் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.
தினமும்,அருகம்புல்,நந்தியாவட்டை ,ரோஜாப்பூக்கள் சிறிது பறித்து ஒரு சின்னக் கூடையில் போட்டுக் கொள்வேன். நடை தொடரும். எல் ,ஷேப்பாக டெரஸில் 20, 30 என்ற கணக்கில் நடைதொடரும். ஸ்கூல் பஸ் போகும்,குப்பை வண்டி போகும், கார்கள் குளிக்கும். கறிகாய்வண்டி,இளநீர் வண்டி எல்லாம் போய்க்கொண்டிருக்கும். மேலிருந்து அவைகளையும் அவ்வப்போது பார்த்துக்கொண்டே நடை தொடரும்.
குனிந்து பூ பறிக்கிறேன். விர் என்று காகங்கள் கத்திக்கொண்டு தலையிலடிப்பது போல கத்திக் கொண்டே பறக்கிறது. டக்கென்று தலையிலடிப்பது போல ஒரு பக்ஷி கனத்தை இறக்குவது போலப் பறக்கிறது. என்ன கனம்? .சுதாரித்து நிமிர்வதற்குள் கோரஸாக காக்கைகள் துரத்திக் கொண்டு வேகமாகப் டேக்அப் ஆவதுபோலப் பறக்கிறது. என்னவாக இருக்கும். சாப்பிடும் வஸ்து என வந்திருக்குமோ?காக்காவுக்கு அவ்வளவு தைரியமா? தலையில் இடித்த கன உணர்வு தெரிகிறது. காக்கை தலையிலிடித்தால் அவ்வளவு நல்ல தில்லை. என்னடா இது. யோசனைகள் பலக்கிறது. உள்ளே வந்து சொல்கிறேன்.
நீ சற்று நேரம் கழித்துப் போ. காலை வெளியில் வைத்தால் டெரஸ். உள்ளே வைத்தால் ட்ராயிங் ரூம்.. மனது ஸரியில்லை. நேராக பாத்ரூம்போய் தலைக்குக் குளித்து விட்டு வந்து விளக்கை ஏற்றுகிறேன். இது ஒருமுறையல்ல . சிலபல நாட்கள் இடைவெளியில் இரண்டு மூன்று முறை ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு முறையும் ஏதோ துக்க ஸமாசாரங்கள் வந்து கொண்டிருந்தது.எட்டாவது தளத்திலிருந்து இதுக்கு பயந்து கீழேயா நடக்க போகமுடியும். என் தலை,செடியின் பூவெல்லாம் அதுக்கு எதைப்போல் தோன்றுகிறதோ. ஸரி இந்த நேரத்தில் இன்னும் சற்று ஆராய்ச்சி செய்வோம். காக்கையைப்பற்றியெல்லாம் எவ்வளவு நன்றாக எழுதினோம், பார்க்கலாம்.
கேமராவை சட்சென்று எடுக்கும் படியான இடத்தில் வைத்து விட்டு உள்ளே இருந்தே கண்ணாடிக் கதவுகளின் வழியாக தினமும் நோட்டமிட்டேன். எதிரே ரோடுக்குப் பின்னால் பெரிய பெரிய மூன்று மாடிக் குடியிருப்புகள். அதில் இருக்கும் ஒரு கம்பத்தின் உச்சியிலொரு காக்கை போன்ற பறவை நான்கு பக்கமும் நோட்டமிடுகிறது. காக்கை கூட்டம் காணோம்.அங்கங்கே வேறு இடத்தில் காக்கைகள். ஒரு வேளை இது இந்தக் கம்பத்து காக்கையோ? இதுதான் நம் எதிரியோ? படமெடுத்தால் ஸரியா விழலே. வாக்கிங் போகலே. விடுவேனா நான்.ஒருநாள் இடம்மாறி இருந்தது கிளிக்காச்சு. பார்த்தால் காக்கா இல்லையது.
இன்னொரு நாள் பக்கத்தில் வேற்றிடம் அதுவே இதுவும்.
ஓஹோ நீங்கதானா லேண்டாகி இமீடியட் டேக்ஆஃப். நீங்க யாரு . தேடினேன். திருவண்ணாமலையில் பராக்கு பாத்தபடி கடையில் வாங்கிய தின்பண்டத்துடன் வந்தால் ,கொட்டப்பறாந்து டபக்கென்று கையிலுள்ளதைப் தட்டிப் பறந்து போய்விடும். கையிலும் கீரல்கள் விழும். அழும் பசங்கள். எனக்கும் அந்த அனுபவம் உண்டே!!!!!!!!!!!!!!! அதுவோ இதுவும். பருந்தில் போய்ப் பார்த்தேன். அகப்பட்டார்.
என்னைத் தட்டினவரும் இவர்தானென்று பறந்து காண்பித்தார் ஒருநாள்.
போதும் உன் சங்காத்தம். நீ வருகிறாய் என்று காக்கைகள் உன்னைத் துரத்தி எனக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. நீ எங்கே,அதுகள் எங்கே என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அதற்கும் புரிந்து விட்டதோ என்னவோ? சிறிது நாட்களில் சென்னை ஒருமாதத்திற்காகப் போனேன். அப்புறம் அது என்னைப் பார்த்தாலும் வருவதில்லை. நானும் பயப்படுவதில்லை. சென்னை போனால் அங்கும் சில பறவைகள். அப்புறம் பார்க்கலாம். பாருங்கள்.
Entry filed under: படங்கள். Tags: அதுவும் இதுவே.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:45 பிப இல் ஜூலை 4, 2015
பறவைகள் ….. பலவிதம் ….. ஒவ்வொன்றும் ஒரு விதம் !
அழகான பதிவு. அருமையான தகவல்கள். நன்றி.
2.
VAI. GOPALAKRISHNAN | 12:47 பிப இல் ஜூலை 4, 2015
பறவைகள் பலவிதம் … ஒவ்வொன்றும் ஒருவிதம் …
அழகான பதிவு. அருமையான தகவல்கள். மிக்க மகிழ்ச்சி 🙂
3.
VAI. GOPALAKRISHNAN | 12:50 பிப இல் ஜூலை 4, 2015
பறவைகள் பலவிதம் … ஒவ்வொன்றும் ஒருவிதம் …
அழகான பதிவு. அருமையான தகவல்கள். மிக்க மகிழ்ச்சி 🙂
மூன்றுமுறை பின்னூட்டமிட்டேன். காணாப்போச்சு. காக்கா தூக்கிண்டு போயிடுச்சோ … வேறு ஏதாவது பறவைகள் தூக்கிண்டு போயிடுச்சோ …. தெரியலை.
இது இப்போ என்ன ஆகுமோ ! அதுவும் புரியலை.
4.
chollukireen | 5:03 முப இல் ஜூலை 14, 2015
ஆசிகள். கண்டு பிடிச்சுட்டேன் தவறுதலாக வேறு எங்கோ போய்விட்டது. காக்காண்டேன்து வாங்கி விட்டேன். உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க ஸந்தோஷம்.
மன்னிக்கவும். அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 2:21 பிப இல் ஜூலை 4, 2015
ரசித்தேன்…
6.
chollukireen | 6:34 முப இல் ஜூலை 8, 2015
ரஸித்தீர்களா வயதாநவள் பயந்து விட்டாள் என்று நினைத்தீர்களா? ஸந்தோஷம். அன்புடன்
7.
ஸ்ரீராம் | 12:55 முப இல் ஜூலை 5, 2015
உங்களைத் தாக்கியது காக்கை இல்லை என்று தெரிகிறது!
காக்கைகள் கூடு கட்டி இருந்தால் எவ்வளவு பழகியவர்களாக இருந்தாலும் தலையில் ஒரு போடு போடும். எனக்கும் அனுபவம் இருக்கிறது அம்மா.
நாங்கள் கூட காக்கை பற்றி எழுதி இருந்தோம் அம்மா. படித்திருந்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை!
http://engalblog.blogspot.com/2015/04/blog-post_15.html
8.
chollukireen | 6:50 முப இல் ஜூலை 8, 2015
காக்கையில்லை. அந்தப் பருந்துதான். இன்னமும் அதை அதே இடத்தில் பார்க்கிறேன். காக்கைப்பற்றி நீங்கள் எழுதியதைப் போய்ப் படித்தேன்.. சென்னையில் எங்கள் மாப்பிள்ளையைச் சுற்றி காக்கைகள் அப்படித்தான். வேளைதவராது பிஸ்கெட்டும்,சாப்பாடும் கொடுப்பதற்கு சினேகபாவமாக வலம் வருகிரது நம்பிக்கை, நமக்கு வேண்டியவர் என்ற உறவு மனப்பான்மை அதுகளுக்கும். இங்கே பக்கத்து பில்டிங்கில் பத்தாவது மாடியில் வாரம்தோறும் நான் வெஜ் பறவைகளுக்குஒரு நாள் போடுபவர் இருக்காராம். அதற்காகத்தான் அந்த பருந்து வருகிரதாம். வேலைக்கார பெண்மணியின் தகவல் இது.. கிடைப்பவைகளை ஊறவைத்துச் சாப்பிட எங்கள் வீட்டுத் தொட்டிகளின் கீழே வைக்கும் தட்டுகளில் வடியும் நீர் குடிக்க ஊறவைக்க என்று அவைகளுக்கு உதவுகிறது. எட்டாவது மாடியிலிருந்து எவ்வளவு புருஷோத்தமான தகவல்கள் சேகரமாகிறது. இப்படியும் சில ஸமயம் நினைத்துக் கொள்வேன். உங்கள் காக்கை பற்றிய தொகுப்பு நன்றாக இருந்தது. அப்போதே இந்த எண்ணங்களும் வந்தது. நன்றி அன்புடன்
9.
chitrasundar | 3:43 முப இல் ஜூலை 5, 2015
காமாஷிமா,
ரசித்துப் படித்தேன்.
காக்காவைப் பற்றி நீங்க சொன்னதைத்தான் நானும் கேட்டிருக்கிறேன். பார்க்க பருந்து மாதிரி பெருசா இருக்கு. மீண்டும் வராத வரைக்கும் சந்தோஷம். சென்னைப் பறவைகள் என்ன செய்தன ? வந்து சொல்லுங்கள் ! அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 6:54 முப இல் ஜூலை 8, 2015
இல்லை சித்ரா அது அதே இடத்தில் தினமும் வருகிறது. பாவம் காமாட்சிம்மா நம்முடைய படத்தையும் ப்ளாகில் போடுவாங்க. தாராளம் வாக் பண்ணட்டும் என்று விட்டு விட்டது. அன்புடன்
11.
பிரபுவின் | 6:22 முப இல் ஜூலை 7, 2015
” காக்கை தலையிலிடித்தால் அவ்வளவு நல்ல தில்லை”
இங்கும் அவ்வாறு ஒரு எண்ணம் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு ஊரில் கண்கள் தெரியாத ஒருவரின் தலையில் வந்து காகம் அமர்ந்து விட்டு சென்றதாம்.மறுநாள் அவர் மரணித்து விட்டாராம்.
பலர் சனிபகவானின் கோபத்தை காகம் பிரதிபலிப்பதாக சொல்கிறார்கள்.
நான் இவற்றை எல்லாம் நம்புபவன் கிடையாது.
“போதும் உன் சங்காத்தம். நீ வருகிறாய் என்று காக்கைகள் உன்னைத் துரத்தி எனக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. நீ எங்கே,அதுகள் எங்கே என்று மனதில் நினைத்துக் கொண்டேன்”
நாங்கள் எதையும் எடுத்துக்கொள்ளும் முறையிலேயே வாழ்க்கையின் பாதைகளும் செல்லும் என்பதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள்.
நன்றி அம்மா.அன்புடன்…
12.
chollukireen | 8:20 முப இல் ஜூலை 8, 2015
நிறைய சங்கைகள் இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பதால் தொடர்ந்து நேரிட்டதாலும் அச்சமிருந்தது. ஆமாம் சென்னையிலிருந்து யாரையாவது கேட்டிருந்தால் சனிபகவானுக்கு எள்சாதம் செய்து வினியோகித்திருப்பேனோ என்ன.வோ? தானதர்மங்கள் இப்படி ஊக்குவிக்கப் படுவதுதான் இவைகளின் குறிக்கோள். நல்ல வேளை. காக்கையில்லை.குட்டிப் பருந்து. அதுவும் இப்போது ஸாவதாநமாகிவிட்டது. நன்றி. அன்புடன்
13.
Geetha Sambasivam | 2:38 முப இல் ஜூலை 8, 2015
பறவைகள் பெயரைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன். காக்கைகள் இங்கேயும் காலை நடைப்பயிற்சியின் போது தலைக்கு மேலே அவசரமாகப் பறக்கும். காக்கைகள் பருந்தைத் துரத்துவதைப் பார்த்ததில்லை. ஆனால் தன் கூட்டில் குஞ்சு பொரித்த குயில் குஞ்சைத் தேடித் தேடித் துரத்தும். பார்த்திருக்கேன். பலமுறை குயில் குஞ்சைக் காப்பாற்றவும் முயன்றிருக்கோம். முடியாது என்பது வேறே விஷயம்! ஆனாலும் காக்கைகளை விரட்ட முயல்வோம்.
14.
chollukireen | 8:35 முப இல் ஜூலை 8, 2015
ஓடோடி வந்திருப்பதற்கு மிகவும் நன்றி. பறவைகள் ஆமாம் புறா,மைனா,காக்கைகள் இவைகளின் கூடாரமோ மும்பை? அவ்வளவு இருக்கிறது. சிட்டுக்குருவி மிகவும் குறைவு. ஆனால் நானும் இருக்கிறேன் என்று நான்கைந்து ரெகுலராக வருகிறது.
உங்கள் அனுபவமும் எனக்கு சென்னையில் ஏற்பட்டது.
வேலைகள் செய்ய இயலாத வகையில் கண்ணில் தென்பட்டதை ரஸிக்கிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமாம். உங்கள் பின்னூட்டங்கள் மனதை மகிழ்விக்கிறது. ஆரம்ப கால ஒரு உங்கள் பின்னூட்டத்தில் ஸ்ரீரங்கம் வந்தால் கட்டாயம் வாருங்கள் என்று அழைப்பு விட்டதையும் நினைவு கூர்ந்து அடிக்கடி விஜயம் செய்யுங்கள் என்று அழைப்புடனும்,அன்புடனும்
15.
Geetha Sambasivam | 2:39 முப இல் ஜூலை 8, 2015
காக்கைகள் தலையில் அடிப்பது பற்றி துர்சகுனம் என எங்கள் வீடுகளிலும் சொல்வது உண்டு. 😦
16.
chollukireen | 8:37 முப இல் ஜூலை 8, 2015
ஆமாம் ஏதாவது பரிகாரம் செய்தாயா அப்படியே விட்டு விடக்கூடாது என்று சொல்பவர்களும் ிப்போதும் உண்டு. அன்புடன்