தினமும் நான் பார்த்த பறவைகள்
ஜூலை 14, 2015 at 11:34 முப 14 பின்னூட்டங்கள்
சென்ற மாதமும்,போன வருஷம் மூன்று மாதங்களுக்கும் ஓய்விற்காகசென்னை சென்றிருந்தேன். வீட்டைவிட்டு வெளியே வந்தால் பார்ப்பதற்கு பறவைகள் காட்சி கொடுத்தாலே போதும்.கவனிப்பது என்பது ஒரு பொழுதுபோக்காகவே அமைந்து விட்டது. உடல் நலமில்லாத சென்னை விஜயத்தின்போது அவ்விடம் வீடுபெருக்க துடைக்க வென்று உதவிப்பெண் வந்து வேலை செய்யும்போது நான் அக்கடா என்று வீட்டை ஒட்டிய சுற்றுப்புற ச் சுவரினருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விடுவேன் கூடவே படிக்க பேப்பர், கையில் சின்ன கேமரா, வாயில் ஸ்லோகம். ஏதாவது பழத்துண்டுகள் அதுவும் பின்னாடி வரும். பெண்,மாப்பிள்ளை வீடு அது.
நல்ல வெயில் வந்து உள்ளே போ என்று சொல்லும் வரை இதேதான். அதுவரையில் நம்மைச் சுற்றி நடப்பவைகள் தானாகவே கண்ணில்ப்படும். வீட்டை ஒட்டிய எங்கள் மனையின் மரங்கள்,செடிகள், அதற்கு வரும் பட்டாம் பூச்சிகள், பறவைகள், அணில்கள். வாழைமரங்கள்,எட்டு வருஷமாகியும் காய்க்காத சாத்துக்குடிமரம், நிழலோரமா கொய்யாச் செடி, பச்சைப்பசேல் என்ற அரிநெல்லிமரம்,வாழைக்குலைகளுடன்பழத்தோடு கூடிய வாழை இன்னும் வளர்ந்து வளராத மா,தென்னம் பிள்ளைகள் , வாயிற்பக்கம் வந்தால் வீட்டின் எதிர் வரிசைகளில் வரிசையான பெருங்கொன்றை மரங்கள் என என் கற்பனையில் அவைகள் ரம்யமிக்கவைகள். நம்முடைய செடி கொடிகள் அதற்கும் பந்தமிருக்கிரது. அடுக்கு நந்தியாவட்டை, மல்லி. பவழமல்லி எனபூக்களும். விடியற்கால வேளையில் பெருங்கொன்றை மரத்தில் கூவும் குயில்கள்.
இந்தப் பட்சிகளைப் பிடித்து விட,கேமிராவில், மனதில் தோன்றும். காலைநேரம் முடியாது. மாலைநேரம் இலைகளுடன் இலையாய் மறைந்து விடும். காக்கைகள் கூடுகட்டி இருக்கும். கிளைமாறி உட்டார்ந்து கறையும். குயிலும் ஒரு அவஸர பிரவேசமாக வரும் ஆனால்ப் பறந்து விடும்.நெல்லிமரத்தில் பகல் வேளையில் போனால் போகட்டும் என்று தரிசனம் கொடுத்தது. அடுத்து தினமும் வந்து குரல் கொடுப்பதுபோலக் கூவும். நானும் ஒரு படமாவது முயற்சி செய்வேன். அப்படி பாருங்கள்.
இன்னொரு நாள்
இடம் மாறிகூட உட்காருவதில்லை. சாயங்காலம்,விடியற்காலம் பெருங்கொன்றை மரத்தில் கூவும் போது பின்பக்கத் தோட்டத்திலிருந்து பதில் எப்போதாவது வரும். அதுவும் இதுவா என்று பார்த்தால் அது வேறு. என்னையும் பார் என்று அதுவும் சில நாள் குரல் கொடுக்கும். அதையும் பார்த்து நைஸாக படம் பிடித்தால் அழகழகாக தரிசனம் கொடுத்தது.
ஓ. நீ குயிலியா! நீயும் போட்டோக்கு போஸ் கொடுக்க வந்தாயாயா? வாவா
அப்புறம்அழகான போஸ்
என்னைப் பாருங்கள்.
நான்தான்
காக்கை,மைனா தவிர இன்னும் சில பறவைகள் நாளைக்கு.
Entry filed under: படங்கள். Tags: நெல்லிமரம்.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 3:45 பிப இல் ஜூலை 14, 2015
ஆகா…! இந்த சந்தோசமே தனி…
2.
chollukireen | 10:36 முப இல் ஜூலை 16, 2015
ஆமாம் தினமும் கவனிக்க சுறுசுறுப்பாக இருந்தது. அன்புடன்
3.
chitrasundar | 1:58 முப இல் ஜூலை 15, 2015
காமாஷிமா,
குயில் கூவும்போது நாம் கூவினால் பதிலுக்கு அதுவும் கூவும். சின்ன வயசுல இதேதான் வேலை. குயிலுக்கு இணை குயிலியா :)))))
பசுமையானத் தோட்டமும், அதிலுள்ள பறவைகளும் மனதிற்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறதுமா. நாளை யார்யார் வர்றாங்கன்னு வெயிட்டிங் …. அன்புடன் சித்ராசுந்தர்.
4.
chollukireen | 10:41 முப இல் ஜூலை 16, 2015
பதிலுக்குக் கூவும் என்று தெரிந்திருந்தால் கூவிப் பார்த்திருக்கலாம். இன்னொரு முறை பார்க்கலாமென்றால் சென்னை செல்ல சான்ஸ் கிடைக்கணுமே. இன்னிக்கு மத்தவங்களும் வந்துட்டாங்க பாருங்க. குயிலின்னு நான் பெயர் கொடுத்தேன். அவ்வளவுதான். அப்புறம் மயில் மயிலியான்னு யாராவது கேட்டுவிட்டால். நல்ல கேள்வி இல்லையா? அன்புடன்
5.
ஸ்ரீராம் | 9:45 முப இல் ஜூலை 15, 2015
குயில் கூவித் துயிலெழுப்ப…” என்று ஒரு பாடல். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடியது.நாணல் படத்தில் என்று நினைவு. அந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது.
ஒரு சில இடங்களில் அடர்த்தியான ஆழ மரங்களில் ஆயிரமாயிரம் பறவைகள் அமர்ந்து பரவைக்குரல் கேட்கும் பாருங்கள்… சொர்க்கமாய் இருக்கும்!
6.
chollukireen | 10:47 முப இல் ஜூலை 16, 2015
ஆமாம் இப்போது கூட திருப்பதி போயிருந்த போது கோயிலை விட்டு வெளி வந்தபோது அந்த ஆலமரத்தையும் பிடித்து வந்தேன். பலவித பக்ஷிகளின் குரலொடு அந்த அனுபவம் இருக்கிறதே சின்ன வயதில் அநுபவித்து இருக்கிறேன். தமிழ் நாட்டின் கோயில் வாசலில் சில இடங்களில் இன்னமும் ஆலமரங்களையும்,பக்ஷி ஜாலங்களையும் அனுபவிக்க முடிகிறது. அழகான உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி . அன்புடன்
7.
Geetha Sambasivam | 1:36 பிப இல் ஜூலை 15, 2015
இங்கேயும் குயில் கூவலோடுதான் பொழுது விடியும். அருமையான காட்சிகள். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருந்தது.
8.
chollukireen | 10:51 முப இல் ஜூலை 16, 2015
பரவாயில்லையே. இதே சென்னையில் இதே வீட்டில் எத்தனை முறை தங்கியுள்ளேன். அனுபவம் இவ்வளவு நேர்ந்ததில்லை. அதனால்தான் எழுதியுள்ளேன். பறவைகள் படத்திலடங்கி ஒத்தாசை புரிந்ததே அதுதான் பெரிய காரியம். நன்றி உங்களுக்கு அன்புடன்
9.
ranjani135 | 4:26 பிப இல் ஜூலை 15, 2015
மனதுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு பொழுது போக்கைச் செய்து கொண்டிருந்தீர்கள் போலிருக்கு, சென்னையில். இயற்கை என்றும் அலுக்காத ஒரு விஷயம். உங்களுக்காகவே இரண்டு குயில்கள் உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்தன போலும்.
இன்னும் நீங்கள் பார்த்த மற்ற பறவைகளை பார்க்க ஆவல்.
அது சரி, எப்பவும் காமிராவும் கையுமாகத்தானா?
ரொம்பவும் பாராட்டுகிறேன், உங்களை. உங்கள் இந்த உற்சாகம் என்றைக்கும் தொடரட்டும்!
10.
chollukireen | 11:00 முப இல் ஜூலை 16, 2015
உடம்பு முடியாதவள்,வெளியில் உட்கார்ந்தால் நல்ல காற்று. அதுவும் வாழைமரங்களுடயது. வந்து போகும் பக்ஷிகளும் உறவு கொண்டாடியது. எப்பவும் இல்லாவிட்டாலும், சமையல் எழுதினாலும் வேண்டி இருக்கே. கூட்டும்,கறியும், டிபனுமாகவே கம்யுட்டர். இவைகளாவது மாற்றமாக இருக்கட்டுமே என்றுதான்.
இல்லாவிட்டால் செடி கொடிகள். வரச்சே தூதுவளைக் கொடியையும் பிடித்துப் போட்டேன். துவையல் எழுதலாமே. ஸரியா? மிகவும் நன்றி. அன்புடன்
11.
Geetha Sambasivam | 7:07 முப இல் ஜூலை 17, 2015
தூதுவளை ரசமும் உண்டே! அதையும் எழுதுங்கள். நாங்கள் அதிகம் துளசியோடு சேர்த்துக் கஷாயமாகச் சாப்பிடுவோம்.
12.
chollukireen | 8:37 முப இல் ஜூலை 17, 2015
எழுதினால்ப் போயிற்று. கஷாயம் சடுதியில் பயனளிக்க வல்லதாயிற்றே? அன்புடன்
13.
பிரபுவின் | 8:00 முப இல் ஜூலை 27, 2015
உங்களை போன்றவர்களை கடவுள் நிச்சயம் ஆசிர்வதிப்பார்.இயற்கை இறைவனின் பெருங்கொடை.
நன்றி அம்மா.
14.
chollukireen | 10:27 முப இல் ஜூலை 27, 2015
ஆசீர்வதிப்பாரா? பக்ஷிரூபத்தில் வந்தா மிகவும் நன்றி அன்புடன்