தினமும் நான் பார்த்த பறவைகள்
ஜூலை 16, 2015 at 4:02 முப 16 பின்னூட்டங்கள்
உபயம் கூகல்
சென்ற வருஷம் ஓடியாடிக்களித்து,குதித்துத்தாவி ரன்னிங்ரேஸ் செய்த அணிற்பிள்ளைகளை தோட்டப் பக்கம் காணமுடியவில்லை. வாயிற் பக்கம் கேட்டில் சென்றால் எதிர்ப்பக்கம் அவைகள் குதூகலமாகஓடி விளையாடுவதைப் பார்க்க முடிகிரது. ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டால், பின் தோட்டத்தில் ஒருவர் பறந்து வருகிறார். எது அகப்பட்டாலும் உயிரோடு உயரத் தூக்கி விடுகிறார். நீ இன்னும் பார்க்கவில்லையா என்ற கேள்வி எழும்பியது. ஆமாம் அதையுந்தான் பார்க்கணும்.இன்று கூட ஏதோ சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. பதில் வந்தது.
ஒருநாள் அதுவும் அறிமுகமாயிற்று. ஆனால் அது முகம் காட்டாமல் பறந்து ஓடிக் கொண்டே இருந்தது. போன முறை சிட்டுக்குருவிகள் சிலதாவது வரும். இம்முறை நானும் இருக்கிறேன் நண்டு வளையில் என்பதுபோல நான்கைந்தே வந்தது.இந்த முறை அதேமாதிரி சற்று கொழுக்கு மொழுக்கென்று இரண்டு பறவைகள் வந்து போனது.
அதுவும் தினம் ஒரே இடத்தில் வரும் உட்காரும். என்னைப் பார்த்தவுடன் கம்பி நீட்டிவிடும். என்ன பூச்சி புழுவோ சாப்பிட்டு விட்டு விர் என்று பறந்து விடும்.அதையும் இரண்டு நாட்கள் சற்று இருங்கள் கண்மணிகளா. ஒரு போஸ் கொடுங்கள். என்று கேட்டேன். அதுகளும் மனதிரங்கி ஒரு நிமிஷம் உட்கார்ந்தது எனக்காக.
வெயில் அதிகமாக ஆக அதுகளும் எப்போது வருமோ போகுமோ அல்லது வேறு எங்காவது போய்விட்டதோ. பக்கத்துமனைகாலி.அங்கேஒருகுத்துச்செடி.கூடவேபலசெடிகள்.என்ன செடிகளோ.பட்டாம் பூச்சிகள் நிறைய அதனின்றும் பறந்துவரும். அதிலும் இரண்டு குட்டிப் பறவைகள் தினமும் அங்கு வரும். விர் என்று சூராவளிமாதிரி வந்திரங்கும்
.
செடிகளின் அசைவுகள் தெரியும். பட்டாம் பூச்சிகள் பறந்து வரும். கருப்பு,வெளுப்பு,மஞ்சள் என கலர்க்கலராக, சுங்குடி புடவை கணக்காக புள்ளிகளுடன் மனதைக் கவரும். கொய்யாமரததிலும்,வாழை மரத்திலும் அவஸரக்குடியேற்றம் செய்யும். குட்டிப்பறவைகள் டிக்டிக் என்ற ஓசையுடன் பூச்சி புழுக்களைச் சாப்பிடுமோ என்னவோ? எவ்வளவு முயன்றாலும் படமெடுக்க முடியாாது. வந்த மாதிரியே விர் என்று பறந்து விடும். பட்டாம் பூச்சிகளெல்லாம் திரும்பவும் அந்த யுத்த பூமிக்கே பறந்து செல்லும். திருக்கழுக்குன்ற கழுகுகள் ஞாபகம் வரும்.
ஆற அமர்ந்து சாப்பிடும் விருந்தாளியும் ஒரு நாள் வந்தார்.
நீங்கள்தான் இப்போது ஓங்கின கையா? என்ன அங்கு பார்க்கிறீர்கள்? இரைதேடும் படலமா?அட அந்தப்பக்கம் திரும்பிட்டிங்களா
இன்னொருநாள் வரயா?
சாப்பிடப் போறயா அது என்ன? சொல்லாட்டாபோ. தானாதெரியறது.
இவ்வளவு தூரம் பார்த்தது போதும். பம்பாய் பருந்துதான் வந்து விட்டாயோ என்று பார்த்தேன்.
நீ ஒரு கழுகுக் கூட்டத்தின் பிரிவுபோல உள்ளது. காக்கை,குருவி,மைனா கிளி எல்லாம் வந்ததே தவிர படமெடுக்கவில்லை. போதுமா நான்பார்த்த பறவைகள்.! நன்றி பறவைகளே.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 6:11 முப இல் ஜூலை 16, 2015
ஆஹா ஒரு பறவைக் கண்காட்சியே இருக்கே! அருமையான படங்கள், பொருத்தமான கருத்துப் பதிவுகள். அருமை அம்மா. இவற்றைப் பார்க்கப் பார்க்க மனம் லேசாகும்.
2.
Geetha Sambasivam | 10:30 முப இல் ஜூலை 16, 2015
என் பின்னூட்டம் தெரிகிறதோ? 🙂
3.
chollukireen | 10:33 முப இல் ஜூலை 16, 2015
பதிலெழுதின பிறகு இதையும் பார்த்தேன். மிக்க நன்றி. ஹலோ லைனில் இருக்கிங்கோ போலிருக்கே. ஸௌக்கியமா? அன்புடன்
4.
chollukireen | 11:44 முப இல் ஜூலை 16, 2015
தெரிகிறதே. தேடும்படி ஆகிவிட்டது. அன்புடன்
5.
chollukireen | 10:31 முப இல் ஜூலை 16, 2015
கொஞ்ச நாட்கள். படத்திலடங்கியபின் பசியடங்கியது போல விட்டு விட்டேன். மும்பையும் வந்தாயிற்று. ஆஹா என்று ரஸித்ததற்கு என்ன ஒரு ஸந்தோஷம் எனக்கு. அன்புடன்
6.
ranjani135 | 6:56 முப இல் ஜூலை 16, 2015
இன்றைக்கு பறவைகளுடன் கூட அணிலாரும் காட்சி கொடுத்துவிட்டாரோ? பட்டுப் பூச்சிகள் உங்கள் காமிராவில் மாட்டவில்லையோ? சுங்கடிப் புடவை டிசைன் போல…அழகான வர்ணனை. ரொம்பவும் ரசித்தேன்!
7.
chollukireen | 10:27 முப இல் ஜூலை 16, 2015
பட்டுப்பூச்சிகளெல்லாம் அவசரகால வெளியேற்றம் இல்லையா? அவைகளுடன் ஓடவில்லை. இந்தப்படங்கள் எடுத்த பிறகு ரிடயராகிவிட்டேன். அதுவும் ஆகாயத்தில் பறக்கிறது. விட்டு விட்டேன். ரஸித்தது சுங்கடிப் புடவையையும். ஸந்தோஷம். அன்புடன்
8.
திண்டுக்கல் தனபாலன் | 7:28 முப இல் ஜூலை 16, 2015
ஆகா…! ரசித்தேன்…
9.
chollukireen | 10:21 முப இல் ஜூலை 16, 2015
ரசித்தேன் என்ற வார்த்தையே மிகவும் ரஸிக்கக் கூடியது. நன்றி அன்புடன்
10.
marubadiyumpookkum | 7:47 முப இல் ஜூலை 16, 2015
good tastema…good potosma..good postma..thanks.vanakkam.
11.
chollukireen | 10:18 முப இல் ஜூலை 16, 2015
இதுவும் ஒரு ருசிதான். பொழுதும் போயிற்று. நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. அன்புடன்
12.
marubadiyumpookkum | 11:09 முப இல் ஜூலை 17, 2015
thanksma
13.
Venkat | 1:46 பிப இல் ஜூலை 16, 2015
பறவைகள், அணில்கள், என இவற்றைப் பார்ப்பதும் ஒரு நல்ல பொழுதுபோக்கு…. அவற்றின் சுறுசுறுப்பு பார்க்கும்போதே நமக்கும் அது ஒட்டிக்கொள்ளும்…..
14.
chollukireen | 2:06 பிப இல் ஜூலை 16, 2015
உண்மைதான் மனதாவது சுறுசுறுப்பாகப் பறந்தால், ஓடினால் மிகவும் நன்றாக உள்ளது. வாருங்கள் என்று உங்களை வரவேற்கிறேன். நன்றி அன்புடன்
15.
chitrasundar | 2:53 பிப இல் ஜூலை 16, 2015
காமாஷிமா,
உங்கள் எழுத்துக்களில் தெரியும் வர்ணனை செய்யுளுக்கான உரைநடை போல் உள்ளது. கூடவே நாங்களும் இந்தப் பக்கம் திரும்புவதும், அந்தப் பக்கம் பார்ப்பதுவும் என உங்களுடன் நேரில் பார்த்த அனுபவம்.
பம்பாய் வாழ் பறவைகள் எல்லோரும் மீண்டும் காமாஷிமா வீட்டுப் பக்கம் கொஞ்சம் வந்துட்டுப் போங்கோ, அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும், எங்களுக்கும் சூப்பர் பதிவொன்று கிடைக்கும் ! அன்புடன் சித்ராசுந்தர்.
16.
chollukireen | 3:45 பிப இல் ஜூலை 16, 2015
சித்ரா உங்கள் காமாக்ஷிமாவை நீ ரஸிக்காது யார் ரஸிப்பார்கள். மும்பையில் புறாக்கூட்டம் அதிகம். கருப்பு,வெள்ளை,கிரேஎன்று நிறைய வருகிரார்கள். வெளியில் நேற்று டாக்டருக்கு போய்விட்டு வரும்போது கூட்டம் கூட்டமாக பறந்து ,பரிந்து காட்சி கொடுத்தது. கூட்டமாக புறாவை படமெடுக்க சான்ஸை விட்டு விட்டோமே என்று யோசித்தது என்னவோ உண்மை. நீதான் புறாவிடு தூது அனுப்பினாயோ என்னவோ? நிறைய இருக்கு. கூட்டம்போட அரசியல் பேசணுமே. அதான் காரணமாக இருக்கும். நன்றி என் பெண்ணே. அன்புடன்